Skip to main content

திரிவெடி 19 விடைகள்

 


 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:

   புத்தி, திரிபு, உத்தி, மத்தி, அருணா  

 திரிபு உத்தி, மத்தி, அருணா
இவை நான்கும் சொல்லாகவோ பெயராகவோ இருந்தாலும்,
அவை  மாநிலங்களின் பெயர்களின் முதல் மூன்று எழுத்துகள் கூட:
திரிபுரா
உத்திரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
அருணாசலம்

இவ்விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், ஆர் பத்மா, வானதி  இருவருக்கும்  மூவருக்கும் பாராட்டுகள்.
"திரிபு" மட்டும் தமிழ்ச் சொல் மற்றவை சமஸ்கிருதம் (அம்பிகா)
"அருணா"வில் மட்டும் "தி" என்ற எழுத்து இல்லை (முத்துசுப்ரமணியம், அம்பிகா) என்ற விடைகளும் நான்  எதிர்பார்க்காத  ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கங்கள் கொண்ட விடைகள்.

இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

R. Padma said…
வானதியும் சரியான விடை அளித்துள்ளார்
GUNA said…
https://knowindia.india.gov.in/states-uts/. உத்திரப் பிரதேசம் என்பது தவறானது.உத்தரப் பிரதேசம் என்பதே சரியானது. இதன்படி பார்த்தால் தங்கள் விளக்கம் பொருத்தமாக இல்லை. மேலே கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கவும்
GUNA said…

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
Word : உத்தரம்
Word
English & Tamil Meaning
பொருள்
உத்தரம் 1 uttaram
n. <ut-tara.
1. Answer, reply, rejoinder;
மறுமொழி. வத்தவர் பெருமகனுத்தர நாடி (பெருங். மகத. 10, 55).
2. Written statement filed by the defendant in a cast;
எதிர்வாதம்.

3. That which comes later; that which follows;
பின்நிகழ்வது.

4. That which is superior;
மேற்பட்டது. அதுக்குத்தரமில்லதை (உத்தரரா. திருவோலக். 4).

5. Beam, cross-beam in a building;
விட்டம். (நெடுநல். 82, உரை.)

6. Period of the sun's progress towards the north;
உத்தராயணம். (விதான. குணா. 74.)

7. North;
வடக்கு. (திவா.)

8. Submarine fire;
ஊழித்தீ. (பிங்.)

உத்தரம் 2 uttaram
n. <uttara-phalgunī.
The 12th nakṣatra, part of cinka-rāci and kaṉṉ-rāci containing Denebola or B Leonis;
12-ஆவது நட்சத்திரம். ______&&&&_____&&&&&__________எண் 7 ல் கொடுக்கப்பட்ட வடக்கு என்ற பொருளின் அடிப்படையில் தான் உத்திரப்பிரதேசம் அந்தப் பெயர் பெற்றது

GUNA said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.