Skip to main content

விடை 4148

முதலில் குறள் விடுகதைக்கு வருவோம். குறள்வடிவிலேயே நடராஜனும், நாலடி வெண்பாவாக சங்கரசுப்ரமணியனும் சரியான விடையளித்துள்ளார்கள். அதில் பின்னவர் விடைமட்டுமின்றிப் புதிரை மேலும் மெருகூட்டிவிட்டார். நடராஜனின விடை:
வீம்பாய் அடியேன் விடைசொல வந்தனன்
காம்பே பதிலெனக் காண்!
சங்கரசுப்ரமணியனின் விடை:
ிசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில்
பசிய நிறத்ததாய்ப் பார்ப்பாய் - பொசிந்துமிகப்
பால்தரும் ஆவுக்கும் பாக்குசேர் வெற்றிலைக்கும்
கால்பக்கம் கண்டிடுவாய் காம்பு.
ுதுகைச் சொறிதலோடு முத்தான வெண்பா
எதுகையொ டாக்கவும் இவ்விசிறி ஆகுமென்று
காட்டிய சங்கரர் கைவண்ணம் செந்தமிழ்ப்
பாட்டில் தொடரட்டும் பாய்ந்து.
---- அடுத்து இன்றைய வழக்கமான வெடி;
திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4) அதற்கான விடை: பண்டம் = படம் + ண்
படம் = திரையில் தோன்றுவது
ண் = நடுவுல் உண்ண
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
உதிரிவெடி 4148
*************************
*_உப்பில்லா பண்டம் குப்பையிலே_* என்பது அந்த கால பழமொழி. அளவான உப்பே ஆரோக்கியம் என்பது இக்கால பழமொழி.
*************************
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

*_கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்_*
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே

( *மகாகவி பாரதியார்* )
*************************
_திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4)_ 

_திரையில் தோன்றுவது_
= *படம்*
_நடுவில் உண்ண_
= *ண்*
_விழுங்கப்பட்ட_
= _indicator to place *ண்* inside *படம்*_
= *பண்டம்*
= _பொருள்_
*************************
*பட்டினப்பாலை:*     _பண்டகசாலை முன்றில்_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்,  130
அளந்து அறியா பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடி பெருங்காப்பின்
வலியுடை வல் அணங்கினோன்
புலி பொறித்து புறம் போக்கி,   135
மதி நிறைந்த மலி *பண்டம்*
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை   140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (126-141)

*பொருளுரை:*  முகில் கடலிலிருந்து முகந்த நீரை மலை மேல் பொழியவும், மலையில் விழுந்த மழை நீரை ஆறுகள் மூலம் கடலில் சேர்க்கவும், மழை பெய்யும் பருவம் போல, கடலிலிருந்து நிலத்திற்கு ஏற்றவும், நிலத்திலிருந்து கடலுக்கு பரப்பவும், அளந்து அறிய முடியாத பல *பொருட்கள்* எல்லை இல்லாது வந்து குவிந்து கிடக்க, பெறுவதற்கு அரிய பெருங்காவலையுடைய வலிமையுடன் மிகுந்த அதிகாரமுடைய அதிகாரி ஒருவன், சோழ மன்னனுக்குரிய புலிச் சின்னத்தைப் பொறித்து புறத்தில் வைத்த விலை நிறைந்த பல்வேறு *பண்டங்களைக்* கட்டி வைத்த மூடைக் குவியலின் மீது ஏறி,
முகில் உலவும் உச்சியையுடைய உயர்ந்த மலையின் பக்க மலையில் விளையாடும் வருடை மானின் தோற்றம் போல, கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையுமுடைய ஆண் நாய்களும் ஆட்டுக் கிடாய்களுடன் தாவிக் குதிக்கும், பண்டகசாலையின் முற்றத்தில்.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 09-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வெட்டு அதில் பாதியை உடுத்து (2)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************

அழகியதொரு வெண்பாப் புனைந்து வாழ்த்திய தங்களுக்கு நன்றி ஐயா!
B Natarajan said…
நன்றி
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*தரி* (வி)
நிறுத்து (பேருந்து தரித்தல்)
அடை (கர்ப்பம் தரி)
*அணி* (எ. கா.) மோதிரம் தரித்துக் கொண்டாள்
***********************
*தமிழ்க்கனலின் பொறி*

மாமழை நீர் பைம்புலத்து மண்ணில் ஊற

மரம் கொடிகள் வளன்மிகுத்துக் கனியீ தல்போல் 

தேமதுரத் தமிழே நீ நெஞ்சில் ஊறச் 

செம்மையினைச் சூடிமதி சிலிர்ப்ப தென்ன!

தாமதியேன் ஒருகணமும் *தரித்து* நில்லேன்

சழக்குகளால் உடற்பிணியால் தளர்ந்து சோரேன்

போம் எனதோர் உயிர்எனினும்  புழுங்க மாட்டேன்

*_பொறுமையுடன் தமிழ்க்கனலின் பொறிவ ளர்ப்பேன்_*

- தவ சஜிதரன் 
*************************
_வெட்டு அதில் பாதியை உடுத்து (2)_

_வெட்டு_
= *கத்தரி*
_அதில் பாதியை_
= *கத்/தரி*
= *தரி*
= _உடுத்து_
*************************
*காஞ்சி மகாசுவாமிகள்*
_'தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை'_

என்ற ஆண்டாள் வாக்கிற்கு
*'தன்னை தரித்த தாய் தேவகியின் குடலைத் தன்னுடைய கர்ப்பவாசத்தால் தூய்மை ஆக்கியவன்'*
என்று பொருள் சொல்லி, 'எவனது குடலுக்கு வெளியிலே மேல் பக்கம் தாம்புக் கயிற்றைப் போட்டு வளர்ப்புத் தாய் யசோதை புண்படுத்தினாளோ, அவன் தன் பெற்ற தாயின் குடலை தன்னுடைய வாசத்தாலேயே தூய்மை செய்தவன்' என்று இன்னும் விளக்குகிறார்.
*************************
*முடிவெடுக்கும் திறன்:*

இராமன் காட்டுக்குச் செல்வதற்கு தயாராகிறான். நீ இங்கேயே இரு, நான் போகிறேன் என்றவுடன், வெகுண்டு எழுகிறாள் சீதை பெருமாட்டி, என்னை விலக்குவது எந்தவகையில் சரி? உனது பிரிவுக் கொடுமையால் மனம் கொதிப்பதை விடவா, காடு என்னைச்சுடும் என்ற வினாவை எழுப்புகிறாள்.

*‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” (க.ரா.1827)*

நின் என்கிற சொல்லைக் கம்பன் அழுத்தி உரைக்கின்றான். அகமனை புகுகின்றாள், காடுரை வாழ்க்கைக்கான *மரஉரி தரிக்கின்றாள்,* வா போகலாம் என்று நாயகன் இராமன் கையைப் பிடிக்கின்றாள். இந்த முடிவெடுக்கும் திறன் தான் காப்பியத்தின் மிகப்பெரிய திறவுகோல்.

' *அகமனையை எய்தினள் புனையும் சீரம்*
*துணிந்து புனைந்தனள்” (க.ரா.1829)**
இதனாலேயே சீதை ஏற்றம் பெற்றாள்.

(Siragu.com)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************



[8/9, 07:18] stat senthil: தரி

[8/9, 07:19] ஆர். நாராயணன்.: தரி
[
[8/9, 07:21] Rohini Ramachandran: துணி?

[8/9, 07:25] A Balasubramanian: தரி
A.Balasubramanian

[8/9, 07:25] prasath venugopal: தரி

[8/9, 07:33] akila sridharan: தரி (கத்தரி)
[
[8/9, 07:56] nagarajan: *தரி*
[
[8/9, 07:57] sankara subramaiam: தரி
[
[8/9, 08:09] Ramki Krishnan: தரி

[[8/9, 08:15] A D வேதாந்தம்: விடை=தரி(வேதாந்தம்)
[
[8/9, 08:18] Dhayanandan: *தரி*

[8/9, 08:20] chithanandam: தரி

[8/9, 08:24] siddhan subramanian: (கத்) தரி

[8/9, 08:31] V N Krishnan.: கத்தரி. தரி உடுத்து

[8/9, 10:05] கு.கனகசபாபதி, மும்பை: தரி

[8/9, 10:36] joseph amirtharaj: தரி
[
[8/9, 12:26] மாலதி: தரி

[8/9, 17:24] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏உடை

[8/9, 18:23] Viji - Kovai: அணி

[8/9, 20:29] Venkat: துணி 🙏🏾?

[8/9, 20:31] G Venkataraman: தரி (கத்தரி)

[8/9, 21:10] Revathi Natraj: திரி


*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 10-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வெளிச்சமில்லாத இரு கண்டம் எல்லைகளற்றது (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*"இருண்ட கண்டம்”*
*******************
ஆப்பிரிக்கா” என்றவுடன், அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்த கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துகள் வேண்டுமென்றே மேற்குலக ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. *“இருண்ட கண்டம்”* என்று நிறவாதம் சூட்டிய பெயர், அன்றாட பேச்சு வழக்காகி விட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்பிரிக்கா பற்றிய தவறான கருத்துகளை, தமிழ் மக்கள் மத்தியிலும் பொதுக்கருத்துகளாக போதித்தது. இதனால் ஒரு ஐரோப்பியரின் பார்வையிலேயே, நாமும் ஆப்பிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.
***********************
_வெளிச்சமில்லாத இரு கண்டம் எல்லைகளற்றது (4)_

_இரு_ = *இரு*

_கண்டம் எல்லைகளற்றது_
= *[ க]ண்ட[ம்] = ண்ட*

_வெளிச்சமில்லாத_
= *இரு+ண்ட*
= *இருண்ட*
*************************
*இருண்ட காலம்.*

“முன்பு கற்காலம், இரும்புக் காலம் என்றெல்லாம் வரலாற்றுப் பகுதிகளை வகைப்படுத்துவதைப் போல, தற்போதைய காலத்திற்கு ஒரு பெயர் கொடுப்பதென்றால் என்ன பெயர் கொடுப்பீர்கள்?”

பெரும்பான்மை
பதில்களில் ஒன்று “நவீன காலம்(மாடர்ன் ஏஜ்)” என்பது. எந்தக் காலகட்டமும் அப்போதைக்கு ‘நவீனம்’தானே? கற்காலத்தில் இருந்த மனிதருக்குக் கற்காலமே நவீன காலம்தான், சரியா?

*’இருண்ட காலம்’* என்பதும் அப்படி ஒரு பெயர்தான்!
பல நூற்றாண்டுகள் கழித்து நாம் வரலாற்றை அறிய முற்படுகையில் நமக்குப் போதுமான சான்றுகள், துப்புகள் கிடைக்காத காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று சொல்லி அழைக்கிறோம்.

நமது பார்வைக்கும் புரிதலுக்கும்தான் அது இருண்ட காலம், அப்போது வாழ்ந்தவர்களுக்கு அது சாதாரண காலம்தான்!

*_இருண்ட காலம் என்பதும் பொற்காலம் என்பதும் நமது கண்ணோட்டந்தான் .அவ்வக்கால மக்களுக்கு தாம் இருண்ட காலத்தில் வாழ்கிறோம், பொற்காலத்தில் வாழ்கிறோம் என்றெல்லாம் தெரியாது!_*
(quora.com)
************************
*மனம் கவர்ந்த பாடல் வரிகள்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எங்கிருந்தாலும் வாழ்க 
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க 
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
*இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்*
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க

நெஞ்சில் ஓர் ஆலயம்(1962)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[8/10, 07:01] திரைக்கதம்பம் Ramarao: இருண்ட

[8/10, 07:00] A Balasubramanian: இருண்ட
A.Balasubramanian
[
[8/10, 07:01] Meenakshi: விடை:இருண்ட
[
[8/10, 07:01] பாலூ மீ.: விடை இருண்ட

[8/10, 07:03] V N Krishnan.: இருண்ட. இரு+ண்ட

[8/10, 07:03] Dr. Ramakrishna Easwaran: *இருண்ட*

[8/10, 07:04] bala: இருண்ட

[8/10, 07:05] மீ.கண்ணண்.: இருண்ட

[8/10, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏இருண்ட🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[8/10, 07:08] A D வேதாந்தம்: விடை= இருண்ட(வேதாந்தம்)

[8/10, 07:12] Ramki Krishnan: இருண்ட
[
[8/10, 07:17] Bhanu Sridhar: இருண்ட
[
[8/10, 07:21] Rohini Ramachandran: இருண்ட

[8/10, 07:21] G Venkataraman: இருண்ட
[
[8/10, 07:23] Viji - Kovai: இருண்ட

[8/10, 07:29] மாலதி: இருண்ட
[
[8/10, 07:31] prasath venugopal: இருண்ட

[8/10, 07:34] sridharan: இருண்ட

[8/10, 07:39] stat senthil: இருண்ட
[
[8/10, 07:45] sankara subramaiam: இருண்ட

[8/10, 07:47] Dhayanandan: *இருண்ட*

[8/10, 07:52] nagarajan: *இருண்ட*

[8/10, 08:33] siddhan subramanian: இருண்ட

[8/10, 08:46] Usha Chennai: உகண்டா
[
[8/10, 08:51] ஆர்.பத்மா: இருண்ட

[8/10, 08:56] akila sridharan: இருண்ட
[
[8/10, 09:00] Bharathi: இருண்ட

[8/10, 09:09] ஆர். நாராயணன்.: இருண்ட

[8/10, 10:33] joseph amirtharaj: இருண்ட

[8/10, 11:06] N T Nathan: இருண்ட
[
[8/10, 11:38] shanthi narayanan: இருண்ட
[
[8/10, 11:51] கு.கனகசபாபதி, மும்பை: இருண்ட
[
[8/10, 12:26] Venkat:
இருண்ட🙏🏾

[8/10, 15:38] வானதி: *இருண்ட*


*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 11-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
இரு ஸ்வரங்களை இழந்த அரசன் பதிலுக்கொன்று தந்து சோகத்துடன் பட்டம் சூட்டிய மகன் (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************

Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_இரு ஸ்வரங்களை இழந்த அரசன் பதிலுக்கொன்று தந்து சோகத்துடன் பட்டம் சூட்டிய மகன் (4)_

_அரசன்_ = *தசரதன்*
_இரு ஸ்வரங்களை இழந்த_
= *தசரதன்* _minus_ *தச*
= *ரதன்*

_பதிலுக்கொன்று தந்து_
= *ப*

_சோகத்துடன் பட்டம் சூட்டிய மகன்_
= *_ப+ ரதன்_*
= *பரதன்*
*************************
*கம்ப ராமாயணம்- பரதன்*
*************************
தசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார். தமிழ்நாட்டில் வைணவர்களால் பரதன் பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
_தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி_ _தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்றபோழ்து, புகழினோய்!_ _தன்மைகண்டால்  ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!_
(கம்ப ராமாயணம்)

பரதனின் அன்பில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட குகனின் வார்த்தைகள் இவை. “தாய் சொல் கேட்டு, தந்தை கொடுத்த அரச பதவியைத் ‘தீயது  இது’ என்று விட்டுவிட்டு வந்து விட்டாய். வருத்தத்துடன் இருக்கும் உன் முகத்தைப் பார்த்தால்,பரதா! புகழ் படைத்தவனே!
*உன் தன்மைக்கு ஆயிரம் ராமர்  சமமாவார்களா ?தெரிய வில்லையே!”* என்று புகழ்கிறார் குகன்.

விஸ்வாமித்திரரால், ராமருக்குச் சமமாகச் சொல்லப் பட்டு; பின் ராமரைப்பெற்ற தாயான கோசலையால், ராமரைவிட மும்மடங்கு நல்லவன் என்று புகழப்பட்டு;  ராமரின் கருணைக்குப் பாத்திரமான குகனால், ஆயிரம் ராமர் சேர்ந்தால் ஒரு பரதனுக்குச் சமமாகுமா? தெரிய வில்லையே என்று புகழப்பட்ட பரதன், மேலும்  புகழப் படுகிறார். யாரால்? எப்படி? பார்க்கலாம்.

தீயை மூட்டிப் பரதன் உயிர் துறக்கத் தீர்மானித்த அவ் வேளையில், ராமரின் தாயான கோசலாதேவி வந்து பரதனைத் தடுத்தார்; “என்ன செய்கிறாய்? என்  மகனே!” என்று கேட்டு மேலும் சொல்லத் தொடங்குகின்றார் கோசலை.

_எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்  அண்ணல் நின் அருளுக்கு_ _அருகாவரோ? புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால்_ _மண்ணும் வானும் உயிர்களும்  வாழுமோ?_ 
(கம்ப ராமாயணம்)
பதினான்கு ஆண்டுகள் கடுந்தவம் பூண்டு, ராமர் வருகையை எதிர்பார்த்து, உயிரையும் துறக்கத் தீர்மானித்த பரதனைத் தடுத்த கோசலாதேவி, “பரதா! தசரதர்  வரம் கொடுத்ததும் ராமன் காடு சென்றதும் விதியின் விளையாட்டல்லவா? என் மகனான நீயும் என்னை விட்டுப் போகலாமா? நீ இறந்தால், மக்களும்  தேவர்களும் மற்றைய ஜீவராசிகளும் வாழுமா? “கோடிக்கண்கான ராமர்கள் கிடைத்தாலும், பரதா! உனக்கு ஈடாகுமா?” என்றார் கோசலை.

ராமரைப்பெற்ற தாயே இவ்வாறு சொல்லியிருப்பதைப் பார்த்தால், பரதனின் உயர்வு புரிகிறதல்லவா? கோசலை மட்டுமா? தன்னை வீழ்த்திய ராமரை ஏசத்   தொடங்கிய வாலி *,”பரதன் முன் தோன்றினாயே?”* என்றான். அங்கும் பரதன் புகழ் பேசப்படுகின்றது. அரச பதவி உட்பட எதன்மீதும் ஆசைப்படாமல்,  நற்குணங்களை வளர்த்துக்கொண்டு, அனைவராலும் பாராட்டப்பட்ட பரதனைப் போன்ற ஒரு கதா பாத்திரத்தை, உலகெங்கிலும் காண முடியாது. பரதனின்  நற்குணங்கள் சிலவாவது நமக்கும் கிடைக்க, பரம்பொருளை வேண்டுவோம்!🙏🏼
*************************
*துக்கடா*

_பரதன்_ :

சமசுகிருத மொழியில் பரதன் எனில் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்று பொருள். ... இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன் பரதன் பெயரில்தான்.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/11, 07:02] திரைக்கதம்பம் Ramarao: பரதன்

[8/11, 07:02] A Balasubramanian: பரதன்
A.Balasubramanian
[
[8/11, 07:04] மீ.கண்ணண்.: பரதன்

[8/11, 07:09] Meenakshi: விடை:பரதன்

[8/11, 07:10] பாலூ மீ.: விடை பரதன்
[
[8/11, 07:17] nagarajan: *பரதன்*
[
[8/11, 07:36] prasath venugopal: பரதன்

[8/11, 07:40] Dhayanandan: *பரதன்*
[
[8/11, 07:47] sridharan: பரதன்
[
[8/11, 07:58] stat senthil: தசரதன் - தச + ப = பரதன்
[
[8/11, 08:19] ஆர்.பத்மா: பரதன்
[8
[8/11, 09:13] ஆர். நாராயணன்.: பரதன்

[8/11, 10:15] siddhan subramanian: பரதன் ப + (தச)ரதன்

[8/11, 10:19] joseph amirtharaj: பரதன்
[
[8/11, 10:44] கு.கனகசபாபதி, மும்பை: பரதன்
[
[8/11, 11:17] G Venkataraman: பரதன் (தசரதன் - தச + ப)

[8/11, 11:28] Bhanu Sridhar: பரதன்.

[8/11, 09:54] chithanandam: பரதன்

[8/11, 19:34] sathish: பரதன்
[
[8/11, 19:41] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பரதன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[8/11, 20:20] Revathi Natraj: பரதன்
[
[8/11, 20:46] Ramki Krishnan: பரதன்
[
[8/11, 21:29] Dr. Ramakrishna Easwaran: *பரதன்* (தசரதன் minus த, ச plus ப)

[8/11, 21:37] sankara subramaiam: பரதன்

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 12-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வேகமாய் இரு ஸ்வரங்களை முக்கால்வாசி மாய்ந்து சேர் (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

*விடுகதை கவிதை*

_*துரிதமாய்* வேலைத்  துவங்க உதவும்_
_புரியாத புதிரையும் புலங்க வைக்கும்_

_அரிதான கேள்வி அரைநொடியில் தேடும்_
_சரியான பதிலை சீக்கிரம் தந்திடும்_
***********************
*காற்றுக்கோர் கடிதம்*

_தீண்டும் காற்றே தூண்டும்_
_நினைவுகளை சேர்த்துவிடு அங்கே_
_தூதாய் சென்று_ _*துரிதமாய்*_

( முகநூல்)
***********************
_வேகமாய் இரு ஸ்வரங்களை முக்கால்வாசி மாய்ந்து சேர் (5)_

_முக்கால்வாசி மாய்ந்து_
= *மாய்[ந்]து*
= *மாய்து*

_இரு ஸ்வரங்களை_
= *ரி த*

_சேர்_
= _anagram indicator for_ *மாய்து+ ரி த*
= *துரிதமாய்*

= _வேகமாய்_
*************************
*மழையே வா*

வானத்து மாமழையே
வந்தால் நீ பேரழகே

புயலோடு மழையென
பூமி மீது படையெடுத்தாய்

புரியாத புதிராக
புதியதாய் நீ செரிந்தாய்

இடியோடு மின்னலுமாய்
இருட்டிலே பெய்திட்டாய்

சாரலாய் பூவென
மாரியாய் தூறிட்டாய்

இதமான குளிரோடு
இரவில் நீ வந்தாலும்

வசந்தமாய் இன்று
வைகறையில் வந்திட்டாய்

கதிரவன் உதிக்கும்முன்
கழநி போகணும்

காளைகள் காத்திருக்கு
பாரமேற்றும் வண்டியுடன்

உதிர்த்த நெல்மணியை
காசாக்க கடைவீதிக்கு

_*துரிதமாய்* போகவேணும் வழி கொடு நீ எனக்கு_

– கவிஞர் பாலாஜி, போளூர்
************************
*விடுகதை கவிதை*
*விடை:*

_கேட்கும் கேள்விக்கு விடையைத் தந்திடும்_
_சட்டென நொடியில் தேடிடும் ' *கூகுளே* '!!_
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: துரிதமாய்
[
[8/12, 07:01] A Balasubramanian: துரிதமாய்
A.Balasubramanian

[8/12, 07:05] Bhanu Sridhar: துரிதமாய்

[8/12, 07:06] joseph amirtharaj: துரிதமாய்

[8/12, 07:12] Meenakshi: விடை:துரிதமாய்

[8/12, 07:12] Dr. Ramakrishna Easwaran: *துரிதமாய்*

[8/12, 07:12] பாலூ மீ.: விடை துரிதமாய்

[8/12, 07:20] stat senthil: துரிதமாய்

[8/12, 07:26] Ramki Krishnan: துரிதமாய்

[8/12, 07:27] G Venkataraman: துரிதமாய்

[8/12, 07:27] ஆர். நாராயணன்.: துரிதமாய்

[8/12, 07:35] sridharan: துரிதமாய்

[8/12, 07:39] prasath venugopal: துரிதமாய்
[
[8/12, 07:42] Venkat: துரிதமாய்🙏🏾
[
[8/12, 07:54] மாலதி: துரிதமாய்

[8/12, 08:07] nagarajan: *துரிதமாய்*
[
[8/12, 08:20] கு.கனகசபாபதி, மும்பை: துரிதமாய்
[
[8/12, 08:22] ஆர்.பத்மா: துரிதமாய்

[8/12, 11:40] shanthi narayanan: துரிதமாய்

[8/12, 11:59] Viji - Kovai: விரைவாயடை
[
[8/12, 16:48] வானதி: *துரிதமாய்*

[8/12, 19:48] A D வேதாந்தம்: (விடை )துரிதமாய் வேதாந்தம்

[8/12, 19:49] Revathi Natraj: துரிதமாய்



*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 13-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஆணவங்கொண்ட வாலறுக்கப்பட்ட அவனுக்குள்ளே ஒரு தானியமா? (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_இது ஆணவத்தைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதியது_

‘ *நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.*

‘ *நம்மைத்தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.*

*ஞானம், பணிந்து பணிந்து வெற்றிமேல் வெற்றியாகப் பெறுகிறது.*

*ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.*
********************
*குறள் எண்:158*

_மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்_
_தகுதியான் வென்று விடல்._
 
*பொழிப்புரை:*

*ஆணவங் கொண்டு* அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

உள்ளச்செருக்கும், பொருட்செருக்கும் கொண்டு நமக்குத் தீமை செய்வாரை பொறுமைகொண்டு கெட்டிக்காரத்தனத்தால் வெற்றி கொள்க.
செருக்கால் மிகையானவற்றைச் செய்தவர்களை உங்கள் தகுதியான் வென்றுவிடல் என்பது பாடலின் பொருள்.
************************
_ஆணவங்கொண்ட வாலறுக்கப்பட்ட அவனுக்குள்ளே ஒரு தானியமா? (5)_

_வாலறுக்கப்பட்ட அவன்_
= *அவ[ன்]*
= *அவ*

_ஒரு தானியம்_
= *கம்பு*
_ஒரு தானியமா?_
= *கம்பா*

_அவனுக்கு உள்ளே_
= _Indicator to place கம்பா inside அவ_
= *அ(கம்பா)வ*
= *அகம்பாவ*
= _ஆணவங்கொண்ட_
************************
*_அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு_*

மாவலி  மன்னனின் கர்வத்தைப் போக்க வந்த திருமாலின் ஒரு அவதாரம்தான் வாமன் அவதாரம் .
மன்னனிடம் மூன்று காலடி மண் கேட்டு ,முதல் அடியால்  மண்ணுலகையும் ,அடுத்த அடியால் விண்ணையும் அளந்தபின்
மூன்றாம் அடிக்காக மன்னனின் தலையில் வைத்து *அகம்பாவத்தை* அடக்கியது -என்பது புராணம்!

_மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்_
_தாஅயது எல்லாம் ஒருங்கு_

(அதிகாரம்:மடியின்மை
 குறள் எண்:610) 

*பொழிப்புரை:*
_அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்_

*'அடியளந்தான்' யார்?*
தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள திருமால்-மாவலி வரலாற்றை இக்குறள் சுட்டுகிறது என்பது பலரது கருத்து.

இப்பாடலில் 'திருமால்' எனக் குறித்துச் சொல்லப்படவில்லை. இதனால் அடியளந்தான் வாளாபெயராய் (காரணம் குறியாது) இறைவனை உணர்த்திற்று என்பார் பரிமேலழகர். அடியளந்தான் என்பது உலகளந்த வரலாறு குறியாது வறிதே திருமால் என்னும் பெயரளவில் நின்றது என்றார். 

தன் அடியாலே உலகை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுவதையும் சோம்பலில்லாத நாட்டுத் தலைவன் ஒருசேர அடைவான் என்பது இக்குறட்கருத்து.
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அகம்பாவ

[8/13, 07:02] A Balasubramanian: அகம்பாவ
A.Balasubramanian

[8/13, 07:05] stat senthil:
அ *கம்பா* வ

[8/13, 07:09] prasath venugopal: அகம்பாவ

[8/13, 07:12] Meenakshi: விடை:அகம்பாவ
அ கம்பா வ

[8/13, 07:24] ஆர்.பத்மா: அகம்பாவ

[8/13, 07:36] பாலூ மீ.: விடை அகம்பாவ

[8/13, 07:37] மீ.கண்ணண்.: அகம்பாவ

[8/13, 07:39] chithanandam: அகம்பாவ

[8/13, 07:43] Bhanu Sridhar: அகம்பாவ
[
[8/13, 07:49] கு.கனகசபாபதி, மும்பை: அகம்பாவ
[
[8/13, 07:57] nagarajan: *அகம்பாவ*

[8/13, 08:13] akila sridharan: அகம்பாவன்
[
[8/13, 08:41] Dhayanandan: *அகம்பாவ*

[8/13, 08:46] joseph amirtharaj: அகம்பாவ

[8/13, 09:38] மாலதி: அகம்பாவ

[8/13, 10:48] Rohini Ramachandran: அகம்பாவ

[8/13, 12:53] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அகம்பாவ🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[8/13, 17:04] siddhan subramanian: அகம்பாவ
அ கம்பா வ
[
[8/13, 19:22] shanthi narayanan: அகம்பாவ

[8/13, 19:38] N T Nathan: அகம்பாவ
[
[8/13, 19:39] ஆர். நாராயணன்.: அகம்பாவ

[8/13, 20:11] Revathi Natraj: அகம்பாவ

[8/13, 20:29] Viji - Kovai: அகம்பாவ

[8/13, 22:54] sankara subramaiam: அகம்பாவ


*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 14-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
நல்ல ஓர் ஆயுதம் உரைத்திடு (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*நவில்*
சொல் பொருள் விளக்கம்

1. *சொல், கூறு* , 2. பழகு, பயிற்சிபெறு, 3. ஒலியெழுப்பு, 4. பாடு, 5. *பயில், கல்,* 6. மிகு,
***********************
*குறள் எண்:783*
_நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்_

_பண்புடை யாளர் தொடர்பு_

*பொழிப்புரை:*
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல்,நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

*நவில்தொறும்' என்பதன் பொருள் என்ன?*

நவில்தொறும் என்றதற்குப் படிக்குந்தோறும், கல்வியைப் பாராட்டப் பாராட்ட, கற்குந்தோறும் , என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

*'நவில் என்ற வினை இந்தக் குறளில் மட்டுமே வந்துள்ளது. பொதுவாகச் சொல்லுதல், பயிலுதல், படித்தல் என்ற பொருளை உடையது.*
*************************
_நல்ல ஓர் ஆயுதம் உரைத்திடு (3)_

_நல்ல_ = *ந* (சிறந்த)
_ஓர் ஆயுதம்_ = *வில்*

_உரைத்திடு_
= *ந+வில்*
= *நவில்*
*************************
*தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:*

_உள்ளுவை அல்லையோ_ —————— ——————————– —————– _நம்மொடு நன் மொழி நவிலும் பொம்மல் ஓதி புனை_இழை குணனே_

– அகம் 353/16-23

நினைத்துப்பார்ப்பாய் அல்லையோ! —————— ————
நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும் பொலிவுபெற்ற கூந்தலையும் அழகிய அணிகலன்ளையும் உடைய நம் தலைவியின் குணங்களை
*******
_ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை –_
நெடு 169

நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயிற்சிபெற்ற யானையின்
********
_பழ மழை பொழிந்த புது நீர் அவல நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை_
_மணி ஒலி கேளாள் வாள் நுதல்_
நற் 42/3-5

தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்;
*********
_பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நா நவில் பாடல் முழவு_ _எதிர்ந்த அன்ன சிலம்பின் சிலம்பு இசை ஓவாது – பரி 15/42-44_

சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர் நாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும்
*********
_மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே – புறம் 1/6_

வேதத்தைப் பயிலும் அந்தணரால் புகழவும்படும்
**************
_நெய் குய்ய ஊன் நவின்ற பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/8,9_

நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட ஊன் மிகுந்த பலவகையான சோற்றுடனே இனிய சுவையுடைய
**************
குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி
முனைவர் ப.பாண்டியராஜா
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[8/14, 07:02] திரைக்கதம்பம் Ramarao: நவில்

[8/14, 07:02] A Balasubramanian: நவில்
A.Balasubramanian
[
[8/14, 07:05] stat senthil: நவில்
6
[8/14, 07:06] பாலூ மீ.: விடை நவில்

[8/14, 07:07] Meenakshi: விடை:நவில்

[8/14, 07:10] மீ.கண்ணண்.: நவில்

[8/14, 07:11] chithanandam: நவில்

[8/14, 07:28] Bhanu Sridhar: நவில்

[8/14, 07:30] ஆர். நாராயணன்.: நவில்
[
[8/14, 07:32] akila sridharan: நவில்
[
[8/14, 07:49] nagarajan: *நவில்*

[8/14, 08:04] sankara subramaiam: நவில்

[8/14, 08:13] மாலதி: நவில்

[8/14, 08:35] siddhan subramanian: நவில்

[8/14, 09:51] joseph amirtharaj: நவில்

[8/14, 10:20] Rohini Ramachandran: நவில்
[
[8/14, 11:29] கு.கனகசபாபதி, மும்பை: நவில்

[8/14, 12:05] Bharathi: *நவில்*
*ந=சிறந்த +வில்* *(ஓர்ஆயுதம்)*

[8/14, 12:24] ஆர்.பத்மா: நவில்

[8/14, 13:23] வானதி: *நவில்*

[8/14, 19:57] Revathi Natraj: நவில்

[8/14, 20:21] G Venkataraman: நவில்

[8/14, 21:34] N T Nathan: நவில்

*****************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்