Skip to main content

விடை 4229

நேற்று காலை வெளியான வெடி:
இரவோடிரவு கஷ்டம் (4)
இதற்கான விடை அல்லல்
அல் = இரவு
இரவோடு இரவு என்றால் அல் அல் என்றிருக்கும். ஆனால் இரவோடிரவு என்றதால் அல்லல் (ராவோடு ராவா என்றும் சொல்வார்கள்).
சேர்த்தெழுதியதைப் பிரித்தும், பிரித்து எழுதியதைச் சேர்த்தும் வேறு பொருள் கொண்டு வருவது சிலேடையில் ஒரு வகை.
காளமேகம் வாழைப்பழத்துக்கும் பாம்புக்கும் சிலேடையாக "நஞ்சிருக்கும் (நஞ்சு இருக்கும்/நைந்திருக்கும்) என்று எழுதியுள்ளார். டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன் "பணம் உடையவர் சேர்ந்தாலும் அவரிடையே உண்டு பற்றாக்குறை (2)" என்று நேற்று புதிராடுகளத்தில் வெடி வீசியுள்ளார்.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*உதிரிவெடி: 4229*
**********************
_" *அல்லல்* " துள்ளலான பு.திர்!_

*சிக்கனம், கருத்து இரண்டுக்கும் சபாஷ் சொல்லவேண்டும்!*
**********************
_இரவோடிரவு கஷ்டம் (4)_ 

_இரவு_ = *அல்*

_இரவோடிரவு_
*= அல்+அல்*
= *அல்லல்*
= _கஷ்டம்_
**********************
*கம்ப இராமாயணம்*
_என் சொல்லினால் சுடுவேன்_
******
சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு *துன்பம்* செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.

*_பாடல்_*

_*அல்லல்* மாக்கள் இலங்கை அது ஆகுமோ?_
_எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்_
_சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்_
_வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்._
**********************
💐🙏🏼💐
RKE said…
மிக்க நன்றி ஐயா

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்