திரு எஸ். பார்த்தசாரதி ("அபாகு") இம்மாதம் "குறுக்கும் நெடுக்கும்" என்ற தலைப்பில் புதிர்களை அறிமுகப்படுத்தும் நூலொன்று எழுதி வெளியிட்டுள்ளார். இதன் வரலாற்றை ஆங்கிலப் புதிர்களில் தொடங்கி விவரித்து எழுதியுள்ளார். எனக்கு அதில் நிறைவை அளிக்கும் விஷயத்தை ஞாபகமாகச் செய்திருக்கிறார்: தமிழில் அடியேனை புதிரை ஆரம்பித்து வைத்தவன் என்று கூறிவருகின்றனர். தொடர்ந்து வருடக்கணக்காக புதிர்களை தென்றல் மாத இதழிலும் அதற்கு முன்பே வாரமொருமுறை சென்னை ஆன்லை நிறுவனத்தாரின் ஆறாம்திணை இதழிலும் நான் புதிர்களை வெளியிட்டதால் அப்படிப் பலரும் எண்ண இடமிருக்கிறது. ஆனாலும் அது சரியில்லை. அதை நானொருமுறை மறுத்து, என் ஒரே ஒருவனுக்காக சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராய் பணியாற்றிய டாக்டர் கி பாலசுப்ரமணியன் 1985 இல் எழுதி அமைத்ததை (அச்சில் வெளியாகாதது) இணையத்தில் வெளியிட்டேன். அத்தகவலையும், அப்புதிரையும் இந்நூலில் சேர்த்ததில் எனக்கு மகிழ்ச்சி.
புதிர் வரலாற்றைச் சொல்வதோடு அமையாமல் குறுக்கெழுத்துப் புதிருக்குப் புதிதாக வருபவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் விதமாகவும் பார்த்தசாரதி எழுதியுள்ளார். "முள்ளும் மலரும்" என்ற விடை வருமாறு குறுக்கெழுத்துப் புதிர் எப்படி அமைப்பார்கள், டம்ப் ஷராட் (dumb charade) விளையாட்டில் எப்படிச் செய்வார்கள் என்று வேறுபடுத்திக் காட்டியதும் சிறப்பு (ஆசிரியனாக இருக்கும் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எப்படி என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது). முழுவதும் இந்த புத்தகத்தை 2023 முடிவதற்குள் படித்து விடுவேன். இதை வெளியிட்டவர்கள் ஜெயா பப்ளிகேஷன். மின்னஞ்சல் முகவரி reachjayapublications@gmail.com.
இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
Comments
I was forunate to attend that meeting. My best wishes to Shri Partha sarathi AVL
V.R. Balakrishnan
This year, I have also written a book in English on Cryptic crosswords. For those interested in buying the book(s) the link is
https://sparthasarathy.biz/buymycwbooks.html
Thanks again, Vanchi sir
Parthasarathy