Skip to main content

Posts

Showing posts from December, 2024

விடை 4325

   நேற்றைய உதிரிவெடி குரங்குப் பெண் கரம் சிரம் வெட்டி வைக்க ஓதப்படுவது (5) அதற்கான விடை : மந்திரம் = மந்தி + (க) ரம்     இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Solution to Krypton 459

  Yesterday's clue:    Go places threading initially  to entangle (6)  Solution:  TRAVEL = T+ RAVEL Found out yesterday that RAVEL can mean  entangle as well as the opposite, disentangle. So tossed a coin to decide which one to use in the clue! Visit this page to see all the solutions received.

திரிவெடி 39 விடை

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   குறவர், கறி, அறம், உறி, எருக்கு   அதற்கான விடை:  எருக்கு , மற்றவற்றுடன் சேராத சொல்.   மற்ற சொற்களில் றகரம்/ரகரம் மாற்றப்படும்போது பொருள் தரும் சொற்கள் கிடைக்கும். குறவர்: ‍ குரவர்  கறி: கரி  அறம்: அரம்  உறி:  உரி   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4325

    உதிரிவெடி 4325 ( டிசம்பர்  29, 2024) வாஞ்சிநாதன் *********************** குரங்குப் பெண் கரம் சிரம் வெட்டி வைக்க ஓதப்படுவது (5) விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 39

                                          திரிவெடி 39 (14/12/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன.  இவற்றில் எது மற்றவையுடன் சேராதது என்றும், அந்த நான்கைப் பிணைக்கும் கருத்து என்னவென்றும் கண்டுபிடிக்கவும் குறவர், கறி, அறம், உறி, எருக்கு   இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 38 விடைகள்

   நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள் சொர் க் கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம் இதில் தனித்திருப்பது கிழக்கு. மற்றவையெல்லாம் ஏழு, ஏழாக அறியப்படும் தொகுப்பிலிருப்பவை. மஞ்சள் = வானவில்லின் ஏழு வண்ணங்களிலொன்று  விலங்கு = ஏழு பிறவிகளில் ஒன்று (மற்றவை: தாவரம், ஊர்வன, மீனினம், பறவை, மனிதர், தேவர்) தாரம் = தமிழிசையில் ஏழு சுரங்களில் ஒன்று (மற்றவை : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி) சொர்க்கம் = மேலுலகங்கள் ஏழில் ஒன்று, (மற்ற ஆறின் பெயர்கள் எனக்கு  நினைவிலில்லை)   விடையைச் சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்த ரா ஜ், அருள் இருவருக்கும் பாராட்டுகள்!   இனிவரும் வாரங்களில் புதிர்கள் காலை 7 மணிக்கு வெளிவரும்    

Solution to Krypton 458

  Yesterday was Ramanujan's birthday and I perhaps forcibly  made a clue related to it, and it ended up with no one solving it.  For mathematicians limitless indentation around the outer margin (9)      Its solution: DIVERGENT = DINT + VERGE   DINT = indentation (made by a force), also dent VERGE = border DIVERGENT is used in contrast to CONVERGENT, and refers to an infinite  sequence (or series) of numbers that has no limit, that is,  it has shows no tendency to go towards any focus (as used in optics, convergent/divergent rays of light) So the sequence of fractions 1/2, 2/3, 3/4, 4/5, ... is convergent and is tending towards the number 1 as its limit. But the infinite sequence 5,15,25,35,45, .... is divergent.  Easily one can see 1+2+3+4+... is  also divergent. But Ramanujan, as  the man who knew infinity , showed a weird way to see the sum is the negative number -1/12.    To read a fascinating biography ...

விடை 4324

அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை 7 மணிக்கு!  ராமானுஜன் பிறந்தநாளான நேற்று வெளியான வெடி:   இரு ஸ்வரங்களோடு ராமானுஜன் கடைசி இன்னலுடன் கணிதத்தில் கையாள்வது (5)  இதற்கான விடை: சமன்பாடு =  ச + ம +  ன் + பாடு ச, ம = இரு ஸ்வரங்கள் ன் = (ராமனுஜ)ன் பாடு = இன்னல்  விடைகளைக் காண இங்கே செல்லவும்.   ராபர்ட் கனிகல் எழுதிய ராமனுஜனின் சரிதையான The Man Who Knew Infinity இன் தமிழாக்கத்தைப் படிக்க நேஷனல் புக் ட்ரஸ்ட் நிறுவனத்தின் அல்லது பிற விற்பனையாளர்களின் வலைப்பக்கம் சென்று தேடவும் (அதை நான் மொழிபெயர்த்து 11 வருடங்கள்  ஆகி விட்டதால், இப்போது எங்கே  கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை).   காவிரி யாற்றின் கரையூர் இளைஞன் ஏவிய கேள்விக் கணைகள் யாவும் ஆவியை உலுக்க அறிஞர் திணறிடும் தாவிப் பாய்ந்திடும் அறிவின் வீச்சாம் நாவினில் எழுதினாள் நாமகிரித் தாயென சேவித் துரைத்த சீரியோன் சரிதை தூவிய நிகழ்ச்சித் தொகுப்பென இன்றிக் காவியச் சுவையொடு  கதையாய்க் கோத்து மேலை நாட்டோர் மெச்சிடச் செய்த நூலைத் தமிழில் நுகர்வோம் வாரீர்     காவிரி ...

திரிவெடி 38 அதிகக் குறிப்புகளுடன்

    திரிவெடி 38 (21/12/2024)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது?   சொர்கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.  இதற்கு அனுப்பப்பட்ட எட்டு விடைகளும்  சரியானதாக இல்லை. அதனால்  தாரம் என்பது மனைவியைக் குறிக்கவில்லை என்பதையும் சில வாரங்கள் முன்பு வந்த‌ புதிரின் அடிப்படையிலேயே இதுவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும்  நினைவில் கொண்டு  மீண்டும் முயலுங்கள். விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.   அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)

Krypton 458

    Krypton 458 (22nd December  2024)  ****************** *** For mathematicians limitless indentation around the outer margin (9)   SOLUTION will appear tomorrow 6pm Click here and find the form to fill in your solution    From next week puzzles here will revert to mornings, at 7 AM (not 6 am)  

உதிரிவெடி 4324

   உதிரிவெடி 4324 ( டிசம்பர் 22 , 2024) வாஞ்சிநாதன் ****************** இரு ஸ்வரங்களோடு ராமானுஜன் கடைசி இன்னலுடன் கணிதத்தில் கையாள்வது (5)   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும் .   விடைகள் நாளை  மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் . அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)   

திரிவெடி 38

    திரிவெடி 38 (21/12/2024)   வாஞ்சிநாதன்   பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றதுடன் சேராதது?   சொர்கம், கிழக்கு, மஞ்சள், விலங்கு, தாரம் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.   அடுத்த வாரத்திலிருந்து புதிர்கள் காலை நேரத்தில் வெளிவரும். ஏழு மணிக்கு (ஆறு மணிக்கு அல்ல)

Solution to Krypton 457

Yesterday's clue:  Cavalryman  of mightier  heart follows King  after heart exchange  (6)  Solution:  KNIGHT = KING + HT KNIG   = KING, with its heart N, I interchanged HT = mig HT ier Visit this page to see all the solutions received.

விடை 4323

   நேற்றைய உதிரிவெடி ஆணை மணமுடிக்க கடைசியாக பிருகன்னளை (4)  அதற்கான விடை : கட்டளை = கட்ட +ளை கட்ட = மண முடிக்க‌ ளை = (பிருகன்ன)ளை   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Krypton 457

    Krypton 457 (15th  December, 2024)  ****************** Cavalryman  of mightier  heart follows King  after heart exchange  (6)   Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4323

    உதிரிவெடி 4323 ( டிசம்பர்  15, 2024) வாஞ்சிநாதன் *********************** ஆணை மணமுடிக்க கடைசியாக பிருகன்னளை (4)  விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 37 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   அரசன், அரசி, செங்கோல், குதிரை, சிப்பாய் அதற்கான விடை:  செங்கோல் , மற்றவற்றுடன் சேராத சொல்.   அரசன், அரசி, குதிரை, சிப்பாய் இவை நான்கும் சதுரங்க விளையாட்டில் இடம்பெறுபவை. இதே விடைக்கே வேறு காரணங்களும் அளிக்கப்பட்டுள்ளன, பாலினம் பொருந்தாதது, இரண்டு சொற்களாலானது, அரசவையின் அங்கமாகாதது என்று பொருத்தமான காரணங்கள்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 37

  திரிவெடி 37 (14/12/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து  சொற்கள் பெற்றுள்ள‌ன.  அரசன், அரசி, செங்கோல், குதிரை, சிப்பாய்   இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 456

   Solution to Krypton 456  Yesterday's clue:   Substitute role played by Sean Connery found in O 2 (6,4) Solution:   DOUBLE BOND  Substitute = Double ( Saddam Hussein  often used his double to attend some public  events. )  Bond = Ian Fleming's character played by the actor Sean Connery Double Bond, in Chemistry, refers to the bond that binds the  two atoms of the Oxygen molecule, O 2. Visit this page to see all the solutions received.

விடை 4322

 நேற்றைய வெடி: அவமானம், தலைச் சிக்கு நீக்கும் முன்பே வலி (4) இதற்கான விடை: இழுக்கு = இழு + (சி) க்கு இழு = வலி  விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Krypton 456

    Krypton 456 (8th December  2024)  ****************** ***  Substitute role played by Sean Connery found in O 2 (6,4)   SOLUTION will appear tomorrow 6pm Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4322

   உதிரிவெடி 4322 ( டிசம்பர் 8 , 2024) வாஞ்சிநாதன் ****************** அவமானம், தலைச் சிக்கு நீக்கும் முன்பே வலி (4)  உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும் .   விடைகள் நாளை  மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் .

திரிவெடி 36 விடைகள்

   நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்   சோமாலியா, கென்யா, டான்சானியா, பிரேசில், கொலம்பியா      மற்றவற்றுடன் சேராத நாடு: டான்சானியா. இந்நாடு மட்டும் நிலநடுக்கோட்டின் பாதையில் இல்லை.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 36

  திரிவெடி 36 (07/12/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும்  நாடுகளில் எந்த நான்கு நாடுகள், எவ்விதத்தில்  தொடர்புடையவை? எந்த நாடு  மற்றதோடு சேராதது? சோமாலியா, கென்யா, டான்சானியா, பிரேசில், கொலம்பியா உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்

விடை 4321

 நேற்றைய உதிரிவெடி வாரணம் ஆயிரம் கொன்றபின் கிடைக்கும் வேலையில் இரண்டாவதாகத் தோரணம்    (3 ) அதற்கான விடை : பரணி   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 35 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   சோழன், குங்குமம், இசை, சிவன், நெற்றிக்கண் அதற்கான விடை:  குங்குமம் மற்ற நான்கும் மூன்று மூன்றாய் அமைந்தவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. சோழன்: மூவேந்தர்களில்  ஒருவன் இசை: முத்தமிழில் ஒன்று சிவன்:  பிரம்மா, விஷ்ணுவோடு மூன்று தொழில்களுக்கான கடவுள் நெற்றிக்கண்: (சிவனின்) மூன்று கண்களில் ஒன்று சோழன் என்ற பெயரில் மட்டும் திரைப்பட‌ங்கள் இல்லை என்பதும் ஒரு விடையாக அளிக்கப்பட்டிருக்கிறது, அந்த கோணத்தில் நான் கவனிக்கவில்லை.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

உதிரிவெடி 4321

    உதிரிவெடி 4321 ( டிசம்பர்  1, 2024) வாஞ்சிநாதன் *********************** வாரணம் ஆயிரம் கொன்றபின் கிடைக்கும் வேலையில் இரண்டாவதாகத் தோரணம்  (3)  விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்