** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா? இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு சொந்தக்காரர்கள் எல்லோரும் உடந்தையா? இது புதிருங்க. படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான சூத்திரம். சுற்றமும், நட்பும் சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள் சுற்ற : வட்டமிட ம் : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள் = வட்டமிட ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "=" குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...
Comments
*A peek into today's riddle!*
*உதிரிவெடி: 4230*
************************
_உதட்டு ஓரத்தை மறைக்கும் பரு உடலை மறைக்கும் (4)_
_உதட்டு ஓரத்தை_
= _(உதட்)டு_
= *டு*
_பரு_ = *உப்பு* ( _வினைச்சொல்_ )
_மறைக்கும் பரு_
= *டு* inside *உப்பு*
= *உ(டு)ப்பு*
= *உடுப்பு*
= _உடலை மறைக்கும்_
************************
*பஞ்சபூத உடுப்பு*
_நிலமோ திருநீறாம் நீர்கங்கை ஆறாம்_
_இலகும் நெருப்போ விழிமூன்றாம் -- விலகா_
_உடுக்கை இசைக்காற்றாம்_ _ஓங்குசடை வானாம் உடுத்தாய் பஞ்சபூத உடுப்பு !_
(சக்கரைவாசன்)
*************************
💐🙏🏼💐