Skip to main content

விடை 4234

நேற்று வெளிவந்த வெடி:
வரிவிலக்கு பெற்ற மூத்த குடிமகனாரை இதைச் சொல்லி அழைப்பது முறையல்ல (3)
அதற்கான விடை: பெயர் = பெரியவர் - வரி
பெரியவர் = மூத்த குடிமகனார்
"பெயரை" என்றும் சிலர் விடை தந்திருக்கிறார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளலாம்
அது, ஒன்றுமில்ல்லை. நண்பர்கள் சிலர் மூத்த குடிமகனாகி ஓய்வு பெற்றுவிட்டார்கள். எனக்கும் அந்த நாள் வந்தால் அப்போது எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டியிருக்கும் என்று படித்துக் கொண்டிருந்தேன். அதுதான் இன்றைய புதிராகிவிட்டது.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*************************
*A peek into today's riddle!*
*Vanchinathan's உதிரிவெடி 4234*
************************
*நினைவில் மலர்ந்த பாடல் வரிகள்!*
*********
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

ஊரைச் சொன்னாலும்
உறவைச் சொன்னாலும்
உற்றாரிடத்தில் எதனைச் சொன்னாலும்

பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா

(தாயை காத்த தனயன்:1962)
************************
_வரிவிலக்கு பெற்ற மூத்த குடிமகனாரை இதைச் சொல்லி அழைப்பது முறையல்ல (3)_

_மூத்த குடிமகனாரை_
= *பெரியவரை*

_வரிவிலக்கு பெற்ற பெரியவரை_
= _Indicates to delete வரி from பெரியவரை_
= *பெ(ரி)ய(வ)ரை*
= *பெயரை*

_இதைச் (சொல்லி அழைப்பது முறையல்ல)_
= *பெயரை* _(சொல்லி அழைப்பது முறையல்ல)_
************************
*"வரிவிலக்கு''* அருமையான deletion indicator.!
************************
மூத்த குடிமகனாரை பெயரை சொல்லி அழைப்பது முறையல்ல என்பதால்தான், *பெரிசு* என அழைக்கிறது, அநேக இளவட்டங்கள்!😂
************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்