Skip to main content

Posts

Showing posts from January, 2019

விடை 3568

இன்றைய வெடி: அந்த துணி கசக்கப்பட்டு முன்பே உடுத்தியது (5) இதற்கான விடை:   அணிந்தது = அந்த + துணி  இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்

விடை 3567

இன்றைய வெடி: வானிலிருந்து கொட்டி வளை அணிந்த இடை ஒழிக (4) இதற்கான விடை: பொழிந்து = பொந்து (வளை) + ழி  ( இடை ஒழிக ) அது ஒன்றுமில்லை. மணாலியில் பனியைப் பார்க்க வந்து குளிர் தாங்காமல் போதுமடா சாமி  வானிலிருந்து கொட்டிப் பொழிந்தது என்று நினைத்த போது  எழுதிய புதிர்.   இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியல்

விடை 3566

இன்றைய வெடி சகவாசத்தால் நார் பெற்றது நடு இரவு கழித்து சாவு (3) பூவோடு சேர்ந்த நார் பெறுவது மணம். நடு இரவு என்ற ர கழிந்த 'மரணம்' , அதுவும் மணம்தான். அத்னால் இதன் விடை மணம். இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் .

உதிரிவெடி 3566

உதிரிவெடி 3566 (ஜனவரி 29, 2019) வாஞ்சிநாதன் ********************* சகவாசத்தால் நார் பெற்றது நடு இரவு கழித்து சாவு (3) Loading...

விடை 3565

இன்றைய வெடி: தீயைப்பற்ற வைக்க கடைசியாக எரியும் வானை மறைக்கும்  (4) இதற்கான விடை: மூட்டம் = மூட்ட + ம் இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியல்.

உதிரிவெடி 3565

உதிரிவெடி 3565 (ஜனவரி 28, 2019) வாஞ்சிநாதன் ******************** தீயைப்பற்ற வைக்க கடைசியாக எரியும் வானை மறைக்கும்  (4) Loading...

விடை 3564

பனியைப் பார்க்க வேண்டும் என்று இமாசலப் பிரதேசத்துக்கு வந்து பார்த்துமாகிவிட்டது. சாப்பிடத்தான் தடுமாற்றம். இங்கே ஒரே ஆலு பரோட்டா பிட்சா இது மாதிரித்தான் கிடைக்கிறது. உடனடியாக ரசம்  குழம்பு வேண்டுமென்று  தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த்தெல்லாம் இந்த புதிர்தான். இன்றைய வெடி: இழிவான ரசம் குழம்பு உடனடியாகச் செய்ய வேண்டும் (5) இதற்கான விடை:  அவசரம் = அவ + ரசம் அவ = இழிவான (அவப்பெயர்) ரசம் 'குழம்பு' = சரம் இன்று பெறப்பட்ட விடைகள் பட்டியல்

உதிரிவெடி 3564

உதிரிவெடி 3564 (ஜனவரி 27, 2019) வாஞ்சிநாதன் ************************ இழிவான ரசம் குழம்பு உடனடியாகச் செய்ய வேண்டும் (5) Loading...

விடை 3563

இன்றைய வெடி: ஜராசந்தனுக்கு இறுதியில் நேர்ந்தது போல் கதைவிடு, இதுவும் அது போல்தான் (4)  இதற்கான விடை:  விடுகதை ("இது" என்பது இந்தப் புதிரை. புதிர் என்பதும் விடுகதை போல்தான்) தன்னை இரண்டு துண்டாக வெட்டினாலும் துண்டுகள் இரண்டும்  நகர்ந்து வந்து  ஒன்றாகச் சேர்ந்து கொள்ளும் வரத்தைப் பெற்றவன் ஜராசந்தன்.  மஹாபாரதப் போரில் அவனைக் கொல்ல  கிருஷ்ணனின் சைகை படி பீமன் அவனை இரண்டு துண்டாக வெட்டி இடது வலது பாகங்களை மாற்றிப் போட்டு இணையமுடியாமல் செய்து அவனைக் கொன்றான்.  அதே கதியைப் பெற்றால் கதை விடு --> விடுகதை விடை களின் பட்டியல்  

உதிரிவெடி 3563

உதிரிவெடி 3563 (ஜனவரி 26, 2019) வாஞ்சிநாதன் ********************* ஜராசந்தனுக்கு இறுதியில் நேர்ந்தது போல் கதைவிடு, இதுவும் அது போல்தான் (4)  Loading...

Krypton 101

Krypton 101 (26th January 2019) Vanchinathan ******************** "What you still intend to continue your silly clues beyond hundred?"  Well, no one actually said anything of that kind to me and so I am emboldened to continue!  Here comes number 101: Takes back tears flowing out of smooth cheeks inwardly at first (8) Loading...

விடை 3562

(இன்று காலை புதிர் எண்னைத் தவறாக 3652 என்று வெளியிட்டிருந்தேன். சரியான எண் 3562) இன்றைய வெடி: கட்டுமானம் கண்ணுக்கு அழகூட்டுவது வெளியே பூசு (4) இதற்கான விடை:  அமைப்பு = மை + அப்பு இன்று அனுப்பப்பட்ட விடைகள் இதோ

உதிரிவெடி 3652

உதிரிவெடி 3562 (ஜனவரி 25, 2019) வாஞ்சிநாதன் ************************ கட்டுமானம் கண்ணுக்கு அழகூட்டுவது வெளியே பூசு (4) Loading...

விடை 3561

இன்று வெளிவந்த வெடி: மிருதுவானது இடை அதைப் பற்றிப் பாடுவார் ஓர் ஈசனின் பக்தர் (4) இதற்கான விடை: ஓதுவார் = ஓர் + வாது  கோவிலில் மனமுருகி தேவாரம்,திருவாசகம் பாடுபவர்களை ஏதோ கண்ணதாசன் போல் "இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது"  என்று பாடுபவர்கள் என்று சாடிவிட்டேன். அவர்கள் மன்னிப்பார்களாக! விடையளித்தோர் பட்டியல் இதோ (பழைய பட்டியலே பயன்படுத்தியுள்ளேஏன். கீழே சென்று பார்க்கவும்).

உதிரிவெடி 3561

உதிரிவெடி 3561 (ஜனவரி 24, 2019) வாஞ்சிநாதன் ******************* மிருதுவானது இடை, அதைப் பற்றி ப் பாடுவார் ஓர் ஈசனின் பக்தர்  (4) Loading...

விடை 3560

இன்றைய வெடி: மூன்றாவதைச் சுமந்து சுமந்து பெண்கள் பெற்ற மக்கள் (4) இதற்கான விடை:  மாந்தர் = மாதர் + ந் இன்று அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பு.

உதிரிவெடி 3560

உதிரிவெடி 3560 (ஜனவரி 23, 2019) வாஞ்சிநாதன் ********************* மூன்றாவதைச் சுமந்து சுமந்து பெண்கள் பெற்ற மக்கள் (4) Loading...

விடை 3559

இன்றைய வெடி: தடி சுழற்றிட அளவுக்கதிகமான ஆசை விருப்பமானது (5)     இதன் விடை : பிடித்தது = தடி + பித்து  பித்து = அளவுக்கதிகமான ஆசை   விடையளித்தவர்கள் பட்டியல்  

உதிரிவெடி 3559

உதிரிவெடி 3559 (ஜனவரி 22, 2019) வாஞ்சிநாதன் *********************  தடி சுழற்றிட அளவுக்கதிகமான ஆசை விருப்பமானது (5)    Loading...

விடை 3558

இன்றைய வெடி: உதாரணமாக வள்ளி தாக்கி இரண்டாவதாக இறந்தவனைப் புதைத்திருக்கிறாள் (4) இதற்கான விடை:  குறத்தி = குத்தி + ற இன்று அனுப்பட்ட விடைகள்  இங்கே .

உதிரிவெடி 3558

உதிரிவெடி 3558 (ஜனவரி 21, 2019) வாஞ்சிநாதன் ************************* உதாரணமாக வள்ளி தாக்கி இரண்டாவதாக இறந்தவனைப் புதைத்திருக்கிறாள் (4) Loading...

விடை 3557

இன்றைய வெடி பொன்னிலும் அரியது இரும் பு தன் னிடம் இருக்கிறது (3) இதற்கான விடை: புதன் சென்னை உஸ்மான் சாலையில் உள்ல தங்க நகைக் கடைகளிலெல்லாம்  தைமாதத்திற்கு அமோக வியாபாரம் நடக்கும். இன்று வியாபாரம் குறைந்துவிட்டதாம்.  அத்தொழிலை நம்பி பல குடும்பங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதனால் இருப்புத் தோடு, இரும்பு மூக்குத்தி இவற்றைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அளிக்கப்பட்ட விடைகளனைத்தும் கொண்ட பட்டியல்

விடை 3556

இன்றைய வெடி எல்லையில்லா  மக்கள் வெகுளிக்கு அடங்க குறைவாகப் பயன்படுத்தும் போக்கு (5) இதன் விடை :  சிக்கனம் விடையளித்தவர்கள் பட்டியல்  

உதிரிவெடி 3556

உதிரிவெடி 3556 (ஜனவரி 19, 2019) வாஞ்சிநாதன் *********************** எல்லையில்லா மக்கள் வெகுளிக்கு அடங்க குறைவாகப் பயன்படுத்தும் போக்கு (5) Loading...

விடை 3555

இன்று காலை வெளிவந்த வெடி: ஒரு மதத்தைச் சேர்ந்தவன் காலின்றித் தவழ மயங்கிப் பறி கொடுத்தது (5)  இதற்கான விடை: இழந்தது = இந்து  + தவழ - வ இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும் .

உதிரிவெடி 3555

உதிரிவெடி 3555 (ஜனவரி 18, 2019) வாஞ்சிநாதன் ********************** ஒரு மதத்தைச் சேர்ந்தவன் காலின்றித் தவழ மயங்கிப் பறி கொடுத்தது (5)  Loading...

விடை 3554

இன்றைய வெடி: கொழு கொழு இல்லாக்  கொழுந்து பறவை ஒன்று (4) இதற்கான விடை: பருந்து = பரு  + (கொழு) ந்து இன்று திரளாகப் பலரும் விடையளித்துள்ளார்கள்.  வேகமாகப் பட்டியலை நோட்டமிட்டதில் அனைவரும் சரியாக அளித்திருப்பது போல் தெரிகிறது. இதோ அந்த விடைப் பட்டியல் .

விடை 3553

இன்றைய வெடி: இருபத்தேழில் ஒன்று முழுமை பாதி மாறிவிட்டது (3) இதற்கான விடை: பூசம் = சம்பூ ர்ணம்  அல்லது சம்பூரணம் என்று எழுதினால் பூரம். பூர்ணம் என்று எழுதாமல் எப்போதும் தமிழில் அதைப் பூரணம் என்று எழுதுகிறோம். ஆனால் "சம்பூர்ணம்" என்பதே பரவலாக இருக்கிறது. அதனால் இந்த இரு விடைகளில் பூசம் சற்றே அதிகம் பொருத்தமானது எனலாம். அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல்

உரிவெடி 3553

உதிரிவெடி 3553 (ஜனவரி 16, 2019) வாஞ்சிநாதன் ******************** இருபத்தேழில் ஒன்று முழுமை பாதி மாறிவிட்டது (3) Loading...

விடை 3552

இன்று காலை வெளியான வெடி: இனிய கரைசல் கஷ்டத்துடன் வந்த வேற்றுமை (4) இதற்கான விடை:   பாகுபாடு = பாகு + பாடு  விடைகளின் தொகுப்பு இங்கே: கிறிஸ்துமஸ்-புதுவருட விடுமுறையில்  ஓர் உருப்படாத வேலை செய்ய ஆரம்பித்தேன். பதினெட்டு வருஷம் முன்பு செய்ததுதான். அது கால மாற்றத்தில் சண்டித்தனம் செய்து நான்கு வருடத்தில்  நொண்டிக் கொண்டு நின்றுவிட்டது. இப்போது புதுவிதமாய் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில்   வேலை முடிந்து வெளிவரும்: என்னவென்று அறிந்து கொள்ள முன்னோட்டமாக இதோ ஒரு படம்:

உதிரிவெடி 3552

உதிரிவெடி 3552 (ஜனவரி 15, 2019) வாஞ்சிநாதன் ********************** அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். சீக்கிரமாகப் புதிரை முடித்துவிட்டு தொலைக்காட்சியில் பட்டிமன்றமோ மற்றவையோ கண்டு  சர்க்கரைப் பொங்கல் உண்டு கரும்புத் துண்டு கொண்டு திருநாளைக் கொண்டாடுங்கள். கொண்டாடி முடித்து இரவு விடைக்காக இங்கே எட்டிப்பார்க்கும்போது வேறு அறிவிப்பும் இருக்கும். மறக்காமல் பாருங்கள்! இனிய கரைசல் கஷ்டத்துடன் வந்த வேற்றுமை (4) Loading...

விடை 3551

இன்று வெளியான புதிர்: இனிய மரம் கரம்  பற்றிட விறகு  காற்றுக்களிப்பது  (5) இதற்கான விடை: கரும்புகை = கரும்பு (இனிய 'மரம்'!) + கை சென்ற வருடம் இதே சமயம் வந்த  உதிரிவெடி 3185 விடையளித்தவர்களின் பட்டியல் இங்கே:

உதிரிவெடி 3551

உதிரிவெடி 3551 (ஜனவரி 14, 2019) வாஞ்சிநாதன் ********************* இனிய மரம் கரம்  பற்றிட விறகு  காற்றுக்களிப்பது  (5) Loading...

விடை 3550

இன்று வெளியான வெடி: ஏமாற்றாத குணம் குறைந்த காரணத்தால் நிகழ் (2) இதற்கான விடை:   நேர் =  நேர்மை - மை  ஒரு சூழ்நிலை காரணமாக நிகழ்வதை  நேர்வது என்கிறோம். திடீரென அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தால்  இன்றைய பயணத்தைக் கைவிடும்படி நேர் ந்தது. அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண சொடுக்குங்கள்

Solution to Krypton 97

Today's clue: Experience of the French leaving nude revolutionary opposing with energy (7) Its solution: UNDERGO   =  un  der go un = NUDE -DE (opposing) (DE=  "of the"  in French) der = red   (opposing) Click this link to see all the submitted answers.

விடை 3549

இன்றைய வெடி: முழுமையற்ற புதிரின் மாற்று வடிவம்! (3) இதற்கான விடை:  திரிபு   = புதிரி(ன்)   என்பதன் மாற்று வடிவம். திரிபு என்பதன் பொருளும் மாற்று வடிவம். (மஹாபலிபுரம் என்பது மாமல்லபுரம் என்பதன் திரிபு) அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இதைச் சொடுக்கிக்   காணவும்.

விடை 3548

இன்றைய வெடி:  இறுதியான வெடி சிரிப்பில் அவளுடைய செய்கை உண்மையல்ல (3) புதிர் சரியாக அமைவதற்காக  இலக்கணத்தில்  பிழையுடன் வெளியிட்டுவிட்டேன்.  "வெடிச் சிரிப்பில்" என்று வலி மிக எழுதியிருக்க வேண்டும்.  நமுத்துப் போய் "வெடி சிரிப்பில்" என்று போய் விட்டது.  என்னுடைய செய்கையும் உண்மையல்ல! வெடிதனில் வேண்டும் சுவையென்று  செய்த பொடியான குற்றம் பொறுப்பீர் --  இடிபோல் அடித்துமது ஆர்வத்தைத் தூண்ட அடியேன் நடித்தேன் செயவில்லை நன்று இன்றைய புதிருக்கான விடை: நடிகை = நகை (சிரிப்பு)  +  டி (இறுதி வெடி)   இன்று பெறப்பட்ட விடை விவரம் இதோ .

உதிரிவெடி 3548

உதிரிவெடி 3548 (ஜனவரி 11, 2018) வாஞ்சிநாதன் ********************** இறுதியான வெடி சிரிப்பில் அவளுடைய செய்கை உண்மையல்ல (3) Loading...

விடை 3547

இன்றைய வெடி: தொழிலாளர் நல அமைப்பு காப்பவனின் கையில் இருக்கும் (4) இதற்கான விடை:  சங்கம் = காக்கும் தொழில் செய்யும் கடவுள் கையில் இருக்கும் சங்கு; இது இலக்கியத்தில் சங்கம் என்றும் கூறப்படும். திருநீறணியாத ஊர், விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊர், இதெல்லாம் ஊரல்ல அடவி காடே என்று ஒரு சிவபக்தர்  சாடியிருக்கிறார்.  தொழிலாளர்கள் இணைந்த அமைப்பு சங்கம்.  தொழிலாளர் மட்டுமல்ல மற்றவகைகளிலும் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன என்றாலும் இது அதிகமாக இருக்கிறது:  தமிழ்ச் சங்கம்,  அமெரிக்காவாழ் ஆந்திர மருத்துவர்கள் சங்கம், சென்னை வாழ் கோவில்பட்டி நாடார் சங்கம்,  இடைநிலை ஆசிரியர் சங்கம்,   சங்கங்களுக்கா பஞ்சம்? நேற்றைய புதிருக்கு சிலர் சங்கமம் என்ற விடையளித்திருந்தனர். அந்த சொல் இதுவரை எப்படிப் புதிரில் சிக்காமல் போனது என்று நினைத்ததில் உருவானது  இன்றைய புதிர். விடைகளின் பட்டியல்  இதோ:

உதிரிவெடி 3547

உதிரிவெடி 3547 (ஜனவரி 10, 2019) வாஞ்சிநாதன் ************************* தொழிலாளர் நல அமைப்பு காப்பவனின் கையில் இருக்கும் (4) Loading...

விடை 3546

சிலருக்கு இரவில் தூக்கம் வருவதற்கு சில நடக்க வேண்டும்.  கண்ணதாசன்-டிஎம்எஸ்-விஸ்வநாதன்ராமமூர்த்தி தத்துவப் பாடல்களைக் கேட்க வேண்டும். சிலருக்கு  பிபிஶ்ரீநிவாஸ். சிலருக்கு இளையராஜா. இந்தப் பாடல்களை ஒலிக்க வைத்து மஞ்சத்திற்குச் சென்றால்தான் தூக்கம் வரும். ஆனால் இன்றைய வெடியான இசையோடு மஞ்சத்திலிரு ? (5) என்பதற்கான விடை காண இதெல்லாம் உதவாது. இதை  "இசையுடன் மஞ்சத்திலிரு" என்று மாற்றி யோசிக்கலாம். இன்னும் கொஞ்சம் அதை மாற்றி "இசை உடன் மஞ்சத்திலிரு"  என்று யோசித்து  "இசை = உடன் மஞ்சத்திலிரு" என்று கொண்டால் "உடன்படு" என்ற விடை கிடைக்கும். இன்று அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ: https://docs.google.com/spreadsheets/d/1hJEuR91U8SzpWlJQPt8ZXBzrLY-j6HbLZbR7V1v8nFA/edit?usp=sharing

உதிரிவெடி 3546

உதிரிவெடி 3546 (ஜனவரி 9, 2019) வாஞ்சிநாதன் *********************** போன வாரம் இரண்டடி, மூன்றடி, நாலடி என்று தொடர்ந்து அடிமேல் அடியாய் புதிரில் வந்தது.  முந்தாநாள் ஷட்ஜமம் என்று ஒற்றை ஸ்வரமும், நேற்று மத்யமம், ரிஷபம்  என்று இரண்டு ஸ்வரங்களும் வந்ததால்  இன்று மூன்று ஸ்வரங்களைப்  பிரயோகிக்கலாமா என்று நினைத்தேன்.  இதென்ன சில்லறை விளையாட்டு, ஒரே பாய்ச்சலில், முழு சங்கீதத்தையே கொணர முடியுமா என்ற முயற்சியின் விளைவு இதோ: இசையோடு மஞ்சத்திலிரு ? (5) Loading...

விடை 3545

இன்றைய வெடி: ஆதியந்தமிலா ஒரு பூதம் சுத்த மத்யமம் ரிஷபம் இவற்றுடன் உச்சரிக்கும் மந்திரம் ? (4) இதற்கான விடை:  காயத்ரி = காய + த் + ரி ஆகாயம் --> காய சுத்த  --> த் ரிஷபம் --> ரி அது சரி காயத்ரி மந்திரத்தை பக்தன் உச்சரிக்கலாம்,  பூதம் உச்சரிக்குமா என்று சந்தேகிக்கிறீர்களா? ஏன் செய்யக்கூடாது? தேவாரப் பாடல்களை வேதாளம் பாடுகிறது, ஆர்டி பர்மன்  பாணியில் இளையராஜா இசையமைக்கிறார் என்றால் அதுவும் நடக்கும். இங்கே பாருங்கள்: அனுப்பப்பட்ட விடைகள்

உதிரிவெடி 3545

உதிரிவெடி 3545 (ஜனவரி 8, 2019) வாஞ்சிநாதன் ********************* ஆதியந்தமிலா ஒரு பூதம் சுத்த மத்யமம் ரிஷபம் இவற்றுடன் உச்சரிக்கும் மந்திரம் ? (4) Loading...

விடை 3544

இன்றைய வெடி: வேறுருவாக்க தூய ஷட்ஜம் வேண்டாம் (3) இதற்கான விடை:  மாற்ற  = மாசற்ற - ச தூய =  மாசற்ற      ச  =  ஷட்ஜம்/ஷட்ஜமம் என்ற ஸ்வரத்தின் ஒற்றையெழுத்துக் குறியீடு அனைத்து விடைகளுமடங்கிய பட்டியல்

விடை 3543

இன்றைய வெடி: அவனுடையது என்னுடையதல்ல செல்வம் எப்படியோ மேன்மை தரும் (5) இதற்கான விடை: உன்னதம் (மேன்மை)  = உன் + தனம் உன்  = உன்னுடையது = அவனுடையது, என்னுடையது அல்ல. தனம் = செல்வம் இன்று அனுப்பப்பட்ட விடைகள்

உதிரிவெடி 3543

உதிரிவெடி 3543 (ஜனவரி 6, 2019) வாஞ்சிநாதன் *********************** அவனுடையது என்னுடையதல்ல செல்வம் எப்படியோ மேன்மை தரும் (5) Loading...

Solution to Krypton 95

Solution to Krypton 95 A place to worship with public address system where God appeared initially (6)  Its solution: PAGODA  Here is the link to the spreadsheet having all the submitted answers: https://docs.google.com/spreadsheets/d/1lMKGAED0-uB-B-N4IvIfBYLruVgi3P8bbFrK2zlG50E/edit?usp=sharing

விடை 3542

இன்றைய வெடி பொருள் முதலில் இல்லாத இதுவரையில் இல்லாதது (3)  இதற்கான விடை: தனம் (பொருள்)  நூதனம் = புதியது, இதுவரை இல்லாதது முதலில் இல்லாத நூதனம் = தனம் விடையனுப்பிய அனைவரது பெயர் பட்டியல் இதோ:  https://docs.google.com/spreadsheets/d/1rDhvUVhB6UcOpc4x-yUDVJfcmjci574pa2o2zlPcYwk/edit?usp=sharing

உதிரிவெடி 3542

உதிரிவெடி 3542 (ஜனவரி 5, 2018) வாஞ்சிநாதன் ************************** பொருள் முதலில் இல்லாத இதுவரையில் இல்லாதது (3) Loading...

விடை 3541

இன்றைய வெடி: நன்றாக ஓரங்களை வெட்டி பள்ளத்தில் கருணை காட்ட வேண்டு (4) இதற்கான விடை:  மன்றாடு = (ந) ன்றா (க)  + மடு (= பள்ளம்)  சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடைகளையும் காண: https://docs.google.com/spreadsheets/d/1wHseIgRwLk6UQTwUhG-ZMJy2qWJhuGZ_f4Erl3onX1g/edit?usp=sharing

உதிரிவெடி 3541

உதிரிவெடி 3541 (ஜனவரி 4, 2018) வாஞ்சிநாதன் ********************* நன்றாக ஓரங்களை வெட்டி பள்ளத்தில் கருணை காட்ட வேண்டு (4) Loading...

விடை 3540

இன்றைய வெடி: பிரித்தெடுத்து விடுதலை பெற்ற வடிவம் (3)  இதற்கான விடை:  உருவி = பிரித்தெடுத்து  உரு = வடிவம் "விடு"தலை = வி

விடை 3539

இன்று காலை வெளியான வெடி: தூய நிறங்கொண்ட பால் அரை சேர் பெரும்பாலும் நாலடி கொண்டது (3) இதற்கான விடை: வெண்பா = வெண் + பா வெண்பாக்கள் எல்லாம் அந்த காலத்தில் அவ்வைப் பாட்டியும் வாழ்க்கையே நிலையானதில்லை  என்று புத்திமதி கூறும் சமண முனிவர்களும்தான் (நாலடியார்)  எழுதினார்கள் என்று நினைத்திருந்தேன். காளமேகம் பல சிலேடைகள் வெண்பா வடிவில் எழுதியுள்ளார்.  "காக்கைக்கா காகூகை" என்று ககர எழுத்துகளை மட்டுமேயும் "தாதிதூதோ தீது" என்று தகரங்களை மட்டுமே கொண்டும் வெண்பாவை எழுதியுள்ள காளமேகம் இக்காலத்தில் இருந்தால்  அப்படியே ஓரத்தில் ஏகப்பட்ட குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கியிருப்பார், என்னுடைய புதிரிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும்! சரி, இக்காலத்திலும் பலர் திறம்பட வெண்பாக்கள் எழுதி வருகின்றனர்.  என்ன இணையம் கோலோச்சும் காலத்திலா ? ஆமாம் அமெரிக்காவில் 1999ல் பெரியண்ணன் சந்திரசேகரன் என்ற அட்லாண்டாகாரர் "வெண்பா வடிக்கலாம் வா" என்ற  இணைய விவாதமேடை நடத்தி வந்தார். நானும்  சென்னை ஆன்லைன் இணைய இதழில் 2000-2001 ஆண்டுகளில் சுமார் 60 வாரங்கள் பலரும் எழுதிய ...

உதிரிவெடி 3539

உதிரிவெடி 3539 (ஜனவரி 2, 2019) வாஞ்சிநாதன் ******************** தூய நிறங்கொண்ட பால் அரை சேர் பெரும்பாலும் நாலடி கொண்டது (3) Loading...

விடை 3538

இன்றைய வெடி: கால் சறுக்க தொடர்ந்து மூன்றடி சாதாரணமாக நடப்பது (4) இதற்கான விடை:   சகஜம் = ச + கஜம் சறுக்க என்பதன் கால்(வாசி) = ச மூன்றடி = கஜம் முப்பத்தைந்து பேர் இந்தப் புதிருக்குச் சரியாக விடை கண்டுபிடித்து என்னிடம், "சறுக்க வைத்துத் தள்ளி விடப் பார்த்தீர்கள், இதெல்லாம் எனக்கு சகஜம்" என்று சொல்லி விழாமல் சாதாரணமாக நடந்து காட்டிவிட்டீர்கள், பாராட்டுகள்! பலர் எனக்குத் தனியாக புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தீர்கள். எல்லோருக்கும் நன்றி.

உதிரிவெடி 3538

உதிரிவெடி 3538 (ஜனவரி 1, 2019) வாஞ்சிநாதன் ******************* அனைவருக்கும் 2019 ஆம் ஆண்டு இனிதாகத் தொடங்கி இனிதாகச் செல்ல வாழ்த்துகள். கால் சறுக்க தொடர்ந்து மூன்றடி  சாதாரணமாக நடப்பது (4) Loading...