Skip to main content

Posts

விடை 4210

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5) அதற்கான விடை: பஞ்சாரம் = பஞ்சா + (க) ரம் பஞ்சு = பருத்தியிலிருந்து தோன்றுவது பஞ்சா = பருத்தியிலிருந்து தோன்றியதா பஞ்சாரம் = கூடை; இதைக் கவிழ்த்துப் போட்டுக் கோழிகளை அடைத்து வைப்பதுமுண்டு படத்தைக்காண இங்கே செல்லவும். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 346

Krypton 346 (23rd October, 2022) Vanchinathan ****************** Solution will appear on Monday at about 9pm. European capitalist holding bothsides in a drink (8) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4210

உதிரிவெடி 4210 (அக்டோபர் 23, 2022) வாஞ்சிநாதன் ************************* விடைகள் தீபாவளி இரவு 9 மணி வாக்கில் வெளியிடப்படும் கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4209

இன்று காலை வெளியான வெடி: சேலை அணியாதவன் பெண் பாதி கொண்ட தெய்வம் (5) இதற்கான விடை ஆண்டவன் = ஆடவன் + ண் ஆடவன் = சேலை அணியாதவன் ண் = பாதி பெண் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.