Skip to main content

Posts

Showing posts from July, 2024

Solution to Krypton 438

 Solution to Krypton 438  Yesterday's clue Commonplace lock locks up central funds (7) Solution: MUNDANE =   MANE + UND MANE  = Lock (of hair) UND  = (f) und (s) As I'd commented earlier, the idea for this arose while reading  the  criticism of  the recently presented budget not releasing funds for Tamilnadu  from the centre .   Visit this page to see all the solutions received.

விடை 4304

   நேற்றைய வெடி:   காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5) அதற்கான விடை:  புரோ வியப்படை =  கா வியப் படை ப்பில் பொதிந்தது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 438

    Krypton 438 (28th  July 2024)  ******************   Commonplace lock locks up central funds (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 18 விடை

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்கள்: சித்திரை,  ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி    என்னுடைய கணிப்பில் சேராதது, ஐப்பசி . மற்ற நான்கு மாதங்களிலும் பௌர்ணமி விசேஷமானது. சில ஊர்களில் பெருந்திரளாக பக்த லட்சங்கள் திரள்வார்கள். சித்திரைப் பௌர்ணமியில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் திருநாள். கார்த்திகைப் பௌர்ணமியில்  திருவண்ணாமலையில் தீபம். தை மாதம் பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி;  தைப்பூசம் என்று முருகன் கோவில் பால்குடம் அலகு குத்துவது என்று விசேஷம். பழனி, சிங்கப்பூர், மலேஷியா என்று பல இடங்களில்.   (நான்கைந்து ஆண்டுகளுக்கும் முன்பு அது தமிழக அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது). மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் பௌர்ணமி, கும்பகோணத்தில் கொண்டாட்டம். (பன்னிரண்டாண்டுக்கு ஒரு முறை அது மகாமகம்). ஐப்பசியில் அமாவாசைதான் (வட இந்தியாவில்) தீபாவளி; பௌர்ணமி எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அப்படி ஏதும் விசேஷம் என்று இருந்தால் அறிந்தவர்கள் கூறவும். (பக்திப் பத்திரிகைகள், ஜோதிடப் பத்திரிகைகளைப் படித்தால் எல்லா நாளும் விசேஷம் என்று தோன்றும். அதைத் தள்ளிவிடு...

உதிரிவெடி 4304

 உதிரிவெடி 4304 ( ஜூலை  28, 2024) வாஞ்சிநாதன் ************************* காவியப் படைப்பில் பொதிந்திருப்பதைக் கண்டு திகை (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 18

  திரிவெடி 18 (27/07/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    சித்திரை, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

Solution to Krypton 437

   Yesterday's clue: The enclosure traps our spirit (7) Its solution:  COURAGE =   CAGE + OUR Cage = Enclosure 'Our' trapped inside cage Courage = spirit Visit this page to see all the solutions received.

விடை 4303

   நேற்று காலை வெளியான வெடி அரை வருடம் முன்பே வந்த வீக்கம் கல், கம்பிகளால் ஆனது  (5)    அதற்கான விடை :  கட்டிடம்  = கட்டி +  (வரு) டம் கட்டி = வீக்கம் டம் = அரை   வரு|டம் கட்டிடம் = கல், (இரும்புக்) கம்பிகள் வைத்துக் கட்டப்படுவது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 437

    Krypton 437 (21st July, 2024)  ****************** The enclosure traps our spirit (7) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4303

    உதிரிவெடி 4303 (ஜூலை 21 , 2024) வாஞ்சிநாதன் ************************    அரை வருடம் முன்பே வந்த வீக்கம் கல், கம்பிகளால் ஆனது  (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 17 விடைகள்

  பல வருடங்களாக உதிரிவெடியில் பங்கேற்ற பலரைப் பற்றித் தெரியாத ஒன்றை இப்போது 3 மாதங்களாகத் திரிவெடி மூலம்   தெரிந்து கொண்டேன். இங்கே விடையளிப்பவர்களை ஒரு பட்டிமன்றம் தொடங்கும் ஒரு நிமிடம் முன்பு  பாரதி பாஸ்கர் கட்சியோ, ராஜா கட்சியோ எதில் சேரச் சொன்னாலும்  அந்த அணிக்கான வாதங்களைப் பொருத்தமாக  முன் வைக்கும் திறமை உள்ளவர்கள் என்பதுதான் அது. ஒருவரே லட்டுக்கு எதிராகவும், களிக்கு எதிராகவும் இன்று காரணங்களை முன் வைத்திருப்பது போல் முந்தைய திரிவெடிக்கும் காரணங்களை அளித்திருக்கின்றனர்.   சுவாரசியமாக இருக்கிறது.  நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்:   முறுக்கு,  அதிரசம்,  களி,  சீடை,  லட்டு   இதற்கு என்னுடைய  அறிவுக்குத் தெரிந்தது.  லட்டு -- அது மட்டும் கடலை மாவில் செய்யப்படுவது, மற்றவை அரிசி மாவில் தயாரிக்கப்படுபவை. பிற பொருத்தமான விடைகள் நான் குறிப்பிட விரும்புவது: களி மட்டும் ஒரு ஸ்திரமான உருவில்லாதது, மற்றவை தெளிவான உருவத்தால் எண்ணிக் குறிப்பிடக் கூடியவை. களிக்கு மற்றொரு வித்தியாசம்: மற்றவை எல்லாம் எண...

திரிவெடி 17

  திரிவெடி 17 (20/07/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. முறுக்கு,  அதிரசம்,  களி,  சீடை,  லட்டு இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 436

   Yesterday's clue A sign to revoke  when switching sides (6) Solution: CANCER   =  a zodiac sign CANCER  = CANCEL -L + R Cancel = revoke L, R = (left, right) sides Visit this page to see all the solutions received.

விடை 4302

   நேற்றைய வெடி:  செடிகள் மண்டிய இடத்தில் வியாதிக்காரனைப் புதைத்துக் கல்யாணம் செய்து வைப்பவர் (5) அதற்கான விடை:  புரோகிதர் = புதர் + ரோகி புதர் = செடிகள் மண்டியுள்ள இடம் ரோகி = வியாதியுள்ளவன் ( ரோகம் = வியாதி) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 436

  Krypton 436 (14th  July 2024)  ******************   A sign to revoke  when switching sides (6) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4302

   உதிரிவெடி 4302 ( ஜூலை  14, 2024) வாஞ்சிநாதன் ************************* செடிகள் மண்டிய இடத்தில் வியாதிக்காரனைப் புதைத்துக் கல்யாணம் செய்து வைப்பவர் (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 16 விடை

  நேற்று கொடுக்கப்பட்ட ஐந்து சொற்களும் "வை" என்ற எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்கள். கோவை, சால்வை, பார்வை, போர்வை , பாவை   என்னுடைய கணிப்பில் தனித்து நிற்பது "பார்வை". அந்த இறுதி எழுத்தை நீக்க,  ஐந்து சொற்களும் மீண்டும் பொருள் தரும்,   கோ ‍‍= அரசன், தெய்வம் சால் = ஏற்றத்தில் கட்டப்படும் நீரை அள்ளும் கலன் பார் = கண்ணால் நோக்கு போர் = யுத்தம் பா = செய்யுள் கவனித்துப் பார்த்தால் பார்வை என்பது மட்டும் பார் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது என்பது தெரிகிறது. மற்றவற்றில் "வை" நீக்கப் பெறப்படும் சொல்லும், கொடுத்த சொல்லும் தொடர்பில்லாதவை.  அருள், பார்த்தசாரதி இருவரும் இதற்கு நெருக்கமான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.   விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

திரிவெடி 16

  திரிவெடி 16 (13/07/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?     கோவை, சால்வை, பார்வை, போர்வை , பாவை உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும். 

விடை 4301

 நேற்று காலை வெளியான வெடி கடலூர் தந்த உயர்ந்த துணி வகையறா ? (5)    அதற்கான விடை :  பட்டினம் = பட்டு + இனம் பட்டு  = உயர்ந்த துணி இனம் = வகையறா பட்டினம் = கடலோரங்களில் அமைந்த ஊர். (நாகப்பட்டினம், அதிராமப்பட்டினம், காயல்பட்டினம், மசூலிப்பட்டினம்)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 435

    Krypton 435 (25th July, 2024)  ****************** Wet part almost rebuilt with ceiling  does not  leak (10) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4301

    உதிரிவெடி 4301 (ஜூலை 7 , 2024) வாஞ்சிநாதன் ************************    கடலூர் தந்த உயர்ந்த துணி வகையறா ? (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 15 விடை

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: முத்திரை, ஓசை,  சபதம்,  காதலி, செல்வன்  இதில் முத்திரையைத் தவிர மற்ற நான்கும் கல்கியின் கதைத் தலைப்பின் இரண்டாம் சொல்லாகும்: அலை ஓசை,  சிவகாமியின் சபதம்,  கள்வனின் காதலி, பொன்னியின் செல்வன். அருள் இதே விடையைக் கண்டுபிடித்துவிட்டு, நாவல்களின் தலைப்பென்ன, திரைப்படப் பெயர்கள் அடிப்படையில்  செல்வன் தனித்து நிற்கிறது என்ற விடையும் கூடுதலாக அளித்திருக்கிறார். விடைகண்ட அனைவருக்கும் பாராட்டுகள். இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 15

  திரிவெடி 15 (06/07/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன. முத்திரை, ஓசை,  சபதம்,  காதலி, செல்வன் இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 434

   Yesterday's clue Anticipate the charge for services including a form of rose (7)   Solution: FORESEE = FEE + ORES FEE = charge for services ORES = form of rose Visit this page to see all the solutions received.

விடை 4300

   நேற்றைய வெடி:   தலை சீவிய சிவப்புக் காளை போராட்டம் கன்னிப் பெண்ணுக்கு ஏற்ற  நிகழ்ச்சியல்ல   (5) அதற்கான விடை:  வளைகாப்பு = சிவப்பு ‍- சி + காளை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4300

   உதிரிவெடி 4300 ( ஜூலை  1, 2024) வாஞ்சிநாதன் *************************   தலை சீவிய சிவப்புக் காளை போராட்டம் கன்னிப் பெண்ணுக்கு ஏற்ற  நிகழ்ச்சியல்ல (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 434

  Krypton 434 (1st July 2024)  ******************   Anticipate the charge for services including a form of rose (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 14 விடை

நேற்று கொடுக்கப்பட்ட ஐந்தும் சுஜாதவின் நாவல்களின் தலைப்புகள். கொலையுதிர் காலம்,  மேகத்தைத் துரத்தியவன், நைலான் கயிறு,  கனவுத் தொழிற்சாலை, நில்லுங்கள் ராஜாவே அதில் தனித்து நிற்பது, கனவுத் தொழிற்சாலை . அது திரைப்படத் துறையினரின் வாழ்க்கையைப் பற்றிய கதை. மற்ற நான்கும் வழக்கறிஞர் கணேஷ், கொலை மர்மத்தைக் கண்டுபிடிக்கும்  கதைகள். வசந்தும் இடம்பெறும் கதை என்று நேற்றே விடையை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அருள், அகிலா ஸ்ரீதரன் விடைகளில் முதல் கதையான நைலான் கயிற்றில் கணேஷ் மட்டும்தான் வருவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதால் கணேஷ் பெயரை மட்டும் இப்போது சொல்கிறேன். மீண்டும் அடுத்த சனிக்கிழமை திரிவெடியைக் காண்போம்.   விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.