நேற்று காலை வெளியான வெடி:
ஏழரை நாழிகை முடியும் முன் வறியவன் செல்ல ஏந்திழை தந்த மலர் (4)
இதற்கான விடை சாமந்தி = சாமம் -ம் + ஏந்திழை - ஏழை
சாமம் = 3 மணி நேரக் கால அளவு
ஒரு நாளில் பகல் 4 சாமம், இரவு நாலு சாமம்
நாழிகை = 24 நிமிடங்கள்
7.5 x 24 = 180 நிமிடங்கள்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
ஏழரை நாழிகை முடியும் முன் வறியவன் செல்ல ஏந்திழை தந்த மலர் (4)
இதற்கான விடை சாமந்தி = சாமம் -ம் + ஏந்திழை - ஏழை
சாமம் = 3 மணி நேரக் கால அளவு
ஒரு நாளில் பகல் 4 சாமம், இரவு நாலு சாமம்
நாழிகை = 24 நிமிடங்கள்
7.5 x 24 = 180 நிமிடங்கள்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
*உதிரிவெடி: 4231*
************************
_விழித்திருந்தேன் நானும் *சாமத்தில்*_
_மூழ்கியிருந்தேன் நீண்ட மௌனத்தில்_
_காத்திருந்தேன் வருவாய் என்றெண்ணி_
_தோன்றினாய் *வறியவன்* கனவில் நீயும்_
_*ஏந்திழையே* மலர் தந்ததும் மறைந்ததேனோ ?_
***********************
*நாழிகை* என்பது பண்டைய கால நேர அளவாகும்.
தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.
தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை.
*7.5 நாழிகைகள்*
= *2 முகூர்த்தம்*
= *1 சாமம்*
***********************
_ஏழரை நாழிகை முடியும் முன் வறியவன் செல்ல ஏந்திழை தந்த மலர் (4)_
_ஏழரை நாழிகை_
= *சாமம்*
_முடியும் முன்_
= _சாம(ம்)_
= *சாம*
_வறியவன்_
= _ஏழை_
_வறியவன் செல்ல ஏந்திழை_
= _ஏந்திழை minus ஏழை_
= *ந்தி*
_தந்த மலர்_
= *சாம+ ந்தி*
= *சாமந்தி*
***********************
*விட்டு அகன்ற ஞானம்*
_சப்தங்கள் உறங்கும் *சாமம்*_
_கள்ளத்தனமாக வெளியேறியவன்_
_ஞானமடைந்தான்_
_யசோதையின் அமைதியில்_
_பீறிட்டு வழிந்த_
_துயர்களை சலசலக்கும_
_இலைகள் நிறைந்த_
_போதி மரத்தினடியில்_
(ந.பெரியசாமி)
***********************
💐🙏🏼💐
அருமையான peek.