Skip to main content

திரிவெடி 17 விடைகள்

 

பல வருடங்களாக உதிரிவெடியில் பங்கேற்ற பலரைப் பற்றித் தெரியாத ஒன்றை இப்போது 3 மாதங்களாகத் திரிவெடி மூலம்   தெரிந்து கொண்டேன்.

இங்கே விடையளிப்பவர்களை ஒரு பட்டிமன்றம் தொடங்கும் ஒரு நிமிடம் முன்பு  பாரதி பாஸ்கர் கட்சியோ, ராஜா கட்சியோ எதில் சேரச் சொன்னாலும்  அந்த அணிக்கான வாதங்களைப் பொருத்தமாக  முன் வைக்கும் திறமை உள்ளவர்கள் என்பதுதான் அது.

ஒருவரே லட்டுக்கு எதிராகவும், களிக்கு எதிராகவும் இன்று காரணங்களை முன் வைத்திருப்பது போல் முந்தைய திரிவெடிக்கும் காரணங்களை அளித்திருக்கின்றனர்.   சுவாரசியமாக இருக்கிறது.

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

  முறுக்கு,  அதிரசம்,  களி,  சீடை,  லட்டு 

 இதற்கு என்னுடைய  அறிவுக்குத் தெரிந்தது.  லட்டு -- அது மட்டும் கடலை மாவில் செய்யப்படுவது, மற்றவை அரிசி மாவில் தயாரிக்கப்படுபவை.

பிற பொருத்தமான விடைகள் நான் குறிப்பிட விரும்புவது: களி மட்டும் ஒரு ஸ்திரமான உருவில்லாதது, மற்றவை தெளிவான உருவத்தால் எண்ணிக் குறிப்பிடக் கூடியவை.

களிக்கு மற்றொரு வித்தியாசம்: மற்றவை எல்லாம் எண்ணெயில் பொரிக்கப்படுபவை, களி மட்டும் கிண்டப்படுவது.

நீங்கள் அளிக்கும் இந்த விடைகளைப் பார்ப்பது  எனக்கு அறிவை வளர்க்க உதவுகிறது. நன்றி.

இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்