Skip to main content

Posts

விடை 3854

இன்றைய வெடி: முற்காலத்து ராகம்  உடைய  ஆரம்பிக்கவில்லை (4)   அதற்கான விடை:  பண்டைய   = பண் (ராகம்) +  (உ) டைய இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண   இங்கே செல்லவும்.  மீண்டும் நாளை காலை புதிய வெடியுடன் சந்திப்போம்.

விடை 3853

இன்று காலை வெளியான வெடி: மாடு பசித்திருக்க  கலசத்துடன் நிற்பது ஒரு வாகனம் (3, 4) அதற்கான விடை:  ஆகாய விமானம் = ஆ + காய + விமானம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று பார்க்கலாம்.

சரவெடிக்கான விடைகள்

தீபாவளிச் சரவெடி இரண்டு தவணைகளாக  வந்த பின்னரே கட்டத்தை வெளியிட்டேன். முதலிலேயே கட்டத்தை அளித்து விட்டால் சில விடைகள் சில்லறையாக யோசிக்காமல் வந்து விழுந்து புதிர் வீணாகிவிடக்  கூடாது என்பதே இதன் நோக்கம். இதில் எல்லோருக்கும் உடன்பாடுதான்  என்று நினைக்கிறேன். விடைகள்: 3836. படுக்கை ஓரங் கிழிய முள் முனை குத்த மங்கலகரமான கிழங்கு (4)  மஞ்சள்   = மஞ்சம் - ம் + (மு) ள் 3837. மாட்டாமல்  வந்த   ஊர்வசிக்கா மல்லேஸ்வரனைப் பிடித்திருக்கிறது?  (5) சிக்காமல்   = ஊர்வசிக்கா மல்லேஸ் 3838. தென்னமெரிக்க நாட்டில் வாழும் மதிப்பிற்குரியவர்கள்? (6) பெருமக்கள் (பெருநாட்டில் வாழ்பவர்கள்) 3839. கன்னத்தின் ஓரம்  வெளியே உரசி வெற்று மினுமினுப்பு (4) பகட்டு = பட்டு + க(ன்னத்தின்) 3840. திருடன் போரிடுமிடத்திலுள்ள சரஸ்வதி ? (4) களவாணி = களத்திலிருக்கும் சரஸ்வதி 3841. செழிப்புடைய காட்டு உள்ளே  இளமாலை தழை பறித்தது (4)  வளமான = வன + இளமாலை - இலை [= தழை] 3842. முடியாத துக்கம் சுற்றி அணையின் கதவு வைத்த டாஸ்மாக் (5)  மதுக்கடை = துக்க (ம்) ...

உதிரிவெடி 3853

உதிரிவெடி 3853  (அக்டோபர் 29, 2019) வாஞ்சிநாதன் ********************** மாடு பசித்திருக்க  கலசத்துடன் நிற்பது ஒரு வாகனம் (3, 4) Loading...

Solution to Grid Puzzle ?

As the grid puzzles are rare and, many clues need to be handled I'll extend the time period to Wednesday night 9pm.  Ramki Krishnan has solved it completely. Solutions are best sent through the online solver . As you move the mouse to any cell the clue corresponding to that location will be displayed in that version.  As this software tool was not well understood by me I posted many versions of this grid puzzle and this might have confused you. Now all the puzzle and all its variants are in a single post .  I have not made any effort to create a regular Google form for submitting the answers. If you prefer it I'll make it tomorrow night.  I'll do it based on the comments I receive.

தீபாவளிச் சரவெடிக்கு விடை?

சரவெடிக்கு எல்லாவிடைகளையும் (17)  கண்டவர்கள்  ஆறேழு பேர் இருப்பார்கள். இத்தனை வெடிகள் இருப்பதால்  மேலும் அவகாசம் அளிக்க வேண்டும். விடைகளை நாளை (செவ்வாய்) இரவு வெளியிடுவேன். ஹரிபாலகிருஷ்ணனின் செயலியைப் பயன்படுத்தியும் விடைகளை அளிக்கலாம். அச்செயலி பற்றி அவருக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். நாளை காலை வழக்கம்போல் (ஒற்றை) உதிரிவெடி வெளிவரும்.   புதிரைக் காண இங்கே செல்லுங்கள்.