Skip to main content

விடை 4158

இன்று காலை வெளியான வெடி:
ஒரு குறிஞ்சி நகர் ஏற்றது பாதி முல்லைப் பகுதி (4)
அதற்கான விடை: ஏற்காடு = ஏற் + காடு
ஏற் = பாதி "ஏற்றது"
காடு = முல்லை நிலப்பகுதி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into உதிரிவெடி 4158!*
*************************
சங்ககால பாடல்கள் மக்கள் வாழ்ந்த நிலங்கள்,வாழும்முறை என்பதற்கு ஏற்ப திணைகளாக வகுத்து பாடல்கள் இயற்றினார்..

*குறிஞ்சி* - மலையும் மலை சார்ந்த இடமும்.. குன்று - குறிஞ்சி..

*முல்லை* - காடும் காடு சார்ந்த இடமும்.. -முன்பு வந்தது - முன்நிலம் - முல்லை. மக்கள் மலைகளிலிருந்து முதலில் காடுகளுக்குத்தான் குடியேறினர்.

*நெய்தல்* - கடலும் கடல் சார்ந்த இடமும். பாய்மரக்கப்பலுக்கு பாய்த்துணி நெசவு செய்ததால் நெய்தலிடம் நெய்தல் என்றானது..

*மருதம்* - வயலும் வயல் சார்ந்த நிலமும்.. காடுகளியிருந்ததை மனிதர்கள் மாற்றி வயல்களாக அமைத்தது.. மருவிய நிலம் - மருதம்.

*பாலை* . - பாலைவனம் என்பார்கள் எனினும் பயன்படுத்தாது பாழானதை பாலை எனலாம்.. அதன் பொருட்டே பாழான வனம். அதாவது காடுவறண்டு மணலண்டிப்போனதால் பாலை வனம் என்று வந்திருக்கலாம்.
******************
_ஒரு குறிஞ்சி நகர் ஏற்றது பாதி முல்லைப் பகுதி (4)_ 

_ஏற்றது பாதி_
= *ஏற்[றது]*
= *ஏற்*

_முல்லைப் பகுதி_
= *காடு*

_ஒரு குறிஞ்சி நகர்_
= *ஏற்+காடு*
= *ஏற்காடு*
******************
*ஏற்காடு* என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது.
இதை  *ஏழைகளின் ஊட்டி* என்றும் அழைப்பார்கள்.

ஏற்காடு என்ற பெயர்
 பின் வரும் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து 
வந்தது.
அதாவது ‘ *ஏரி* ’ மற்றும் ‘ *காடு* ’ என்ற இரண்டு சொற்கள்  *ஏற்காடு* என்று பெயர் வரகாரணமாயிற்று
*ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது.*
******************
*துக்கடா*

_மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’_

தமிழகத்தில் காணக்கிடைக்கும் மலர்களில் முதன்மையானதாகவும், அரிய மலராகவும் கருதப்படுவது குறிஞ்சி மலர்.

12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் கூட நமது மாநிலத்தில் உள்ள கொடைக்கானலிலும், நீலகிரியிலும் பூத்துக் குலுங்குகின்றன.
உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் பார்த்து ரசிக்க விரும்பும் இந்த மலர், மேற்கண்ட மலைப்பிரதேசங்களில் ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த போர்வையென இதழ் விரித்து மலர்ந்து பார்ப்போரை கவர்ந்திழுக்கின்றன; வியக்க வைக்கின்றன என்றால் அது மிகை இல்லை.
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்