Skip to main content

Posts

திரிவெடி 55 விடை

   நேற்றைய திரிவெடியில் பின்வரும்   சொற்கள் வெளிவந்தன: ஈட்டி, வேல், அம்பு, வாள், சூலம்   இம்முறை  பொருத்தமான ஆனால் வெவ்வேறான‌ விடைகள் வந்துள்ளன. அதைப் படிப்பது சுவாரசியமாக இருப்பதுடன் எப்படி மற்றவர்களின் சிந்தனை தர்க்கரீதியாக  வேறு வழியில் செல்கிறது என்று அறிந்து கொள்ள எனக்கு உதவுகிறது. நான் எண்ணிய விடை: வாள். இது மட்டுமே வெட்டும் (அல்லது பிளக்கும்) ஆயுதம் மற்றவை குத்துபவை. இதே விடைக்கு வேறொரு பொருத்தமான காரணத்தையும் வாச‌கர்கள் அளித்திருக்கிறீர்கள்: வாள் சண்டையின்போது கையில் ஏந்திய படியே இருக்கும், மற்றவற்றை எறிய வேண்டும்! இன்னொரு விடை, அம்பு. மற்றவற்றை வெறும் கையால் பயன்படுத்த இதற்கு மட்டும் வேறொரு கருவி (வில்) வேண்டும்! சூலம். இதன் முனை மூன்றாக இருக்கும் மற்றவை ஒரே முனையுடன் இருக்கும். நன்றி இதற்கு  விடையனுப்பியர்வர்கள் பட்டியலை இங்கே காணலாம்.  

Krypton 475

    Krypton 475 (20th April, 2025)  ****************** A territory where  Tory leader owns a joint ? (8) Solutions will appear tomorrow morning  at 7 am .   Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4341

    உதிரிவெடி 4341 ( ஏப்ரல் 20 , 2025) வாஞ்சிநாதன் ***********************   உதிரிவெடிக்கு முதல்முறையாக வருபவர்கள் விடைகண்டுபிடிக்கும் வழிகளை அறிய 2017 இல் இங்கே வெளிவந்ததைப் படிக்கலாம். இந்த ஞாயிற்றுக் கிழமைக்கான  வெடி:   அயோத்தியில் ஆளாதவன் தந்தையிடம் இரண்டு ஸ்வரங்களை ஒதுக்கி மூன்றாவதைக் கொண்டான் (4) விடைகள் நாளை காலை   7 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 55

                 திரிவெடி 55 (19/04/2025)          வாஞ்சிநாதன்   இன்றைய திரிவெடியில் ஐந்து ஆயுதங்களின்    பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருப்பது  எது,  மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை  என்று கண்டுபிடியுங்கள்: ஈட்டி, வேல், அம்பு, வாள், சூலம் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4340

 நேற்றைய வெடி பெண்ணுடன் சேர மானம் பெரிதில்லை என்று சபதம் (5) அதற்கான விடை : வஞ்சினம் = வஞ்சி + மானம் -மா வஞ்சி = பெண் மானம் பெரிதில்லை = மானம் ‍-மா வஞ்சினம் = சபதம், சூளுரை இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 54க்கு விடையளித்தவர்கள்

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற  பெயர்கள்   நெற்றி, புருவம், கண், மூக்கு, நாக்கு இத் திரிவெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.