Skip to main content

விடை 4232

நேற்று வெளிவந்த வெடி:
யாப்பில் பூவிதழ் போன்றது குப்பையோடு வருவது விடுதலை பெற்றது (4)
அதற்கான விடை: கூவிளம் = கூளம் + வி
கூளம் = குப்பையும் கூளமும் சேர்ந்து பேசப்படுவது வழக்கு.
வி = "விடு"தலை
அது ஒன்றுமில்லை கிட்டதட்ட ஒரு மாதமாக விடுதலை படத்தின் பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதுதான் விடுதலையைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. இரண்டு வாரம் முன்பு "அல்லல் இருளை/லை அழிக்கும்" என்ற வரியிலிருந்து அல்லலை இரவோடிரவு அமைத்தேன்.
கூவிளம் என்றதனைக் கூறிடுவர் நேர்நிரைக்குப்
பூவிதழும் ஆங்கே பொருந்திடுமாம் - நாவினால்
நல்லதோர் பாடலை நல்கிய ராசாவின்
மெல்லிசைக்கு மேலேது சொல்


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்