நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:
வேழம், திருமால், முழுமை, மாவிலை, சங்கு
வேழம் = வாரணம்
திருமால் = நாரணன்
முழுமை = பூரணம்
மாவிலை = தோரணம் (??)
இந்த நான்கும் முதல் சொற்களாக எதுகையாக ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடலொன்றின் நான்குவரிகளில் உள்ளன.
கிட்டதட்ட இரண்டுமாதத்தில் புது இசைவடிவில் வெளியானதிலிருந்து நூறுமுறைக்கு மேல் இப்பாடலைக் கேட்டுவிட்டேன்/பார்த்துவிட்டேன்.
அது ஒலித்துக்கொண்டிருக்கும்போது செய்த வெடி.
வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
அதனால் இவற்றோட ஒட்டாத சொல் சங்கு. ஆனாலும் இப்பபாடலை முழுதாகப் படித்தால் ஆண்டாள் வெண்சங்கிடம் என்ன கேட்கிறாள் என்று அறிந்து அதன் சூட்சுமத்தைப் புரிந்தால் வியந்துபோவீர்கள்.
இங்கே இசையாகக் கேட்கலாம். இங்கே பரதநாட்டியத்துடன் காணலாம்.
இங்கே இசையாகக் கேட்கலாம். இங்கே பரதநாட்டியத்துடன் காணலாம்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments