Skip to main content

விடை 4255

நேற்று காலை வெளியான வெடி:

பாவைக்குப் பாதுகாப்பு சுருங்கச் சுருக்கு (3)
இதற்கான விடை கண்ணி = கண்ணிமை ‍மை
கண்ணிமை = பாவைக்கு, அதாவது கண்ணின் மணிக்கு, பாதுகாப்பு தருவது
கண்ணி = கயிற்றாலான‌ சுருக்கு, பறவைகளைச் சிக்க வைப்ப‌தற்குப் பயன்படுத்துவது.
கச்சு என்ற சொல் ஒளிந்திருப்பதைக் கண்டு அதை விடையாகப் பலரும் அளிக்க முற்பட, புதிரின் முழுவீச்சையும் புரிந்து சரியான விடையைக் கண்ட அ.ஜோசப் அமிர்தராஜ், அருந்ததி, அருள், சுந்தர் வேதாந்தம், ரவி சுந்தரம், இந்த ஐவருக்கும் பாராட்டுகள்.
கண்ணி என்ற சொல்லின் இயல்பான பொருளை கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி என்ற இந்த கிராமியப்பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

balakrishnan said…
அருமையான அமைப்பு. இந்தவாரமும் விடைகாண இயலவில்லை. என்னை பொறுத்தவரையில் குறிப்புகளின் கனம் குறைவோ எனப்படுகின்றது. விடை அளித்த ஐவருக்கும் என் பாராட்டுகள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
Vanchinathan said…
"அருமையான அமைப்பு" என்றும் பின்னர் "கனம்குறறைவு" என்றும் கூறுகிறீர்கள் ??
கண்ணி என்றால் சுருககு என்று இதுவரை தெரியாது. கண்ணி வெடி = mine தெரியும். பாவைக்கு பாதுகாப்பு தாலி பெண்ணுக்கு வேலி மாதிரி போகாது என்று ஆழ்ந்த நம்பிக்கை ஆகவே பாவை = கண்மணி பாதுகாப்பு கண்ணிமை. கண்மை கணிமை கண்ணி இதில் ஒன்று சுருக்கு. நம்பிக்கையோடு கூகுள் மாமாவை கேட்டேன். அடிச்சேன் லக்கி ப்ரைஸ்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்