Skip to main content

விடை 4107

இன்று காலை வெளியான வெடி
இவ்விடம் காண‌க் கிடைக்காத பந்து த‌லை சாய நாடு (6)
அதற்கான விடை: இங்கிலாந்து = இங்கிலா (இங்கு இல்லாத) + பந்து - ப

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
"சின்னக் கண்ணம்மா” படத்தில் வரும் இந்த அற்புதமான பாடலைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது. மனதை வருடும் பாடல் இது.
இந்த பாடல் வரிகள் கேட்டால் உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!
நான் வாழ்ந்தது கொஞ்சம்,
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில்கலந்தாய் என் உயிரே!
உன் பூவிழி குறுநகை!
அதில்ஆயிரம் கவிதையே..!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி...
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
*காணக் கிடைக்காத* பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா!

படம் : சின்னக் கண்ணம்மா (1993)
********************
*தலை சாய்த்து* நீ பார்த்தால் குடை சாய்கிறேன் நான் 
தலை சாய்த்து நீ சிரித்தால் 
துள்ளிக் குதிக்கிறேன் நான் 
தலை சாய்த்து நீ முறைத்தால் மடிந்து போகிறேன் நான்...

_மொ.ப.பார்த்தீபன்...
********************
_இவ்விடம் காண‌க் கிடைக்காத பந்து த‌லை சாய நாடு (6)_ 

_இவ்விடம்_
= *இங்கு*

_காண‌க் கிடைக்காத_
= *இல்லா(த)*

_இவ்விடம் காண‌க் கிடைக்காத_
= *இங்கு+ இல்லா*
= *இங்கிலா*

_பந்து த‌லை சாய_
= _[ப]ந்து_ = *ந்து*

_நாடு_
= *இங்கிலா + ந்து*
= *இங்கிலாந்து*
********************
_*தலை சாய்த்து* பக்தர் வழிபாட்டை ஏற்ற ஈசன்!_ 
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது காவிரிக் கரையோரமுள்ள இத்தேவாரத் தலம் திருப்புகலூர்.
கர்ப்பகிருகத்தில் *அக்னீஸ்வரர்* திருக்காட்சி வழங்குகிறார். 
அக்னி பகவான் தவம் செய்து வணங்கிய பெருமான் என்பதால் அக்னீஸ்வரர் எனப் பெயர். பாணாசுரன் தன் தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களை எல்லாம் பெயர்த்து எடுத்துச் சென்றான். அந்த வகையில் இந்த அக்னீஸ்வரரைப் பெயர்க்க முயற்சித்தபோது அவர் அவனுக்குச் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. உடனே தன்னையே பலியிட்டுக்கொள்ள முனைந்திருக்கிறான். அதனைத் தடுத்த சிவபெருமான், அவனுடைய தாயாரின் வழிபாட்டைத் தான் இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டார். அதற்காக சற்றே *தலை* *சாய்த்திருக்கிறார்* .
அந்த லிங்கத் திருவுருவம் இன்றும் கோணிய நிலையில், வளைந்தே இருக்கிறது. 
அதனால் அவர் *_கோணபிரான்_* என்றும் பெயர் பெற்றார். 🙏🏼
********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இருப்பதுக் கல்லில் என்றால், பெருலாபத்திற்குப் பின்னாளில் விற்பதற்கு உத்தி (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....

பணங்களை சேர்த்து *பதுக்கி* வைத்தால் அது மடமை,
ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை,
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்
என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை,
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி
ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை ஹோஹோஹோ...

ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
Nichaya Thamboolam (1961) 
**********************
_இருப்பதுக் கல்லில் என்றால், பெருலாபத்திற்குப் பின்னாளில் விற்பதற்கு உத்தி (5)_

_இருப்பதுக் கல்லில் என்றால்,_
= விடை, " _இருப்பதுக் கல்லில்"_ மறைந்துள்ளது.
= இருப்[ *பதுக்கல்* ]லில்
= *பதுக்கல்*
= _பெருலாபத்திற்குப் பின்னாளில் விற்பதற்கு உத்தி_

**********************
*பதுக்கல் பக்தி*


மணல் கொள்ளை அடித்தும் 
ஒப்பந்தக் கொள்ளையடித்தும் 
கோடி கோடியாய்ப் பணத்தைப் 
பதுக்கி வைத்திருப்பவர்களும் 
இறைவன் கண்களிலும் மண்ணை தூவி 
பக்திக் கொழுந்துகளாய் வலம் வருவார் நம் புண்ணிய பூமியில். 

ஆண்டவனே தங்க அணிகலனில் 
ஜொலிக்கும் போது 
கட்டுக் கட்டாய் பல கோடிகள் 
பதுக்கி வைத்திருப்பவர்க்கு 
தங்க ஆசை வராதென்று 
யார் சொன்னது? 

தங்கமான தங்கமும் இவரிடம் 
கிலோ கணக்கில் தான்! 
மூன்று பட்டங்களுக்குத் தகுதியானவர்: 
மணல் கொள்ளை பேரரசர் 
*பதுக்கல்* பணச் சக்கரவர்த்தி 
இறை நம்பிக்கை இமயம்!

எழுதியவர் : மலர் 
**********************
🙏🏼💐🙏🏼
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[10/5, 07:00] Ramarao திரைக்கதம்பம்: பதுக்கல்

[10/5, 07:02] Meenakshi: விடை: பதுக்கல்

[10/5, 07:03] bala: விடை: பதுக்கல்
- பாலா

[10/5, 07:04] V N Krishnan.: பதுக்கல்

[10/5, 07:07] மாலதி: பதுக்கல்

[10/5, 07:07] Suba: Hello sir, பதுக்கல்

[10/5, 07:07] மீ.கண்ணண்.: பதுக்கல்

[10/5, 07:12] A D வேதாந்தம்: விடை= பதுக்கல்/ வேதாந்தம்

[10/5, 07:13] balakrishnan: பதுக்கல். 🙏

[10/5, 07:17] sathish: பதுக்கல்

[10/5, 07:20] siddhan subramanian: பதுக்கல்

[10/5, 07:21] Viji - Kovai: 5.10.20 விடை
பதுக்கல்

[10/5, 07:23] Mr. KB
ப து க் க ல்-------கி.பா

[10/5, 07:26] Dr. Ramakrishna Easwaran: *பதுக்கல்*

[10/5, 07:30] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:பதுக்கல்

[10/5, 07:36] ஆர். நாராயணன்.: பதுக்கல்

[10/5, 07:54] N T Nathan: பதுக்கல்

[10/5, 08:00] sridharan: பதுக்கல்

[10/5, 08:00] Venkat : பதுக்கல்🙏🏽

[10/5, 08:01] பானுமதி: பதுக்கல்

[10/5, 08:05] nagarajan: *பதுக்கல்*

[10/5, 08:06] வானதி: பதுக்கல்

[10/5, 08:08] akila sridharan: பதுக்கல்

[10/5, 08:10] Usha Chennai: பதுக்கல்

[10/5, 08:15] பாலூ மீ.: விடை பதுக்கல்

[10/5, 08:17] Srikrupa: பதுக்கல்

[10/5, 08:38] chithanandam: பதுக்கல்

[10/5, 09:00] prasath venugopal: பதுக்கல்

[10/5, 07:50] balagopal: Good morning sir.விடை.பதுக் கல்.

[10/5, 10:40] Sucharithra: பதுக்கல்

[10/5, 11:55] கு.கனகசபாபதி, மும்பை: பதுக்கல்

[10/5, 12:10] shanthi narayanan: பதுக்கல்

[10/5, 07:13] sankara subramaiam: பதுக்கல்

************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
தலையணை அணிக்கும் புத்தியில் ஏறும் (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_உறைக்குள்ளே உறையும் *உறைகள்* !_
தினமலர் செய்தித்தாளில் படித்தது,உங்களுக்காக இங்கே 👇
**********************
*உறையூர், உறை மோர், உறையுள்*

'அத்தை வீட்ல போயி உறையூத்த மோர் வாங்கிட்டு வா கண்ணு' என்று அம்மா கூறுகிறார். பாலில் உறைமோர் ஊற்றினால், அது தயிராக உறைந்துவிடும். இங்கே உறை என்பது உறைதல் என்னும் வினைச்சொல்லைக் குறிக்கும். திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு உறைவது. 
சோழநாட்டின் தலைநகரம் உறையூர். இந்த ஊர்ப்பெயரில் உள்ள உறைக்கு என்ன பொருள்?
. இந்த ஊர்ப்பெயரில் உள்ள உறைக்கு என்ன பொருள்? பாலுக்கு உறையூற்றுகிறவர்கள் வாழ்வதால், இவ்வூருக்கு உறையூர் என்று பெயரா? இல்லை. உறைதல் என்றால் வசித்தல் என்றும் பொருள். இவ்வூரில் உறைகின்றவர்கள் என்றால் இவ்வூரில் வசிக்கின்றவர்கள். உணவு உடை உறைவிடம் என்று வரிசைப்படுத்திக் கூறுவோம். இங்கே உறைதல் என்றால் வசித்தல். அதனால்தான் வசிப்பிடமான வீட்டை உறையுள் என்பார்கள்.

**********************
_தலையணை அணிக்கும் புத்தியில் ஏறும் (5)_

_தலையணை அணி_
= *உறை*
_தலையணை அணிக்கும்_
= *உறைக்கும்*

_புத்தியில் ஏறும்_
= *உறைக்கும்*

********************** 
'எதாச்சும் உறையில போட்டு மூடி வைக்கணும். திறந்து வெச்சிருந்தா தூசி பிடிக்கும்' என்கிறோம். ஒன்றை முழுமையாய் மூடித்தரும் பொருளுக்கும் உறை என்றே பெயர். பால் பொட்டலம் உறையிடப்பட்டு வருகிறது. தண்ணீர்ப் பொட்டலம் உறைகளாய் விற்கப்படுகின்றன. *தலையணை உறை* , மெத்தை உறை. 

கறிக்குழம்பு நல்லா உறைப்பா இருக்கு...' என்று கூறுகிறார்கள். குழம்பு நன்கு காரமாக இருந்தால் அப்படிக் கூறுவதுண்டு. இங்கே உறைக்கும் தன்மையாவது காரம். உறைத்தல் என்பது காரமாக இருப்பதைக் குறிக்கும். 
வாள்வைக்கும் இடுப்புப் பையையும் 'உறை' என்பார்கள். 'வாளை உறைக்குள்ளிருந்து வெளியே எடுக்க மாட்டேன். அப்படி எடுத்தால் வெட்டாமல் திரும்ப வைக்கமாட்டேன்' என்பது மன்னர் மிரட்டும் வசனம். 
உறை என்பதற்கான பொருள்கள் இத்தோடு முடிவதில்லை. 'பெருமை, நீளம், உயரம், மழை, வாழ்நாள், துன்பம், பொன்' ஆகிய பொருள்களிலும் 'உறை' என்ற சொல் பயன்படுத்தப்படும். 

(தினமலர்.காம்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/6, 07:00] Ramarao திரைக்கதம்பம்: உறைக்கும்

[10/6, 07:01] sankara subramaiam: உறைக்கும்

[10/6, 07:01] மீ.கண்ணண்.: உறைக்கும்

[10/6, 07:11] பாலூ மீ.: விடை உறைக்கும்

[10/6, 07:27] chithanandam: உறைக்கும்

[10/6, 07:33] Meenakshi: விடை:உறைக்கும்

[10/6, 07:38] K B ...
உ றை க் கு ம் --------கி.பா

[10/6, 07:52] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:உறைக்கும்.

[10/6, 08:01] balakrishnan: 🙏 உறைக்கும்.
என் புத்திக்கு எட்ட இவ்வளவு நேரம் ஆயிற்று👌😄

[10/6, 08:29] siddhan subramanian: உறைக்கும்

[10/6, 08:57] nagarajan: *உறைக்கும்*

[10/6, 09:46] பானுமதி: உறைக்கும்

[10/6, 10:09] வானதி: உறைக்கும்

[10/6, 10:26] கு.கனகசபாபதி, மும்பை: உறைக்கும்

[10/6, 11:32] Viji - Kovai: 6.10.20 விடை
உறைக்கும்

[10/6, 13:33] akila sridharan: உறைக்கும்

[10/6, 17:59] bala: உறைக்கும்?
- பாலா
************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பள்ளம் விழுங்கிய திப்பிலி குறைந்தது எவ்வளவு என்று கணக்கு போடு (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*திப்பிலி* இருவகையாகும். ஈரமானதும், காய்ந்ததுமென்று. இதில் ஈரமான (பச்சையான) திப்பிலி நெஞ்சுக்கூட்டில் சளியை அதிகப்படுத்தும். இனிப்பும் குளிர்ச்சியுமானது. செரிப்பதற்குக் கடினமானதாகவும், நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசை நிறைந்ததாகவும் இருக்கும்.

திப்பிலியை நன்கு காய வைத்து அதிலுள்ள நீர்ப்பசை வற்றிய பிறகு எடுத்தால், ஈரமான திப்பிலியின் பல குணங்களுக்கும் எதிரானதாக இருக்கும். ஆனால் உடலுக்கு நெய்ப்பை தொடர்ந்து தரும்.

சுவையில் காரமாக இருந்தாலும் சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும். நெஞ்சில் சளி நிறைந்து மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும், அதனால் ஏற்படும் இருமலுக்கும் நல்ல மருந்தாகும். மலச்சிக்கலை நீக்கி குடலைச் சுத்தப்படுத்தும்.
**********************
_பள்ளம் விழுங்கிய திப்பிலி குறைந்தது எவ்வளவு என்று கணக்கு போடு (5)_

_பள்ளம்_ = *மடு*

_திப்பிலி குறைந்தது_
= *திப்பி(லி) = திப்பி*

_விழுங்கிய_ = *திப்பி* inside *மடு*
= *மதிப்பிடு*

= _எவ்வளவு என்று கணக்கு போடு_

**********************

*திரிகடுகம்*

_சுக்கு, மிளகு, *திப்பிலி* மூன்றையும் திரிகடுகம் என்பார்கள்._ மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து.

மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும்.

**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/7, 07:00] Ramarao திரைக்கதம்பம்: மதிப்பிடு

[10/7, 07:01] thiru subramanian: மதிப்பிடு

[10/7, 07:04] ஆர். நாராயணன்.: மதிப்பிடு

[10/7, 07:05] Suba: Hello sir, மதிப்பிடு

[10/7, 07:07] பாலூ மீ.:
ம திப்பி டு = மதிப்பிடு

[10/7, 07:13] chithanandam: மதிப்பிடு

[10/7, 07:14] balakrishnan: 🙏 மதிப்பிடு

[10/7, 07:22] மீ.கண்ணண்.: மதிப்பிடு

[10/7, 07:23] வானதி: மதிப்பிடு

[10/7, 07:23] K B :
ம தி ப் பி டு -------கி.பா

[10/7, 07:26] V N Krishnan.: மடு+திப்பி. மதிப்பிடு. கணக்கிடு

[10/7, 07:44] siddhan subramanian: மதிப்பிடு (மடு + திப்பி)

[10/7, 07:51] Meenakshi: விடை: மதிப்பிடு

[10/7, 08:04] prasath venugopal: மதிப்பிடு

[10/7, 08:11] Bharathi: மதிப்பிடு

[10/7, 08:52] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:பலியளவு

[10/7, 10:12] ஆர்.பத்மா: மதிப்பிடு

[10/7, 10:24] nagarajan: *மதிப்பிடு*

[10/7, 10:55] பானுமதி: மதிப்பிடு

[10/7, 11:41] shanthi narayanan: மதிப்பிடு

[10/7, 12:31] Viji - Kovai: 7.10.20 விடை
மதிப்பிடு

[10/7, 13:00] கு.கனகசபாபதி, மும்பை: மதிப்பிடு

[10/7, 15:16] Ramki Krishnan: மதிப்பிடு

[10/7, 15:23] A D வேதாந்தம்: விடை= மதிப்பிடு/ வேதாந்தம்
[
[10/7, 17:18] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:மதிப்பிடு.(முதல் விடை தவறு)

[10/7, 21:30] கோவிந்தராஜன் korea: மதிப்பிடு
************************

Raghavan MK said…
Late entry...
[10/7, 21:54] N T Nathan: மதிப்பிடு
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
வருங்கால முதல்வரை மடக்கிய எமன் சட்டம், ஒழுங்கை கவனித்துக் கொள்பவன் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*விண்ணைக் காப்பான் ஒருவன்-* *காவலன்*

_விண்ணைக் காப்பான் ஒருவன்_
_மண்ணைக் காப்பான் ஒருவன்_
_உன்னைக் என்னை காக்கும்_
_அவனே அவனே இறைவன்_

படம்: காவலன்
**********************
_வருங்கால முதல்வரை மடக்கிய எமன் சட்டம், ஒழுங்கை கவனித்துக் கொள்பவன் (4)_

_வருங்கால முதல்வரை_
= _முதலெழுத்து in வருங்கால_
= *வ*

_எமன்_ = *காலன்*
_மடக்கிய_ = _anagram indicator for வ+காலன்_
= *காவலன்*
= _சட்டம், ஒழுங்கை கவனித்துக் கொள்பவன்_
**********************
*காவலன்*

நான் ஒரு காவலன் மனம் கவர்ந்த கள்வனை மனதோடு பூட்டியதால்..

நான் ஒரு காவலன் அமைதியை
அனைவருக்கும் அள்ளித் தருவதால்..

நான் ஒரு காவலன் கண்ணோடு என் குருத்துகளை காத்திடுவதால்..

நான் ஒரு காவலன் வெயிலோ மழையோ எனக்கு தடையில்லையே..

நான் ‌ஒரு காவலன் காதலால் என் இல்லம் காப்பதில் விடுப்பில்லை

காலனே விருப்பொய்வு தரும் வரை
நான் ஒரு  அன்பு காவலன் என் அன்புடையீருக்கு!!!

By Itsme_appu
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/8, 07:01] Ramarao திரைக்கதம்பம்: காவலன்

[10/8, 07:02] balakrishnan: 🙏 காவலன்

[10/8, 07:03] sankara subramaiam: காவலன்

[10/8, 07:03] மீ.கண்ணண்.: காவலன்

[10/8, 07:03] sathish: காவலன்

[10/8, 07:04] chithanandam: காவலன்

[10/8, 07:06] K B : கி.பா----- ------கா வ ல ன்

[10/8, 07:07] akila sridharan: காவலன்

[10/8, 07:08] Suba: Hello sir, காவலன்

[10/8, 07:10] nagarajan: *காவலன்*

[10/8, 07:11] Srikrupa: காவலன்

[10/8, 07:13] Meenakshi: விடை:காவலன்.

[10/8, 07:14] பாலூ மீ.: கா(வ)லன் விடை காவலன்

[10/8, 07:15] வானதி: காவலன்

[10/8, 07:22] V N Krishnan.: காவலன்

[10/8, 07:22] A D வேதாந்தம்: விடை= காவலன்/ வேதாந்தம்

[10/8, 07:27] உஷா, கோவை: காவலன்

[10/8, 07:40] ஆர். நாராயணன்.: காவலன்
[
[10/8, 07:41] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:காவலன்

[10/8, 07:45] stat senthil: காவலன்

[10/8, 07:45] Venkat UV: காவலன் 🙏🏽

[10/8, 08:01] Dr. Ramakrishna Easwaran: *காவலன்*

[10/8, 08:03] N T Nathan: காவலன்

[10/8, 08:09] siddhan subramanian: காவலன்

[10/8, 08:15] prasath venugopal: காவலன்

[10/8, 08:18] பானுமதி: காவலன்
[
[10/8, 08:33] கு.கனகசபாபதி, மும்பை: காவலன்

[10/8, 10:38] கோவிந்தராஜன் korea: காவலன்

[10/8, 11:01] Viji - Kovai: 8.10.20 விடை
காவலன்

[10/8, 11:10] ஆர்.பத்மா: காவலன்

[10/8, 11:30] shanthi narayanan: காவலன்

[10/8, 11:52] sridharan: காவலன். காலன்+வ

[10/8, 17:18] balagopal: தென்றல்.விடை. கா(வ)லன்.

************************

Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பருப்பாலான தின்பண்டம் வைத்த பாத்திரம் புகலிடம் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_அண்ணன் காட்டிய வழி அம்மா இது அன்பால்_
_விளைந்த பழியம்மா_ _கண்ணை இமையே_ _கெடுத்ததம்மா என்_
_கையே என்னை அடித்ததம்மா_
( _அண்ணன்_ )

_தொட்டால் சுடுவது நெருப்பாகும்_
_தொடாமல் சுடுவது சிரிப்பாகும்_
_தெரிந்தே கெடுப்பது பகையாகும்_
_தெரியாமல் கெடுப்பது உறவாகும்_

_*அடைக்கலம்* என்றே நினைத்திருந்தேன்_
_அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்_
_கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்_
_கும்பிட்ட கைகளை முறித்துவிட்டான்_

(படம்:படித்தால் மட்டும் போதுமா)
*********************
*அடைக்கலம்*

சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்

உயரத் தொங்கும் ஒட்டடை நூல் பிடித்தேறி

உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்

(சொல்வனம்)
**********************
_பருப்பாலான தின்பண்டம் வைத்த பாத்திரம் புகலிடம் (6)_

_பருப்பாலான தின்பண்டம்_
= *அடை*

_பாத்திரம்_
= *கலம்*

_பருப்பாலான தின்பண்டம் வைத்த பாத்திரம்_
= *அடை+கலம்*
= *அடைக்கலம்*

= _புகலிடம்_
**********************
_சிலப்பதிகாரம்_
_கொலைக்களக் காதை_
பாடல்:

_அரும்பெறற் பாவையை *அடைக்கலம்* பெற்ற_
_இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை_
_அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு_
_மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்_ 
_பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க்_

அஃதாவது - மாதரி என்னும் இடைக்குல மடந்தை கவுந்தியடிகளார் அறிவுறுத்தியபடி கண்ணகியையும் கோவலனையும் தன் மனைக்கு அழைத்துச் சென்று அவர்க்கு *அடைக்கலம்* தந்து, ஆர்வத்துடன் வேண்டுவனவெல்லாம் வழங்கக் கண்ணகியும் தனது கைவன்மையால் இனிதுற உணவு சமைத்துக் கணவனுக்கு ஊட்டி அற்றைநாள் இரவின்கண் அங்கிருப்ப; மற்றை நாள் கோவலன் கண்ணகியின் சீறடிச் சிலம்பில் ஒன்றனை விற்றற் பொருட்டுக் கண்ணகியைத் தேற்றுரை பல கூறி வருந்தாதிருவென்று கூறிச் செல்பவன்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ரத்தம் கலந்த சதையை வேடனுக்குத் தந்தவன் எல்லோருக்கும் தெரிந்தது (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************


Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/9, 07:00] Ramarao திரைக்கதம்பம்: அடைக்கலம்

[10/9, 07:01] thiru subramanian: அடைக்கலம்

[10/9, 07:02] மீ.கண்ணண்.: அடைக்கலம்

[10/9, 07:02] Dr. Ramakrishna Easwaran: *அடைக்கலம்*

[10/9, 07:02] balakrishnan: அடைக்கலம்👍

[10/9, 07:07] akila sridharan: அடைக்கலம்

[10/9, 07:13] Meenakshi: விடை:அடைக்கலம்

[10/9, 07:15]
அ டை க் க ல ம் ------கி.பா

[10/9, 07:18] A D வேதாந்தம்: விடை= அடைக்கலம்/ வேதாந்தம்

[10/9, 07:23] Venkat : அடைக்கலம் 🙏🏽

[10/9, 07:30] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:அடைக்கலம்

[10/9, 07:35] Ravi Subramanian: அடைக்கலம்

[10/9, 07:48] பாலூ மீ.: அடை + கலம் அடைக்கலம்

[10/9, 07:48] கு.கனகசபாபதி, மும்பை: அடைக்கலம்

[10/9, 08:00] prasath venugopal: அடைக்கலம்

[10/9, 08:09] nagarajan: *அடைக்கலம்*

[10/9, 08:12] N T Nathan: அடைக்கலம்

[10/9, 08:29] பானுமதி: அடைக்கலம்

[10/9, 08:34] வானதி: அடைக்கலம்

[10/9, 08:51] Bharathi: அடைக்கலம்

[10/9, 08:54] siddhan subramanian: அடைக்கலம்

[10/9, 09:05] மாலதி: அடைக்கலம்

[10/9, 09:33] ஆர். நாராயணன்.: அடைக்கலம்

[10/9, 07:47] chithanandam: அடைக்கலம்

[10/9, 11:52] shanthi narayanan: அடைக்கலம்

[10/9, 13:41] ஆர்.பத்மா: அடைக்கலம்

[10/9, 15:21] sankara subramaiam: அடைக்கலம்
************************
Raghavan MK said…
Yesterday's solvers list posted above!
I just missed to post it yesterday!
Sorry friends! 🙏
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-10 -20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*சிபி சக்கரவர்த்தி*

_கூர்மையான நகங்களை உடைய கழுகின் தாக்குதலால், புண் எய்தி தன்னிடம் தஞ்சம் அடைந்த ஒரு புறாவுக்காகத் தன் தசையைத் தந்தான் மன்னன் , *சிபி* சக்கரவர்த்தி_
*********
ஒரு பருந்தால் துரத்தப்பட்ட புறா ஒன்று செம்பியன் என்று அழைக்கப்பட்ட சிபி என்ற சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தது. அப்புறாவுக்குப் பதிலாக, அதன் எடைக்கு எடை ஈடாகத் தன் தசையை அளிப்பதாகவும் அந்தப் புறாவை இன்னலுக்குள்ளாக்க வேண்டாம் என்றும் அந்தப் பருந்தை சிபி வேண்டிக்கொண்டான். அந்தப் பருந்து அதற்கு சம்மதித்தது. புறாவைத் தராசின் ஒரு தட்டில் வைத்து அதற்கு எதிராக சிபி தன் உடலிலிருந்து தன் தசையை வெட்டிவைத்தான். சிபி, தன் தசைகளை எவ்வளவு வெட்டிவைத்தாலும் புறாவின் எடைக்கு சமனாகவில்லை. கடைசியாக, சிபி, தானே அந்தத் தராசில் புகுந்தான். பின்னர், அந்தப் புறாவும் அதைத் துரத்தி வந்த பருந்தும் தாங்கள் தேவர்கள் என்பதையும் அவர்கள் சிபியைச் சோதிப்பதற்காக அவ்வாறு வந்ததாகவும் கூறினர். இது ஒரு கதை. இந்தக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலமாக நிலவி வந்திருக்கிறது!

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

_ரத்தம் கலந்த சதையை வேடனுக்குத் தந்தவன் எல்லோருக்கும் தெரிந்தது (6)_

_சதையை வேடனுக்குத் தந்தவன்_
= *சிபி* (சக்ரவர்த்தி)
( வேடன், இங்கு புறாவை *_வேட்டையாட_* வந்த பருந்தை குறிக்கும்)

_ரத்தம் கலந்த சிபி_
= _கலந்த_ anagram indicator for *ரத்தம் + சிபி*
= *பிரசித்தம்*
= _எல்லோருக்கும் தெரிந்தது_
**********************
*சிலப்பதிகாரத்தில் சிபி*
_அரசன் வினாவும் கண்ணகி விடையும்_

தனது ஆணைப்படி, தன்முன் வந்து நின்ற கண்ணகியை நோக்கி அரசன் “நீர் ஒழுகும் கண்களுடன் எம்முன் வந்திருப்பவளே! இளையவளே! நீ யார்?” எனக் கேட்டான்.

“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். _தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின *சிபி* என்னும் செங்கோல் மன்னனும்;_ தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.

_தேரா மன்னா செப்புவது உடையேன்_
_எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்_
_*புள்ளுறு புன்கண் தீர்த்தோன்* அன்றியும்_ 
_வாயிற் கடைமணி நடுநா நடுங்க_
_ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்_
_அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்_
_பெரும்பெயர்ப் புகார்என் பதியே_

(வழக்குரை காதை : 50-63)
**********************
_காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் மற்றும் மூன்று 'கோடி' ரொம்ப *பிரசித்தம்”*_

-- நடை,வடை,குடை

*நடை*
வரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண்கொள்ளாக் காட்சி

*வடை*
அடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை.,காஞ்சிபுரம் இட்லி – நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு வடை பல நாள்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

*குடை*
காஞ்சிபுரத்தில்தான் கோயில்களுக்கான குடை தயாரிப்பவர்கள் பல பேர் ஆண்டாண்டுக் காலமாக இருந்து வருகிறார்கள்

' *கோடி’கள்”*

மூன்று ‘டை’கள் போலவே மூன்று ‘கோடி’கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன .காமாட்சியம்மன் கோயில் விமானத்துக்கு காமகோடி விமானம் என்று பெயர். ஏகாம்பரேஸ்வரர் விமானம், ருத்ரகோடி விமானம்; வரதராஜர் கோயில் விமானம்,புண்யகோடி விமானம்!

இவ்வளவு நுட்பமான தகவல்களை
கூறியவர்கள் *மகா பெரியவாள்.*

பரம்பரை பரம்பரையாகக் காஞ்சிபுரத்தில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட, இந்த செய்தித்துளிகள் தெரிந்திருக்காது.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[10/10, 07:00] Ramarao திரைக்கதம்பம்: பிரசித்தம்

[10/10, 07:01] Ravi Subramanian: பிரசித்தம்

[10/10, 07:01] Sucharithra: பிரசித்தம்

[10/10, 07:15] பாலூ மீ.: சிபி + ரத்தம் கலந்து = பிரசித்தம் = எல்லோருக்கும் தெரிந்தது

[10/10, 07:26] Meenakshi: இன்றையவிடை:பிரசித்தம்(ரத்தம்+சிபி)

[10/10, 07:28] மீ.கண்ணண்.: பிரசித்தம்

[10/10, 07:43] Viji - Kovai: 10.10.20விடை
பகிரங்கம்
பகிர்+அங்கம்

[10/10, 07:53] Dr. Ramakrishna Easwaran: பிரசித்தம்
(சிபி+ரத்தம்)*
சிபி தன் சதையைத் தந்தது ஒரு பருந்துக்காக என்று தான் கதை அல்லவா?

[10/10, 08:01] ஆர்.பத்மா: பிரசித்தம்

[10/10, 08:07] பானுமதி: பிரசித்தம்

[10/10, 08:20] nagarajan: *பிரசித்தம்*

[10/10, 08:25] balakrishnan: 🙏. பிரசித்தம்

[10/10, 08:50] வானதி: பிரசித்தம்

[10/10, 08:53] siddhan subramanian: பிரசித்தம் (சிபி + ரத்தம்)

[10/10, 09:24] ஆர். நாராயணன்.: பிரசித்தம்

[10/10, 12:57] மாலதி: பிரசித்தம்

[10/10, 13:10] கு.கனகசபாபதி, மும்பை: பிரசித்தம்

[10/10, 15:56] A D வேதாந்தம்: விடை= பிரசித்தம்/ வேதாந்தம்

[10/10, 17:46] K B:
பிரசித்தம் -----கி.பா

[10/10, 19:38] Ramki Krishnan: பிரசித்தம்

************************

viji said…
பேருந்தை வேடனாக எண்ணாததால்
சிபிஐ ரத்தத்துடன் கலக்க முடியவில்லை.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்