Skip to main content

Posts

Showing posts from January, 2021

Solution to Krypton 259

Today's clue: It is dishonest to spread out without the web address and talk publicly (6) Its solution: UNFAIR (as verb) =UNFURL -URL + AIR Unfurl = to spread out; URL = Uniform Reseource Locator , jargon for web address. air = to talk pulbicly expressing ones opinion. Here is the page with the list of solvers.

விடை 4122

இன்று காலை வெளியான வெடி: பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4) அதற்கான விடை: அன்பில் = அல் + ன்பி அல் = இரவு; ன்பி = பாதி பின்னல் (முறுக்கிய) சோழ மன்னருக்கு அமைச்சராக இருந்தவர், அநிருத்த பிரம்மராயர். "அன்பில்" என்பது அவருடைய ஊர். பொன்னியின் செல்வன் படித்துப் பெற்ற தகவல் இது. இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

விடை 4121 ( தைப்பூசப்புதிருக்கான விடை)

வியாழக்கிழமை காலை வெளியான வெடி: தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4) அதற்கான விடை: படைப்பு = படை + அரிப்பு - அரி படை = தோல்வியாதி அரி = கடவுள் இனிமேல் இப்படி வார நடுவில் விடுமுறை வந்தால் அதற்கும் ஒரு வெடி வெளியிடலாமென்று நினைக்கிறேன். நீங்கள் காட்டும் ஆர்வத்தின் அடிப்படையில் அது வரும். உங்கள் கருத்துகளை இரவில் விடை வந்தபின் உதிரிவெடியில் இடுங்கள். வாட்சப்பில் கருத்திடும் உங்கள் விரல்களை சற்று முயன்று சுமார் 1 மிமீ தள்ளிச் சென்று பார்த்தால் இப்பக்கத்திற்கும் வந்துவிடலாம். அடுத்து ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை கிடைக்கும். தைப்பூசம் போல் பங்குனி பௌர்ணமிக்கும் விசேஷமான புதிரை எதிர்பார்த்து இருங்கள். எடப்பாடியார், அம்மாவின் பிறந்த நாளுக்காக மாசி மகத்துக்கும் விடுமுறை அறிவித்தால் இன்னொன்றும் உண்டு! தைப்பூசப்புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியல் இதோ: 1/28/2021 6:48:12 ராமராவ் படைப்பு படை (தோல்வியாதி) + அரிப்பு - அரி (கடவுள்) 1/28/2021 7:05:21 இரா.செகு படைப்பு படை(தோல்வியாதி)+(அரி)ப்பு ...

உதிரிவெடி 4122

உதிரிவெடி 4122 (ஜனவரி 31, 2021) வாஞ்சிநாதன் ************************* இரண்டு நாட்கள் முன்பு வந்த வெடியை கவனிக்காதவர்கள் 9 மணிக்குள் இங்கே எட்டிப் பார்த்து வாருங்கள். இன்றைய வெடி: பாதி முறுக்கிய பின்னலுடன் இரவில் அநிருத்த பிரம்மராயர் அங்கிருந்தார் (4) Loading…

உதிரிவெடி 4121 (தைப்பூச விடுமுறையில் வெட்டியாக இருக்கும்போது செய்ய )

உதிரிவெடி 4121 (ஜனவரி 28, 2021) வாஞ்சிநாதன் ************************* பௌர்ணமி என்றால் பளிச்சிடும் இரவுதான். இல்லை காரிரவையும் நினைக்கவேண்டும். அவர் செய்த சரவெடியை இங்கே சென்று வெடிக்கலாம். Afterdark என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்து நாளிதழில் புதிரை வெளியிடுபவர் தமிழிலும் அளிக்கத் தொடங்கியுள்ளார். திடீரென்று தைப்பூசம், இன்று கல்லூரி கிடையாது என்று சொல்லி விட்டார்கள். அதனாலொரு உதிரி உருவானது. முழுமதியன்று காரிரவை நாடியது போல், முருகனுக்கு விசேஷமான நாளில் கடவுளை ஒதுக்கி உதிரிவெடியையும் முயலுங்கள்: (விடைகள் ஞாயிறன்று வெளிவரும்) தோல்வியாதியும் அரிப்பும் கடவுளை ஒதுக்கச் செய்த கலைஞரின் கைவண்ணம் (4) Loading…

கொஞ்சம் முணுமுணுப்பு

"அவித்து" என்ற விடை குறித்து ரோஹிணி ராமசந்திரன், சித்தானந்தம், நாகராஜன், சதீஷ், என் டி.நாதன் இவர்களின் சுருக்கமான கருத்துகளை வாங்கி எம்.கே. ராகவன் இங்கே வெளியிட்டுள்ளதைப் படித்தேன். (1) புதிரை "உதிரிவெடி" என்னும் இப்பக்கத்தில் ஒரு புதிராளி வெளியிடுகிறார். (2) புதிராளியின் "உதிரிவெடி" பக்கத்தில் பலர் அதை வந்து படித்து அங்கேயுள்ள கூகிள் படிவத்தில் விடையை எழுதி அனுப்புகிறார்கள். (3) புதிராளி இரவில் 9 மணிக்கு விடையை "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார். (4) புதிராளி விடையளித்தோர் பட்டியலை யும் "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார். இதையும் வாசகர்கள் "உதிரிவெடி" பக்கத்திற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். எம்கே ராகவன் தவிர யாரும் புதிரைப் பற்றி இங்கே கருத்து எழுதுவது என்று ஒரு மூச்சு விடுவதில்லை. அவரைப் போல் ஆர்வமுள்ளவர்கள் அரிது. அவருக்கு நன்றி. ஒரு கல்யாண வீட்டில் விருந்தைச் சாப்பிட்டுவிட்டு அதே வீட்டிலேயே சரியாக மொழி எழுதும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஏன் வாட்சப்பில் உதிரிவெடி வருவதி...

விடை 4120

இன்று காலை வெளியான வெடி: வேகவைத்து | உள்ளே காலிசெய்து படு | கேளிக்கை தொடங்காது (4) அதற்கான விடை: அவித்து = அவி + த்து அவி = அனுபவி (படு) - னுப த்து = கூத்து (கேளிக்கை) - கூ இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4120

உதிரிவெடி 4120 (ஜனவரி 24, 2021) வாஞ்சிநாதன் ************************* வேகவைத்து உள்ளே காலிசெய்து படு கேளிக்கை தொடங்காது (4) Loading…

விடை 4119

இன்று காலை வெளியான வெடி: பொழுது போக்குக்கு உள்ளே அதுவின்றி அரைப்பது உறுதி (6) அதற்கான விடை: திரைப்படம் = திடம் + ரைப்ப திடம் = உறுதி ரைப்ப = அரைப்பது - அது இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4119

உதிரிவெடி 4119 (ஜனவரி 17, 2021) வாஞ்சிநாதன் ************************* பொழுது போக்குக்கு உள்ளே அதுவின்றி அரைப்பது உறுதி (6) Loading…

விடை 4118

இன்று காலை வெளியான வெடி: வாகனம் கனம் குறைந்திடப் பூக்களிடையே அவை பறந்து செல்லும் (5) அதற்கான விடை: வண்டினம் = வண்டி + கனம் - க வண்டின மென்றுரைத்த வல்லவர் வாகனத்தில் கண்டிட்டார் தக்க விடை. பறக்கும் பறவைகள் பட்டியலில் தேடினோர் வெறுத்திடுவார் இன்று விடை

உதிரிவெடி 4118

உதிரிவெடி 4118 (ஜனவரி 10, 2021) வாஞ்சிநாதன் ************************* வாகனம் கனம் குறைந்திடப் பூக்களிடையே அவை பறந்து செல்லும் (5) Loading…

Solution to Krypton 254

Today's clue: Unhappy that distressed sales person initially expired outside (10) ) Its solution: DISPLEASED = DIED + SALE + P(erson) On 13th December I'd asked if anyone could point out to a particular SHerlock Holmes mystery where the distiction between MATCH and MATCHES is used by Holmes. After some search I found that it is The Adventure of the Red Circle. Thanks to the MATCH MAKER clue I read that interesting story again after 35 years. Here is the page with the list of solvers.

விடை 4117

இன்றைய வெடி: நிச்சயம் அடை தின்பதில் முந்தி (3) இதற்கான விடை: உறுதி; உறு + தி; அடை = உறு; தி = தின்பதில் முந்தி (முதலெழுத்து) என்று பலர் சரியாக விடையளித்துள்ளார்கள். ஆனாலும் விளக்கம் முழுமையெனக் கொள்ள வேண்டுமானால் ஏதேனும் ஒரு வாக்கியத்தில் "அடை" என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "உறு" என்று எழுதினாலும் அவ்வாக்கியம் பொருள் மாறாமல் இருக்க வேண்டும். மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்ஸில் அவியலுடன் அடை கிடைக்கும் --> மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்ஸில் அவியலுடன் உறு கிடைக்கும், ஊஹூம் சரியில்லை சும்மா கத்திக் கொண்டேயிருக்கிறவன் வாயை எப்படி அடைப்பது --> சும்மா கத்திக் கொண்டேயிருக்கிறவன் வாயை எப்படி உறுவது, இதுவும் சரியில்லை . இன்னமும் யோசிக்க வேண்டும், நல்ல உதாரணம் அகப்படவில்லை. அடடா! இப்போது, எனது சொந்தக்காரர்களுக்கான வாட்சப் குழு, எனது மனைவி வழி சொந்தங்களுக்கான வாட்சப் குழு, பணியாற்றுமிடத்திற்கான மூன்று வாட்சப் குழுக்கள், பின்னர் நண்பர்கள் குழு என்று பல குழுக்களிலும் பல செய்திகள் பரிமாறுக்கொள்வது, அதைத் தவிர தனிப்பட்ட செய்திகள் அனுப்பு...

உதிரிவெடி 4117

உதிரிவெடி 4117 (ஜனவரி 3, 2021) வாஞ்சிநாதன் ************************* எனது மகளின் திருமண நிச்சயம் தொடர்பான பணியில் பல நாட்கள் ஈடுபட்டதால் புதிருக்கான வேலை செய்யவில்லை. அதனால் சென்ற வாரம் புதிர் வெளியிடவில்லை. இப்போது வந்துவிட்டது 2021இன் முதல் வெடி. நிச்சயம் அடை தின்பதில் முந்தி (3) Loading…