நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல்
சோறுதான் மற்றதோடு சேராதது.
மற்ற சொற்களின் தொடக்கத்தில் ஈ (ஈரம்), தா (தாகம்), கொடு (கொடுமை), அளி (அளிதல்) என்ற சொற்கள் வருகின்றன.
அவையெல்லாம் கிட்டதட்ட "வழங்கு" என்ற ஒரே பொருளுடையவை. ஈ என்பது தானமாக வழங்குவது, தா என்பது ஒருவருக்குச் சம நிலையிலுள்ளவருக்கு வழங்குவது என்பது போல் சிறிய வேறுபாடுகள் உள்ளன.
சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். இதெல்லாம் அநியாயம், என்று என்னைத் திட்ட விரும்புபவர்கள் நியூ யார்க் டைம்ஸ் புதிராசிரிரையும் சேர்த்துத் திட்டவும். அங்கே கையாண்ட அதே உத்தியைத்தான் தமிழில் பயன்படுத்தியுள்ளேன்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments