இவ்வாரத்திய திரிவெடிகளில் புராணப் பெண்கள் ஐந்து பெயர் அளிக்கப்பட்டிருந்தது. அதிதி, மேனகா, அகல்யா, ரேணுகா, அருந்ததி சப்த ரிஷிகளில் ஐவரிகளின் பத்தினிகள் அவர்கள். மேனகா, விஸ்வாமித்திரரின் மனைவி (அவர்களுக்குத்தான் சகுந்தலை மகளாகப் பிறந்தாள்). அகல்யா, கவுதமரின் மனைவி (கல்லாகிக் கிட என்று அருமைக் கணவனால் சபிக்கப்பட்டு ராமர் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்தவள்) ரேணுகா தேவி, ஜமதக்னி என்ற ரிஷியின் மனைவி, அதிதி கஸ்யபரின் மனைவி; (அவர்களைப் பற்றிய கதை எதுவும் எனக்குத் தெரியாது). அருந்ததி, வசிஷ்டரின் மனைவி. இந்த சப்தரிஷிகளின் மனைவிமார்களோடு அக்னி பகவான்- ஸ்வாஹா தேவி எல்லோரையும் சேர்த்த கதை ஒன்று இருக்கிறது. அதைத் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அக்கதை முடிவில் வசிஷ்டரின் மனைவி அருந்ததி மட்டும் கற்பில் உயர்ந்தவள் என்ற முடிவுக்கு வருகிறார்கள். வான மண்டலத்தில் அவள் மட்டும் கணவனுடன் இருக்கும் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறாள். அதனால் அருந்ததி பிற ரிஷி பத்தினிகளிலிருந்து வேறுபட்டவர். Ursa Major/Big Bear என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சப்தரிஷி மண்டலத்தில் Alcor-...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.