Skip to main content

Posts

விடை 4316

  நேற்றைய வெடி: வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) அதற்கான விடை:    சிற்றுந்து = சிந்து + காற்று சிந்து = நதி ற்று = காற்று, தலை பிய்த்தது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   நேற்றைய திரிவெடிக்கான விடைகளைக் கண்டு கருத்துரையில் குணா எழுதிய வெண்பாவைப் பலரும் கவனிக்காமற் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதை இங்கே நகலெடுத்து அளிக்கிறேன்: சிந்தை மயக்கும் திரிவெடிப் போட்டிக்கு வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய் நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன் சாலவும் ஒற்றுமை தான்.  குணா அவர்களே, நாலு பேர் சொன்னால் அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்! கூர்மதியால் கண்டுரைத்த குணாவுடன் நால்வரின் சீர்மிகு  சிந்தனையைச் செப்பிடுவேன் இத்தருணம் ஊர்தெரிய இங்கே உணர்ந்து.

Krypton 450

    Krypton 450 (27th October  2024)  ****************** *** Relevant to in-house expert in entomology (9)  SOLUTION will appear tomorrow 6pm Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4316

   உதிரிவெடி 4316 ( அக்டோபர் 27, 2024) வாஞ்சிநாதன் ****************** வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 30 விடைகள்

     நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்: இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது  இதில் தனியானது:  கார் நாற்பது   மற்ற நான்கும் நீதிநெறி நூல்கள். கார்நாற்பது மட்டும் அகத்திணை சார்ந்தது.   நான் எதிர்பாராத சரியான வேறு விடையும் வந்துள்ளது. நாலடியர் மட்டும் பல புலவர்களெழுதியதைத் திரட்டித் தொகுத்த நூல். மற்றவை ஒவ்வொன்றும் தனி ஆசிரியரால் எழுதப்பட்டவை. இப்புதிர் விடையளிப்போரிடமிருந்து நான் எப்போதும் புதியதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றி!   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

திரிவெடி 30

  திரிவெடி 30 (26/10/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4315

 நேற்று காலை வெளியான வெடி ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6)  அதற்கான விடை :  மூக்கடைப்பு = ஜலதோஷத்தின் விளைவு                                           =  மூப்பு + பூக்கடை- பூ மூப்பு = வயோதிகம் நேற்று  மாலை ஏழரை மணிவாக்கில் கருத்துரை இடும்  பகுதியில் பெயரிலியாக ஒருவர் விடையை எழுதிவிட்டார். அதை திரு மு க ராகவன் சுட்டிக் காட்டிய பின் நீக்கிவிட்டேன்.  நீக்கும் முன் அது கண்ணில் பட்டுவிட்டதால் புதிரவிழ்க்கும் வாய்ப்பை இழந்ததாக இருவர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இ தை த் தவிர்க்க,   கருத்து அளிக்க விரும்புவர்கள் மறுநாள் விடைக்கான பதிவில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது விடையோ, அதிகக் குறிப்புமோ இல்லாதவாறு கருத்தை எழுதுங்கள்.   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.