Skip to main content

Posts

Showing posts from October, 2024

விடை 4316

  நேற்றைய வெடி: வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) அதற்கான விடை:    சிற்றுந்து = சிந்து + காற்று சிந்து = நதி ற்று = காற்று, தலை பிய்த்தது   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   நேற்றைய திரிவெடிக்கான விடைகளைக் கண்டு கருத்துரையில் குணா எழுதிய வெண்பாவைப் பலரும் கவனிக்காமற் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அதை இங்கே நகலெடுத்து அளிக்கிறேன்: சிந்தை மயக்கும் திரிவெடிப் போட்டிக்கு வந்த விடைகளை வாசித்தேன் -- விந்தையாய் நாலடியார் என்றவரும் நால்வரே என்றுகண்டேன் சாலவும் ஒற்றுமை தான்.  குணா அவர்களே, நாலு பேர் சொன்னால் அது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்! கூர்மதியால் கண்டுரைத்த குணாவுடன் நால்வரின் சீர்மிகு  சிந்தனையைச் செப்பிடுவேன் இத்தருணம் ஊர்தெரிய இங்கே உணர்ந்து.

Krypton 450

    Krypton 450 (27th October  2024)  ****************** *** Relevant to in-house expert in entomology (9)  SOLUTION will appear tomorrow 6pm Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4316

   உதிரிவெடி 4316 ( அக்டோபர் 27, 2024) வாஞ்சிநாதன் ****************** வாகனம் உரு பெரிதில்லை என்றாலும் காற்று தலை பிய்க்க ஒரு நதியில் புகுந்தது (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 30 விடைகள்

     நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்: இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது  இதில் தனியானது:  கார் நாற்பது   மற்ற நான்கும் நீதிநெறி நூல்கள். கார்நாற்பது மட்டும் அகத்திணை சார்ந்தது.   நான் எதிர்பாராத சரியான வேறு விடையும் வந்துள்ளது. நாலடியர் மட்டும் பல புலவர்களெழுதியதைத் திரட்டித் தொகுத்த நூல். மற்றவை ஒவ்வொன்றும் தனி ஆசிரியரால் எழுதப்பட்டவை. இப்புதிர் விடையளிப்போரிடமிருந்து நான் எப்போதும் புதியதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றி!   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

திரிவெடி 30

  திரிவெடி 30 (26/10/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, கார் நாற் பது உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4315

 நேற்று காலை வெளியான வெடி ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6)  அதற்கான விடை :  மூக்கடைப்பு = ஜலதோஷத்தின் விளைவு                                           =  மூப்பு + பூக்கடை- பூ மூப்பு = வயோதிகம் நேற்று  மாலை ஏழரை மணிவாக்கில் கருத்துரை இடும்  பகுதியில் பெயரிலியாக ஒருவர் விடையை எழுதிவிட்டார். அதை திரு மு க ராகவன் சுட்டிக் காட்டிய பின் நீக்கிவிட்டேன்.  நீக்கும் முன் அது கண்ணில் பட்டுவிட்டதால் புதிரவிழ்க்கும் வாய்ப்பை இழந்ததாக இருவர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இ தை த் தவிர்க்க,   கருத்து அளிக்க விரும்புவர்கள் மறுநாள் விடைக்கான பதிவில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது விடையோ, அதிகக் குறிப்புமோ இல்லாதவாறு கருத்தை எழுதுங்கள்.   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

Solution to Krypton 449

   Yesterday's clue: It is not OK to have extended binary operations initially in a laptop (8) Its solution:  NOTEBOOK  =   NOT+ebo+ OK  E,B,O = starting letters of Extended Binary Operations. NOTEBOOK (computer) is a laptop computer. Initially I had a different clue for this. With my laptop pushed to be in a corner , I changed to this. Meet you next Sunday EVENING at 6pm! Visit this page to see all the solutions received.

உதிரிவெடி 4315

    உதிரிவெடி 4315 ( அக்டோபர் 20 , 2024) வாஞ்சிநாதன் *********************** ஜலதோஷத்தின் விளைவாக  வயோதிகத்தில் பூக்கடை தொடங்கவில்லை (6)   விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 449

    Krypton 449 (20th October, 2024)  ****************** It is not OK to have extended binary operations initially in a laptop (8)   Click here and find the form to fill in your solution

திரிவெடி 29 விடை

   நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: அரசன், நெருப்பு, மலர், கொடி, பசு அதற்கான விடை:  கொடிதான் மற்றவற்றுடன் சேராதது. மற்ற நான்கு சொற்களுக்கும் அதே பொருள் தரும் ஓரெழுத்துச் சொற்கள் உள்ளன. அரசன் = பூ; நெருப்பு = தீ; மலர் = பூ; பசு = ஆ அரசனைத் தவிர மற்றவை இயற்கையில் தோன்றுபவை, அரசன் மற்றும் உயர்திணை என்பதெல்லாம் சரி என்றாலும், ஏன் அந்த நான்கு சொற்கள் தேர்ந்தெடுக்கப்படுள்ளன என்பதை இவ்விடைகள் விளக்கவில்லை அதனால் அவ்வ ள வு பொருத்தமில்லை.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

திரிவெடி 29

    திரிவெடி 29 (19/10/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   அரசன், நெருப்பு, மலர், கொடி, பசு இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

Solution to Krypton 448

   Solution to Krypton 448  Yesterday's clue:   Friend  is French, in last sense,  a country (9)   Solution: PALESTINE = PAL + EST + IN +E PAL = friend EST = 'is' in French IN = in E = last sense Visit this page to see all the solutions received.

விடை 4314

  நேற்றைய வெடி: நடுப்பகுதி பஞ்சணை நடுப்பகுதி கட்டில் கால் தடை (5) அதற்கான விடை:    இடைஞ்சல் = இடை + ஞ்ச + ல் இடை = நடுப்பகுதி ஞ்ச = பஞ்சணை நடுப்பகுதி ல் = கட்டில் கால்    இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.   

உதிரிவெடி 4314

   உதிரிவெடி 4314 ( அக்டோபர் 13, 2024) வாஞ்சிநாதன் ****************** நடுப்பகுதி பஞ்சணை நடுப்பகுதி கட்டில் கால் தடை (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

Krypton 448

    Krypton 448 (13th October  2024)  ****************** *** Friend  is French, in last sense,  a country (9)   SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 28 விடைகள்

   நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்: அட்ரியாடிக் கடல், காஸ்பியன் கடல்,  அரபிக்கடல்,  மத்தியதரைக்கடல்,  கருங்கடல்  இதில் தனியானது: காஸ்பியன் கடல் .  ஈரான் நாட்டுக்கு வடக்கில் ரஷ்யாவையொட்டி அமைந்த இக்கடல் எல்லா திசைகளிலும் நிலத்தால் சூழ‌ப்பட்டது. பெரிய ஏரி என்றும் கருதுகிறார்கள். (தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கான மொத்தமும் சேர்ந்த அளவுக்கு இருக்குமென்று சொல்கிறார்கள்). பொதுவாகக் கடல் நீரில் இருக்கும் உவர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறதாம்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   

திரிவெடி 28

    திரிவெடி 28 (12/10/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்தில்  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   அட்ரியாடிக் கடல், காஸ்பியன் கடல்,  அரபிக்கடல்,  மத்தியதரைக்கடல்,  கருங்கடல் உங்கள் விடையை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.

விடை 4313

 நேற்று காலை வெளியான வெடி கப்பலை விட அகலம் ஆனால் இடமில்லை,  என்ன துன்பம்! (4) அதற்கான விடை :  அவலம் = அ+ வலம் அ = அகலம் ‍-கலம் வலம் = இடம்(இடது பக்கம்) இல்லை கலம் = கப்பல் "அகலம்" என்ற சொல்லில் "கலம்" (கப்பல்) என்ற பாகத்தை (விட்டு) விட "அ"   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

திரிவெடி 27 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்: குற்றாலீஸ்வரர், கும்பேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், மருந்தீஸ்வரர், எறும்பீஸர்  அதற்கான விடை:  மருந்தீஸ்வரர் சிவாலயங்கள் ஒவ்வொன்றிலும் மூலவருக்குத் தனியான பெயருண்டு (ஆனால் வடிவம் என்னவோ அதே லிங்கம்தான்!) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து சொற்களும் ஐந்து வேறான சிவாலயங்களிலுள்ள சிவனின் பெயர்கள்தான். ஆனால் மருந்தீஸ்வரரைத் தவிர மற்றவை அக்கோவில் அமைந்துள்ள ஊருக்குப் பெயராகவும் அமைந்துள்ளன. குற்றாலீஸ்வரர்  ‍‍> குற்றாலம் கும்பேஸ்வரர் > கும்பகோணம் விருத்தகிரீஸ்வரர்  > விருத்தாசலம் எறும்பீஸர் > திருவெறும்பூர்(திருச்சிக்கு அருகில் உள்ள ஊர்) ஆனால் மருந்தீஸ்வரர் இருக்குமிடம் திருவான்மியூர்/சென்னை. சரியாகக் கண்டுபிடித்த ஜோசப் அமிர்தராஜ், பத்மா, வானதி இம்மூவருக்கும் பாராட்டுகள் பஞ்ச சபை ஸ்தலங்கள் என்று குற்றாலத்தை மட்டும் தனியாகக் கருதலாம் என்று எஸ் ஆர் பாலசுப்ரமணியன் கூறுவது சரியென்றாலும் மற்ற நான்கையும் இணைக்கும் பொதுவான அம்சம் அவர் விடையில் இல்லையென்பதால் அதை ஏற்க முடிய‌வில்லை.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங...

உதிரிவெடி 4313

  உதிரிவெடி 4313 ( அக்டோபர் 6 , 2024) வாஞ்சிநாதன் *********************** கப்பலை விட அகலம் ஆனால் இடமில்லை,  என்ன துன்பம்! (4)   விடைகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

திரிவெடி 27

  திரிவெடி 27 (05/10/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஐந்து சொற்கள் உள்ளன.  எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   குற்றாலீஸ்வரர், கும்பேஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், மருந்தீஸ்வரர், எறும்பீஸ ர் இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.