Skip to main content

திரிவெடி 40 விடைகள்

  நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

 திரண்டு, நிக‌ண்டு, வெகுண்டு, வறண்டு, உருண்டு

 மற்றவற்றுடன் சேராதது: நிகண்டு, ஒரு பெயர்ச்சொல்.  மற்ற நான்கு சொற்களும் வினையெச்சங்கள், அதாவது இன்னொரு வினைச் சொல் உடனடியாக வந்தால்தான் முழுமை பெறும்:
வெண்ணெய் திரண்டு வந்தது.

பீமன் வெகுண்டு எழுந்தான்.

  காவிரி வறண்டு கிடக்கிறது (இப்போது மேட்டூர் அணை வழிகிறது!)
 

தரையில் உருண்டு, புரண்டு அழுதான் (இரண்டு வினையெச்சங்கள்)

நிகண்டு என்பது புலவர்களுக்கு எதுகையாக அமைந்த சொற்களை அடுக்கித் தரும் அகராதி!   புரண்டு, திரண்டு சேர்ந்து வருமா என்று சூடாமணி நிகண்டில்  பார்க்க வேண்டும்.


Comments

GUNA said…
சூடா       மணி நிகண்டாம்  செந்தமிழ் நூலினை
நாடா     மலும்பெறலாம்  நாம்தெளிவு --வாடாமல்
செந்தமிழ்ச் சான்றோர் தமிழ்த்தென்றல் பாடிய
இந்தப்பா  தன்னைப் படித்து

-------------------------------------------------------------
இருளில் ஒளியைக் குறள்வெண் பாவால்
இருமையும் ஒருமையும் அருகன் அருகே
பொருளும் அருளும் மார்க்கிஸ் காந்தி,
சித்தத் திருத்தல் செத்துப் பிறத்தல்
என்னும் நூல்களைப் பண்ணினன் அகவலால்.
பழைய உரைநடை விழுமிய அகவல்
பின்னே யாப்பணி துன்ன வேய்ந்தது;
உளறும் என் அகவலும் ஒருவித உரையே;
பொழுது படுக்கையில் கழிக்க நேர்ந்தபின்
கடிதில் உரைநடை முடிதல் கண்டேன்;
பாவின் அமைப்போ ஓவியம் ஆகி

உருண்டும் புரண்டும் திரண்டும் நிற்கும்

மொழிநத பின்னும் அழிதல் அரிதாம்;
ஆதலின் பாவால் ஓதலைக் கொண்டேன்”
------------------------------------------------------------
முதுமை உளறல்
GUNA said…
"'முதுமை உளறல் "' என்னும் நூலின் ஆசிரியர்
தமிழ்த்தென்றல்  என்றும் திரு,வி,க. என்றும்
நாம் அறிந்த திரு வி. கல்யாணசுந்தரனார்
அவர்கள்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்