Skip to main content

உதிரிவெடி 4233

உதிரிவெடி 4233 (ஏப்ரல் 8, 2023)
வாஞ்சிநாதன்
*************************
எண்ணெய் வணிகனைச் சபிக்க எண்ணி ஸ்பூனர் (Spooner) பணமிருக்குமிடத்தைத் திறக்க வேண்டியதைத் தருகிறார் (4,2)

விடைகள் நாளை காலையில் வெளியிடப்படும்
உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

 

Comments

balakrishnan said…
ஐயே மெத்த கடினம்.
Muthu said…
"பேசும்போது வார்த்தைகளை மாற்றி பேசுவதற்கு பெயர் தான் Spoonerism. தமிழில் இதை ஸ்பூனரிஸம்: “சகாரம்” என்று சொல்லுவார்கள். இந்த வகையிலான தவறுகளை சிலர் வேண்டும் என்றே செய்வார்கள். அத்தகைய தவறுகள் கேட்பவர்களுக்கு சிரிப்பூட்டுவதாகவும், புதிய தகவல்கள் தருவதாகவும் அமையும். இந்த யுக்தியை பல சினிமா படங்களில் கையாளுகிறார்கள். இந்த சிறிய புத்தகத்தில் Spoonerism பற்றிய அறிய தகவல்களை கொடுத்துள்ளேன்." -- சகாரம்: Spoonerism (Tamil Edition) [Print Replica] Kindle Edition
Tamil Edition by Gauri Sankar (Author)

சந்திரலேகா படத்தில் கலைவாணர் - மதுரம் ஜோடி இம்முறை கொண்டு ஒரு சங்கேத மொழி பேசுவார்கள்: உ-ம்: உரையிலே தக்காரு <==> தரையிலே உக்காரு.
Muthu said…
சந்திரலேகா படத்தில் என். எஸ். கிருஷ்ணன் குழு சகாரம் (spoonerism) கலந்து புது மொழிபோல் பேசும் காட்சி https://youtu.be/e7GKHcsueUM?t=8094 ஒலிப்பதிவு சத்தம் குறைவாக இருப்பதால் (எனக்கு) முழுவதும் புரியவில்லை. பகா மாவி (மகா பாவி), பாசமா நோக (நாசமா போக) என்பது போல் பல சொல்வதைக் கேட்கலாம்! பாட்டி அடைப்பதாகத் தெரியவில்லை சாஞ்சி வாரே!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்