நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்:
இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது
இதில் தனியானது: கார் நாற்பது
மற்ற நான்கும் நீதிநெறி நூல்கள். கார்நாற்பது மட்டும் அகத்திணை சார்ந்தது.
நான் எதிர்பாராத சரியான வேறு விடையும் வந்துள்ளது. நாலடியர் மட்டும் பல புலவர்களெழுதியதைத் திரட்டித் தொகுத்த நூல். மற்றவை ஒவ்வொன்றும் தனி ஆசிரியரால் எழுதப்பட்டவை.
இப்புதிர் விடையளிப்போரிடமிருந்து நான் எப்போதும் புதியதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றி!
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய்
நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன்
சாலவும் ஒற்றுமை தான்.