Skip to main content

Posts

Showing posts from June, 2024

திரிவெடி 13 விடைகள்

  நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல்   சோறு தான் மற்றதோடு சேராதது. மற்ற சொற்களின் தொடக்கத்தில் ஈ (ஈரம்), தா (தாகம்), கொடு (கொடுமை), அளி (அளிதல்) என்ற சொற்கள் வருகின்றன. அவையெல்லாம் கிட்டதட்ட "வழங்கு" என்ற ஒரே பொருளுடையவை. ஈ  என்பது தானமாக வழங்குவது, தா என்பது ஒருவருக்குச் சம நிலையிலுள்ளவருக்கு வழங்குவது என்பது போல் சிறிய வேறுபாடுகள் உள்ளன. சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். இதெல்லாம் அநியாயம், என்று என்னைத் திட்ட விரும்புபவர்கள் நியூ யார்க் டைம்ஸ் புதிராசிரிரையும் சேர்த்துத் திட்டவும். அங்கே கையாண்ட அதே உத்தியைத்தான் தமிழில் பயன்படுத்தியுள்ளேன்.   இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

விடை 4299

   நேற்று காலை வெளியான வெடி குதிரையிடம் குறுகி முன்னே பசு, நந்தி இருக்குமிடம்   (4) அதற்கான விடை : ஆலயம் = ஆ + லாயம் ‍‍---> ஆ+லயம் லாயம் (குதிரைகள் இருக்கின்ற இடம்),  குறுக 'லயம்'. ஆலயம் = நந்தி இருக்கின்ற இடம் (ஏன் பெருமாள் கோயிலில் நந்தி இருக்காதே, அது ஆலயமாகாதா என்று வாதிட விரும்புவர்கள் என்னை விட்டுவிட்டு இளையராஜாவின் திவ்ய பாசுரம் இசை வெளியீட்டுக்கு கிருஷ்ணகான சபாவுக்குச் செல்லுங்கள்)   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4299

    உதிரிவெடி 4299 (ஜூ ன் 23 , 2024) வாஞ்சிநாதன் ************************ குதிரையிடம் குறுகி முன்னே பசு, நந்தி இருக்குமிடம் (4)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்   நேற்றைய திரிவெடிக்கு 10 விடைகள் வந்துள்ளன. இதில் ஜோசப் அமிர்தராஜ், ராம்கி கிருஷ்ணன், அருள் (முத‌ல் விடை) இவர்களின் விடைகள்  சரியானவை. இன்னும் ஒரு நாள் முயலுங்கள்.  

Krypton 433

    Krypton 433 (23rd June, 2024)  ****************** An animal with unknown information vital to life (6) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

திரிவெடி 13

  திரிவெடி 13 (22/06/2024)   வாஞ்சிநாதன்     இன்றைய திரிவெடியில் ஆறு சொற்கள் உள்ளன. இதில் விலக்க வேண்டிய இரண்டு சொற்களில் ஒன்றை நானே சொல்லிவிடுகிறேன். இது வெறும் சொல் விளையாட்டுதான், பொது அறிவுச் சோதனை இவ்வாரப் புதிரில் இல்லை. தாகத்தால் ஈரமான அளிந்த சோற்றை  உண்ணும் கொடுமை. சும்மா,  எனக்கு ஒரு பொழுது போக்கிற்காக ஒரு வாக்கிய வடிவில் எழுதியுள்ளேன். வழக்கமான சொற்பட்டியல் வடிவில் (மேலேயிருப்பதில் ஒரு சொல்லை நீக்கிய பின்) ஐந்து சொற்கள் இதோ: ஈரம், தாகம், சோறு, கொடுமை, அளிதல் இதில் ஒரு சொல்லை விலக்கி மீதமுள்ள நான்கு சொற்களை இணைக்கும் திரி எது என்று கண்டுபிடியுங்கள். இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

விடை 4298

 நேற்றைய வெடி: தெய்வத்தின் முன் கம்பின் முனை சீவி  ஒரு தானியத்தில் கல்லைப் புரட்டுவது (5) அதற்கான விடை:  நெம்புகோல் = நெல் + கம்பு-க + கோ நெல் = ஒரு தானியம் கோ = தெய்வம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

திரிவெடி 12 விடைகள்

   நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள்: நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல் விடைகள் இம்முறையும் வேறு சில கோணங்களில் வந்துள்ளன. நான் அமைத்தபோது கொண்ட க‌ருத்தின்படி சேராதது, அயோத்தி . மற்ற சொற்கள் எல்லாவற்றையும் ஐந்தில் ஒன்று என்று அறியலாம். நகுலன், பஞ்சபாண்டவரில் ஒருவன். பிரான்ஸ, ஐ.நா. சபையின் ஐந்து வல்லரசு நாடுகளில் ஒன்று. நெருப்பு, பஞ்சபூதங்களில் ஒன்று. மோதிரவிரல், ஐந்து விரல்களில் ஒன்று. அருள், அகிலா ஸ்ரீதரன், எஸ் பார்த்தசாரதி இவர்கள் மூவரும் ஒருபடி மேலே சென்று இச்சொற்கள் ஐந்தில் நான்காவது இடத்தில் வருபவை என்கிறார்கள். அது உண்மையென்றால், நன்றி! பஞ்சபூதத்தின் வரிசையும் கால்பந்தாட்ட அணிகளின் வரிசையும்  இன்றுவரை நான் அறியாதவை. விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

Solution to Krypton 432

 Yesterday's clue Thing could be the alternative to an initial aversion (7) Solution: ARTICLE = thing.  Article (in grammar) could be "the", alternatively "an" , or the first letter of aversion("a") Visit this page to see all the solutions received.

உதிரிவெடி 4298

   உதிரிவெடி 4298 ( ஜூன் 16, 2024) வாஞ்சிநாதன் *************************   தெய்வத்தின் முன் கம்பின் முனை சீவி  ஒரு தானியத்தில் கல்லைப் புரட்டுவது (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் . உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்   திரிவெடிக்கு இது வரை ஆறுவிடைகள் வந்துள்ளன. விடைகள் ஆறாய்ப் பெருகியோட நாளை காலை வரை அவகாசம் இருக்கிறது.  முயலுங்கள்.

Krypton 432

  Krypton 432 (16th  June 2024)  ******************   Thing could be the alternative to an initial aversion (7) SOLUTION will appear tomorrow morning. Click here and find the form to fill in your solution

திரிவெடி 12

  திரிவெடி 12 (15/06/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?    நகுலன், அயோத்தி, பிரான்ஸ், நெருப்பு, மோதிரவிரல்  உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்

விடை 4297

   நேற்று காலை வெளியான வெடி நிலை புரண்டு வர வருடத்தின் கடைசி ஞாயிறு (5) அதற்கான விடை : கதிரவன் = கதி + ரவ + ன் கதி = நிலை ரவ = புரண்டு வர‌ ன் = வருடத்தின் கடைசி கதிரவன் = ஞாயிறு   இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4297

    உதிரிவெடி 4297 (ஜூ ன் 9 , 2024) வாஞ்சிநாதன் ************************ நிலை புரண்டு வர வருடத்தின் கடைசி ஞாயிறு (5)   விடைகள் நாளை காலை வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Krypton 431

    Krypton 431 (9th June, 2024)  ****************** Superficial type to ooze out  (4-4) SOLUTION will appear on Monday morning Click here and find the form to fill in your solution

திரிவெடி 11 விடைகள்

  நேற்றைய திரிவெடியில் இடம் பெற்ற‌ சொற்கள்:  மின்விசிறி, அலைபேசி, துடுப்பு, தீப்பெட்டி, எழுதுகோல்   மின்விசிறியைத் தவிர மற்றவையெல்லாம் கையால் தொட்டு உபயோகிக்க‌ப்படுபவை, இதுதான் நான் எண்ணியது. இதைத் தவிர வந்த மற்ற சில விடைகளும் பொருந்தி வருகின்றன. முத்துசுப்ரமணியம், அலைபேசி இயங்கும்போது  அசைவில்லை என்று பௌதிகக் காரணத்தைக் கூறுகிறார். அம்பிகா துடுப்பு மட்டும் பரவலாக வீடுகளில் இருப்பதில்லை என்கிறார். அருள், பானுமதி, பத்மா, ஸ‌ந்தியா இவர்கள் பஞ்சபூதத்தைக் குறிப்பிட்டு எழுதுகோல்தான் தனித்திருக்கிறது என்கிறார்கள். ஜோசப் அமிர்தராஜ், அனிதா இருவரும் துடுப்பு மட்டும் ஒற்றைச் சொல்லாக இருக்கிறது மற்றவை அலை+பேசி, எழுது+கோல், .... என்று பிரிபடுகின்றன  என்கிறார்கள். பலவிதமான கோணங்களில் வரும் பொருத்தமான விடைகளைப் பார்ப்பது ஒரு சுவாரசியம்தான்.     இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

திரிவெடி11

  திரிவெடி11 (08/06/2024)   வாஞ்சிநாதன்       இதில்  ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றில்   நான்கு சொற்களுக்கு ஒரு  தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும்  அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை.   குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு  இருக்கலாம். அல்லது பொது  அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம்.   இன்றைய திரிவெடி:  மின்விசிறி, அலைபேசி, துடுப்பு, தீப்பெட்டி, எழுதுகோல்   இங்கே சொடுக்கினால்    வரும் படிவத்தில்  உங்கள் விடையை இடவும்.

திரிவெடி 10 விடைகள்

 நேற்று அளிக்கப்பட்ட ஐந்து சொற்கள். கொலுசு, கிரகம், பௌர்ணமி, கிழமை, விழா  வெள்ளியோடு 4 நான்கு சொற்கள் சேரும்: வெள்ளிக் கொலுசு, வெள்ளி கிரகம், வெள்ளிக் கிழமை, வெள்ளி விழா; ஆனால் பௌர்ணமியைச் சேர்ப்பதில்லை. வெள்ளி நிலா இருக்கிறது, வெள்ளி பௌர்ணமி என்று புழக்கத்தில் இல்லை. (இது நியூ யார்க் டைம்ஸ் புதிரில் கையாளப்படும் உத்தி, தமிழிலும் அது போல் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது கிடைத்தது). விடையளித்தோர் விவரத்தைக் காண  இங்கே சொடுக்கவும்.

விடை 4296

நேற்றைய வெடி: படி விழாத் தலைவர் சென்றபின் சூழ்ந்து செய் (4) அதற்கான விடை: ஆழாக்கு = ஆக்கு + ழா ஆக்கு = செய் ழா = விழாத் தலைவர் படி = (தானியங்களை அளக்கப் பயன்படும்) ஆழாக்கு இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். <b

Krypton 430

Krypton 430 (2nd June 2024)  ******************     Beaten repeatedly to treat disorder in bed (8) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4296

 உதிரிவெடி 4296 ( ஜூன் 2, 2024) வாஞ்சிநாதன் ************************* நேற்றைய திரிவெடிக்கு பத்து விடைகள்தான் வந்துள்ளன. எனவே விடாது விழா, இன்றும் வந்து ஆட்டுகிறது.   படி விழாத் தலைவர் சென்றபின் சூழ்ந்து செய்  (4)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

திரிவெடி 10

    திரிவெடி 10 (01/06/2024)   வாஞ்சிநாதன்     பின்வரும் ஐந்து சொற்களில் எந்த நான்கு தொடர்புடையவை? எது மற்ற‌வற்றுடன் சேராதது?   கொலுசு, கிரகம், பௌர்ணமி, கிழமை, விழா உங்கள் விடையயை அளிக்க இங்கே சொடுக்க எழும்பும் படிவத்தில் நிரப்பவும்.    விடை தாமதமாக திங்கட்கிழமை வெளியிடப்படும்