நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள் வேழம், அணி, புலி, புரவி, சாவு இதில் தனியானது: புலி நான்கு சொற்களுக்கு அதே பொருளில் எதுகையாக அமைந்த சொற்கள் உள்ளன. வேழம் = கரி அணி = தரி புரவி = பரி சாவு = மரி அணி மட்டும் வினைச் சொல் என்பது சரியாகாது. சாவு, வினைச் சொல்லாகவும் பயன்படும். (ஏவு, தாவு போல். "எங்கேயாவது ஆத்துல கொளத்தில விழுந்து சாவு" என்று கோபத்தில் திட்டுவதைக் கேட்டதில்லையா?) எதுகையென்று சொன்னால் போதுமா? ஒரு செய்யுள் எழுதிப் பார்க்கலாமா? புலி என்பது வரி என்று கொள்ள முடியாது. இருந்தாலும் வரியையும் சேர்த்துக் கொண்டு ஒரு நேரிசை வெண்பா: பரிமே லமர்ந்து பகைவர் பலரும் மரிந்திட வென்றநம் மன்னன் தரித்த வரிப்புலித் தோலுடை வண்ணமது ஈர்க்க கரிகளும் ஆடும் களித்து. ஜோசப் அமிர்தராஜ் கூறும் இன்னொரு செய்தி: கரி, பரி, தரி, மரி சங்கீத ஸ்வரங்களைக் குறிக்கும் எழு த் துக்களால் ஆனவை. சரி! ராம்கி கிருஷ்ணன், முதல் நான்கு சொற்களுக்கும் தலையெழுத்துகளை "ப" என்று மாற்றினால், பழம், பணி, பலி, பரவி, என்று பொருளுடைய சொற்கள் கிடைக்கும், ஆனால் சாவை மாற்ற...