Skip to main content

Posts

Recent posts

விடை 4339

 நேற்றைய வெடி நாளை மலர் கணையில் தொடுத்த ஒரு பாதி (4) அதற்கான விடை: அரும்பு = அம்பு + ரு அம்பு =  கணை ரு = "ஒரு" பாதி நாளை மலர் = நாளைமலரப்போகும் மலர்,  அரும்பு "க்" இல்லாததால், மலர்க்கணை என்று மன்மதன் பக்கம் போகக்கூடாது இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Solution to Krypton 473

  Yesterday's clue:  Egg intake makes son skilled in cutting and stitching (7) Solution:    SURGEON  = URGE + SON Egg = Urge  Surgeons are skilled persons in cutting and stitching (not clothes)   Visit this page to see all the solutions received.

திரிவெடி 53 விடை

 நேற்றைய திரிவெடியில் பின்வரும் நான்கு நீதிநூல்களின் பெயர்கள் வெளிவந்தன: சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி  இதில் திரிகடுகம் என்பது, சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கலந்த மருந்தின் பெயர். அதுபோல் சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பவையும் பல கலவைகளாலான மருந்தின் பெயர்கள்.  இனியவை நாற்பது மட்டும் மருந்தின் பெயரில்லாது,  இப்படி இப்படிச் செய்வது இனியது என்று கூறும் நூல்.  இதற்கு அனுப்பப்பட்ட விடைப் பட்டியலை இங்கே காணலாம்.   

Krypton 473

    Krypton 473 (6th April, 2025)  ****************** Egg intake makes son skilled in cutting and stitching (7) Solutions will appear tomorrow morning  at 7 am .   Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4339

    உதிரிவெடி 4339 ( ஏப்ரல் 6 , 2025) வாஞ்சிநாதன் *********************** இந்த ஞாயிற்றுக் கிழமைக்கான  வெடி:   நாளை மலர் கணையில் தொடுத்த ஒரு பாதி (4) விடைகள் நாளை காலை   7 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 53

                 திரிவெடி 53 (05/04/2025)          வாஞ்சிநாதன்   இன்றைய திரிவெடியில் நான்கு பழந்தமிழ் நீதிநூல்களின்    பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தனித்திருப்பது  எது,  மற்றவை எவ்விதத்தில் தொடர்புடையவை  என்று கண்டுபிடியுங்கள்: சிறுபஞ்சமூலம், இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.