Skip to main content

Posts

Showing posts from April, 2024

Solution to Krypton 425

Yesterday's clue He and I, for example, reportedly speak clearly (9) Solution: PRONOUNCE He and I, actually everyone, pronounce the word 'Pronouns' almost like pronounce. Visit this page to see all the solutions received.

விடை 4291

நேற்று காலை வெளியான வெடி தன்னுடைய முதல் குற்றம் கடைசி குற்றம் சேர தரையோடு செல்லும் (4) அதற்கான விடை தவழும் = த + வழு + ம் த = தன்னுடைய என்பதன் முதல் (எழுத்து) வழு = குற்றம் ம் = கடைசி குற்றம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 425

Krypton 425 (28th April, 2024) ****************** He and I, for example, reportedly speak clearly (9) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4291

  உதிரிவெடி 4291 (ஏப்ரல் 28 , 2024) வாஞ்சிநாதன் ************************ தன்னுடைய முதல் குற்றம் கடைசி குற்றம் சேர தரையோடு செல்லும் (4)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 5 விடைகள்

   இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:   மலேயா, வியட்நாம், பர்மா,  சயாம், கம்பூசியா      தென்கிழக்காசியாவில் அமைந்த இந்த நாடுகளின் பெயர்கள் இன்று மாறிவிட்டன:  மலேயா ‍‍--> மலேஷியா,  பர்மா‍‍ ‍‍-->மியான்மர்,  சயாம் --> தாய்லாந்து,  கம்பூசியா-- ‍‍> கம்போடியா.  சேராத நாடு வியட்நாம், இன்று வழங்கப்படும் பெயரே அளிக்கப்பட்டுள்ளது. (அமெரிக்காவுடன் போரிட்ட நாடு என்றும் வியட்நாமை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் கூறலாம்.  சரிதானா?)   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

திரிவெடி 5

திரிவெடி 3 (13/04/2024)   வாஞ்சிநாதன்     இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை. குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம். இன்றைய திரிவெடி:   மலேயா, வியட்நாம், பர்மா,  சயாம், கம்பூசியா இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 424

Yesterday's clue Highly skilled performer indeed catches a wild boar (7) Solution: ACROBAT = ACT + BOAR ACT = deed TROBA = 'wild' boar, in deed (act) Statutory warning: Wild boars are caught by highly trained and skilled people. Others are requested not to the same! Visit this page to see all the solutions received.

விடை 4290

நேற்றைய வெடி: உள்ளுக்குள்ளே வாட்டும் காற்று எதிர்ப்புறமாய் வீச வெட்டுவது (4) அதற்கான விடை: உடைவாள் இதற்கு விடை கண்ட அனைவரும் சரியான விளக்கத்தை அளித்திருக்கின்றனர். பிரசாத் வேணுபோபால் விவரமாக விள‌க்கத்தை எழுதியுள்ளார். அதை அப்படியே இங்கே இடுகிறேன்: உள்ளுக்குள்ளே = உள் என்பதின் நடுவே, வாட்டும் காற்று = வாடை , எதிரே = வாடை திரும்பி டைவா என மாறி உள் என்பதன் நடுவே வர உடைவாள். ஒரு வெட்டும் கருவி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

திரிவெடி 4 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் பிரம்மபுத்ரா, காவிரி, கங்கை, தீஸ்தா, கோதாவரி இதில் சேராதது, பிரம்மபுத்ரா : நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயராக இருக்கும், இது மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.   இதே விடைக்கு நான் எதிர்பாராமல் வாசகர்கள் கண்டுபிடித்த சரியான வேறொரு விளக்கம்: பிரம்மபுத்ரா  மட்டும்  சீன நாட்டில் உற்பத்தியாகும் நதி, மற்றவை இந்தியாவிலேயே உற்பத்தியாகின்றன. பெரியவர்கள் எல்லோரும் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியதால் இதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்!   விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

உதிரிவெடி 4290

உதிரிவெடி 4290 ( ஏப்ரல் 21, 2024) வாஞ்சிநாதன் ************************* உள்ளுக்குள்ளே வாட்டும் காற்று எதிர்ப்புறமாய் வீச வெட்டுவது (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 4

திரிவெடி 2 (20/04/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   பிரம்மபுத்ரா, காவிரி,  கங்கை, தீஸ்தா,  கோதாவரி உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

உதிரிவெடி 4289 விடைகள்

நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள். நேற்று காலை வெளியான வெடி மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) அதற்கான விடை ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 423

Krypton 423 (14th April, 2024) ****************** The act of giving shape to a scarf, or mat, I once held together (9) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4289

உதிரிவெடி 4289 (ஏப்ரல் 14 , 2024) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 3 விடைகள்

 இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை.   தனது கூர்வாளை ஏந்தி அந்த இளவயதினள் செம்மரங்கள் அடர்ந்த  காட்டில் சென்றது புதுவெள்ளம் புரண்டோடியது போலிருந்தது என்றால் அது மிகையாகாது, உண்சொல்லே.  சாண்டில்யன் கதை போல் தொடங்கிய இந்த வாக்கியத்தில் கடைசியாக ஏதோ இடிப்பது போல் இருக்கிறதா? அதுதான் இன்றைய திரிவெடியில்  அடங்கிய பிணைப்பு.  கூர்மை (கூர்), இளமை (இள), செம்மை(செம்), புதுமை (புது) என்பவை பண்புப்பெயர்கள்,  மையையிழந்து பெயரடையாகும். ஆனால் உண்மையோ பல்லையிளிக்கும் (அல்லது உண்ணென்று சொல்லி  வாயைத் திறக்க வைக்கும்). மீ. கண்ணன், அகிலா ஸ்ரீ தரன், ராமகிருஷ்ண ஈஸ்வரன் இம்மூவரும் சரியாக‌ இதைக் கண்டறிந்து விடையளித்திருக்கிறார்கள்.   ஒரு சந்தேகம். சுற்றி எதுவும் இல்லாமல் தனிமையில் இருக்கும்  மரம் "தனிமரம்", வெண்மையாக வானில் மிதந்து வருவது "வெண்மேகம்" என்றால் , எங்கேயிருந்து இந்த "புதுமைப்பெண்" வந்தாள்? தெரிந்தவர்கள் விளக்கவும்.  இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.     

திரிவெடி 3

திரிவெடி 3 (13/04/2024)   வாஞ்சிநாதன்     இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை. குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம். இன்றைய திரிவெடி:   உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 2 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் ஆடு, நண்டு, படகு, தராசு, மீன் இதில் ஆடு(மேஷம்), நண்டு (கடகம்), தராசு (துலாம்), மீன் (மீனம்) இவையெல்லாம் சோதிடத்தில் கூறப்படும் ராசிகள் என்பதால் தொடர்புடைய சொற்கள். படகு இதில் சேராதது. வேறு சில தொடர்புகள்: ஆடு, நண்டு, படகு, தராசு இவை உகரத்தில் முடிபவை, மீன் மெய்யெழுத்தில். ஆடு, நண்டு, படகு, மீன் போலில்லாமல் தராசு ஒரே இடத்தில் இருப்பது. அவை அவ்வளவு பலமாக இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் உங்கள் கற்பனைகளில் ஏதாவது நான் எண்ணிய தொடர்பை விடச் சிறந்ததாக இருக்கலாம். அனுப்பிக் கொண்டிருங்கள். இந்த புதுவித விளையாட்டில் வெறும் சொல் திறமை மட்டுமின்றி, பொது அறிவின் அடிப்படையிலும் தொடர்புகள் அமையும் என்பதை இனி வரும் நாட்களில் நினவு கொள்ளுங்கள். இனிமேல் சனிக்கிழமைதோறும் திரிவெடி. விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

திரிவெடி 2

திரிவெடி 2 (11/04/2024)   வாஞ்சிநாதன்     இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. உதாரணம்:  அகலம், அதரம், அவலம், அங்கம் இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்? அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர  மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள  சொற்கள் கிடைக்கின்றன. இன்றைய திரிவெடி: பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு சொற்கள் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராத சொல்?   ஆடு, நண்டு, படகு, தராசு, மீன் உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

திரிவெடி 1 விடை

உதிரவெடி தேய்ந்து 'உ' விழுந்து திரிவெடியாகியது என்று நினைக்காமல் இப்புதுவகைப் புதிரை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அதற்கு நன்றி. இந்த வாரம் ர‌ம்ஜான் விடுமுறை வியாழக்கிழமை வருவதால் அன்றும் இன்னொரு திரிவெடி வெளிவரும். அதன் பிறகு சனிக்கிழமைதோறும் திரியும், ஞாயிறுகளில் உதிரியும் வெளியிடத் திட்டம். இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்: தாரம், நேசம், காயம், பாசம், காரம் இவற்றில் நான்கு சொற்கள் முன்பு "ஆ" என்ற‌ எழுத்தை ஒட்ட ஆதாரம், ஆகாயம், ஆபாசம், ஆகாரம் என்ற சொற்களைப் பெறலாம். நேசம்தான் இடிக்கிறது. அதுவே மற்றவையோடு சேராத சொல். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். அடுத்த திரியில் சொல்லின் பொருளையும் பயன்படுத்தி விடையை அடையுமாறு அளிக்கிறேன்.

விடை 4288

நேற்றைய வெடி: கோபங்கொண்டு சத்துள்ள வேட்டைக்காரன் மாட்டைத் துரத்தினான் (7) அதற்கான விடை: ஆவேசத்துடன் = ஆ+ வேடன் + சத்து இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4288

உதிரிவெடி 4288 ( ஏப்ரல் 7, 2024) வாஞ்சிநாதன் ************************* கோபங்கொண்டு சத்துள்ள வேட்டைகாரன் மாட்டைத் துரத்தினான் (7) புதுமையான திரிவெடி ஆரம்பிச்சாச்சு. இங்கே போய் எட்டிப்பாருங்கள். விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Krypton 422

Krypton 422 (April 7th, 2024) ****************** Gentle blow to a bird structure (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

திரிவெடி 1

திரிவெடி 1 (07/04/2024)   வாஞ்சிநாதன்     நியூயார்க் டைம்ஸ் வெளியிடும் கனெக்ஷன்ஸ் புதிரைத் தழுவியமைக்கப்பட்டது இந்த வெடி. இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இழைகள் பலவற்றைத் திரித்து கயிறு உருவாக்குதல் போல இதில் நான்கைத் திரித்தால் ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத சொல் எது என்று கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. உதாரணம்:  அகலம், அதரம், அவலம், அங்கம் இதில் எதை ஒதுக்கினால் மிச்சத்தில் கயிறு திரிக்கலாம்? அங்கம் என்பது எனது விடை. அதைத் தவிர  மற்ற சொற்கள் எல்லாவற்றிலும் முதலெழுத்தை நீக்க, கலம், தரம், வலம் என்று பொருளுள்ள  சொற்கள் கிடைக்கின்றன. நான் புதிரை ஒருவிடையை மனதில் கொண்டே அமைப்பேன். என்னையறியாமல் சரியான விளக்கத்துடன் மற்றொரு விடை பொருந்தினாலும் எற்றுக்கொள்வேன்.  வேண்டுமென்றே 5 வயதுக் குழந்தைகள் கண்டுபிடிக்கும் தொடர்பும் வருமாறும் சொற்கள் இருக்கலாம். ஆனால் சற்றே ஆழமான பிணைப்பே சரியான விடையாக இருக்கும்.  நான் குறுக்கெழுத்துப்புதிரிலிருந்து வருவதால் வெறும் சொல்விளையாட்டாகவு...

விடை 4289

நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி. ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள். நேற்று காலை வெளியான வெடி மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4) அதற்கான விடை ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.