நேற்று காலை வெளியான வெடி
உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5)
அதற்கான விடை : கட்டியம் = கட்டிய + ம்
கட்டிய = உடுத்திய
ம் = கடைசி நிமிடம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
திரிவெடி 19ல் உத்தரப்பிரதேசம்தான் சரி, உத்திரப் பிரதேசம் சரியல்ல என்று குணசேகரன் கருத்துரையில் கூறியுள்ளார். ஹிந்தி உச்சரிப்பின் படி கூறுகிறார். எது சரியென்று நான் அறிய முற்படவில்லை.
"உத்தர்" என்று இப்போது நான் கண்டு பிடித்தேன். "ர்", என்பது ர ஆவதும் "த" என்பது "தி" என்று ஆனதும் தமிழ்சொல் போல் ஒலிக்கிறது.
சாவித்ரி/சாவித்திரி, பத்ரிகை/பத்திரிகை, த்ராக்ஷை/திராட்சை என்று தமிழ்ப்படுத்தும் பொதுவான விதி இருப்பதால் இது பரவலாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
Comments
தமிழ்ச் சொற்கள் பற்றிய ஐயங்கள் எழும்போது விக்கிபீடியா சொல்வதை இறுதித் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளும் பலரில் நானும் ஒருவன் என்பதால் அதை இங்கே பதிவிடுகிறேன்
விக்கிப்பீடியா
உத்தரப் பிரதேசம்
இந்திய மாநிலம்