நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: புதன், வெள்ளி, திங்கள், செவ்வாய், வியாழன் எல்லோரும் இதற்கான விடைகளை வானவியலிலிருந்து சரியாகக் கண்டு பிடித்து விட்டீர்கள். திங்கள் மட்டும் பூமியைச் சுற்றிவருவது என்பதுதான் அது. அருள் அளித்திருக்கும் ஐந்து விடைகளும் வானவியலின் அடிப்படையில் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு விடை சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் நான் எதிர்பார்க்காத விடை, பத்மா அளித்திருப்பது. செவ்வாய்க் கிழமை மட்டும் கல்யாண முகூர்த்தம் இருக்காது என்பதும் பொருத்தமான விடையே. எல்லோருக்கும் பாராட்டுகள். விடையளித்தோர் விவரத்தைக் காண இங்கே சொடுக்கவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.