உதிரிவெடி 4116 (டிசம்பர் 20, 2020)
வாஞ்சிநாதன்
*************************
இரண்டாம் அணிக்கு பதிலாக வந்த கட்சித் தலைவரின் இறுமாப்பு (6)
வாஞ்சிநாதன்
*************************
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
*இன்றைய உதிரிவெடி!*( 21-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
மனஸ்தாபத்திற்குப் பின் சமரசம் கோபுரம் தலை சாய்ந்த ஊர் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
_சமரசம் உலாவும்_ _இடமே நம் வாழ்வில் காணா_
_சமரசம் உலாவும் இடமே_
_ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர்_
_தீயோரென்றும் பேதமில்லாது_
_எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு_
_தொல்லையின்றியே தூங்கிடும் வீடு_
_உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா_
_சமரசம் உலாவும் இடமே_
(ரம்பையின் காதல் 1956)
**********************
_மனஸ்தாபத்திற்குப் பின் சமரசம் கோபுரம் தலை சாய்ந்த ஊர் (5)_
_மனஸ்தாபத்திற்குப் பின் சமரசம்_ = *ராசி*
_கோபுரம் தலை சாய்ந்த_
= deleting first letter in *கோபுரம்*
= *புரம்*
_ஊர்_ = *ராசி+ புரம்*
= *ராசிபுரம்*
********************** *இராசிபுரம்* (ஆங்கிலம்:Rasipuram), நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப்பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக அங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
**********************
*இராசிபுரம்* நகரத்தின் பிரதான தொழிலாக ஆடை நெய்தல் உள்ளது. சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த ‘பட்டுநூல்காரர்’ என்னும் பிரிவினர் ‘ கைகோலர்’ என்னும் மற்றொரு பிரிவினருடன் இராசிபுரம் நகரத்தில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் பருத்தி மற்றும் பட்டு ஆடைகள் நெய்து வருகின்றனர்
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/21, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ராசிபுரம்
[12/21, 07:11] Meenakshi: விடை ராசிபுரம்
[
[12/21, 07:18] Bhanu Sridhar: சமாதானம்
[
[12/21, 07:22] பாலூ மீ.: ராசி (கோ)புரம் விடை ராசிபுரம்
[12/21, 07:56] nagarajan: *ராசிபுரம்*
[
[12/21, 08:15] siddhan subramanian: ராசிபுரம் (ராசி + (கோ)புரம்)
[12/21, 08:54] ஆர். நாராயணன்.: ராசிபுரம்
[
[12/21, 13:21] வானதி: *ராசிபுரம்*
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 22-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
ஆசிரியரின் பணியை அறிமுகப்படுத்த உடை உடுத்தி இறுதியாக உயிரை அளி (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
********************
********************
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 22-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*_அணிந்துரை_*
*முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்*
*புறவுரை தந்துரை புனைந்துரை*
*"பாயிரம்”*
– நன்னூல்- 1
முகவுரை, பதிகம் என்பவை பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்களாகும். நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது *அணிந்துரை* எனப்படும். நூலைப்பற்றிப் புனைந்து கூறுவது *புனைந்துரை* ஆகும். *புறவுரை* என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் *தந்துரை* என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.
**********************
_ஆசிரியரின் பணியை அறிமுகப்படுத்த உடை உடுத்தி இறுதியாக உயிரை அளி (5)_
_உடை உடுத்தி_
= *அணிந்து*
_இறுதியாக உயிரை அளி_
= last letter in _உயிரை_
= *ரை*
_ஆசிரியரின் பணியை அறிமுகப்படுத்த_
= *அணிந்து+ ரை*
= *அணிந்துரை*
**********************
_*நன்னூல் காட்டும் அணிந்துரை*_
”கட்டட வேலைப்பாடுகளுடன் மாளிகை அமைந்திருந்தாலும் அதற்குப் பொலிவூட்ட அழகிய ஓவியங்கள் இன்றியமையாததனவாகும். ஒரு நகரம் மிகப்பெரியதாக விரிந்து பரந்து அமைந்திருந்தாலும் அந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தலைவாயில்அவசியமானது.
இயற்கையிலேயே
பெண்கள் அழகுடையவர்கள் என்றாலும் அவர்களுக்கு மேலும் எழிலூட்ட
அணிகலன்கள் இன்றியமையாதது.
அதுபோல ஒரு நூல் சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கோர் *அணிந்துரை* அவசியமானது”
என்று அணிந்துரையின் இன்றியமையாமையை நன்னூல் விளக்கியுள்ளது.
_மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்_
_ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்-_
_நாடிமுன் ஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்_
_பெய்துரையா வைத்தார் பெரிது._
- *நன்னூல்* (55)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/22, 07:04] திரைக்கதம்பம் Ramarao: அணிந்துரை
[12/22, 07:04] Sucharithra: அணிந்துரை
[
[12/22, 07:05] akila sridharan: அணிந்துரை
[12/22, 07:06] sathish: அணிந்துரை
[
[12/22, 07:09] மீ.கண்ணண்.: அணிந்துரை
[
[12/22, 07:14] prasath venugopal: அணிந்துரை
[
[12/22, 07:14] பாலூ மீ.: அணிந்து+ரை அணிந்துரை
[
[12/22, 07:24] வானதி: *அணிந்துரை*
[
[12/22, 07:42] Meenakshi: விடை: அணிந்துரை
[
[12/22, 07:49] V N Krishnan.: அணிந்துரை
12/22, 07:50] chithanandam: அணிந்துரை
[12/22, 07:54] nagarajan: *அணிந்துரை*
[
[12/22, 08:32] A D வேதாந்தம்: விடை=அணிந்துரை/வேதாந்தம்
[
[12/22, 08:37] siddhan subramanian: அணிந்துரை (அணிந்து) + (உயி)ரை
[12/22, 09:26] ஆர். நாராயணன்.: அணிந்துரை
[
[12/22, 09:29] கு.கனகசபாபதி, மும்பை: அணிந்துரை
[
[12/22, 10:31] G Venkataraman: அணிந்துரை
[
[12/22, 12:45] balakrishnan: அணிந்துரை🙏
[
[12/22, 13:25] shanthi narayanan: அணிந்துரை
[12/22, 14:48] Viji - Kovai: அணிந்துரை
12/22, 20:16] Dhayanandan: அணிந்துரை
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
நடு இறைச்சி கடைக் கன்று (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
_உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண_
_அண்ணாத்தல் செய்யாது அளறு_
(அதிகாரம்:புலால் மறுத்தல் குறள் எண்:255)
*பொழிப்பு*
(மு வரதராசன்):
_உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது._
********
உயிர்கள் உடம்போடு நிலைபெற்று வாழ்தல் என்பது ஊன் உண்ணாமையால்தான். ஒருவன் ஊன் உண்பானாயின் அவனது இழிந்த உடலை ஏற்றுக் கொள்ள நரகமும் வாய்திறக்காது.
**********************
_நடு இறைச்சி கடைக் கன்று (3)_
_இறைச்சி_ = *ஊன்*
_கடைக் கன்று_
= *[கன்]று*
= *று*
_நடு_ = *ஊன்+று*
= *ஊன்று*
*************************
*உண் முதல் உண்ணி வரை*
_*ஊன், ஊண்*_ :
இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம், ஆனால், இவற்றின் பொருள் முற்றிலும் மாறுபட்டது.
' *ஊன்* ' என்றால், மாமிசம், இறைச்சி என்று பொருள். ' *ஊண்* ' என்றால், உணவு என்று பொருள்.
மாமிசமும் ஓர் உணவுதான்; அதற்காக ஊனை, ஊண் என்று எழுதக்கூடாது.
ஒருவர் பசியோடு இருக்கிறார். அவர் முன்னே தட்டில் உணவை வைத்து, ' *உண்* ' என்கிறோம், அதாவது, 'சாப்பிடு' என்கிறோம்.
அந்த 'உண்' என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான், *உணவு* வந்தது. *ஊண்* என்பதும், அதிலிருந்து வந்ததுதான்.
*'ஊண் மிக விரும்பு'* என்பார் பாரதியார். அதாவது, வேளாவேளைக்கு உணவை விரும்பி உண்ண வேண்டும்; பட்டினி கிடந்தாலோ, சரியாகச் சாப்பிடாவிட்டாலோ, குப்பை உணவுகளை உண்டாலோ சுறுசுறுப்பாக இயங்க இயலாது.
பாரதியார் 'மிக ஊண் விரும்பு' என்று சொல்லவில்லை. அதாவது, உணவை அளவுக்கதிகமாகவும் உண்டுவிடக்கூடாது. அளவறிந்து உண்ண வேண்டும்.
'உண்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த இன்னோர் அழகிய சொல், ' *உண்டி* '. இதன் பொருளும் உணவுதான்.
_'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்'_
என்று பழமொழி உண்டு. அதாவது, பசியோடு உள்ள நேரத்தில், நமக்கு உணவு தந்தவர்களை மறக்கக்கூடாது. அவர்கள் நமக்கு உயிரையே தந்தவர்களாகப் போற்றவேண்டும்.
இந்த 'உண்டி'யிலிருந்து ' *சிற்றுண்டி'* என்ற சொல் வந்தது:
சிறு + உண்டி => சிற்றுண்டி. மிகுதியாகச் சாப்பிடாமல், கொஞ்சம்போல் கொறிக்கும் உணவு.
இதற்கு எதிர்ப்பதம், *பேருண்டி:* பெரு + உண்டி: ஒரே நேரத்தில் ஐம்பது வகை உணவுகளைத் தட்டில் நிரப்பிக்கொண்டு உண்ணும் விருந்து.
ஒரு குறிப்பிட்ட உணவை உண்கிறவர்களை, ' *உண்ணி'* என்பார்கள். இதன் அடிப்படையில் மிருகங்களை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்:
*தாவர உண்ணி* => தாவரங்களை உண்டு உயிர் வாழ்பவை
*விலங்குண்ணி =* > விலங்கு உண்ணி: பிற விலங்குகளை உண்பவை
*அனைத்துண்ணி* => அனைத்து உண்ணி: தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டையும் உண்பவை.
( *தினமலர்* )
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/23, 07:04] sathish: ஊன்று
[12/23, 07:05] திரைக்கதம்பம் Ramarao: ஊன்று
[
[12/23, 07:06] balakrishnan: ஊன்று🙏
[
[12/23, 07:07] V N Krishnan.: ஊன்று=நடு
[
[12/23, 07:09] Dhayanandan: ஊன்று
[12/23, 07:10] Ramki Krishnan: ஊன்று
[
[12/23, 07:10] Meenakshi: விடை:ஊன்று
[12/23, 07:10] thiru subramanian: ஊன்று
[
[12/23, 07:14] chithanandam: ஊன்று
[12/23, 07:22] பாலூ மீ.: ஊன்+று ஊன்று
[12/23, 07:25] மீ.கண்ணண்.: ஊன்று
[
[12/23, 07:44] sankara subramaiam: ஊன்று
[
[12/23, 07:59] nagarajan: *ஊன்று*
[
[12/23, 08:21] Venkatesan M: இன்றைய விடை= நன்று
[
[12/23, 08:25] A Balasubramanian: ஊன்று
A.Balasubramanian
[
[12/23, 08:28] வானதி: *ஊன்று*
[
[12/23, 08:30] ஆர். நாராயணன்.: ஊன்று
[
[12/23, 08:49] கு.கனகசபாபதி, மும்பை: ஊன்று
[
[12/23, 09:01] Bharathi: ஊன்று
[
[12/23, 09:06] siddhan subramanian: ஊன் (இறைச்சி) + கன்(று) ஊன்று
[
[12/23, 09:37] prasath venugopal: ஊன்று
[
[12/23, 09:49] G Venkataraman: ஊன்று
[
[12/23, 12:18] Viji - Kovai: ஊன்று
[
[
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
தெய்வத்திற்கு முன்பு கங்கைக் கரையூர் திரும்ப அமெரிக்க மாநகர் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*தமிழ் தமிழ் அகரமுதலி*
*கோ*
பொருள்:
ஒர்உயிர்மெய்யெழுத்து(க்+ஓ); *இறைவன்* ; பேரரசன்; அரசன்; தந்தை; தலைமை; மலை; குயவன்; பசு; எருது; தேவலோகம்; வானம்; பூமி; திசை; கதிர்; சூரியன்; சந்திரன்; வச்சிரப்படை; அம்பு; கண்; சொல்; மேன்மை; நீர்; இரசம்; இலந்தைமரம்; இரங்கற்குறிப்பு.
********************** *சிகாகோ* (Chicago)
என்பது அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும்.
**********************
_தெய்வத்திற்கு முன்பு கங்கைக் கரையூர் திரும்ப அமெரிக்க மாநகர் (3)_
_தெய்வம்_ = *கோ*
_கங்கைக் கரையூர்_
= *காசி*
_கங்கைக் கரையூர் திரும்ப_
= *காசி --> சிகா*
_தெய்வத்திற்கு முன்பு சிகா_
= *சிகா+கோ*
= *சிகாகோ*
_அமெரிக்க மாநகர்_
= *சிகாகோ*
**********************
*விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!*
🌹🌹🌹🌹🌹🌹🌹
_1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 127 ஆண்டுகள் ஆகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது._
இந்தியாவின் பெருமைகளை வெளிநாடுகளில் பரவச் செய்த வரலாற்று நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது, சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு!
சிகாகோவில் இந்து சமயப் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்கூறுவதற்கு முன்னர்வரை, இந்தியாவை சாதுக்களும் சர்ப்பங்களும் குரங்காட்டிகளும் நிறைந்த நாடு என்பதாக மட்டுமே வெளிநாட்டினர் கற்பனை செய்துவைத்திருந்தனர்
சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பிறகே, அதுவரையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த இந்து மதமும், இந்தியாவின் நெடிய ஆன்மிக மரபும் மேற்கில் உள்ளவர்களுக்குத் துலக்கமாயிற்று.
1893-ம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டில், *‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!’* என்று விளித்துத் தன் பேச்சைத் தொடங்கினார் விவேகானந்தர். அப்போது அவருக்கு வயது 30!
அவருக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் ‘கணவான்களே… சீமாட்டிகளே..’ என்று விளித்து பேச்சைத் தொடங்க, விவேகானந்தரோ ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்று தன் உரையைத் தொடங்கினார். அந்த உரை, அங்கு கூடியிருந்த மக்களை விழித்தெழச் செய்தது.
இப்படிச் சொன்ன விவேகானந்தர் தனது சொற்பொழிவை ஒரு எச்சரிக்கையுடன் முடிக்கிறார்:
“ *இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடையப் பல்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்”.*
_அந்த மணியோசை நம் காதுகளுக்கு இப்போதும் கேட்க வேண்டும்._
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/24, 07:10] மீ.கண்ணண்.: சிகாகோ
[
[12/24, 07:10] sathish: சிகாகோ
[
[12/24, 07:11] திரைக்கதம்பம் Ramarao: சிகாகோ
[12/24, 07:14] Ramki Krishnan: சிகாகோ
[
[12/24, 07:14] N T Nathan: சிகாகோ
[12/24, 07:15] பாலூ மீ.: சிகாகோ.
[
[12/24, 07:16] sankara subramaiam: சிகாகோ
[
[12/24, 07:17] P V Raman: சிகாகோ
காசி, கோ
[
[12/24, 07:18] மாலதி: சிகாகோ
[
[12/24, 07:18] prasath venugopal: சிகாகோ
[
[12/24, 07:18] பானுமதி: சிகாகோ
[
[12/24, 07:20] V N Krishnan.: சிகாகோ!
[12/24, 07:24] balakrishnan: சிகாகோ🙏
[
[12/24, 07:25] Meenakshi: விடை : சிகாகோ
[
[12/24, 07:30] A D வேதாந்தம்: விடை=சிகாகோ/வேதாந்தம்.
[
[12/24, 07:30] கு.கனகசபாபதி, மும்பை: சிகாகோ
[
[12/24, 07:33] akila sridharan: சிகாகோ
[12/24, 07:35] siddhan subramanian: சிகாகோ (சிகா + கோ (தெய்வம்)
[12/24, 07:36] A Balasubramanian: சிகாகோ
A.Balasubramanian
[12/24, 07:51] G Venkataraman: காசி திரும்பியது
[
[12/24, 07:55] Dr. Ramakrishna Easwaran: *சிகாகோ*
[12/24, 08:01] stat senthil: சிகாகோ
[
[12/24, 08:05] Bhanu Sridhar: சிகாகோ
[
[12/24, 08:19] chithanandam: சிகாகோ
[
[12/24, 08:22] Bharathi: சிகாகோ
[
[12/24, 08:58] Dhayanandan: சிகாகோ
[
[12/24, 09:39] ஆர். நாராயணன்.: சிகாகோ
[
[12/24, 09:46] வானதி: *சிகாகோ*
[
[12/24, 10:37] nagarajan: *சிகாகோ*
[
[12/24, 11:24] shanthi narayanan: சிகாகோ
[
[12/24, 13:08] Viji - Kovai: சிகாகோ
[
[12/24, 13:29] Usha Chennai: சிகாகோ
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
மணமிகு மரிக்கொழுந்து செருகிய இளம்பெண் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
_மதுர *மரிக்கொழுந்து* வாசம் - என்_
_ராசாத்தி உன்னுடைய நேசம்_
_மானோட பார்வை மீனோட சேரும்_
_மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது_
_மறையாத என்னுடைய பாசம்_
(Movie:எங்க ஊரு பாட்டுக்காரன்)
**********************
*மரிக்கொழுந்து!*
பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!
மரிக்கொழுந்து, வாசனை மலர் மாலைகளிலும், மலர்ப் பூங்கொத்துக்களிலும் சேர்க்கப்படுகிறது. வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், அறை நறுமண மூட்டியாகவும், பயன்படுகிறது. அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹
மனிதரின் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு தீர்வாகும் தன்மை மிக்கது, சருமத்தில் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள், சிறுநீரக கோளாறுகள், உடல் வலி, தூக்கமின்மை மற்றும் வயிற்று பாதிப்புகளைப் போக்கி, உடலை நலமாக்கக் கூடியது.
****************
*உறக்கம் வர* :
சிலருக்கு மன உளைச்சல்கள் அல்லது உடல் நல பாதிப்புகள் காரணமாக, இரவில் உறக்கம் வராது.
தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல, இதுநாள் வரை, உறக்கம் இல்லாமல் தவித்த அவர்களின் கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.
வாரம் இரு முறை, மரிக்கொழுந்துகளை மாற்றி, இது போல சில வாரங்கள் செய்துவர, மன நல பாதிப்புகளும் குணமாகி, பின்னர், மரிக்கொழுந்து இல்லாமலேயே, அமைதியான உறக்கம், இயல்பாக வரும்.
**********************
_மணமிகு மரிக்கொழுந்து செருகிய இளம்பெண் (3)_
_செருகிய_ = indicator to denote hidden clue in _மணமிகு மரிக்கொழுந்து_
= _மணமி *குமரி* க்கொழுந்து_
= *குமரி*
= _இளம்பெண்_
********************** _*குமரிப்பெண்ணின்* உள்ளத்திலே_ _குடியிருக்க நான் வரவேண்டும்_
_குடியிருக்க நான் வருவதென்றால்_ _வாடகை என்ன தரவேண்டும்_
_குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்_
_காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்_
படம்: எங்க வீட்டுப் பிள்ளை -
1965
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/25, 07:00] திரைக்கதம்பம் Ramarao: குமரி
[12/25, 07:01] Dr. Ramakrishna Easwaran: *குமரி*
[
[12/25, 07:02] பானுமதி: குமரி
[12/25, 07:03] V N Krishnan.: குமரி
[12/25, 07:04] மீ.கண்ணண்.: குமரி
[12/25, 07:11] பாலூ மீ.: குமரி.
[12/25, 07:12] A D வேதாந்தம்: விடை= குமரி/ வேதாந்தம்
[12/25, 07:15] balakrishnan: 🙏குமரி
[
[12/25, 07:16] Meenakshi: விடை:குமரி
[12/25, 07:20] sathish: குமரி
[12/25, 07:22] stat senthil: குமரி
[
[12/25, 07:32] prasath venugopal: குமரி
[
[12/25, 07:34] Dhayanandan: குமரி
[
[12/25, 07:42] Ramki Krishnan: குமரி
[
[12/25, 07:43] akila sridharan: குமரி
[
[12/25, 07:50] Bhanu Sridhar: குமரி
[
[12/25, 07:52] G Venkataraman: குமரி
[
[12/25, 07:54] nagarajan: *குமரி*
[
[12/25, 07:54] Venkatesan M: இன்றைய விடை = குமரி
[12/25, 08:09] siddhan subramanian: குமரி
[12/25, 08:14] கு.கனகசபாபதி, மும்பை: குமரி
[
[12/25, 08:16] Sucharithra: குமரி
[12/25, 08:26] V R Raman: குமரி
[12/25, 08:32] ஆர். நாராயணன்.: குமரி
[
[12/25, 09:43] வானதி: *குமரி*
[
[12/25, 12:39] shanthi narayanan: குமரி
[
[12/25, 14:01] Usha Chennai: குமரி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
கழுத்து தலை சிக்கும்படி அடி, அதனால் நன்மையில்லை (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!
........ ......... ............
*பாதகஞ்* செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
........ ......... ............
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!
*மகாகவி பாரதியார்.*
**********************
_"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா_
_மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"_
- என்ற வீரத்திற்கான- விவேகத்திற்கான உத்திரவாதத்தை நாமும் நம் சமுதாயமும் எப்போது நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறோம்?
**********************
_கழுத்து தலை சிக்கும்படி அடி, அதனால் நன்மையில்லை (4)_
_கழுத்து தலை_
= _க [ழுத்து]_
= *க*
_அடி_ = *பாதம்*
_சிக்கும்படி_ = indicator to put *க* inside *பாதம்*
= *பாதகம்*
= _அதனால் நன்மையில்லை_
**********************
*பஞ்சமகா பாதகங்கள் (* வடமொழியில்) - ஐந்துபெரும் பழிச்செயல்கள் (தமிழில்) என்னென்ன...?
பொய், களவு, சூது, கொலை, கற்பழிப்பு.
**********************
*கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்-*
இராம இலக்குவர் கவந்தனைப் பார்க்கின்றனர். அவன் பெரிய *பாதகன்.* அவர்கள் அவனைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள்?
ஐந்து தீய செயல்களை இந்துக்கள் பெரிய பாவச் செயல்களாகக் கருதுகின்றனர். அவை
கள், களவு, கொலை, பொய், காமம் (பிறர் மனைவியை விரும்பும் காமம்).
_ஓதநீர் மண் இவை முதல் ஓதிய_
_பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே_
_வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்_
_*பாதகம்* திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்_
-ஆரண்ய காண்டம், கவந்தன் படலம், கம்ப ராமாயணம்
*பொருள்* :–
கவந்தன் என்னும் அசுரன் பஞ்ச பூதங்களால் மட்டும் ஆனவன் அன்று; *பஞ்ச மா பாதகங்கள்* ஒன்று சேர்த்து ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம்.
அந்தக் கவந்தன், குளிர்ச்சி பொருந்திய நீரும் பூமியும் ஆகிய இவை முதலாகக் கூறப்பட்ட பஞ்ச பூதங்களினால் இவன் உடல் ஆக்கப்பட்டது அல்லாமல், வேத நூல்கள் முறைப்படி உரைக்கும் கள், களவு,
பிறர் மனை விரும்புவதாகிய காமம், பொய், கொலை ஆகிய *_பஞ்ச மா பாதகங்கள்_* ஒன்றாகச் சேர்த்து உயிர்பெற்று வந்தவன் என்னும் தன்மை உடையவன்.
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/26, 06:59] chithanandam: பாதகம்
[
[12/26, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பாதகம்
[
[12/26, 07:05] மீ.கண்ணண்.: பாதகம்
[12/26, 07:15] Meenakshi: விடை:பாதகம்
[
[12/26, 07:19] balakrishnan: 🙏பாதகம்
[12/26, 07:21] ஆர்.பத்மா: பாதகம்
[12/26, 07:22] பாலூ மீ.: பாதகம்
[
[12/26, 07:38] V N Krishnan.: பாதகம்=அதனால் நன்மையில்லை
[12/26, 07:48] nagarajan: *பாதகம்*
[12/26, 07:48] A D வேதாந்தம்: விடை= பாதகம்/ வேதாந்தம்.
[
[12/26, 07:48] sankara subramaiam: பாதகம்
[
[12/26, 07:56] ஆர். நாராயணன்.: பாதகம்
[12/26, 07:59] மாலதி: நம்பு க
[
[12/26, 08:28] Bharathi: பாதகம்
[
[12/26, 10:32] வானதி: _பாதகம்_
[12/26, 19:19] shanthi narayanan: பாதகம்
[
[12/26, 19:42] கு.கனகசபாபதி, மும்பை: பாதகம்
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-12-20)
From *Vanchinathan's* archttive-
( *தென்றல்-2011* )
**********************
புகலிடம் தேடி வந்தவனை மாற்றி ஒரு ஸ்வரம் சேர்த்துக் கூட்டு (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*புகலிடம்*
_பிள்ளைகளுக்கு சிறு வயதில் பெற்றவர்களின் உள்ளங்கள்_
_பெற்றவர்களுக்கு முதுமையில்_
_முதியோர் இல்லங்கள்_
*_யார் மீது குற்றம் ?_*
**********************
கவிஞர்களின்
ஒரே புகலிடம்
இந்த
காதல் !!!!
(மீரா)
**********************
*அகதி:*
அகதி என்பது தமிழ்ச் சொல்லே ஆகும். *அற்கதி* என்ற தமிழ்ச் சொல்லே திரிந்து அகதி ஆயிற்று. இச் சொல்லின் தோற்றமுறை கீழே:
அல் + கதி = அல்கதி >>> அற்கதி >>> அகதி
= கதியற்ற நிலை ( உதவியற்ற; திக்கற்ற; பாதுகாப்பற்ற).
*கதி* - என்ற பெயர்ச்சொல் (வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும்) நிலைமை; நிலையைக் குறித்தது. குறிப்பிட்ட ஒன்றைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று ஒருவர் இருக்கும் நிலைமை.
*சரணாகதி* = தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அடிபணிதல்;அடைக்கலம் புகுதல்; சரண்; தஞ்சம். (surrender, taking shelter, seeking refuge).
**********************
*கதி* என்னும் தமிழ்ச் சொல்லுக்கு வழி, நிலை என்ற பொருட்கள் உண்டு காலங்காலமாக ஒருநாட்டில் வாழ்ந்துவந்து, அரசியல், போர், வறுமை முதலான காரணங்களால் திடீரென்று தமது நாட்டில் இருந்து பிறிதொரு நாட்டுக்குத் தஞ்சமாகக் குடியேறி வந்தவர்கள் புகுந்த நாட்டில் வாழும் வழிவகைகள் இல்லாமலும் நிலையான இருப்பிடம் இல்லாமலும் தட்டுத் தடுமாறி இருப்பார்கள். இவ்வாறு கதியற்றவர்களே *அற்கதி* என்று அழைக்கப்பட்டனர். நாளடைவில் இச்சொல் சுருங்கி *அகதி* என்றாயிற்று. அற்கதி என்ற சொல்லில் இருந்தே *அறுகதை* என்ற சொல்லும் தோன்றியது.
**********************
_புகலிடம் தேடி வந்தவனை மாற்றி ஒரு ஸ்வரம் சேர்த்துக் கூட்டு (4)_
_புகலிடம் தேடி வந்தவன்_
= *அகதி*
_ஒரு ஸ்வரம்_
= *ரி*
_மாற்றி_ = *அகதி--> அதிக*
_சேர்த்து_
= *அதிக+ ரி*
= *அதிகரி*
= _கூட்டு_
**********************
*இது என் கிராமம்*
காலை மலர்ந்து கதிரவன் தோன்றினான்
கலைக்குயில் இசையினால் காது குளிர்ந்தது
குளிர் காற்று சில்லென்று வீசி மேனி நடுங்க
ஒற்றையடி பாதையில் ஓடி நடந்தேன்
காலைப் பயிற்சி பலம் தரும் என்பதனால்
ஏரிக்கரையோரம் எருதுகள் மேய
கரை இறங்கிய நாரைகள் மீன்தேடி அலைய
மூடுபனி நிறைந்து ஏரி பளபளக்க
இளங்கதிரவன் ஒளியில் பளிச்சென சிரித்தது தாமரைப்பூ
இயற்கை அழகை ரசித்து நடந்தேன் இசையோடு
பச்சைக்கம்பளம் போல்பரந்த வயல் வெளியில்
பசுமையான நெற்பயிர்கள் அலைபோல் அசைந்தாட
பரண்மீது சாய்ந்திருந்த விவசாயி குரல் கேட்டு
பறந்தன பறவை பட்டாளம் விண்னை நோக்கி
கலங்கமற்ற நீலநிற வானத்திலே
கறுநிற புள்ளிகள்போல் பருந்துகள் வட்டமிட
கதிகலங்கி பறவைகள் *புகலிடம்* தேடியோட
சரணடைந்தேன்
ஆலமரம நிழலினிலே சற்றுநேரம் ஓய்வெடுக்க
(வாலாவின் தமிழ் கவிதை)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/28, 07:04] thiru subramanian: அதிகரி
[
[12/28, 07:06] A Balasubramanian: அதிகரி
A.Balasubramanian
[12/28, 07:08] chithanandam: அதிகரி
[12/28, 07:26] akila sridharan: அதிகரி
[12/28, 07:44] திரைக்கதம்பம் Ramarao: அதிகரி
[
[12/28, 07:50] V R Raman: அதிகம்
[
[12/28, 07:59] prasath venugopal: அதிகரி
[12/28, 08:06] sankara subramaiam: அதிகரி
[
[12/28, 08:22] Dr. Ramakrishna Easwaran: *அதிகரி*
(அகதி)*ரி
[12/28, 07:56] nagarajan: *அதிகரி*
[
[12/28, 08:40] பாலூ மீ.: அகதி+ரி = அதிகரி = கூட்டு.
[
[12/28, 08:56] Meenakshi: விடை :அதிகரி
[12/28, 08:59] ஆர். நாராயணன்.: அதிகரி
[12/28, 09:07] siddhan subramanian: அகதி + ரி (அதிகரி = கூட்டு
[
[12/28, 10:10] Bhanu Sridhar: அதிகரி
[12/28, 10:56] sathish: அதிகரி
[12/28, 11:14] balakrishnan: அதிகரி🙏
[12/28, 14:07] வானதி: *அதிகரி*
[
[12/28, 14:10] A D வேதாந்தம்: விடை= அதிகரி/ வேதாந்தம்.
[
[12/28, 14:57] G Venkataraman: அதிகரி
[
[12/28, 15:24] shanthi narayanan: அதிகரி
[
[12/28, 18:36] கு.கனகசபாபதி, மும்பை: அதிகரி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
சஷ்டியிலிருந்து ஒரு வாரம் அழகி மேலேற தர்மத்தலைவனை நெஞ்சிலிருத்தி எண்ணிப் பார் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
********************** *திதி* என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.
**********************
திதிகளை வளர்பிறை, தேய்பிறை என பிரிக்கலாம். அமாவாசை முதல் பவுர்ணமி வரை ‘வளர்பிறை’, பிரதமை முதல் அமாவாசை வரை ‘தேய்பிறை’ காலமாகும். வளர்பிறைக்கு 15 திதிகளும், தேய்பிறைக்கு 15 திதிகளும் உண்டு.
**********************
திதி, தேதி என்ற வட மொழி சொற்களுக்கு தமிழில் நாள் என்று பொருள்.
**********************
_சஷ்டியிலிருந்து ஒரு வாரம் அழகி மேலேற தர்மத்தலைவனை நெஞ்சிலிருத்தி எண்ணிப் பார் (5)_
_அழகி_ = *ரதி*
_மேலேற_
= indicator to reverse *ரதி--> திர*
_தர்மத்தலைவனை_
= _தர்மத் தலைவனை_
= first letter in _தர்மத்_
= *த*
_எண்ணிப் பார்_
= *யோசி*
_நெஞ்சிலிருத்தி_
= indicator to place *த* inside *யோசி*
= *யோதசி*
_சஷ்டியிலிருந்து ஒரு வாரம்_
= _சஷ்டி திதியிலிருந்து ஏழு நாட்கள் கழித்து வரும் திதி_
= *திர+ யோதசி*
= *திரயோதசி*
**********************
*திதி, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன?*
1. புது நிலவு மற்றும் முழு நிலவிற்கு அடுத்த நாளை *பிரதமை* என்று சொல்வார்கள். பிரதமை என்றால், PRIME, அதாவது முதன்மை என்று பொருள் படும். முதல் நாள். அவ்வளவு தான். Prime Minister - பிரதம மந்திரி என்ற வட மொழி சொல்லிற்கு முதன்மை அமைச்சர் என்று சொல்கிறோம் அல்லவா!
ஆக, தேய்பிறை பிரதமை என்றால், முழு நிலவிற்கு அடுத்த முதல் நாள்.
வளர்பிறை பிரதமை என்றால், புது நிலவிற்கு அடுத்த முதல் நாள்.
2. இரண்டாம் நாளை *துவிதை* என்று அழைக்கிறார்கள். துவி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு இரண்டு என்று பொருள்.
3. திரி என்றால் மூன்று என்று நமக்கு நன்றாக தெரியும். அது தான் *திரிதியை* ஆயிற்று. மூன்றாம் நாள்.
4. சதுரம் என்றால் நான்கு பக்கம் என்று பொருள் வருகிறதா. அது தான் *சதுர்த்தி* என்கிறார்கள். அதாவது நான்காம் நாள்.
5. பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் ஓடும் மாநிலம் என நமக்கு நன்றாக பள்ளிகளில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். பாஞ் என்றால் ஐந்து. *பஞ்சமி* என்றால் ஐந்தாம் நாள்.
6. *சஷ்டி* என்றால் ஆறாம் நாள்.
7. சப்த ஸ்வரங்கள் என்று இசையில் குறிப்பிடுகிறார்களே? அதாவது ஏழு ஓசைகள் என்று. அது தான் *சப்தமி* என்றால் ஏழாம் நாள்.
8. அஷ்ட லட்சுமி, அஷ்ட கோணல் எல்லாம் கேள்வி பட்டிருப்பீர்கள். அஷ்ட என்றால் எட்டு. அது தான் *அஷ்டமி* என்றால் எட்டாம் நாள்.
9. நவ நாள் என்று இறை வழிபாட்டில் ஒன்பது நாட்கள் ஆலயம் வந்து வழிபடுவதை சொல்வார்கள். ஒன்பது கோள்களை, நவ கிரகம் என்று சொல்ல கேட்டதில்லையா? *நவமி* என்றால் ஒன்பதாம் நாள்.
10. தச என்றால் பத்து. கமல் நடித்த தசாவதாரத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார் அல்லவா. ஆக *தசமி* என்றால் பத்தாம் நாள்.
11. ஏக் என்றால் ஒன்று. தஸ் என்றால் பத்து. ஆக ஏக்-தஸ் என்பது *ஏகாதசி* . அப்படியென்றால் அது பதினொன்றாம் நாள்.
12. துவி என்றால் சமற்கிருதத்தில் இரண்டு என பொருள். ஆக துவி+தஸ், *துவிதசி* என்பது பன்னிரண்டாம் நாள் ஆகும்.
13. திரி+தஸ் = *திரியோதசி.* நீங்களே சொல்வீர்கள் அது பதிமூன்றாம் நாள் என்று.
14. சதுரம் என்றால் நான்கு. அதனுடம் இந்த தசி என்கிற தஸ் சேர்ந்து *சதுர்த்தசி* என்பதால் அது பதினான்காம் நாள்.
15. *அமாவசை (அ) பௌர்ணமி* பதினைந்தாம் நாள்.
இவ்வளவு தான் இந்த திதி என்கிற நாட்களில் மறைந்துள்ள பெயர்களுக்கான விளக்கம்!🌺
*************************
💐🙏🏼👍🏼
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[12/29, 07:10] திரைக்கதம்பம் Ramarao: திரயோதசி
[
[12/29, 07:15] மீ.கண்ணண்.: திரயோதசி
[
[12/29, 07:24] Meenakshi: விடை:திரயோதசி
[
[12/29, 07:27] sankara subramaiam: திரயோதசி
[
[12/29, 07:28] stat senthil: யோசித்தர்
[
[12/29, 07:48] akila sridharan: திரயோதசி
அழகி மேலேற - ரதி~திர. + யோசி +த. சஷ்டியிலிருந்து ஒரு வாரம் கழித்து திரயோதசி
[
[12/29, 07:52] nagarajan: *திரயோதசி*
[12/29, 08:12] A D வேதாந்தம்: விடை= திரயோதசி/ வேதாந்தம்
[12/29, 08:14] Ramki Krishnan: திரயோதசி
[
[12/29, 09:40] கு.கனகசபாபதி, மும்பை: திரயோதசி
[12/29, 10:21] ஆர். நாராயணன்.: திரயோதசி
[12/29, 07:17] Bhanu Sridhar:
ரதி , யோசி , த
திரயோதசி
[
[12/29, 11:10] வானதி: *திரயோதசி*
[
[12/29, 11:31] G Venkataraman: திரயோதசி
[12/29, 11:40] V N Krishnan.: ரதி—>திர+யோசி+த =திரயோதசி
சஷடியிலிருந்து ஒரு வாரம்
[12/29, 17:07] siddhan subramanian: திரயோதசி
[12/29, 20:17] V R Raman: திரயோதசி
ரதி, யோசி, த
[
[12/29, 20:47] sathish: திரயோதசி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
கைவிட்ட கணிகை மண்ணோடு கலக்க இமை காக்கும் (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
_*கண்மணி* அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே_
_பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே_
_உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது_
_அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது_
(குணா-1991)
**********************
_கைவிட்ட கணிகை மண்ணோடு கலக்க இமை காக்கும் (4)_
_கைவிட்ட கணிகை_
= _கணிகை minus கை_
= *கணி*
_மண்ணோடு கலக்க_
= _anagram of_ *கணி+மண்*
= *கண்மணி*
= _இமை காக்கும்_
**********************
_கண்மணி கண்மணி_ _கனியே சிறுமணி பொன்மணி பொன்மணி பூவே –மாங்கனி_
_முத்தமிழ் முக்கனி முப்பாலே இந்த மூவுலகம் உனக்கப்பாலே (கண்மணி)_
_தேன் தரும் மலரே திருநாள் சிலையே_
_வான் தரும் மழையே வளரும் பிறையே_
_காவியக் கலையே காவிரிக் கரையே_
_தீபத்தின் ஒளியே தெய்வத்தின் நிழலே_
_உடலும் உயிரும் நீயே அம்மா_
_நான் உனக்கே உலகில் வாழ்வேன் அம்மா (_ _முத்தமிழ்_ )
(கறுப்புப்பணம்-1964)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/30, 07:06] திரைக்கதம்பம் Ramarao: கண்மணி
[
[12/30, 07:07] பாலூ மீ.: கண்ணிமை.
[
[12/30, 07:07] மீ.கண்ணண்.: கண்மணி
[12/30, 07:07] sathish: கண்மணி
[12/30, 07:09] V R Raman: கண்மணி
[
[12/30, 07:11] balakrishnan: கண்மணி🙏
[
[12/30, 07:12] Dr. Ramakrishna Easwaran: கண்மணி
[12/30, 07:17] stat senthil: கண்மணி
[
[12/30, 07:18] A D வேதாந்தம்: விடை= கண்மணி/ வேதாந்தம்.
[
[12/30, 07:24] மாலதி: கண்மணி
[
[12/30, 07:28] Rohini Ramachandran:
KaNmaNi...is the answer for today's udirivedi
[
[12/30, 07:30] Meenakshi: விடை:கண்மணி
[12/30, 07:33] N T Nathan: கண்மணி
[12/30, 07:45] Ramki Krishnan: கண்மணி
[12/30, 07:51] A Balasubramanian: கண்மணி
A.Balasubramanian
[
[12/30, 08:03] Bhanu Sridhar: கண்மணி
[
[12/30, 08:04] sankara subramaiam: கண்மணி
[
[12/30, 08:04] nagarajan: *கண்மணி*
[
[12/30, 08:05] prasath venugopal: கண்ணிமை
[
[12/30, 08:17] G Venkataraman: கண்மணி
12/30, 08:22] Dhayanandan: கண்மணி
[12/30, 08:41] Bharathi: கண்மணி
[
[12/30, 08:54] siddhan subramanian: கண்மணி
[
[12/30, 09:06] கோவிந்தராஜன் -Korea: கண்மணி
[12/30, 09:12] வானதி: *_கண்மணி_*
[12/30, 09:19] Revathi Natraj: கண்ணிமை
[
[12/30, 09:26] கு.கனகசபாபதி, மும்பை: கண்மணி
[
[12/30, 10:14] ஆர். நாராயணன்.: கண்மணி
[12/30, 11:28] shanthi narayanan: கண்ணிமை
[12/30, 14:47] Usha Chennai: கண்மணி
[
[12/30, 16:24] akila sridharan: கண்மணி
[
[12/30, 18:32] chithanandam: கண்மணி
[
[12/30, 19:39] Viji - Kovai: கண்மணி
[
[12/30, 19:50] Porchelvi: கண்மணி
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
சைரந்திரியின் மீதான வெறியால் மரணத்தை அடைந்தவன் (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
_இன்றைய உதிரிவெடி does not fall into the pattern of cryptic clues. It looks like a quiz. One has take the lead from சைரந்திரி and find out the answer!_
**********************
_சைரந்திரியின் மீதான வெறியால் மரணத்தை அடைந்தவன் (4)_
_சைரந்திரி_
= *திரௌபதி*
_வெறியால் மரணத்தை அடைந்தவன்_
= *கீசகன்*
**********************
*கீசகன்* , மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவன். இவன் மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதோசனாவின் தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான்.
துரியோதனுடன்
சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களும்
திரௌபதியும், சூதாட்ட விதியின்படி, விராட நாட்டு அரசவையில் பல பணிகளில் அமர்ந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு வந்தனர். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசனின் மனைவி சுதோசனாவிற்கு பணிப்பெண்னாக ஏவல் செய்யும் பணி மேற்கொண்டாள்.
அவ்வமயம் சைரந்திரியின் பேரழகைக் கண்ட கீசகன் அவளைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி தன் தங்கை சுதோசானவிடம் அடம்பிடித்தான். வேறு வழியறியாத விராடநாட்டு ராணி சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். சைரந்திரி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய சைரந்திரி, அந் நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, சைரந்திரி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னை சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, சைரந்திரி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று , சைரந்திரியை மீட்டான்.
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[12/31, 07:00] Dr. Ramakrishna Easwaran: கீசகன்
[
[12/31, 07:01] Rohini Ramachandran: Keechakan
[12/31, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கீசகன்
[12/31, 07:01] மீ.கண்ணண்.: கீசகன்
[12/31, 07:01] V N Krishnan.: கீசகன்
[12/31, 07:01] stat senthil: கீச8
[12/31, 07:06] கு.கனகசபாபதி, மும்பை: கீசகன்
[
[12/31, 07:12] sankara subramaiam: கீசகன்
( விடை சரியா? இது பொது அறிவுக் கேள்வி இல்லையே!)
[12/31, 07:14] பானுமதி: கீசகன்
[
[12/31, 07:20] sathish: கீசகன்
[12/
[12/31, 07:27] பாலூ மீ.: கீசகன்.
[12/31, 07:29] Meenakshi: விடை:கீசகன்
[12/31, 07:42] chithanandam: கீசகன்
[12/31, 07:45] ஆர். நாராயணன்.: கீசகன் ( it looks like a GK question ??
[12/31, 08:11] A D வேதாந்தம்: விடை= சீசகன் / வேதாந்தம்
[
[12/31, 08:23] siddhan subramanian: கீசகன்
[12/31, 08:51] V R Raman: கீசகன்
[
[12/31, 09:21] Porchelvi: கீசகன்
[
[12/31, 09:51] Bhanu Sridhar: கீசகன்
[12/31, 10:14] வானதி: *கீசகன்*
[12/31, 11:00] A Balasubramanian: கீசகன்
A.Balasubramanian
[
[12/31, 11:46] G Venkataraman: கீசகன்
[12/31, 11:46] மாலதி: கீசகன்
[12/31, 12:19] shanthi narayanan: கீசகன்
[
[12/31, 17:03] Usha Chennai: கீசகன்
[
[12/31, 19:08] N T Nathan: கீசகன்
[
[12/31, 19:09] balakrishnan: கீசகன்🙏
[
[12/31, 19:34] Bharathi: கீசகன்
[
[12/31, 19:59] Viji - Kovai: கீசகன்
[
[12/31, 20:57] prasath venugopal: கீசகன்
[
[12/31, 21:00] Sucharithra: கீசகன்
***************************.
*இன்றைய உதிரிவெடி!*( 01-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
மிச்சம் உள்ளே வைத்த கனிகோடி பாதியாகக் கொழுந்துவிடும் சினம் (5)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
தீரக்கனல் : கவிதை
பசுபதி
(‘அம்மன் தரிசனம்’ 2001- ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளிவந்த
ஒரு கவிதை.)
🌹🌹🌹🌹🌹🌹
நரகாசுரன் செயலால்விளை ஞாலத்துயர் நீக்க
அரிமாவென எழுந்தான்திரு அரியாகிய கண்ணன்;
பரியோட்டிட வருவேன்துணை எனும்பாமையை நோக்கிச்
சிரித்தேசரி என்றானவன் திரிகாலமும் தெரிந்தே. (1)
மாபாதகன் அசுரேசனின் மாயக்கொடும் போரில்
கோபாலனும் சோர்வுற்றபின் குதிரைக்கயி றேந்திக்
*கோபாக்கினி* நிறையம்பினால் கொடுங்கோலனை மாய்த்த
தீபாவளி வீராங்கனை சீபாமையை மறவோம். (2)
அறவாழ்வினில் அரைப்பங்குடன் ஆணுக்கொரு நிகராய்ப்
பெரும்போரினில் நரகன்வதம் பெண்மைக்கொரு வெற்றி;
விறலாயிழை வில்லேந்திய வீரச்செயல் போற்றும்
திருநாளொளிர் தீபச்சுடர் தீரக்கனல் அன்றோ? (3).
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
********************
_மிச்சம் உள்ளே வைத்த கனிகோடி பாதியாகக் கொழுந்துவிடும் சினம் (5)_
_மிச்சம்_ = *பாக்கி*
_கனிகோடி பாதியாக_
= க\ *னிகோ* \டி
= *னிகோ*
_உள்ளே வைத்த_
= anagram indicator for பாக்கி+னிகோ
= *கோபாக்கினி*
= _கொழுந்துவிடும் சினம்_
**********************
கவிக்கோ அப்துல்ரகுமான், இவரது கவிதைகள் அடித்தளம் செறிந்தவை. மரபுக்கவிதையின் வேர்பார்த்த இவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்.
*சுட்டு விரல்*
இந்த நூலிற்கு கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி!
_இது –_
_உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் *கோபாக்கினி* ._
_என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த என் நெற்றிக் கண்._
_நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம்._
_என் மையின் பிரளயம்._
_அதிசயங்களை¸ அக்கிரமங்களை¸ அவலங்களை நோக்கி நீண்ட என் சுட்டு விரல்._
*_‘யாரையும் குறிப்பிடுவன அல்ல’_*
_என்ற கோழைப் பொய்யில்_ _ஒளிந்துகொள்ள நான் விரும்பவில்லை._
_குறிப்பிட்டவர்களை / குறிப்பிட்வைகளை_ _நோக்கியே என் சுட்டுவிரல்_ _நீண்டிருக்கிறது._
********************
அல்லி மலர் தொடுத்து
அலங்கரிக்கும் கரங்களுக்கு,
ஆயுதம் ஏந்திப்
போரிடவும் தெரியும்........
பாசத்தினால்
பணிந்திருக்கும்
விழிகளுக்குப்
பார்வையினால்
பஸ்பமாக்கவும்
தெரியும்......
கொழுந்து விடும்
எம் *கோபாக்கினியில்*
சாம்பலாகப் போகும்
சருகுகள் எத்தனையோ?
ஜாக்கிரதை .........
எழுதியவர் : குழலி
*************************
_சைவ தத்துவங்கள்_
*மூன்று உயிர்த்தீ -*
உதராக்கினி, காமாக்கினி, *கோபாக்கினி.*
*********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/1, 07:17] திரைக்கதம்பம் Ramarao: கோபாக்கினி
[
[1/1, 07:28] Meenakshi: விடை: கோ பாக்கி னி மிச்சம்=பாக்கி+கனிகோடி பாதி.
[
[1/1, 07:32] மீ.கண்ணண்.: கோபாக்கினி
[
[1/1, 07:43] sathish: கோபாக்கினி
[
[1/1, 08:12] siddhan subramanian: கோபாக்கினி (கோனி + பாக்கி)
[1/1, 08:19] பாலூ மீ.: மிச்சம் = பாக்கி + பாதி கனிகோடி (கோனி) விடை கோபாக்கினி.
[1/1, 07:59] nagarajan: *கோபாக்கனி*
[
[1/1, 08:27] கு.கனகசபாபதி, மும்பை: கோபாக்கினி
[1/1, 08:31] A Balasubramanian: கோபாக்கினி
A.Balasubramanian
[1/1, 08:49] ஆர். நாராயணன்.: கோபாக்கினி
[1/1, 09:16] balakrishnan: கோபாக்கினி🙏👍
[
[1/1, 09:20] வானதி: *கோபாக்கினி*
[1/1, 15:43] N T Nathan: கோபாக்கினி
[1/1, 20:01] sankara subramaiam: கோபாக்கினி
***************************.
*இன்றைய உதிரிவெடி!*( 02-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
ஒரு மன்மதன் அம்பு பாத்திரம் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*மன்மதனின் ஐந்து அம்புகள்-->* தாமரை மலர் , அசோக மலர் , *குவளை* மலர் , மாம்பூ , முல்லை மலர்
🌸🌼🌻🌷🌹
*ஐங்கணைகளின் செயல் :*
_நினைக்கும் அரவிந்தம்-_
_நீள்பசலை மாம்பூ__
_அனைத்துணர்வு நீக்கும் அசோகு -_
_வனத்திலுறு முல்லை கிடைகாட்டும் மாதே -_
_முழுநீலம் கொல்லுமதன் அம்பின் குணம் -_
தாமரை - நினைப்பு ஊட்டும்; மாம் பூ - பசலை நிறம் தரும்; அசோகு - உணர்வை நீக்கும், முல்லை - கிடை காட்டும் (படுக்கச் செய்யும்); நீலம் ( *குவளை* ,நீலோற்பலம்)- கொல்லும்
**********************
_ஒரு மன்மதன் அம்பு பாத்திரம் (3)_
_ஒரு மன்மதன் அம்பு_
= _மன்மதனின் ஐங்கணைகளில் ஒன்று_
= _(ஐந்து அம்புகள்--> தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர்)_
= *குவளை*
= _பாத்திரம்_
**********************
*ஐங்கணைகளின் செயல் :*
_நினைக்கும் அரவிந்தம்-_
_நீள்பசலை மாம்பூ__
_அனைத்துணர்வு நீக்கும் அசோகு -_
_வனத்திலுறு முல்லை கிடைகாட்டும் மாதே -_
_முழுநீலம் கொல்லுமதன் அம்பின் குணம் -_
தாமரை - நினைப்பு ஊட்டும்; மாம் பூ - பசலை நிறம் தரும்; அசோகு - உணர்வை நீக்கும், முல்லை - கிடை காட்டும் (படுக்கச் செய்யும்); நீலம் ( *குவளை* ,நீலோற்பலம்)- கொல்லும்
****************
*தென்காசி ரதி -மன்மதன், ஆவுடையார் கோவில் தலக் கதை ...*
🌻🌻🌻🌻🌻
அறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும்
அடுக்கடுக்காய் *ஐங்கணைகள்* எறிவாய் நீயே
செறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்
செப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில்
நிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும்
நிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ
மறைவாக நின்றென்றும் அம்பை விட்டு
மையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.
🌷🌷🌷🌷🌷
குற்றாலக் குறவஞ்சி எனுமோர் நூலில்
கொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும்
வற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில்
மடைதிறந்த வெள்ளமெனப் பெருகிப் பாயும்
பற்றேதும் இல்லாத பத்தர் கூடப்
பாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு
கற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம்
கற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.
🌹🌹🌹🌹🌹
கரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்
கணையாக விடுகின்ற வேலை வேண்டாம்
சுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை
சுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்
அரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்
அழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்
விருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில்
வெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.
🌺🌺🌺🌺🌺
ஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள்
அகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும்
ஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார்
அனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ?
பைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும்
பாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்?
ஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்
ஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்?
🌸🌸🌸🌸🌸
கவிஞர் சிவசூரி
************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[1/2, 07:00] Usha Chennai: குவளை
[
[1/2, 07:01] திரைக்கதம்பம் Ramarao: குவளை
[1/2, 07:02] Dr. Ramakrishna Easwaran: *குவளை*
காமனின் ஐங்கணைகள்
தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர்
அகர முதலத் திருமால் துதி
ஐம்படை வீரனே ஐம்புலன் வெல்ல
ஐங்கணைத் தாக்கம் காக்கும் ஐயா
[1/2, 07:14] மீ.கண்ணண்.: பூவாளி
[
[1/2, 07:17] balakrishnan: 🙏குவளை👍👌
[1/2, 07:55] nagarajan: *குவளை*
[
[1/2, 08:08] கு.கனகசபாபதி, மும்பை: குவளை
[1/2, 08:13] பாலூ மீ.: குவளை
[1/2, 08:14] A D வேதாந்தம்: விடை= குவளை| வேதாந்தம்
[1/2, 08:38] ஆர். நாராயணன்.: குவளை
ஐங்கணைகள்
தாமரை, அசோக, குவளை,மாம்பூ ,முல்லை
[
[1/2, 08:42] மாலதி: பூ வாளி
[1/2, 09:22] Meenakshi: விடை குவளை
[1/2, 14:06] வானதி: *குவளை*
[1/2, 19:14] siddhan subramanian: குவளை
[
[1/2, 19:29] கு.கனகசபாபதி, மும்பை: குவளை
[
[1/2, 20:08] prasath venugopal: குவளை
***************************