நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: மின்விசிறி, அலைபேசி, துடுப்பு, தீப்பெட்டி, எழுதுகோல்
மின்விசிறியைத் தவிர மற்றவையெல்லாம் கையால் தொட்டு உபயோகிக்கப்படுபவை, இதுதான் நான் எண்ணியது.
இதைத் தவிர வந்த மற்ற சில விடைகளும் பொருந்தி வருகின்றன.
முத்துசுப்ரமணியம், அலைபேசி இயங்கும்போது அசைவில்லை என்று பௌதிகக் காரணத்தைக் கூறுகிறார்.
அம்பிகா துடுப்பு மட்டும் பரவலாக வீடுகளில் இருப்பதில்லை என்கிறார்.
அருள், பானுமதி, பத்மா, ஸந்தியா இவர்கள் பஞ்சபூதத்தைக் குறிப்பிட்டு எழுதுகோல்தான் தனித்திருக்கிறது என்கிறார்கள்.
ஜோசப் அமிர்தராஜ், அனிதா இருவரும் துடுப்பு மட்டும் ஒற்றைச் சொல்லாக இருக்கிறது மற்றவை அலை+பேசி, எழுது+கோல், .... என்று பிரிபடுகின்றன என்கிறார்கள்.
பலவிதமான கோணங்களில் வரும் பொருத்தமான விடைகளைப் பார்ப்பது ஒரு சுவாரசியம்தான்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments