Skip to main content

விடை 4233

நேற்று காலை வெளியான வெடி:

எண்ணெய் வணிகனைச் சபிக்க எண்ணி ஸ்பூனர் (Spooner) பணமிருக்குமிடத்தைத் திறக்க வேண்டியதைத் தருகிறார் (4,2)
இதற்கான விடை பெட்டிச் சாவி = செட்டி பாவி
நேற்றே கருத்துரையில் ஸ்பூனரின் வாய்க் குள்றுபடியில் விளைந்தது தமிழிலும் உண்டு என்பதை முத்து குறிப்பிட்டிருக்கிறார். புதிர்களில் அப்படிப்பட்ட குளறுபடிகளும் வார்த்தைகளாக அமைப்பது ஒரு வழக்கம். சகாரம் என்ற சொல்லையும் அதன் பொருளையும் உங்களால் தெரிந்து கொண்டேன், நன்றி முத்து அவர்களே!
என் எஸ் கிருஷ்ணன் அந்தப் படத்தில் "என் பெண்டாட்டி ஆட்டிப் படைக்கிறாள்" என்பதை "என் பெண்டாட்டி பாட்டி அடைக்கிறாள்" சொல்லியிருக்கிறாரா?

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
எண்ணெய் வணிகனைச் சபிக்க எண்ணி ஸ்பூனர் (Spooner) பணமிருக்குமிடத்தைத் திறக்க வேண்டியதைத் தருகிறார் (4,2)
Raghavan MK said…
************************
*A peek into today's riddle! உதிரிவெடி 4233 (ஏப்ரல் 8, 2023)*
************************
*செட்டியார்:*

     செட்டியார் என்னும் பெயர் சாதிப் பெயர் இல்லை.  *வணிகம்* செய்த குடிகளுக்கான பொதுப் பெயர் ஆகும். செட்டிகள் தமிழகத்தில் பெருமதிப்புடையோர் என்ற பொருளில் ஆர் விகுதி சேர்க்கப்பட்டு செட்டியார்கள் என அழைக்கப்டுகின்றனர். தமிழகத்திலிருந்து உருவான  *எட்டி* என்ற சொல்லே மருவிய  *சிரேஷ்டி* என்ற  வட சொல்லானது. கருநாடக  *ஷெட்டி(shetty)* என்ற சொல் கடற்கரை சமூகங்களைக் குறித்த சொல் ஆகும். ஷெட்டிக்கும் சிரேஷ்டிக்கும் தொடர்பில்லை.

_செட்டி என்பது பண்டம் விற்போர், அல்லது வணிகம் புரிவோர் என பொருள்படும்_ .
************************
_எண்ணெய் வணிகனைச் சபிக்க எண்ணி ஸ்பூனர் (Spooner)_ _பணமிருக்குமிடத்தைத் *திறக்க வேண்டியதைத் தருகிறார் (4,2)_  

_எண்ணெய் வணிகன்_ = *செட்டி*
_சபிக்க எண்ணி_
= *பாவி*
= *செட்டிப் பாவி*

_Spooner turns_
*செட்டிப் பாவி* _into_
= *பெட்டிச் சாவி* ( _தருகிறார்_ )

_பணமிருக்குமிடம்_
= *பெட்டி*
_திறக்க வேண்டியது_
= *சாவி*
= *பெட்டிச் சாவி*
************************
*பெட்டி போனாப் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ!*

கேரளாவில் ஒரு பிரபலமான கதை. அங்கு ஒரு நம்பூதிரி, ஒரு பிரயாணம் மேற்கொண்டார். அவருடைய உடமைகளெல்லாவற்றையும் ஒரு *பெட்டியில்* போட்டு நல்ல பூட்டினால் பூட்டி *சாவியை* பூணூலில் முடிந்து கொண்டார். போகும் வழியில் அவர் கொஞ்சம் கண்ணசந்து விட்டார். விழித்தபின் பார்த்தால் பெட்டியைக் காணவில்லை.

சக பிரயாணிகளிடம் விசாரித்தார். ஒருவரும் பெட்டியைப் பார்க்கவில்லை என்றனர். சக பிரயாணிகள் அனுதாபத்துடன் இவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது நம்பூதிரி சொன்னார்.

_"பெட்டி போனால் போகட்டே. தாக்கோல் இவட உண்டல்லோ, ஆ கள்ளன் பெட்டியைத் திறக்கான் கூடி இவடதன்னே வரணும். ஆ சமயம் ஞான் அவனைப் பிடிக்கான்"_

அப்படீன்னாராம்.

அர்த்தம் மனசிலாயோ?

*"அதாவது பெட்டி போனா என்ன, சாவி என்கிட்டதான இருக்கு,* அந்த திருடன் பெட்டியைத் திறக்க என்கிட்டதானே வந்தாகணும், அப்ப அவனை நான் பிடிப்பேன்"

கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களும் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கார்டுகளின் நெம்பரை வைத்துக்கொண்டு யார் என்ன செய்து விட முடியும்? கார்டு என்னிடம்தானே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கார்டுகளின் நெம்பர் மட்டும் இருந்தால் போதும், தங்கள் கணக்கிலுள்ள எல்லாப் பணத்தையும் சுருட்டிவிடலாம் என்று அவர்கள் அறிய மாட்டார்கள்.
**********************
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்