நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள் கெண்டை, மண்டை, செண்டை, தண்டை, சுண்டை 1. எல்லா சொற்களும் "டை" கொண்டு முடிகின்றன. அதை "டு" என்று மாற்றினாலும் பொருள் தருபவை இதோ: மண்டை: மண்டு செண்டை: செண்டு, தண்டை: தண்டு, சுண்டை: சுண்டு கெண்டை இதனுடன் சேராத சொல் . பானுமதிக்கு பாராட்டுகள் திருத்தம்: குணா எடுத்துக் காட்டிய ஆதாரத்தின் படி " கெ ண்டு" என்றும் ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க அகராதியைத் தேடிப் போகிறேன். 2. அல்லது "டி" என்று முடித்தாலும்பொருள் தரும் என்கிறார் அருள். கெண்டை: கெண்டி மண்டை: மண்டி தண்டை: தண்டி சுண்டை: சுண்டி இவ்வகையில் சேராத சொல், செண்டை இதில் தண்டி என்றால் மிகுதி என்பதை இன்று தெரிந்துகொண்டேன். பாராட்டுகள் அருள். 3. இன்னொரு விடை "ண்டை" என்ற இரண்டு எழுத்துகளையும் நீக்கி "டு" சேர்க்கவும் பொருள் கிடைக்கும் என்கிறது கெண்டை: கெடு மண்டை: மடு தண்டை: தடு, சுண்டை: சுடு அதன்படி சேராத சொல் செண்டை. பாராட்டுகள் அம்பிகா. இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.