Skip to main content

Posts

Showing posts from February, 2021

Solution to Krypton 262

Today's clue: Toy fan circling around? Jesus Christ, it is dazzling! (10) Its solution: FLAMBOYANT = FAN + TOY + LAMB To learn that Lamb refers to Jesus Christ was bit confusing to me at the first time. Because having seen picturs of Jesus with a lamb in arms, and also seen that Good Shepherd refers to Jesus it took me a while to accept it. Possibly the innocence associated with lambs is the reason behind it I guess. Here is the page with the list of solvers.

விடை 4126

காலை வெளியான வெடி: அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4) அதற்கான விடை: உரிமம் = உரி + மம் உரி = தோலையெடு மம் = மறுத்தாலும் தோலைவை உரிமம் என்ற சொல் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்குள் வந்த சொல்லாக இருக்க வேண்டும். கல்கி காலத்து நாவல்களில் இதைப் படித்ததாக நினைவில்லை. உரிமை என்பதற்கும் உரிமம் என்பதற்கும் வேறுபாட்டைச் செய்தது மொழியை வளப்படுத்தியுள்ளது. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4126

உதிரிவெடி 4126 (பிப்ரவரி 28, 2021) வாஞ்சிநாதன் ************************* அனுமதி மறுத்தாலும் தோலைவைக்கும் முன்பே தோலையெடு (4) Loading…

விடை 4125

ஒரு விசேஷத்திற்காக வெகுதூரம் சென்று வீடு திரும்ப மிகவும் தாமதாகி விட்டதால் நேற்று வெளிவர வேண்டிய விடை இப்போது வெளியாகிறது . நேற்று காலை வெளியான வெடி: தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5) அதற்கான விடை: கட்டற்ற = கற்ற + ஓட்டம் - ஓம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 261

Attending a function far out of the city meant I could not return home in time to post the answer last night. So I am posting it now. Yesterday's clue: Fretful to lift the fretted instrument upwards in palpitation (8) Its solution: PETULANT = LUTE + PANT Here is the page with the list of solvers.

உதிரிவெடி 4125

உதிரிவெடி 4125 (பிப்ரவரி 21, 2021) வாஞ்சிநாதன் ************************* தளைகளில்லாத, படித்த, ஓட்டம் மந்திரமில்லாமல் வசப்படும் (5) Loading…

விடை 4124

இன்று காலை வெளியான வெடி: கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம் (5) அதற்கான விடை: கட்டணம் கொஞ்சம் கடன் = க; பாதி நட்டம் = ட்ட; முதல் மோசமான பணம் = ணம்; இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4124

உதிரிவெடி 4124 (பிப்ரவரி 14, 2021) வாஞ்சிநாதன் ************************* கொஞ்சம் கடன் பாதி நட்டம் முதல் மோசமான பணம் செலுத்த வேண்டிய பணம்(5) Loading…

விடை 4123

இன்று காலை வெளியான வெடி: தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3) அதற்கான விடை: கொத்து = கொளுத்து - ளு கொளுத்து = தீவை ளு = பாதி பளு (சுமை) இன்று காலை புதிர் செய்ய மிகவும் தாமதமாகிவிட்டதால் யோசிக்க சோம்பல்பட்டு ஒரு பழைய புதிரைச் சற்று தட்டி உரு மாற்றினேன். சுமார் 12 வருடம் அல்லது அதற்கும் முந்தைய அப்புதிர் இதோ: தீவை மண்வெட்டியால் தோண்டு, இரண்டாம் சாளுக்கியன் புதைக்கப்பட்டுள்ளான் (4) தோண்டிக் கிடைத்ததைத் தொல்லியலார் ஆய்ந்திடுவார் ஆண்டுகள் ஐந்தாயிரம் முந்தைய தென்றுரைப்பார் மீண்டும் பழம்புதிரை வேற்றுருவில் இன்றளித்தேன் மூண்டிடும் தீதந்த முத்து. இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4123

உதிரிவெடி 4123 (பிப்ரவரி 7, 2021) வாஞ்சிநாதன் ************************* சென்ற வாரம் இப்பக்கத்தில் இனிமேல் ஞாயிறு தவிர சில விடுமுறை நாட்களிலும் புதிர் வெளியிடலாம் என்று தெரிவித்திருந்தேன். அந்த அறிவிப்பைப் படித்து புருஷோத்தமன், ஜான் அல்போன்ஸ், சடகோபன், கமலா, தங்கசபை, பிரம்மானந்தம், மாதவன், ஷிஹாபுதீன், கிருஷ்ணராவ், ஆடலரசு, புவனேஸ்வரி, கலிய பெருமாள் இவர்கள் எல்லோரும் ஆஹா சந்தோஷம் செய்யுங்கள் என்று எனக்கு டெலிபதியில் தெரிவித்திருந்தார்கள். என்னிடம் டெலிபதி பொறியின் ரிசீவர் மட்டும்தான் இருக்கிறதால் இதன் மூலம் நான் அளிக்கும் நன்றியை டெலிபதியாக ஏற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய வெடி: தீவை பாதி சுமை குறைந்திடக் கிளறிவிடு (3) Loading…