நேற்றைய வெடி:
கொடி மானம் பெருமையில்லாப் பெருமையிழந்து ப,க,ட்,டு,க்,கு உதாரணங்கள் (5)
அதற்கான விடை:
வல்லினம் = வல்லி + னம்
வல்லி = கொடி (புஷ்பலதா = புஷ்பவல்லி = மலர்க்கொடி)
னம் = மானம் - மா (மா = பெருமை)
கடினமான இப்புதிருக்கு விடையளித்த அனைவருக்கும் பாராட்டுகள்.
பிரசாத் வேணுபோபால் விடையோடு வெண்பாவை எழுதியுள்ளார். அதனால் நானும் ஒன்று எழுதுகிறேன்:
பகட்டான சொல்லழகைப் பார்த்துநீர் தந்த
திகட்டா விடையின் சிறப்பை நுகர்ந்து
கொடியேந்திப் பாராட்டிச் சொல்வேன் உதிரி
வெடியில்நீர் வேந்தரென நின்று.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments