Skip to main content

Posts

Showing posts from November, 2020

Solution to Krypton 251

Today's clue: State of being untrammelled from without weed headless (7) Its solution: FREEDOM = FROM + (w) EED You can visit this link to find a big tamil puzzle created by Afterdark who contributes regularly to Daily English puzzle in The HINDU. Here is the page with the list of solvers.

கி. பாலசுப்ரமணியன் சரவெடிக்கான விடைகள்

சென்ற ஞாயிறன்று கி.பாலசுப்ரமணியன் உருவாக்கிய சரவெடியை வெளியிட்டிருந்தேன். அதற்கான விடைகள் இதோ: 1. இது மத்தியிலும் இருக்கும், மாநிலத்திலும் இருக்கும் அரசு 3. சிறந்தவர்கள் பெறுவது சுரமிழந்தால் சாதுவாகும் பரிசு 5. மரியாதைக்குரிய கடவுள் மைந்தருடன் நடிகனாகிறார் சிவாஜி 7. உயிர் தப்ப சுவாசிக்க இடையே ஒரு பிராணியைப் பற்றி கேள்வி எழுகிறது பசுவா 10. காவிரி எப்படியும் இங்கிருந்துதான் கிளம்புவாள் குடகு 11. உலகம் தெரியாதவர்கள் வாழச் சிறந்த இடம் கிணறு 1. கண்ணீர் விட குட வாயில் லட்சணந்தான் அழகு 2. பசுவா? சிறுத்தையா உள் மூச்சு விடு சுவாசி 3. பெண் பார்க்க காரம் பஜ்ஜி 4. பாரதியின் அடியார்க்கடியார் சுரதா (சுப்புரத்தினதாசன்) 6. இரண்டாம் கடுகம்? காரமானது மிளகு 7. கலப்பட கும்பல் ஆற்றைக் கடக்கை வைத்திருப்பது படகு 8.கிசுகிசுவா? திரும்பினால் நாகம்! வாசுகி 9. நல்லது திருக்குறள் சொல்லும் கெடுதி மறப்பது நன்று இந்தவிடைகளைக் கண்டுபிடித்தவர்கள்: ராஜா ரங்கராஜன் மீனாக்ஷி கணபதி முத்து சுப்ரமண்யம் ஜோசப் அமிர்தராஜ் ரவி சுந்தரம் லக்ஷ்மி ஷங்கர் மீனாட்சி கேசவ

மேலும் ஒரு சரவெடி பற்றி

இந்து ஆங்கில நாளேட்டில் சுமார் பதினைந்து புதிராளிகள் தினம் ஆங்கிலத்தில் மாறி மாறி புதிர்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் Afterdark என்ற பெயரில் புதிரை வெளியிடுபவர் தமிழில் முதன் முறையாக ஆக்கியிருக்கிறார். சினிமாவில் கடைசி ஆண் பாத்திரம் (4) என்று என்று அழகாகத் தொடங்கி சுமார் 32 குறிப்புகள் கொண்ட அப்புதிரில் இன்னமும் நான்கைந்துக்கு விடைகள் வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். நமக்குப் பரிச்சயமான ஹரி பாலகிருஷ்ணனின் செயலி மூலம் வடிவமைக்கப் பட்ட புதிர் என்பதால் இங்கு வருவோர்க்கு வசதியாக இருக்கும். அந்த சுவாரசியமான புதிரைக் காண இங்கே செல்லுங்கள் .

விடை 4113

இன்று காலை வெளியான வெடி: கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) அதற்கான விடை: விரட்டு = ர + விட்டு ர = கௌரவர்களில் இரண்டாவதெழுத்து. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4113

உதிரிவெடி 4113 (நவம்பர் 29, 2020) வாஞ்சிநாதன் ************************* கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4) Loading…

Solution to Grid Puzzle

Krypton Deepavali 2020 Special Puzzle ACROSS 8. Discontinue the background scenery (4) DROP 9. This president is not a fully true politician (5) TRUMP = TRU(e) + MP 10. Free leader of Angola captured in an invasion (4) RAID =RID + A(ngola) 11. Part of Western Europe whose Southern part is in Russia? (6) (S) IBERIA 12. Generosity with one hundred Japanese money with crooked line (8) LENIENCY 13. Irritates and establishes that it is alright to be inside (8) PROVOKES = PROVES + OK 15. Fashionable to lose an electron in order to charge (6) INDICT = IN + (E)DICT (Many submission had INDUCT?INDUCE as the answer) 17. In an almanac I'd it yielding a measure of sourness (7) ACIDITY (hidden word in) alamanC I'D IT Yielding 19. Ordered to go in red and did not take notice of (7) IGNORED = GO IN RED 22. Scattered pears thrown around after sowing initially (6) SPARSE = PEARS + S(owing) 24. Half the prison contained using revolution (8)

1985ஆம் ஆண்டின் சரவெடி

சர வெடி கி. பாலசுப்ரமணியன் ******************* கி. பாலசுப்ரமணியன் 1985 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆக்கிய புதிர். தன்னுடைய வழக்கம் போல் ஒரு செய்தித்தாளின் பக்கத்தில் காலியாக இருந்த பகுதியில் அவர் எழுதியது. "இதைப் போட்டுப் பாருங்கள்", என்று என்னிடம் கொடுத்தார். நான் அப்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் அதை எழுதிக் கொண்டேன். அதுதான் இது.

தீபாவளிச் சர வெடி விடைகள்

தீபாவளிச் சரவெடிக்கு மேலும் பத்து பேர் விடையனுப்பி மொத்தம் 30 ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் முன்புதான் ஒரு குறிப்பில் குறையிருந்ததை கவனித்தேன். வெட்டி ஒட்டும்போது விடப்பட்டது. " 5. இரு கால்களிடையே ஒரு பாதி நடக்கவிருப்பது (4) " என்பது 5. இரு கால்களிடையே ஒரு பாதி இறுதியாக வந்து நடக்கவிருப்பது (4) என்று இருக்க வேண்டும். ******************************** குறுக்காக 3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5) ஏவியவன் = ஏன் + வி ரைவாக ய மனிடம் வ ராமல் 6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4) கல்லடி = கடி + வெல்லம் - வெ ம் 7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4) லாகவம் = கலாம் + வ [ருங்கால] (லாவகம் என்றும் எழுதப்படுகிறது) 8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6) தந்திரமாக = தந்தி + கரமா 13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6) ச ெம்பரத்தை = செ [யலாளர்] + ரம்பத்தை 14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4) எண்பது = எது + பண் =

கி. பா. செய்த வெடி ஒன்று

கி.பா. நினவுக்கு அஞ்சலியாக செய்த தீபாவளிச் சரவெடியை இன்னமும் பலர் விடை கண்டு அனுப்பியுள்ளார்கள். இன்னமும் ஒரு நாள் கழித்து விடையனுப்புகிறேன். மாணவனாக 1984/85இல் வாரம் நான்கைந்து முறை கி.பா. அவர்களை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்து கணிதம் கற்றிருக்கிறேன். அப்படி அவரிடம் கற்றதால் பி எச்டி நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று எனது பயணம் இனிதாகத் தொடங்கியது. அந்த நாட்களில் அவ்வப்போது பல பல விஷயங்களைப் பற்றிப் பேசுவார். ஹிந்து நாளிதழின் ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிரை அவர் போடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு நாள் தமிழிலே புதிர் செய்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அப்படி மூன்று புதிர்களை அவர் தனது வழக்கம் போல் ஏதோ அச்சடித்த துண்டு பிரசுரத்தின் மூலையில் கட்டம் போட்டு என்னிடம் விடை கண்டுபிடிக்கக் கொடுத்தார். (அவர் வைத்துக் கொள்ளவில்லை). அதை நான் எனது கணித நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டேன். அதிலிருந்து ஒற்றைக் குறிப்பு இதோ: மணி ஒன்று பல்லை விளக்கவா? (3)

தீபாவளிச் சரவெடி இதுவரை விடையளித்தவர்கள்

தீபாவளிச் சரவெடி இதுவரை விடையளித்தவர்கள், 17 பேர் இன்னும் 15 மணிநேரம் இருக்கிறது, மற்றவர்கள் முந்துங்கள் Lakshmi Shankar Kadhirmadhi Raja Rangarajan Dr Ramakrishna Easwaran S P Suresh S R Balasubramanian R Narayanan A Joseph Amirtharaj Akilandeswari Sridharan SathishBalamurugan Ramki Krishnan Meenakshi Ganapathi Padma Sankarasubramaniyan Vanathy V N Krishnan Kanagasabapathy Lakshmi Meenatchi Nagarajan Appichigounder M K Raghavan மேலும் ஐந்து பேர் ஒரே பிழையுடன் அனுப்பியுள்ளனர்.

Krypton -- GRID PUZZLE

Krypton Deepavali 2020 Special Puzzle My trouble yesterday with the crossword building tool has been is over. The authir of the tool Har Ballakrishnan stepped in, did the construction the right way and also pointed out an error and omissions. Here comes the grid with online solving aid. ACROSS 8. Discontinue the background scenery (4) 9. This president is not a fully true politician (5) 10. Free leader of Angola captured in an invasion (4) 11. Part of Western Europe whose Southern part is in Russia? (6) 12. Generosity with one hundred Japanese money with crooked line (8) 13. Irritates and establishes that it is alright to be inside (8) 15. Fashionable to lose an electron in order to charge (6) 5. Fashionable to lose an electron in order to charge (6) 17. In an almanac I'd it yielding a measure of sourness (7) 19. Ordered to go in red and did not take notice of (7) 22. Scattered pears thrown around after sowing initially (6

தீபாவளிச் சரவெடி 2020

சென்ற வாரம் கி.பா. என்ற பெயரில் இங்கே பங்கேற்று வந்த முனைவர் கே. பாலசுப்ரமணியன் காலமனார். அவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியர், பின்னர் ஆராய்ச்சிப் பாதையில் நான் அடியெடுத்து வைக்கத் தூண்டுகோலாய் இருந்தவர். மற்றும் என் ஒருவனுக்காகத் தமிழில் குறுக்கெழுத்துப் புதிர்களை உருவாக்கியவர். பின்னர் எனது மாமனாரும் ஆனவர். அவர் நினைவாக இன்றைய சரவெடி. விடைகள் 18/11/2020 இரவு 9 மணிக்கு. Krypton English Grid puzzle will be made available some time between 10 am and 11 am today. குறுக்காக 3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5) 6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4) 7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4) 8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6) 13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6) 14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4) 15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4) 16. மழையில் தோன்றியது மழையிலிருந்து

Solution to Krypton 249

Today's clue: Loud noise resulting from kinky sex in pool (9) Its solution: EXPLOSION , anagram of SEX IN POOL. The solution is admittedly not as colourful as the clue! Perhaps if had POPULATION EXPLOSION as the solution clue and solution might have been worded equally colourful. Leave it to you think of modifying it. I am very slow to understand the device named reverse anagram employed in The Hindu crossword frequently. When I undestand that bettter I'll come up with one. Here is the page with the list of solvers.

விடை 4112

காலை வெளியான வெடி ஊர் தண்டிக்க முதல் பாண்டியன் வாலறுப்பு (3) அதற்கான விடை: தவழு = த + வழு த = தண்டிக்க, என்பதன் முதலெழுத்து வழு = வழுதி (பாண்டிய மன்னர்களுக்கான பெயர்),"தி" என்ற வாலின்றி வந்துள்ளது. ஏதோ சாண்டில்யன் கதைகளில் பெருவழுதி, இளவழுதி என்று படித்த ஞாபகம். ஊர்தல் என்றால் தவழுதல் (குழந்தை ஊர்ந்து சென்றது) இன்றைய வெடி எப்போதோ செய்திருந்த பழம்புதிரைச் சற்று மாற்றியமைத்தது. இதே சொல்லுக்கு அப்போது ஊர் தண்டித்த முதல் குற்றம் (3) என்று குறிப்பை எழுதியிருந்தேன். வழு = குற்றம்; சிறையிலடைக்கும்படியான குற்றமில்லை, இலக்கணப் பிழையெனும் குற்றங்களை வழு என்பார்கள்). இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4111

காலை வெளியான வெடி உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்தபவன் (7) அதற்கான விடை: ஆதரித்தவன் = ஆதவன் + தரித் ஞாயிறு = ஆதவன் உரித்ததை என்ற சொல்லை உரிக்க (வெளிப்புறமுள்ள எழுத்துகளை நீக்கக்) கிடைப்பது "ரித்த". இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4111

உதிரிவெடி 4111 ( நவம்பர் 1, 2020) வாஞ்சிநாதன் ************************* உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்த ப வன் (7) Loading… (5)