Skip to main content

Posts

Showing posts from May, 2024

Solution to Krypton 429

   Yesterday's clue:   Don swapped carbon and fluorine in a computer part (9) Its solution:  PROFESSOR = processor - C + F C, F = Carbon and Fluorine Don = professor Being a professor, I had to  be  a processor of a huge bundle of answer papers   so that results can be declared for the  semester examinations  held earlier in May in time.   Had I delayed  that, it  would have been  terrible --- I was given a deal that was too good to be refused!  So I delayed this udhirivedi results. Visit this page to see all the solutions received.

விடை 4295

   நேற்று காலை வெளியான வெடி கேட்பது  ஓராயுதத்தில் சிக்கிப் புரண்ட தாவரத்தின் பகுதி (5)    அதற்கான விடை  வேண்டுதல்   = வேல் + தண்டு வேல் = ஓராயுதம் தண்டு = தாவரத்தின் பகுதி வேண்டுதல் = விண்ணப்பம் அல்லது கேட்பது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 429

  Krypton 429 (24th May, 2024)  ****************** Don swapped carbon and fluorine in a computer part (9) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4295

    உதிரிவெடி 4295 (மே 26 , 2024) வாஞ்சிநாதன் ************************  கேட்பது  ஓராயுதத்தில் சிக்கிப் புரண்ட தாவரத்தின் பகுதி (5)    விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 9 விடைகள்

  நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  திருக்கை, கயல், வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி இதில் திருக்கை,  வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி இந்த நான்கும் கடல்மீன்கள். கயல் அல்லது கெண்டை ஆறு குளங்களில் வாழ்பவை (நன்னீர் மீன்கள்).  இலக்கியத்தில்  (மருத) நாட்டு வளத்தைச் சிறப்பாகக் கூற  வயல்களில் இருப்பதாகவும் கவிஞர்கள் சொல்வர். திருப்பாவையில் ஆண்டாள் " ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள ..." என்கிறார். இன்று விடையளித்தவர்களில் கயல் என்பது மட்டுமே கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் என்ற காரணத்தை மீனாக்ஷி என்ற கயல்விழி   குறிப்பிட்டுள்ளார்! அதையே மீ கண்ணன் கூறுகிறார் (மீன் கண்ண‌ரோ?)   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

திரிவெடி 9

  திரிவெடி 9 (25/05/2024)   வாஞ்சிநாதன்       இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு  தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும்  அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை.   குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு  இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம்.   இன்றைய திரிவெடி:    திருக்கை, கயல், வாளை, வஞ்சிரம், கானாங்கெளுத்தி இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 428

Yesterday's clue Kind look of a roman, for example? (8) Solution: TYPEFACE TYPE = kind FACE = look Typeface is a font in printing for which Roman is an example (as opposed to bold or italic) Visit this page to see all the solutions received.

விடை 4294

நேற்றைய வெடி: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5) அதற்கான விடை: அரும்பணி = அரும்பு + அணி = அரும் + பணி தொண்டு = பணி இத்தொண்டைப் பெரிதாக்க அரும் என்று சேர்க்கலாம். அரும்பு = மொட்டு சூடு = அணிந்து கொள் மொட்டை(அரும்பை) தலையில் சூடு = அரும்பை அணி= அரும்பணி திரிவெடியின் விடை விளக்கத்தில் இந்த உதிரிவெடிக்கு விடையளிக்க உதவும் என்று என்று குறிப்பிட்டுருந்தேன். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

திரிவெடி 8 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்   கட்டை, ப ட்டை, சட்டை, மொட்டை, த ட்டை   வெள்ளித் தட்டை எடுத்து அதில் வெற்றிலைக் கட்டை வை. காஞ்சிப் பட்டை உடுத்தி, மல்லிகை மொட்டை த் தொடுத்துக் கூந்தலில் சூடு. ------ ஆச்சா மரத்தில் இலைகளையெல்லாம் பறிக்க‌  மொட்டை யானது. அதன் பட்டை ,  வலிமையான கட்டை இரண்டும் பயனுள்ளவை. அந்த மரத்தை வெட்டித் தட்டை யாக்கும் போது உளி உடைந்தது. (ஆனாலும் அக்கலைஞர் அதை சட்டை ,  செய்யவில்லை, நாதஸ்வரம்தான் செய்தார்!)  ************************** நான் நினைத்த இந்த விடையை மீ. கண்ணன், ஆர்.பத்மா (முதல் விளக்கம்),   அம்பிகா(2வது விளக்கம்) கண்டுபிடித்துள்ளனர். இன்றும் வாசகர்கள் பல வித கோணங்களில் சிந்தித்து  வேறு விடைகளையும், அதே விடைக்கு வேறு விளக்கங்களும் அளித்துள்ளனர். நடு எழுத்தை நீக்கினால் பொருள்தராதது  மொட்டை மட்டுமே (மற்றவை: தடை, கடை, சடை, படை) என்ற விளக்கத்தை கேசவன் அளித்துள்ளார். அது பொருத்தமானதுதான். தட்டை ஒன்றுதான் பலகாரம் என்பதும் (பாலு மீ) மொட்டையின் முதலெழுத்து மட்டும் சங்கீத ஸ்வரம் இல்லை என்பதும் (ராம்கி கிர...

Krypton 428

Krypton 428 (19th May, 2024) ****************** Kind look of a roman, for example? (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 8

  திரிவெடி 8 (18/05/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   கட்டை, ப ட்டை, சட்டை, மொட்டை, த ட்டை உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்

விடை 4293

 நேற்று காலை வெளியான வெடி கிரிக்கெட் வீரர் கையிலிருக்கும் குட்டியின் இடையைச் சுற்றி அணை (3) அதற்கான விடை    மட்டை =  மடை  + ட் மடை = அணை ( நீரை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தும் கதவுதான் மடை. அணையும் சேமித்து வைக்கப்பதற்காகத் தடுத்து வைத்திருக்கும் உபாயம்.  கதவா, அணையா என்று முடிவுக்கு வர முடியாமல் பூவா, தலையா போட்டு பின்னர் எழுதினேன்).   ட் = குட்டியின் இடை   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 427

Krypton 427 (12th May, 2024) ****************** Escort is bashful around a man hugging party leader (7) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4293

    உதிரிவெடி 4293 (மே 12 , 2024) வாஞ்சிநாதன் ************************ கிரிக்கெட் வீரர் கையிலிருக்கும் குட்டியின் இடையைச் சுற்றி அணை (3)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 7 விடைகள்

    நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:   தேக்கு, நூக்கு,  ஆச்சா, கருங்காலி,   பூவரசு    இந்த ஐந்து மரங்களில் ஆச்சா மரம் தண்ணீரில் மூழ்கும், மற்றவை மிதக்கும்.  சம கொள்ளளவு கொண்ட தண்ணீரை விட இதன் எடை 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். நாதஸ்வரம் செய்ய இந்த மரத்தையே பயன்படுத்துகிறார்கள் என்பதும் உபரிச் செய்தி.  தச்சர்கள் மற்றபடி பல பொருட்களைச் செ ய்ய இதைப் பயன்படுத் து வ தி ல்லை. தேக்கைவிட அதிக உறுதி கொண்ட இம்மரத்தில் வேலை செய்யும் போது உளியே உடைந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதால்.  கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் நடுவே அமைந்த நரசிங்கம்பேட்டையில்  பரம்பரையாகச் சில குடும்பத்தினர் செய்துவரும் நாதஸ்வரங்கள் பிரசித்தி பெற்றதாம்    என்பது ம், அடுத்த வாரம் வெறும் சொல்விளையாட்டாக திரிவெடி அமையும் என்பது ம் இன்னிரு உபரிச் செய்தி கள்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

திரிவெடி 7

திரிவெடி 7 (11/05/2024)   வாஞ்சிநாதன்       இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு  தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும்  அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை.   குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு  இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம்.   இன்றைய திரிவெடி:    தேக்கு, நூக்கு,  ஆச்சா, கருங்காலி,   பூவரசு இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4292

நேற்றைய வெடி: சக்கரபாகத்தை முடிக்காமல் பிலஹரியாகத் தொடங்கும் ராகம் (3) அதற்கான விடை: ஆரபி வண்டிச் சக்கரத்தின் ஒரு பாகம் ஆரம். இது முடிவுறாத போது "ஆர", பின்னர் பிலஹரி தொடங்க "ஆர" +"பி" ஆரபி ராகம் என்பது விடை. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 426

Krypton 426 (5th May, 2024) ****************** He brings business holding the focus to merger (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4292

உதிரிவெடி 4292 (மே 5, 2024) வாஞ்சிநாதன் ************************* சக்கரபாகத்தை முடிக்காமல் பிலஹரியாகத் தொடங்கும் ராகம் (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவிடை 6 விடைகள்!

  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள் மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், வாஜ்பேயி     இன்று யார் சரியான விடையளித்தவர்கள் என்று முடிவு செய்வதில் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளேன். நான் ஒரு கருத்தை வைத்து அமைத்த புதிரைப் பல வித கோணங்களில் சிந்தித்து வாசகர்கள் வேறு விடைகளையும், அதே விடைக்கு வேறு விளக்கங்களும் அளித்துள்ளனர். அம்பிகா 3 விடைகளையும், அருள் 5 விடைகளையும் பொருத்தமான விளக்கங்களுடன் அளித்திருக்கின்றனர்! இதில் முடிவு என்று சொல்வதற்கு பதிலாக நான் ரசித்த விடைகளை அதன் எதிர்பாராத கோணத்திற்காகக் குறிப்பிடுகிறேன். கொடுத்த பட்டியலில் தனித்து நிற்பவர் மொரார்ஜி தேசாய் என்று அம்பிகா குறிப்பிடக் காராணம்: அவர் மட்டும் 19ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதாம்! அருள் தனது மூன்றாம் விடையில் இன்றைய பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதால் குஜ்ரால்தான் தனித்திருப்பவர் என்கிறார். ஆனாலும் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் என்பதால் அரசியல் ரீதியில் உள்ள விடைதான் பொருத்தமாக இருக்கும் என்று கொள்ளலாம். அப்படிப்பார்க்கும் போது ராம்கி கிருஷ்ணன், அருளின் 5ஆம் விடை...

திரிவெடி 6

திரிவெடி 6 (20/04/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   மொ ரா ர்ஜி தேசாய், சந்திரசேகர், நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், வாஜ்பேயி உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.