Skip to main content

விடை 4102

இன்று காலை வெளியான வெடி:
பன்னிரண்டு ஊனமுற்றோரை நகரச் செய்வது சக்கரங்களின்றி நகரும் (3)
அதற்கான விடை: கலம்
ஊனமுற்றோரை நகரச் செய்வது = மரக்கால் ;
பன்னிரண்டு மரக்கால் = ஒரு கலம் (அரை மூட்டை)
கலம் = கப்பல் (சக்கரங்களின்றி நகரும்)
இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகள் 5 மட்டுமே:

8/30/2020 7:39:34 மீனாக்ஷி ஓரடி பன்னிரண்டு=ஓரடி
8/30/2020 7:44:43 மீ கண்ணன் காலம் சக்கரங்களின்றி நகர்வது காலம் 12 மாதங்களை நகரச்செய்வது காலச்சக்கரம்
8/30/2020 11:18:17 அகிலா ஸ்ரீ தரன் பரடு பன்னிரண்டு - ன், னி, ண். சக்கரம் போல் சுழியுள்ள எழுத்துகள்
8/30/2020 11:20:52 பானுமதி நேரம் 12 மணி (முள்) நகர செய்வது
8/30/2020 19:14:42 Nagarajan Appichigounder வண்டி சக்கரவண்டி- சக்கர

Comments

Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*
( 31-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தலையின்றி மனது கத்த மயங்கி பாரமேறியது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 31-08-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_வலிகள் *கனத்தது* இதயம் தாங்கிக் கொண்டது_

_கண்களால் இயலவில்லை_

_நீர் துளிகளாக சிந்திவிட்டது!!!!_

- பிரியா_சம்பந்தம்
**********************
_தலையின்றி மனது கத்த மயங்கி பாரமேறியது (5)_

_தலையின்றி மனது_
= *[ம]னது = னது*

_மயங்கி_ = anagram for *கத்த + னது*
= *கனத்தது*

= _பாரமேறியது_
**********************

_இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டு_

_இதயத்தை வருடியபடி_ _இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்_

_இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லை_

_அதனால்தான்_ _அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்_

_இதுவெல்லாம் நேற்று_ ...

_இன்றோ..?_  

_இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாக_

_இதயத்தைத் தூக்கியெறிந்து_ _இப்படியும் கேட்கின்றாய்?_

_இதற்கெல்லாம் பதில் சொல்ல இதயத்தில் இடமில்லை.._

_அலை அலையாய்க் கேள்விக் கணைகள்_

_வரிசைகட்டி வந்தாலும் அசராமல் பதில் சொல்வேன்..._

_அந்தோ..._

_அலைவரிசைக் கேள்வி கேட்டு அதிரவே செய்கின்றாய்..._

_இதயம் இழந்து நீ கேட்பதனால்,_

_என்_
_இதயம் *கனத்ததுவே!*_

_நெஞ்சம்_ _நனைத்ததுவே!_

_நெஞ்சம்_ _நனைத்ததுவே!_

('தினமணி' இணையப் பதிப்பு - )
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[8/31, 07:05] akila sridharan: கனத்தது

[8/31, 07:05] Suba: Hello sir , கனத்தது

[8/31, 07:05] prasath venugopal: கனத்தது

[8/31, 07:05] Ramarao திரைக்கதம்பம்: கனத்தது

[8/31, 07:06] sridharan: கனத்தது

[8/31, 07:06] balagopal: Good morning sir.விடை. கனமானது.

[8/31, 07:08] sathish: கனத்தது

[8/31, 07:08] Meenakshi: விடை;கனத்தது

[8/31, 07:11] N T Nathan: கனத்தது

[8/31, 07:11] Viji - Kovai: 31.8.20 விடை
கனத்தது

[8/31, 07:18] A D வேதாந்தம்: விடை= கனத்தது/ வேதாந்தம்

[8/31, 07:19] பாலூ மீ.: விடை: கனத்தது.

[8/31, 07:21] மீ.கண்ணண்.: கனத்தது

[8/31, 07:22] Bharathi: கனத்தது

[8/31, 07:26] chithanandam: கனத்தது

[8/31, 07:27] sankara subramaiam: கனத்தது
[
[8/31, 07:30] குன்னூர் லக்ஷ்மிமணியன்: இன்றைய விடை:கனத்தது.
லக்ஷ்மிமணியன்.குன்னூர்.

[8/31, 07:43] usha ( உ.வெ.): கனத்தது

[8/31, 07:56] Ramki Krishnan: Ganaththathu

[8/31, 08:01] nagarajan: *கனத்தது*

[8/31, 07:07] V N Krishnan.: கனத்தது

[8/31, 08:06] Srikrupa: கனத்தது

[8/31, 08:20] கு.கனகசபாபதி, மும்பை: கனத்தது

[8/31, 08:27] மாலதி: கனத்தது

[8/31, 08:30] பானுமதி: கனத்தது

[8/31, 08:40] Dr. Ramakrishna Easwaran: *கனத்தது*

[8/31, 08:53] வானதி: கனத்தது.

[8/31, 09:02] siddhan submn: கனத்தது

[8/31, 09:45]கி.பா -------------கனத்தது

[8/31, 10:01] ஆர். நாராயணன்.: கனத்தது

[8/31, 11:27] balakrishnan: கனத்தது☝️🤣🙏

[8/31, 15:19] Sucharithra: கனத்தது

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
குடும்பம் நடத்த தேவையானது எதிர்காலத்தில் விஜயம் நிச்சயம் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*எப்போது வருவாய் நீ*

என் கண்ணின் கருவிழிக்குள் 
கண்ணொளியாய் இருந்தாயடி 
என் நாவில் சுவை மொட்டுக்கு 
கரும்பாய் இனித்தாயடி.. 

என் இதயத்தை 
இனிக்கவே செய்தாயடி 
என் உயிருக்கு 
சுவாசமாய் இருந்தாயடி.. 

என் வாழ்வின் வெளிச்சமும் 
நீ தானடி 
எனக்கு மனைவியாய் 
*எப்போது வருவாயடி..*

எழுதியவர் : அ. மன்சூர் 
**********************
_நீ *வருவாய்* என நான் இருந்தேன்_
_ஏன் மறந்தாய் என நான் அறியேன்_
_கண்கள் உறங்கவில்லை_ _இமைகள் தழுவவில்லை_
_கவிதை எழுத ஒரு வரியும்_
_கிடைக்கவில்லை_
_அமைதி இழந்த மனம் எதையும்_ _நினைக்கவில்லை வாராயோ..._

_நீ *வருவாய்* என நான் இருந்தேன்_
_ஏன் மறந்தாய் என நான் அறியேன்_

படம்: சுஜாதா (1980)
**********************
_குடும்பம் நடத்த தேவையானது எதிர்காலத்தில் விஜயம் நிச்சயம் (4)_

_குடும்பம் நடத்த தேவையானது_

= *வருவாய்*

= _எதிர்காலத்தில் விஜயம் நிச்சயம்_
********************** _மகாகவி பாரதியார்._

_வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !_

_உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா !_
_உயிரின் னமுதாய்ப் பொழிவாய் - கண்ணா !_
_கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா !_
_கமலத்திருவோ டிணைவாய் - கண்ணா !_

_இணைவாய் எனதா வியிலே - கண்ணா !_
_இதயத் தினிலே யமர்வாய் - கண்ணா !_
_கணைவா யசுரர் தலைகள் - சிதறக்_
_கடையூ ழியிலே படையோ டெழுவாய் !_

_எழுவாய் கடல்மீ தினிலே - எழுமோர்_
_இரவிக் கினியா உளமீ தினிலே_
_தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா !_
_துணையே, அமரர் தொழும்வா னவனே !_

_வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !_
*மகாகவி பாரதியார்.*
**********************
*கணபதியே வருவாய், அருள்வாய்*

கணபதியே வருவாய்,அருள்வாய்
கணபதியே வருவாய்

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசையென்தன் நாவினில் உதிக்க

கணபதியே வருவாய்
**********************
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[9/1, 07:07] Sucharithra: வருவாய்

[9/1, 07:09] Meenakshi: விடை:வருவாய்
[
[9/1, 07:12] Ramarao திரைக்கதம்பம்: வருவாய்

[9/1, 07:14] sankara subramaiam: வருவாய்
[
[9/1, 07:31] prasath venugopal: வருவாய்

[9/1, 07:43] கு.கனகசபாபதி, மும்பை: வருவாய்

[9/1, 08:03] ஆர். நாராயணன்.: வருவாய்

[9/1, 08:26] Viji - Kovai: 1.9.20 விடை
வருவாய்

[9/1, 08:29] nagarajan: *வருவாய்*

[9/1, 09:08] மாலதி: வருவாய்

[9/1, 09:26] balakrishnan: வருவாய்🙏

[9/1, 10:45] sathish: வருவாய்

[9/1, 15:27] Dr. Ramakrishna Easwaran: Uthirivedi 1.9.20
வடை: *வருவாய்*
: Sorry, typo, விடை

[9/1, 16:10] balagopal: வருவாய்.

[9/1, 17:29] akila sridharan: வருவாய்

************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
வில் கழிய வேறுபட்ட மீனாட்சி (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா 
மார்பு துடிக்குதடி 
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல் 
பாவை தெரியுது அடி 

*என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு* 

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு 
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு 

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு 
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு 

(இளமை ஊஞ்சல் ஆடுகிறது)
**********************
*கயல்விழி,* 
பெயர்ச்சொல்.
பெண்களின் கண்களை வருணிக்கும் சொல்

விளக்கம்

கயல் என்றால் மீன்...விழி என்றால் கண்... ஆக கண்கள் மீன்களைப் போன்று தோற்றத்தில் அழகாக இருக்கின்றன என்பதைச் சொல்ல கயல்விழி என்பர்...பெண்களின் கண்களை வருணிக்கப் பயன்படும் ஒரு சொல்...மீனாட்சி, மீனலோசனி என்னும் சொற்களின் பொருளும் இதுவே... மீனின் கண்கள் என்று பொருள் அல்ல...
**********************
_வில் கழிய வேறுபட்ட மீனாட்சி (5)_

_வேறுபட்ட_ = _anagram indicator for வில் கழிய_

= *கயல்விழி*

= _மீனாட்சி_

**********************
*கயல்விழி* காரிகையே
காவியத்தின் நாயகியே
மயில் கொடுத்த கழுத்தினிலே
மயங்க வைக்கும் பேரழகே
ஒயிலான இடை அசைய
ஓவியமாய் வந்தவளே
பறை அறியா நடை நடந்து
தென்றலென மிதப்பவளே

நான் நல்ல ரசிகன் நீ நல்ல ரசிகை

திரைப்படம்: தேன் சிட்டுக்கள்
**********************
*மதுரை மீனாட்சி*

அமுதாய் தமிழ் பூத்து 
மல்லிகை மகிழ்ந்து வகமாடிய 
மதுரையில் தேனாய் தவழும் 
வைகையில் குளித்தெழுந்த ஞாயிறினும் 
அழகருள் தெளிக்கும் ஒளியாய் 
உந்தன் *கயல்விழி*

(பாபு காந்தி)
**********************
*மீனாட்சி* - மீன் போன்ற விழிகளைக் கொண்டவள். தூங்காத உயிரினம் மீன்.  சக்தியின் ரூபமான மீனாட்சி தன் விழிகளை மூடினால் அண்ட சராசரங்களும் அழிந்து போகும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதால் அம்மன் விழிகளை மூடாமலே நின்ற கோலத்தில் அருட் பாலிக்கிறாள். மீனாட்சி அம்மன் தூங்காமல் இருப்பதால் தான். மதுரை நகர மக்களும், இரவு - பகல் பாராமல் உழைக்கின்றனர். ஆகவே தான் மதுரை தூங்கா நகரம் என்றழைக்கப்படுகிறது. ************************💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[9/2, 07:38] Ramarao திரைக்கதம்பம்: கயல்விழி

[9/2, 07:41]கி.பா ----------------கயல்விழி

[9/2, 07:41] prasath venugopal: கயல்விழி

[9/2, 07:43] Sucharithra: கயல்விழி

[9/2, 07:44] sankara subramaiam: கயல்விழி

[9/2, 07:45] குன்னூர் லக்ஷ்மிமணியன்: கயல்விழி.

[9/2, 07:46] V N Krishnan.: கயல்விழி

[9/2, 07:47] மீ.கண்ணண்.: கயல்விழி

[9/2, 07:47] Meenakshi: விடை: கயல்விழி

[9/2, 07:52] balakrishnan: கயல்விழி 🙏

[9/2, 07:56] balagopal: Good morning sir.விடை. கயல்விழி.

[9/2, 07:57] nagarajan: *கயல்விழி*

[9/2, 07:45] Dr. Ramakrishna Easwaran: *கயல்விழி*

[9/2, 08:04] chithanandam: கயல்விழி

[9/2, 08:19] பாலூ மீ.: கயல்விழி

[9/2, 08:24] sridharan: கயல்விழி

[9/2, 08:24] Viji - Kovai: 2.9.20 விடை கயல்விழி

[9/2, 08:37] ஆர். நாராயணன்.: கயல்விழி

[9/2, 08:44] மாலதி: கயல்விழி

[9/2, 08:47] வானதி: கயல்விழி

[9/2, 08:47] Srikrupa: கயல்விழி

[9/2, 08:50] Ramki Krishnan: Kayalvizhi

[9/2, 09:00] siddhan submn: கயல்விழி

[9/2, 10:25] கு.கனகசபாபதி, மும்பை: கயல்விழி

[9/2, 10:26] பானுமதி: கயல்விழி

[9/2, 11:35] shanthi narayanan: கயல்விழி

[9/2, 12:03] akila sridharan: கயல்விழி

[9/2, 12:30] N T Nathan: கயல்விழி
🙏🏽
[9/2, 21:00] Venkat UV: கயல்விழி 🙏🏽
***********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சும்மா மெல்வதற்குள் சொச்சம் பாதி வைத்த கெட்ட பெயர் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு *அவல்* கிடைச்சதுபோல ._

பழமொழி
**********************
*அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி.* மிதமான உணவு வகைகளை செய்ய ஏற்றது. அரிசியில் இருந்து உருவாகும் அவல் தினசரி பயன்பாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

அவசரமான சூழலில் பசியை போக்கக் கூடிய அவல் சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இந்தியாவிலும் தமிழகத்திலும் கிடைக்கின்ற அவல் சமைக்கப்படாத உணவாக இறைவனுக்கு படைக்கப்படும் உணவு பொருளாக உள்ளது. எந்தவித பண்டிகைகளிலும் அவல், கடலை, வெல்லம் பிரதான இடம் பிடிக்கும். கிருஷ்ணருக்கு குசேலன் கொடுத்தது அவல் தான்.
**********************
_சும்மா மெல்வதற்குள் சொச்சம் பாதி வைத்த கெட்ட பெயர் (5)_

_சும்மா மெல்வதற்குள்_
= *அவல்*

_சொச்சம் பாதி_
= *சொச்[சம்]*
= *சொச்*

_வைத்த_ = indicator for *அவல்+சொச்*
= *அவச்சொல்*

= _கெட்ட பெயர்_
***************** *_அவமானம்,அவச்சொல், வலி,கவலை_* *_இவைகளை உடைக்கும் போது சாதனை பிறக்கும்._*
*************************
_இரண்டு மனம் வேண்டும்..._ _இறைவனிடம் கேட்பேன்!_

இந்த ஆசையும் நமக்கு வேண்டாம்... இந்த வேண்டுதலும் வேண்டாம்! நினைக்க ஒரு மனம், மறக்க ஒரு மனம் என, அமைவது சாத்தியமில்லை. ஆனாலும்... நமக்கு எது சாத்தியமோ, எது ஒத்துவருமோ, எது நல்லதோ அதை வேண்டிக் கொள்ளலாம்; கனவு காணலாம்; அதை நடைமுறைப்படுத்த முயலலாம்.

பழைய கட்டு வீடுகளில் ஒரு வீடு என்றால் இரண்டு வாசல்கள் இருக்கும். முன்புறம், கொல்லைப்புறம் என்று. விருந்தினர், உறவினர், நண்பர்கள் எனவும்,பண்ணையாட்கள், வீட்டு வேலைஆட்கள் எனவும் வருவது ஒரே வாசலாக இருந்தாலும், சில மரியாதையின் நிமித்தம் காரணமாக, பின்புற வாசல் 
கண்டிப்பாக ஒரு வீட்டிற்கு அவசியம் என, நம் முன்னோர் திட்டமிட்டு தான், இரு வாசல்களை வைத்து வீடுகளை கட்டினர்.

இதே முறையை நம் மன எண்ணங்களுக்கு பொருத்தி பாருங்களேன்.
மனதை ஒரு வழிச் சாலை போல் நினைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. தேவையில்லாதவற்றை அப்படியே பின்புற வாசல் வழியாக வெளியில் அனுப்ப வேண்டியது, நம் முக்கிய கடமை.சங்கல்பம் எடுத்துக் கொள்வோம் ஓர் அவமானம், *அவச்சொல்,* தலைகுனிவு, தாழ்வு மனப்பான்மை இவை எவையும், நம் மனதில் குடியிருக்கவோ,
விருந்தாளியாக குதுாகலிக்கவோ இடமே கொடுக்கக் கூடாது.
_'ஏதோ தெரியாமல், மனதிற்குள் வரவேற்று விட்டேன்; உடனே ஓடி, வெளியில் போய் விடு; இல்லையென்றால், தொலைத்து விடுவேன்'_
என்று மிரட்ட தெரிந்திருக்கணும்.
வந்த வழியே திரும்ப வரும்போது, நம் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை, சந்தோஷங்களை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை இவை குழப்பி விடும். அடுத்த ஒன்றும் செய்ய முடியாமல், 'டிராபிக் ஜாம்' ஆகி நின்று விடுவோம். எதற்கு இந்த வீண் குழப்பம்? 
'இரண்டு வாசல்கள் உள்ள மனம் என்னுடையது. நல்லதையும், நல்லது அல்லாததையும் வரவேற்பது இயல்பு, இயற்கை. இதில் நல்லது அல்லாதவற்றை, வெளியில் அனுப்புவது என் கடமை' என
சங்கல்பம் எடுத்துக் கொள்வோம். இதை புரிந்து கொண்டால் மன குழப்பம், மன அழுத்தம், சோகம் போன்றவை நம்மை எதுவும் செய்ய இயலாது.

*வேதாத்ரி மகரிஷி*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[9/3, 07:01] Ramarao திரைக்கதம்பம்: அவச்சொல்

[9/3, 07:07] sankara subramaiam: அவச்சொல்

[9/3, 07:11] chithanandam: அவச்சொல்

[9/3, 07:17] பாலூ மீ.: அவல் + பாதி சொச்சம் = சொச் = அவச்சொல்

[9/3, 07:19] மீ.கண்ணண்.: அவச்சொல்

[9/3, 07:25] கு.கனகசபாபதி, மும்பை: அவச்சொல்

[9/3, 07:30] Sucharithra: அவச்சொல்

[9/3, 07:31] Viji - Kovai: 3.9.20 விடை அவச்சொல்

[9/3, 07:31] Venkat UV: அவச்சொல் 🙏🏽

[9/3, 07:32] balagopal: Good morning sir. விடை. அவ(ச்சொ)ல்.

[9/3, 07:36] akila sridharan: அவச்சொல்

[9/3, 07:50] ஆர். நாராயணன்.: அவச்சொல்

[9/3, 07:51] balakrishnan: அவச்சொல் 🙏

[9/3, 08:08] nagarajan: *அவச்சொல்*

[9/3, 08:17] Ramki Krishnan: அவச்சொல்

[9/3, 08:33] Meenakshi: இன்றையவிடை;அவச்சொல்.

[9/3, 08:41] கி.பா ****************அவச்சொல்

[9/3, 09:28] மாலதி: அவச்சொல்

[9/3, 09:28] siddhan submn: அவல் + சொச் (கலங்கி) - அவச்சொல்

[9/3, 10:02] Dr. Ramakrishna Easwaran: *அவச்சொல்*

[9/3, 10:23] வானதி: அவச்சொல்

[9/3, 10:48] Srikrupa: அவச்சொல்

***********************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
.பொருத்தமாகக் காஞ்சி இரண்டாவது உடலின்றி
மாய்ந்த குழப்பம் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*காஞ்சிபுரம்* ஏகாம்பரநாதர் கோயில்பழைய சமய நூல்களில் *திருக்கச்சியேகம்பம்* எனக் குறிப்பிடப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 
**********************
*பொருத்தமாகக் காஞ்சி இரண்டாவது உடலின்றி மாய்ந்த குழப்பம் (6)*
**********************
Explanation for answer to இன்றைய உதிரிவெடி! received this morning
[9/4, 07:24] from
*Dr. Ramakrishna Easwaran:*
👇
விடை:-
*கச்சிதமாய்*
_காஞ்சி_ = *கச்சி*
_உடல்_ = மெய்
_உடலின்றி_ = மெய்யெழுத்து நீக்கும் குறியீடு
_மாய்ந்த_ என்பதில் 2வது மெய்= ந்
_மாய்ந்த_ --> *மாய்த*
_குழப்பம்_: எழுத்துகளை மாற்றி அமைக்கச் சொல்லும் குறியீடு
(கச்சி+மாய்த)* = *கச்சிதமாய்*
பொருள்= பொருத்தமாக
**********************
*தண்டியலங்காரத்தின்* _மேற்கோள் செய்யுளொன்று கடலைக்காட்டிலும் *கச்சிக்குப்* பெருமை உண்டென்று குறிப்பிடுகின்றது._
எவ்வாறு ?
காஞ்சியில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும்
கடலில் கிடைக்க மாட்டா; ஆனால் கடல்படு பொருள்கள் எல்லாம் காஞ்சியில் கிடைக்குமாம்.'
இவ்வாறு கூறுகின்றார் தண்டியாசிரியர்,

_மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்_ 
__ஒலியும் பெருமையும் ஒக்கும் -_

__மலிதேரான் கச்சி படுவ கடல்படா;_
_கச்சி  கடல்படுவ எல்லாம் படும்._

    (மலிதேரான் - தேர்மிகுந்த பல்லவமன்னன் ;
கச்சி - 
காஞ்சிபுரம் ; 
மா - பெரிய ; 
படுவ - இருப்பவை ;
படா - இரா. 
படும் - இருக்கும்)

*பாடல் பொருள்:*

தேர்கள் நிறைந்த காஞ்சிபுரமும், பெருங்கடலும், 
ஓசையாலும், பெருமையினாலும் ஒத்தவை. 
ஆயினும், காஞ்சியில் உள்ள பொருள் அனைத்தும்
கடலில் இல்லை; கடலில் உள்ள அனைத்துப் 
பொருளும் காஞ்சியில் உண்டு.

    கடலையும் காஞ்சியையும் ஒப்பிட்டுக் காஞ்சியில் இருப்பன 
கடலில் இல்லை; கடலில் இருப்பன எல்லாம் காஞ்சியில் இருக்கும் 
எனக் காஞ்சியை உயர்த்தி வேற்றுமைப்படுத்திக் கூறுவதனால் இது 
வேற்றுமை அணி ஆகும். இங்கு வேற்றுமை வெளிப்படையாகவே 
கூறப்பட்டுள்ளது.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[9/4, 07:01] Ramarao திரைக்கதம்பம்: கச்சிதமாய்

[9/4, 07:08] sankara subramaiam: கச்சிதமாய்

[9/4, 07:10] chithanandam: கச்சிதமாய்

[9/4, 07:12] Bharathi: கச்சிதமாய்

[9/4, 07:27] nagarajan: *கச்சிதமாய்*

[9/4, 07:31] Meenakshi: விடை:கச்சிதமாய்.

[9/3, 10:02] Dr. Ramakrishna Easwaran: *அவச்சொல்*
[9/4, 07:24] Dr. Ramakrishna Easwaran: *கச்சிதமாய்*
_காஞ்சி_ = *கச்சி*
_உடல்_ = மெய்
_உடலின்றி_ = மெய்யெழுத்து நீக்கும் குறியீடு
_மாய்ந்த_ என்பதில் 2வது மெய்= ந்
_மாய்ந்த_ --> *மாய்த*
_குழப்பம்_: எழுத்துகளை மாற்றி அமைக்கச் சொல்லும் குறியீடு
(கச்சி+மாய்த)* = *கச்சிதமாய்*
பொருள்= பொருத்தமாக

[9/4, 08:19] பாலூ மீ.: கச்சிதமாய். மாய்ந்த without 2nd மெய்யெழுத்து ந் + கச்சி

[9/4, 08:31] கு.கனகசபாபதி, மும்பை: கச்சிதமாய்

[9/4, 08:39] V N Krishnan.: கச்சிதமாய்

[9/4, 08:47] வானதி: கச்சிதமாய்

[9/4, 08:50] Srikrupa: கச்சிதமாய்

[9/4, 08:51] balakrishnan: கச்சிதமாக. 😇

[9/4, 09:00] prasath venugopal: கச்சிதமாய்

[9/4, 09:05] Sucharithra: கச்சிதமாய்

[9/4, 09:33] ஆர். நாராயணன்.: கச்சிதமாய்

[9/4, 11:46] மாலதி: கச்சிதமாக

[9/4, 12:52] Viji - Kovai: 4.9.20 விடை கச்சிதமாக

[9/4, 14:23] கி.பா ^^^^^^^^ கச்சிதமாய்

[9/4, 15:46] balagopal: கச்சி தமாக.

[9/4, 16:28] N T Nathan: கச்சிதமாய்

[9/4, 18:19] siddhan submn: கச்சிதமாய்

[9/4, 19:30] மாலதி: கச்சிதமாய்

***********************
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

இதழும் புருவமும் இணையத் தோன்றியது வடு (4)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-09-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே_

_நாவினால் சுட்ட *வடு*_
குறள் எண்:129

பொழிப்பு (மு வரதராசன்): தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது
******************
*_சுடும் நினைவுகள்_*
தீயினால் சுட்ட புண் ஆறும் …ஆனால் ஆறாது நாவினால் சுட்ட வடு !
இது வள்ளுவன் வாக்கு !
நாவினால் சுட்ட *வடு* மட்டுமல்ல மறையாதது ….நம் மனசைத் தொட்ட,
சுட்ட, சில நினைவுகளும் அப்படித்தான் ..எப்போதும் நம்மை சுடும்
நினைவாக , ஒரு வடுவாக உருமாறும் !
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனையும் பல வேதனையும்
நம்மை சுடும்
புண்ணே என்றாலும் நம்மை புடம் போட்ட தங்கமாக
மாற்றும் மருந்தும் அந்த சுடு நினைவுதான் அல்லவா !
சுட்டல்தானே பொன் சிவக்கும் … நம் வாழ்வு சிறக்க ,செழிக்க
தேவை நமக்கு ஒரு சூடு சரியான சமயத்தில் !
அது இயற்கையின் நியதியும் கூட ! இந்த நியதியை
ஒரு விதியாக விதைப்பதில் இயற்கைக்கு என்றும் இல்லை ஒரு தயக்கம்!
ஆனால் நம்மால் பிறருக்கு வரும் சோதனையும், வேதனையும்
அவர் மனத்தை முதலில் சுட்டாலும் , கட்டாயம் அவர் மீள்வார்
அந்த கட்டம் தாண்டி ….தன் மனதில் சுட்ட புண்ணுடனும்
சுடு நினைவுடனும் …
இதுவும் அந்த இயற்கையின் நியதியே !
பிறிதொருவர் வாழ்வில் நாம் சுட்ட புண் நம் மனதில் ஒரு
ஆறாத , வடுவாக மாறி தினம் தினம் நம்மையே திருப்பி
சுட்டெரிக்கும் ஒரு சுடு நினைவாகும் என்பது மட்டும் உறுதி !
இது இயற்கையின் நீதி !
(Natarajan)
**********************
_இதழும் புருவமும் இணையத் தோன்றியது வடு (4)_

_இதழும் புருவமும் இணைய தோன்றியது_

= _[இ]தழும்பு[ருவமும்]_

= *தழும்பு*

= _வடு_
**********************
*_திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்_*

_திருவம்மானை_

நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை
*மாணிக்க வாசகர்* எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.

_பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்_

_பெண்சுமந்த பாகத்தன் பெம்மான்_ _பெருந்துறையான்_

_விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்_

_கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை_

_மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு_

_புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்._

*பொருள்*
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
= இறைவன் இசைக்கு இசைப்பவன். அவனை இசையாகவே ஆராதித்தவர்கள் பலர். பண் சுமந்த பாடல்களுக்கு அவன் பரிசு படைத்து அருளுவான்.

பெண்சுமந்த பாகத்தன் = அவன் பெண்ணை ஒரு புறம் சுமந்தவன்.

பெம்மான் பெருந்துறையான்
= பெருந்துறை என்னும் ஊரில் உறைபவன்

விண்சுமந்த கீர்த்தி
= வானளாவிய புகழ் கொண்டவன்

வியன்மண் டலத்தீசன்
= அனைத்து உலகங்களுக்கும் அவன் தலைவன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள்
= அவன் நெற்றியில் ஒரு கண் சுமந்தவன்

கலிமதுரை
= மதுரையில்

மண்சுமந்து
= மதுரை மண்ணை சுமந்து. மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்

கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
=கூலி கொண்டு. அந்த அரசனால் (கோ என்றால் அரசன்) முதுகில் பிரம்பால் அடி கொண்டு

புண்சுமந்த பொன்மேனி
= அதனால் *தழும்பு* உண்டாகி, அந்த *தழும்பை* சுமந்த பொன் போன்ற மேனியை

பாடுதுங்காண் அம்மானாய்.
= பாடுவோம்

அம்மானை என்பது பெண்கள் சின்ன சின்ன கற்களை வைத்து தூக்கி போட்டு பிடித்து விளையாடும் ஒரு விளையாட்டு
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்.
************************

[9/5, 07:01] sathish: தழும்பு

[9/5, 07:01] Ramarao திரைக்கதம்பம்: தழும்பு

[9/5, 07:01] V N Krishnan.: தழும்பு

[9/5, 07:02] A D வேதாந்தம்: விடை= தழும்பு/ வேதாந்தம்
.
[9/5, 07:02] Meenakshi: விடை:தழும்பு

[9/5, 07:03] stat senthil: தழும்பு

[9/5, 07:04] prasath venugopal: தழும்பு

[9/5, 07:04] Srikrupa: தழும்பு

[9/5, 07:06] மீ.கண்ணண்.: தழும்பு

[9/5, 07:09] பாலூ மீ.: தழும்பு.

[9/5, 07:14] balagopal: Good morning sir. விடை.தழும்பு.


[9/5, 07:29] Dr. Ramakrishna Easwaran: *தழும்பு*
இ *தழும் பு* ருவமும் என்ற சொற்களில் உட்பொதிந்துள்ளது (telescopic clue)

[9/5, 07:32] ஆர்.பத்மா: தழும்பு

[9/5, 07:34] Ramki Krishnan: தழும்பு

[9/5, 07:37] akila sridharan: தழும்பு

[9/5, 07:37] sankara subramaiam: தழும்பு

[9/5, 07:39]கி.பா ----------------தழும்பு

[9/5, 08:06] nagarajan: *தழும்பு*

[9/5, 08:11] மாலதி: தழும்பு

[9/5, 08:22] Sucharithra: தழும்பு

[9/5, 08:44] Viji - Kovai: 5.9.20 விடை தழும்பு

[9/5, 08:53] வானதி: தழும்பு

[9/5, 09:36] ஆர். நாராயணன்.: தழும்பு

[9/5, 07:45] chithanandam: தழும்பு

[9/5, 10:05] கு.கனகசபாபதி, மும்பை: தழும்பு

[9/5, 10:35] கோவிந்தராஜன் korea: தழும்பு

[9/5, 12:14] shanthi narayanan: தழும்பு
[9/5, 13:24] குன்னூர் லக்ஷ்மிமணியன்: புதிரின் விடை:தழும்பு லக்ஷ்மி மணியன். குன்னூர்.

[9/5, 17:38] N T Nathan: தழும்பு

[9/5, 17:56] siddhan submn: தழும்பு - hidden inside
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்