Skip to main content

Posts

Showing posts from February, 2019

விடை 3596

இன்று வெளியான வெடி செல்வத்துள் தலையாயது வழிகாட்டி வேறுதிசையிற் செல்ல உள்ளேவிடு (3 ) இதற்கான விடை:  செருகு ( உள்ளேவிடு) = செ + குரு (வழிகாட்டி) வழிகாட்டியே திசை மாறிச் சென்றுவிட்டதால் இன்று விடையளிக்க முற்பட்டவர்கள் சிலர் திசை மாறிவிட்டனர். இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.  

உதிரிவெடி 3596

உதிரிவெடி 3596 (பிப்ரவரி 28, 2019) வாஞ்சிநாதன்  *********************** செல்வத்துள் தலையாயது வழிகாட்டி வேறுதிசையிற் செல்ல உள்ளேவிடு (3 )   Loading...

விடை 3595

இன்று காலை வெளியிட்ட வெடி: உயர்ந்தது தாழ்ந்தது என்றில்லாத ரத்தம் கொதிக்கும் முன் ஊன்று (6) இதற்கான விடை:  நடுத்தரம் = ரத்தம் + நடு  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3595

உதிரிவெடி 3595 (பிப்ரவரி 27, 2019) வாஞ்சிநாதன் ********************* உயர்ந்தது தாழ்ந்தது என்றில்லாத ரத்தம் கொதிக்கும் முன் ஊன்று (6) Loading...

விடை 3593 & 3594

நேற்றிரவு வெளியான (மாற்று) வெடி: இழப்பால் அழு இறுதியில் இழந்தால் பக்கம் (3) இதற்கான விடை:    புலம் = புலம்பு  - பு தென்புலம் சென்றார் என்றால் தெற்குப் பக்கம் சென்றார் என்று பொருள். இதற்கான விடையை அனுப்பியர்கள் பட்டியலை இங்கே காணலாம். இன்று காலை வெளியான வெடி: முடிவுக்கு வரச்செய்த இறுதி வெள்ளம் கோவிலில் கைமேல் கிடைக்கும் (5) இதற்கான விடை:  தீர்த்தம் = தீர்த்த + (வெள்ள) ம் தீர்த்தத்தைத்  தேடி வந்தவர்கள் பட்டியல் இதோ.  

உதிரிவெடி 3594

உதிரிவெடி 3594  (பிப்ரவரி 26, 2019) வாஞ்சிநாதன் ********************* நேற்றிரவு வெளியான மாற்று வெடிக்கான விடை இன்றிரவு வெளிவரும். முடிவுக்கு வரச்செய்த இறுதி வெள்ளம் கோவிலில் கைமேல் கிடைக்கும் (5) Loading...

****உதிரிவெடி 3593 (மாற்று)*******

உதிரிவெடி 3593 (பிப்ரவரி 25, 2019) வாஞ்சிநாதன் ********************** தென்றலைத் தந்தவனைப் பற்றிய விவரிப்பு ? (4)   "வருணனை" என்று என்ற விடை மேலே கொடுக்கப்பட்ட புதிருக்குப் பொருத்தமாகும் என்று நினைத்திருந்தேன். அது சரியில்லை. வாயு பகவான் வேறு வருண பகவான் வேறு என்று  சிலர் தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும் பலர் நான் எண்ணிய விடையை அளித்திருக்கின்றனர். இதைப் பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியாமலே இப்புதிரை ஆக்கியதால் இப்புதிர் சரியா தப்பா என்ற ஆட்டத்திற்குப் போகாமல் இப்புதிரை மறந்து விட்டு  கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப் புதிரை முயலுமாறு வேண்டுகிறேன். (நாளை காலை வழக்கம்போல் புதிய புதிர் உண்டு). இழப்பால் அழு இறுதியில் இழந்தால் பக்கம் (3) Loading...

விடை 3592

இன்றைய வெடி கடலில் வீசுவதற்கு முன்பே செம்படவர் தொடக்கத்தில் ஒரு நிறம் (3) இதற்கான விடை:  செவலை இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே

உதிரிவெடி 3592

உதிரிவெடி 3592 (பிப்ரவரி 24, 2019) வாஞ்சிநாதன் ***************************** கடலில் வீசுவதற்கு முன்பே செம்படவர் தொடக்கத்தில் ஒரு நிறம் (3) Loading...

விடை 3591

இன்றைய வெடி: மனதில் தோன்றுவது எத்தனையென்று கணக்கிட இறுதியாகக் கிடைக்கும் (4) இதற்கான விடை :  எண்ணம்  வந்து சேர்ந்த அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3591

உதிரிவெடி 3591 (பிப்ரவரி 23, 2019) வாஞ்சிநாதன் *********************** மனதில் தோன்றுவது எத்தனையென்று கணக்கிட இறுதியாகக் கிடைக்கும் (4) Loading...

விடை 3590

இன்றைய வெடி: கடைசியாகக் கொன்று புதைத்த ரத்தம் பாதி நிச்சயம் (3) இதற்கான விடை: உறுதி =  று + உதி (ரம்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3590

உதிரிவெடி 3590 (பிப்ரவரி 22, 2019) வாஞ்சிநாதன் ************************  கடைசியாகக் கொன்று புதைத்த ரத்தம் பாதி நிச்சயம் (3) Loading...

விடை 3589

இன்று காலை வீசப்பட்ட வெடி: கால் பட்டதால் இறுகியது இடை பட்டால் கந்தரை வளைத்துவிடும் (6)  அவதார புருஷன் ராமனுடைய கால் பட்டதால் ஒரு கல் அகலிகையானது தெரியும். ஆனால் சாதாரண மனிதர்கள் நடந்து நடந்து கால் பட்ட மண் இறுகி கட்டாந்தரைதான் ஆகும். கட்டாந்தரை =  ட்டா + கந்தரை அது சரி, கந்தனை, முருகனை, வேலவனை என்று சொன்னால் சரி. இது என்ன புதுசாக "கந்தரை?" ஏதோ மரியாதையாக முருகனைக் குறிப்பிடத்தான். விடைகளைக் காண இதைச் சொடுக்கவும் .

உதிரிவெடி 3589

உதிரிவெடி 3589 (பிப்ரவரி 21, 2019) வாஞ்சிநாதன் ************************* கால் பட்டதால் இறுகியது இடை பட்டால் கந்தரை வளைத்துவிடும் (6) Loading...

விடை 3588

இன்றைய வெடி அதிக கோபத்தில் ஞானம் தந்த மரத்தின் முனை ஒடிந்த கிளை (3) இதற்கான விடை:   கொப்பு =  கொதிப்பு - (போ) தி  இன்று வந்துள்ள விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3588

உதிரிவெடி 3588 (பிப்ரவரி 20, 2019) வாஞ்சிநாதன் ************************* அதிக கோபத்தில் ஞானம் தந்த மரத்தின் முனை ஒடிந்த கிளை (3) Loading...

விடை 3587

இன்றைய வெடி: வலை அச்சு முனை ஒடிந்து ஆடி வெளியே ஓடி இலக்கியத்தைத் தாங்கியது (6) இதற்கான விடை:  ஓலைச்சுவடி = வலை  + (அ) ச்சு  +  ஓடி தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு நன்றியுடன் வாய்ந்தநற் பேறாம் வழுவில் இலக்கியத்தில் தோய்ந்த அறிஞனவன் சாமிநாதன் தொண்டினால்  காய்ந்தொடிந்த ஓலையிற் கண்டநூல் யாவுமின் றாய்ந்துரையொடு பெற்றோம் அமிழ்து. இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3587

உதிரிவெடி 3587 (பிப்ரவரி 19, 2019) வாஞ்சிநாதன் *********************** வலை அச்சு முனை ஒடிந்து ஆடி வெளியே ஓடி இலக்கியத்தைத் தாங்கியது (6) Loading...

விடை 3586

இன்றைய வெடி: ஓர் ஆவணத்தைத் துரத்தும் நேர்நிரை கத்தியை எறிந்த கூட்டம் (5) இதற்கான விடை: பட்டாளம் =  பட்டா + கூவிளம் - கூவி (கத்தி) பட்டாளம் = கூட்டம் (அவளைப் பெண்பார்க்க ஒரு பெரிய பட்டாளமே வந்து விட்டது) இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இப்பக்கம் செல்லவும்.

உதிரிவெடி 3586

உதிரிவெடி 3586 (பிப்ரவரி 18, 2019) வாஞ்சிநாதன் ******************** ஓர் ஆவணத்தைத் துரத்தும் நேர்நிரை கத்தியை எறிந்த கூட்டம் (5) Loading...

விடை 3585

இன்று காலை அளிக்கப்பட்ட வெடி: வலிந்து உள்ளே தள்ளப்பட்டு அம்பு குத்திவிட்டது (4) இதற்கான விடை: புகுத்தி    (அம்பு குத்திவிட்டது என்ற இரு சொற்களின் உள்ளே ஒளிந்திருக்கிறது). இப்புதிரில் "தள்ளப்பட்டு" என்று கொடுத்திருப்பது "புகுத்தி" என்பதற்கு இலக்கண வகையில் பொருந்தவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார் நங்கநல்லூர் சித்தானந்தம். புதிரில் "தள்ளி" என்ற வார்த்தை இருந்தால் சரியாயிருந்திருக்கும். இது மாதிரி பிழை நான் செய்திருக்கக் கூடாது. ஆர்வலர்கள் பொறுத்தருளவும். இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3585

உதிரிவெடி 3585 (பிப்ரவரி 17, 2019) வாஞ்சிநாதன் *********************** வலிந்து உள்ளே தள்ளப்பட்டு அம்பு குத்திவிட்டது (4) Loading...

விடை 3584

 இந்தப் புதிர்களைச் செய்வது  எல்லோரும் இன்பமுற, வாழ்க்கையில் மேன்மையுற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில்.  புதிர் கஷ்டமாகித் துன்பம் உறும் போது, நீங்கள் தொல்லை அடையும்போது நானும் துன்பும் உறுகிறேன். இன்று காலை வெளியான வெடி: உடலில் இருப்பது அடை பாதி பருப்பு (4) இதற்கான விடை: உறுப்பு   = உறு + (பரு) ப்பு இன்று அனுப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும் .

Solution to Krypton 107

Today's clue: Continued with paid player who is reportedly top class (9) Its solution:  PROCEEDED   (pro = a player playing for money)                  ceeded = (reportedly)  seeded (player) = one who is in top class (and ranked)                 To see the list of answers received click here.  

Krypton 107

Krypton 107 (16th February, 2019) Vanchinathan ************************** Warning: One of the words in today's clue is doing double duty!     Continued with paid player who is reportedly top class (9) Loading...

விடை 3583

இன்று காலை வெளிவந்த வெடி:   பழிச்சொல் தெளிக்க உள்ளே எதிர்த்து வெட்டு (4) இதற்கான விடை: அவதூறு =  அறு (வெட்டு) + தூவ (தெளிக்க) அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே

விடை 3582

இன்றைய வெடி இசைப் பாட்டிற்கு அழகூட்டுவது முடிவின்றிக் கொட்டி முடியும் இரைச்சல் (4) அதற்கான விடை:   சந்தடி = சந்த(ம்) +  டி  (கொட்டி முடியும்) இன்று வந்திருக்கும் விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3582

உதிரிவெடி 3582 (பிப்ரவரி 14, 2019) வாஞ்சிநாதன் ************************* இசைப் பாட்டிற்கு அழகூட்டுவது முடிவின்றிக் கொட்டி முடியும் இரைச்சல் (4) Loading...

விடை 3581

இன்றைய வெடி: கல்லெறிந்து கலைந்த கனவால் ஒரு மொழியுடன் தோன்றியது (5) இதற்கான விடை:  உருவானது (தோன்றியது) = உருது +  கனவால் - கல் இன்று அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பு:

உதிரிவெடி 3581

உதிரிவெடி 3581 (பிப்ரவரி 13, 2019) வாஞ்சிநாதன் *******************   கல்லெறிந்து கலைந்த கனவால் ஒரு மொழியுடன் தோன்றியது (5) Loading...

விடை 3580

இன்றைய வெடி: நெருங்கி அன்போடு உறவாடி பின்னே விலகு (3) இதற்கான விடை:   குலவி = விலகு  இன்று பெறப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியல்.

விடை 3579

இன்று காலை வெளியான வெடி: ரத்தைத்தை உறிஞ்சுவதில் துளி ரத்தம் வெட்டிப் பேச்சு (4) அதற்கான விடை:   அரட்டை = அட்டை + ர (த்தம்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளின் தொகுப்பு

உதிரிவெடி 3579

உதிரிவெடி 3579 (பிப்ரவரி 11, 2019) வாஞ்சிநாதன் ********************* ரத்தத்தை உறிஞ்சுவதில் துளி ரத்தம் வெட்டிப் பேச்சு (4) Loading...

Solution to Krypton 106

Today's clue: Break, bury and feel the absence of a headless wild animal (12) Its solution: INTERMISSION = INTER  MISS   (L) ION Break (noun) is an intermission. To see all the answers received to day click here.

விடை 3578

இன்று காலை வெளியான வெடி: இரண்டாக்கி இரண்டாவதை ஒழித்து  இறுதியாக வா (3)      இதற்கான விடை:  பிந்து = பிளந்து - ள இன்று  பெறப்பட்ட அனைத்து விடைகளின் தொகுப்பு.  

விடை 3577

இன்றைய வெடி: கப்பலுமில்லை நீளமும் இல்லை (4) இதற்கான விடை:  அகலம் விடையளித்தவர்கள் பட்டியல்

Solution to Krypton 105

Today's clue To be held awkwardly in a secluded place where one records (8) The solution is:  NOTEBOOK = NOOK + TO BE Just nine persons have solved it correctly. They are:  S.Parthasarathy, R.Narayanan, S.R.BALASUBRAMANIAN Ravi Sundaram, Kesavan,  Siddhan Subramanian Sundar Vedantham, S P Suresh, Paul Looks like the cue is tougher than I expected. Hope you all like it. CORRECTION: One more solution: MK Raghavan submitted at 8.51  pm. -->

விடை 3576

இன்று  வெளியான வெடி: அகராதி வலிமை கொண்டு திணறடி (4) இதற்கான விடை:   அசத்து = அ (அகராதி)  + சத்து  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண

விடை 3575

இன்றைய வெடி வணக்கத்திற்குரிய தலைவரை முதலில் வருத்தி ஆட்டுவி (5) இதற்கான விடை:  தவத்திரு = வருத்தி + த (லைவரை). நேற்றைய வெடி (உருகவில்லை = கருவில் உலை) ரசிக்கும்படியாக இருந்தது என்று பாராட்டிக்  கருத்துரையிட்டவர்களுக்கு நன்றி.   அணு உலை (reactor),  அணுக்கரு ( nucleus)  என்று படித்துக்கொண்டிருந்தேன். உதிரிவெடியில் அணுகுண்டைப் போட்டாலென்ன என்று தோன்றியது. அதனால் அணு பிளந்தோடி மிச்சமான உலை, கரு கொண்டு அமைத்த புதிர் நேற்றையது.      இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

உதிரிவெடி 3575

உதிரிவெடி 3575 (பிப்ரவரி 7, 2019) வாஞ்சிநாதன் ********************* வணக்கத்திற்குரிய தலைவரை முதலில் வருத்தி ஆட்டுவி (5) Loading...

விடை 3574

இன்றைய வெடி: உலையில் இடப்பட்டு கருவில் சிதைந்தாலும் இன்னும் திடமாய் இருக்கிறது (6) இதற்கான விடை: உருகவில்லை = உலை + கருவில்  இன்று பெறப்பட்ட விடைகளின் பட்டியல்.

உதிரிவெடி 3574

உதிரிவெடி 3574 (பிப்ரவரி 6, 2019) வாஞ்சிநாதன் *********************** உலையில் இடப்பட்டு கருவில் சிதைந்தாலும் இன்னும் திடமாய் இருக்கிறது (6) Loading...

விடை 3573

இன்று காலை வெளியான வெடி மேற்கே சென்று கொடுக்க  அடியேன் வெளியே மஹதியுடன் இருப்பவன் (4) இதற்கான விடை:  நாரதன் = நான் + தர (எதிர் நோக்கிச் செல்ல, ரத) விடையளித்தவர்கள் பட்டியல்

உதிரிவெடி 3573

உதிரிவெடி 3573 (பிப்ரவரி 5, 2019) வாஞ்சிநாதன் ******************* மேற்கே சென்று கொடுக்க  அடியேன் வெளியே மஹதியுடன் இருப்பவன் (4) Loading...

விடை 3572

இன்றைய வெடி: ஒற்றை ஒற்றையான சுழி நீங்கிட அலை (2) இதற்கான விடை:  திரி =  உதிரி - உ இன்று அனுப்பப்பட்ட  விடைகள்  பட்டியல். https://docs.google.com/spreadsheets/d/1yy4p4xMs-yTmvttPZOUBD_WeYP1Vmteu4vwB4cJ5dK8/edit?usp=sharing

SOLVERS for Krypton 104

Today's puzzle. Freethinker in an association for a game left (7) Its solution: INFIDEL Note: I lost the link to the answer form for this puzzle. I tried opening the (100+) forms one by one on my google drive and after 5 I gave up. If I succeed I'd insert this link. So please visit this page tomorrow. Update at 8 am 4th Feb. Found the link for solvers.

விடை 3571

இன்று காலை வெளியான வெடி: முதுமை இருக்குமிடம் காட்டுவது (4) இதற்கான விடை: முகவரி,  இது ஒருவர் இருக்குமிடம் எது என்று காட்டும்; முகத்தில் இருக்கும் வரி (சுருக்கம்) முதுமையைக் காட்டும். இன்று பெறப்பட்ட விடைகளின் பட்டியல்.  

Krypton 104

Krypton 104 (3rd February 2019) Vanchinathan ********************* Krypton completes a year, that is 52 weeks, of puzzles with this weekend. For me it was fun making all these puzzles. Hope it was fun for you too solving them! Now to today's fun:   Freethinker in an association for a game left (7) Loading...

விடை 3570

இன்றைய வெடி: சாமிக்கு வழங்கிய மதுவை விலக்கிய திருடன் உடையவன் (6) அதற்கான விடை:  படைத்தவன் = படைத்த +  (கள்) வன் வசதி படைத்தவர்கள்  என்பது போன்ற இடங்களில் படைத்தவன் என்ற சொல் " உடையவன் " என்ற பொருளில் வருவதைக் காணலாம். இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்.

உதிரிவெடி 3570

உதிரிவெடி 3570 (பிப்ரவரி 2, 2019) வாஞ்சிநாதன் *********************** சாமிக்கு வழங்கிய மதுவை விலக்கிய திருடன் உடையவன் (6) Loading...

விடை 3569

இன்றைய வெடி தலைமை முரட்டுத்தனமாகத் தொடங்கும் இயல்பு (4) இதற்கான விடை  முதன்மை = மு + தன்மை விடையளித்தவர்கள் பட்டியலைப் பார்க்க இதைச்  சொடுக்கவும்.