Skip to main content

Posts

Showing posts from July, 2019

விடை 3748

இன்று காலை வெளியான புதிர்: பணிப்பெண் பாதி மஞ்சம் வந்து கூடியதால் உண்டான சோர்வு! (4)   அதற்கான விடை:  ஆயாசம் = ஆயா + (மஞ்) சம் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3748

உதிரிவெடி 3748 (ஜூலை 31, 2019) வாஞ்சிநாதன் **********************   பணிப்பெண் பாதி மஞ்சம் வந்து கூடியதால் உண்டான சோர்வு! (4)   Loading...

விடை 3747

இன்று காலை வெளியான புதிர்: நிச்சயம் தோன்று நடுவில் கடையாகத் தோன்று (3) அதற்கான விடை:  உறுதி = உதி + (தோன்) று இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விடை 3746

இன்று காலை வெளியான புதிர்: ஆறில் ஒன்று அருந்தி மாலை வீச முப்பதடி பாயும்  (4) அதற்கான விடை:  கங்காரு = கங்கா + அருந்தி - அந்தி இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3746

உதிரிவெடி 3746 (ஜூலை 29, 2019) வாஞ்சிநாதன் ********************** ஆறில் ஒன்று அருந்தி மாலை வீச முப்பதடி பாயும்  (4) Loading...

Solution to Krypton 153

Today's clue: Mid 20, easy-going ,   affectionate and  friendly  (7) Its solution:  CORDIAL Today's clue was a conscious attempt to make it  different from the limited type of clues I make. Hope those of you missed solving it will still have fun decoding the answer. Here is the (very short) list of answers sent for today's clue:

விடை 3745

இன்று காலை வெளியான புதிர்: ஓட்டத்தைத் தடுக்கும் கட்டை முனை வெளியே  பூசு (4) அதற்கான விடை:  அடைப்பு = அப்பு + (கட்) டை இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3745

உதிரிவெடி 3745 (ஜூலை 28, 2019) வாஞ்சிநாதன் ********************** ஓட்டத்தைத் தடுக்கும் கட்டை முனை வெளியே  பூசு (4) Loading...

விடை 3744

இன்று காலை வெளியான புதிர்: இடை வியாபாரி பாதி செருகிய அழகான வாயில் இருக்கும் (4) அதற்கான விடை:  அதரம் (உதடு; வாயில் இருக்கும்) = அம் +  தர; இடை வியாபாரி பாதி = தர(கன்) அம் = அழகான (அங்கயற்கண்ணி = அழகான கயல் போன்ற கண்ணை உடையவள்) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3744

உதிரிவெடி 3744 (ஜூலை 27, 2019) வாஞ்சிநாதன் **********************   இடை வியாபாரி பாதி செருகிய அழகான வாயில் இருக்கும் (4) Loading...

விடை 3743

இன்று காலை வெளியான புதிர்: மொத்தமும் குலுக்கி விதி மீறிய தவறுடன் தும்மு (5) அதற்கான விடை:  முழுவதும் = வழு + தும்மு       (வழு = விதி மீறிய தவறு) இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உதிரிவெடி 3743

உதிரிவெடி 3743 (ஜூலை 26, 2019) வாஞ்சிநாதன் **********************   மொத்தமும் குலுக்கி விதி மீறிய தவறுடன் தும்மு (5)   Loading...

விடை 3742

இன்று காலை வெளியான புதிர்: இரும்பாலான கருவி ஒரு நதியை அடக்கியது அடக்கமில்லை (6) அதற்கான விடை: அகங்காரம் =  அரம் + கங்கா இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.   

உதிரிவெடி 3742

உதிரிவெடி 3742 (ஜூலை 25, 2019) வாஞ்சிநாதன் ***********************    இரும்பாலான கருவி ஒரு நதியை அடக்கியது அடக்கமில்லை (6)   Loading...

விடை 3741

இன்று காலை வெளியான புதிர்: பாசி மாற்றத்தால் ஒரு கலை தந்த கலம் (5) அதற்கான விடை: பாத்திரம்; சித்திரம் என்ற கலையில் 'பா', 'சி'யை மாற்ற வந்தது. இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

விடை 3740

இன்றைய புதிர்: வேறு ஊருக்குச் செல்வது யாரது? வாலை நறுக்கிப் புரட்டி  சவத்தோடு  போடுவோம்!  (5) அதற்கான விடை : பிரயாணம் = வேறு ஊருக்குச் செல்வது = யார (து) + பிணம் இன்று காலை உதிரிவெடி பயங்கரவாதத்தால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டதாம். வெளியூர் செல்பவர்கள் பிணத்தோடு போடப்படுவர் என்ற அச்சுறத்தலால் வந்தவர்கள் எல்லாம் பயணத்தை ரத்து செய்து வீட்டிற்கே திரும்பிவிட்டனராம். கோயம்பேட்டில் வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் பேருந்துகள் தடங்கலின்றி சாலையில்  நிம்மதியாக இருந்ததென்று மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பக்கத்தைச் சென்று  பார்க்கவும்.

உதிரிவெடி 3740 (ஜூலை 23, 2019)

உதிரிவெடி 3740 (ஜூலை 23, 2019) வாஞ்சிநாதன் ******************** வேறு ஊருக்குச் செல்வது யாரது? வாலை நறுக்கிப் புரட்டி  சவத்தோடு  போடுவோம்!  (5) Loading...

விடை: 3739 ( 22/7/20019)

இன்றைய புதிர்: விதியை விரட்டிய நோய் வந்த நாள் மனதை அலைபாய விடாமல் செய்வது (4) அதற்கான விடை: தியானம் = தினம் + வியாதி - விதி இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பக்கத்தைச் சென்று  பார்க்கவும்.

உதிரிவெடி 3739

உதிரிவெடி 3739 (ஜூலை 22, 2019) வாஞ்சிநாதன் ********************     விதியை விரட்டிய நோய் வந்த நாள் மனதை அலைபாய விடாமல் செய்வது (4) Loading...

விடை 3738

இன்றைய புதிர்: உடைந்து பிரிந்த  நடுப்பகுதி கொண்டு புடவை நெய்யலாம் (2) அதற்கான விடை: தறி = சிதறிய (உடைந்து பிரிந்த) என்பதன் நடுப்பகுதி. ( தரி என்பது சரியான விடையல்ல ) இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பக்கத்தைச் சென்று  பார்க்கவும்.

உதிரிவெடி 3738

உதிரிவெடி 3738 (ஜூலை 21, 2019) வாஞ்சிநாதன் ********************   உடைந்து பிரிந்த  நடுப்பகுதி கொண்டு புடவை நெய்யலாம் (2) Loading...

விடை 3737

இன்றைய புதிர்: ராகம் ஆதி தாளத்துடன் பொருந்திவர கொடுப்பதில் வஞ்சனையில்லை (4) அதற்கான விடை: தாராளம் = ரா + தாளம் இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும்.

உதிரிவெடி 3737

உதிரிவெடி 3737 (ஜூலை 19, 2019) வாஞ்சிநாதன் ******************** ராகம் ஆதி தாளத்துடன் பொருந்திவர கொடுப்பதில் வஞ்சனையில்லை (4) Loading...

விடை 3736

இன்றைய புதிர்: நெற்றியில் இருப்பதை இத்தகைய கண்ணால் பார்க்க முடியாது (3) அதற்கான விடை:  பொட்டை ; பொட்டைக் கண்ணால் பார்க்க முடியாது. நெற்றியில் இருப்பது பொட்டு (சந்தனம், குங்கும், சாந்து, ஒட்டுவான்) .   இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும். ஒரு இரண்டு வருஷப் பழைய சரக்கு இதோ :

உதிரிவெடி 3736

உதிரிவெடி 3736 (ஜூலை 19, 2019) வாஞ்சிநாதன் *********************** நெற்றியில் இருப்பதை இத்தகைய கண்ணால் பார்க்க முடியாது (3) &; Loading...

விடை 3735

இன்றைய புதிர்:   அந்த அரசன்  பெண் தெய்வம்  (4) அதற்கான விடை: அம்மன் ; மன் = அரசன், அம்மன் = 'அந்த அரசன்', பெண் தெய்வம். ஒருவரின் பெயர் தமிழில் 'ன்' என்ற எழுத்தில் முடிந்தால் ஆணின் பெயர் என்றுதான் இருக்கும். மனோகரன், சீமான், தனபாலன், வாஞ்சிநாதன், குமரன்  என்று பல உதாரணங்களைப் பார்க்கலாம். தொழிற்பெயரிலும், தச்சன், பால்காரன், காவலன், அரசன் என்று பார்க்கலாம். ஆனால் பெண் தெய்வத்துக்கு "அம்மன்"! பிரெஞ்சு மொழியில் பெயர்ச்சொற்கள் எல்லாமும் (நாற்காலி, கோபம், காற்று என்று எதுவாக இருந்தாலும்) ஆண்பாலாகவோ, பெண்பாலாகவோ இருக்க வேண்டும் என்று இலக்கணம் சொல்கிறது.  ஆனால் எது ஆண்பால்  எது பெண்பால் என்று தெரிந்து கொள்வதுதான் சிக்கல். நாற்காலி உடைந்தான் என்று சொல்வதா, நாற்காலி உடைந்தாள் என்று சொல்வதா? சில பொது விதிகள் உள்ளன. A word ending in a doubled consonant followed by 'e' is feminine. அதன்படி terre (பூமி), elle (அவள்) famille (family) இவையெல்லாம்  பெண்பால். ஆனால் homme என்ற சொல்லின் பொருள் "ஆண்"! இதைத் தெரிந்துகொண்ட பின் பிரெஞ்சு கற்றுக் கொள்ள வேண்டும் என...

விடை 3734

இன்றைய புதிர்:   தலை சுற்றி வலி புரட்டினாலும் கஷ்டமில்லை (4)     ராட்டினத்தில் ஆசையோடு ஏறுபவர்களுக்குத்தான் இது பொருந்தும். நான் ஒரே முறை ஏறி தலை சுற்றி வயிற்றில் வலி புரட்டி எடுக்க ஏகப்பட்ட கஷ்டம் பட்டேன். அதற்கான விடை: ; தலை சுற்றி = சு; வலி (ஆற்றல்) = பலம்; புரட்டியெடுக்க, லபம், சுலபம்.   இன்றைய புதிருக்கு விடை சுலபமாய்க் கண்டுபிடித்தவர்களை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும்.

விடை 3733

இன்று   காலை வெளியான  வெடி சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்பு குறைவானதா? தரம் குறைவா ன து (5) இதற்கான விடை:  தாழ்வாரம் = தாழ்வா + (த) ரம் (" பிறரை ஏமாற்றிப் பிழைப்பதுதான் தாழ்வு, மூட்டை சுமந்து சம்பாதிப்பதில் தாழ்வில்லை " என்பது போன்ற சொற்றொடர்களில் தாழ்வு என்ற சொல் மதிப்புக் குறைவானது என்ற பொருளிலேயே வருகிறது.)   தாழ்வாரம் வீட்டில் தெருப்புறமாகவோ அல்லது முற்றத்தை அடுத்தோ மூடு சுவரின்றி திறந்தவாறு இருக்கும். இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம். ******* நேற்று "பிரதாபம்" என்ற சொல்லைக் கையாண்டு ஞாபகப் படுத்தியதற்கு மகிழ்ச்சியைத்  தெரிவித்து  மீனாக்ஷி கணபதி தகவல் அனுப்பியிருந்தார்.  அதற்கு அவருக்கு நன்றி. ஆனால் அவர் பாராட்டுவதுபோல் அச்சொல் தானே வந்து உதிரவில்லை.  தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தகவலை சமீபத்தில் மீண்டுமொருமுறை படித்தேன். அதைக் கொண்டு புதிரமைக்க வேண்டுமென்று அப்போது மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் புதிர் அத்தகவல் குறித்து போகாமல் வீர சாதனைக்குப் போய்விட்டது. சென...

உதிரிவெடி 3733

உதிரிவெடி 3733 (ஜூலை 16, 2019) வாஞ்சிநாதன் ******************** சுவரால் மறைக்கப்படாத இடம் மதிப்பு க் குறைவானதா? தரம் குறை வான து (5) Loading...

விடை 3732

இன்று   காலை வெளியான  வெடி இடையழகி செல்ல குழம்பு கலக்கி உள் வரும் (3) இதற்கான விடை:  புகும் =  குழம்பு - ழ  ('இடையழகி') இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3731

இன்று நேற்று  வெளியான திருத்தப்பட்ட  வெடி பாதி விளம்பரம் பெற்றவர் போராடி வீர சாதனை (5) இதற்கான விடை:  பிரதாபம் = (விளம்) பரம் + பிதா முதலில் தவறாக வெளியிட்ட போதிலும் அதிலும் சரியான விடையைக் கண்டு பிடித்த ராம்கி கிருஷ்ணன், மு க ராகவன் இருவருக்கும் பாராட்டுகள். என்னுடைய தவறு குழப்பியதால்  போடாமலிருந்தவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Solution to Krypton 149

Today's clue: Not a seller of Apple,  is harmful to crops  (5,6) Its solution: Agent Orange This chemical was used extensively to destroy crops and forest cover in Vietnam  by USA in 1960s. The target being non-military moral objections were raised and USA justified it saying it is not  like a bomb as it  does not kill people. To see the list of answers submitted today visit this page.

உதிரிவெடி 3731

உதிரிவெடி 3731 (ஜூலை 14, 2019) வாஞ்சிநாதன் ******************** இளையவன், பரதன், பாதி போராடி நிகழ்த்திய வீர சாதனை (5) பெரிய பிழை செய்து விட்டேன். மாற்றாக இப்புதிரை முயலவும். விடையளிக்க நாளை காலை 6 மணி வரை அவகாசம். பாதி விளம்பரம் பெற்றவர் போராடி வீர சாதனை (5) Loading...

Solution to Krypton 148

Today's clue: A  particle around extremely turbulent meat (6)  Its solution:  MUTTON = MUON + TT  MUON is a particle, like electron and boson,  that is studied by Physicists. TT = extremes of TURBULENT Here is the link for the answers received for this clue.

விடை 3730

இன்று காலை வெளியான  வெடி: மரியாதையான போக்கு முதலில் இல்லாவிட்டாலும் இறுதியாக அன்பு அங்கே செய்த நல்ல காரியம் (5) இதற்கான விடை:  புண்ணியம் = கண்ணியம் - க + (அன்) பு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம். புதிர்ப்பக்கத்தில் கருத்தளித்த ராமையா நாராயணனுக்கு: அன்பே சிவம் போன்ற தத்துவம் போதிப்பது எனது எண்ணமில்லை. வாஞ்சிநாதன்  என்று பெயர் வைத்ததற்கு, வார்த்தை வெடிகளையாவது வீச வேண்டுமென்பதுதான் திட்டம். மண்ணில் புதைந்து மறைந்து வெடித்திட்டு கண்ணிவெடி தாக்கிடும் கால்களை --  உண்மை உதிரிவெடி  என்றுமுமை உள்ளுக்குள் தாக்கி கதிகலங்க வைத்திடுங்  காண்

உதிரிவெடி 3730

உதிரிவெடி 3730 (ஜூலை 13, 2019) வாஞ்சிநாதன் ******************** மரியாதையான போக்கு முதலில் இல்லாவிட்டாலும் இறுதியாக அன்பு அங்கே செய்த  நல்ல காரியம் (5) Loading...

விடை 3739

இன்று காலை வெளியான  வெடி தாண்டிச் செல்வோரை இடிக்கும் கருவி (5) இதற்கான விடை:  கடப்பாரை = சுவரை இடிக்கப் பயன்படும் கருவி; கடப்பார்= தாண்டிச் செல்பவர் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3728

இன்று காலை வெளியான  வெடி ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4) இதற்கான விடை:  பூரிப்பு = பூரி + (சீ) ப்பு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3728

உதிரிவெடி 3728 (ஜூலை 11, 2019) வாஞ்சிநாதன் ******************** ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4) Loading...

விடை 3727

இன்று காலை வெளியான  வெடி மரத்துண்டு சிறிய மரத்துண்டு சேரத்ததால் குமட்டலைத் தரும் நிலை (4)   இதற்கான விடை:  மசக்கை = ம + சக்கை; 'ம'   = மரம் என்ற சொல்லின் துண்டு; 'சக்கை' = மரம் என்ற பொருளின் சிறியதுண்டு. சுவரில் இரும்பு ஆணியை அடிக்க இந்த சக்கையை ஓட்டையில் அடித்து விட்டு அந்த மரத்துண்டில் ஆணி இறங்குமாறு அடிப்பார்கள்.   இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3727

உதிரிவெடி 3727 (ஜூலை 10, 2019) வாஞ்சிநாதன் *********************   புதிதாக வருபவர்களுக்கு: கீழேயுள்ள படிவத்தில் மட்டும் விடையை எழுதவும். இரவு 9 மணி வரை விடை வெளி வராமல் ரகசியமாக இருக்க உதவுங்கள். இரவு 9 மணிக்கு வந்த விடைகளின் விவரங்களடங்கிய பட்டியலை நான் வெளியிடுவேன். அதன் பின் பொதுவில் உங்கள்  விமர்சனங்களைக் கருத்துரையாக இடலாம். இதோ இன்றைய  வெடி: மரத்துண்டு, சிறிய மரத்துண்டு, சேர்த்ததால்குமட்டலைத் தரும் நிலை (4) Loading...  

விடை 3726

இன்று காலை வெளியான  வெடி ஒரு பருவம் தொடங்கியதும்  துள்ளலான பாட்டு கட்டும் கொள்கை (4) இதற்கான விடை:  கோட்பாடு = கோ(டை) + பாட்டு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்   

உதிரிவெடி 3726

உதிரிவெடி 3726 (ஜூலை 9, 2019) வாஞ்சிநாதன் ******************* ஒரு பருவம் தொடங்கியதும்  துள்ளலான பாட்டு கட்டும் கொள்கை (4)   Loading...

விடை 3725

இன்று காலை வெளியான  வெடி வாத்தியாரை வா, போ என்றதால் தாறுமாறாக மேற்கொண்ட பயணம் (3) இதற்கான விடை:  யாத்திரை = வாத்தியாரை - வா இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3725

உதிரிவெடி 3725 (ஜூலை 8, 2019) வாஞ்சிநாதன் ************************     வாத்தியாரை வா, போ என்றதால் தாறுமாறாக மேற்கொண்ட பயணம் (4) Loading...

Solution to Krypton 147

Today's clue: I wed  and  embraced Buddhism  showing sign of old age  (7) Its solution: WIZENED = I + WED +  ZEN Today's clue, I  notice belatedly now , suffers from two defects: mixing up tenses, 'wed" in present tense and "embraced" in past. Further I'd omitted indicator for anagram.  Hope it did not confuse you. Here is the link for t he list of answers received.  

விடை 3724

இன்று காலை வெளியான  வெடி ஆவேசமில்லா வெற்றி  தீங்கில் விழுந்த வார் (3) இதற்கான விடை:  ஊற்று = வெற்றி - வெறி    (ஆவேசம்)  +  ஊறு (தீங்கு) வார்த்தல் = ஊற்றுதல் இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3723

இன்று காலை வெளியான  வெடி தாள வாத்தியத்துடன் பாதி நளினம் தோன்ற ஆடும் ஆனந்தக் கூத்து (5) இதற்கான விடை: களிநடம் = கடம் + நளி இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3723

உதிரிவெடி 3723 (ஜூலை 6, 2019) வாஞ்சிநாதன் ************************* தாள வாத்தியத்துடன் பாதி நளினம் தோன்ற ஆடும் ஆனந்தக் கூத்து (5) Loading...

விடை 3722

இன்று காலை வெளியான  வெடி ஊர்வசி ஆடியதும் உடம்பு  முனைகளில் தைத்த சுள்ளி (3) இதற்கான விடை:  சிம்பு = (ஊர்வ) சி + (ஆடியது) ம் + (உடம்) பு இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3722

உதிரிவெடி 3722 (ஜூலை 5, 2019) வாஞ்சிநாதன் ************************* ஊர்வசி ஆடியதும் உடம்பு  முனைகளில் தைத்த சுள்ளி (3) Loading...

விடை 3721

இன்று காலை வெளியான  வெடி சுவையானதை  நாடுபவள் கரத்தின் மேல் தலைப்பு கிழிந்த பட்டு (3) இதற்கான விடை:  ரசிகை = (உ) ரசி  + கை இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3721

உதிரிவெடி 3721 (ஜூலை 4, 2019) வாஞ்சிநாதன் ************************* சுவையானதை நாடுபவள் கரத்தின் மேல் தலைப்பு கிழிந்த பட்டு (3) Loading...

விடை 3720

இன்று காலை வெளியான  வெடி: சிறை உணவு  தின்று கடைசியாகப் பிடி துணை (3) இதற்கான விடை:  களிறு = ஆண் யானை; பிடி = பெண் யானை களி + (தின்) று இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3719

இன்று காலை வெளியான  வெடி உழைப்பவன் கீதமா இறுதியாகத் துள்ளி வரும்? (4) இதற்கான விடை:  பாட்டாளி = பாட்டா +  ளி இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

விடை 3718

இன்று காலை வெளியான  வெடி நிலையான ஸ்வரங்கள் மூலம் தொடங்காததால் நிலை தடுமாற  வைக்கும் ஆசை (4) இதற்கான விடை: (நிலையான ஸ்வரங்கள்)  + (மூலம் தொடங்காததால்) =  நிலை தடுமாற  வைக்கும் ஆசை (4)   சபலம் =  ச + ப + (மூ) லம்  ஏழு ஸ்வரங்களில் ச, ப இவ்விரண்டும்  நிலையானவை. ச, ப என்ற ஸ்வரங்களுக்கு கொஞ்சம் அருகேயுள்ள அலை நீளம்  கொண்ட ஒலி அதே ஸ்வரம் என்று கருதப்படாது. அதனால் அவையிரண்டும்  நிலையான ஸ்வரங்கள். மற்றவைக்கு கொஞ்சம் மாற்றினால் அதே ஸ்வரத்தின் வேறு வகைகள் என்று கொள்கின்றனர்.  

உதிரிவெடி 3718

உதிரிவெடி 3718 (ஜூலை 1, 2019) வாஞ்சிநாதன் ************************* நிலையான ஸ்வரங்கள் மூலம் தொடங்காததால் நிலை தடுமாற வைக்கும் ஆசை (4) Loading...