Skip to main content

விடை 4305

 

 நேற்று காலை வெளியான வெடி
உடுத்திய பின்னர் கடைசி நிமிடம் வருவோரைப் பற்றிய முன்னறிவிப்பு (5)

அதற்கான விடை :  கட்டியம் = கட்டிய + ம்
கட்டிய = உடுத்திய‌
ம் = கடைசி நிமிடம்

  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

திரிவெடி 19ல் உத்தரப்பிரதேசம்தான் சரி, உத்திரப் பிரதேசம் சரியல்ல என்று குணசேகரன் கருத்துரையில் கூறியுள்ளார்.  ஹிந்தி உச்சரிப்பின் படி கூறுகிறார்.  எது சரியென்று நான் அறிய முற்படவில்லை. 

"உத்தர்" என்று இப்போது நான் கண்டு பிடித்தேன். "ர்", என்பது  ர ஆவதும் "த" என்பது "தி" என்று ஆனதும் தமிழ்சொல் போல் ஒலிக்கிறது.
சாவித்ரி/சாவித்திரி, பத்ரிகை/பத்திரிகை, த்ராக்ஷை/திராட்சை என்று தமிழ்ப்படுத்தும் பொதுவான விதி இருப்பதால் இது பரவலாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

 

Comments

GUNA said…
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
தமிழ்ச் சொற்கள் பற்றிய ஐயங்கள் எழும்போது விக்கிபீடியா சொல்வதை இறுதித் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளும் பலரில் நானும் ஒருவன் என்பதால் அதை இங்கே பதிவிடுகிறேன்


விக்கிப்பீடியா

உத்தரப் பிரதேசம்
இந்திய மாநிலம்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்