Skip to main content

விடை 4091


இன்று காலை வெளியான வெடி:
கேட்பதற்கு ஞானமில்லா கிராமத்து மக்கள் பரதன் நிராகரித்தது (6)
அதற்கான விடை: அரியாசனம் = அரியா+சனம் [அரியா  --> கேட்பதற்கு அறியா போலிருக்கும்]
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
_பரிபூரண அறிவே *ஞானம்* . பூரணம் என்றால் முழுமை. முற்றும் *அறிந்தவனே* – உணர்ந்தவனே பரிபூரணன். -ஞானி._
*******************
_யார் தருவார் இந்த *அரியாசனம்*_
_புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்_
_அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்_

_பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்_
_உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்_
_சேரும் சபையறிந்து செல்லாதவன்_
_அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு_

_யார் தருவார் இந்த அரியாசனம்_
_புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்_

(Movie :Mahakavi Kalidas Year1966.)
********************
_கேட்பதற்கு ஞானமில்லா கிராமத்து மக்கள் பரதன் நிராகரித்தது (6)_

_ஞானமில்லா (த)_
= *அறியா* (த)

_கேட்பதற்கு_
= *அறியா -->அரியா* ( _ஒலிப்பது_ )

_கிராமத்து மக்கள்_
= *சனம்*

_பரதன் நிராகரித்தது_
= *அரியா+சனம்*
= *அரியாசனம்*
********************
*மயங்கொலிச் சொற்கள்* என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் *கேட்பதற்கு*
நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
*ர, ற பொருள் வேறுபாடு*

*அரி* - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன், சிங்கம்.
*அறி* - அறிந்துகொள்
********************
*யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் ?*

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது *கிரீடம், சங்கு, சக்கரம்* முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, *பாதரக்ஷைகளையும்* தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.
பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
 எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

  *“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.”* என்றும் எள்ளி நகையாடின.

பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.

அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.

உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட
விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை *அரியாசனத்தில்* நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல்,  அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை *அரியாசனத்தில்* வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

_இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக் கொள்ளுங்கள்_ .

இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில்
‘சடாரி’ யில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ளது!🙏🏼

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 15-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

அழகி மேலே செல்ல வம்பர் பாதி தொடர்வது திடமாக இல்லை (4)
**********************

(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 15-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் 
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் 
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் 
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் 

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான் 
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான் 
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும் 
அவள் நினைவாலே என் காலம் செல்லும் 
(நான் பார்த்ததிலே) 

(அன்பே வா --1966)
**********************
_அழகி மேலே செல்ல வம்பர் பாதி தொடர்வது திடமாக இல்லை (4)_

_அழகி_ = *ரதி*

_மேலே செல்ல_
= *ரதி-->திர*

_வம்பர் பாதி_ = *வம்*

_தொடர்வது_
= *திர+வம்*
= *திரவம்*
= _திடமாக இல்லை_
**********************
_நீங்கள் ஒரு விஷயத்தில் *திடமாக இல்லை* என்றால், வேறு வழியில் பயணிக்க வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்._

  *ரிச்சர்டு பெயின்மான்* 
**********************
*விடையளித்தோர் பட்டியல்!*
**********************
[6/15, 07:01] Ramarao : திரவம்

[6/15, 07:03] akila sridharan: திரவம்.
அழகி=ரதி
திர+வம்

[6/15, 07:05] balakrishnan: Thiravam🙏🏻

[6/15, 07:06] N T Nathan: திரவம்.
அழகி = ரதி.
மேலே செல்ல = திர. வம்பர் பாதி = வம்

[6/15, 07:10] Meenkshi: விடை:திரவம்.

[6/15, 07:12] sankara subramaiam: திரவம்

[6/15, 07:21] ஆர். நாராயணன்.: திரவம்

[6/15, 07:22] மீ.கண்ணண்.: திரவம்

[6/15, 07:25] Dhayanandan: திரவம் ரதி+வம்

[6/15, 07:25] nagarajan: *திரவம்*

[6/15, 07:56] prasath venugopal: அழகி - ரதி
மேலே செல்ல - திர
வம்பர் பாதி - வம்
திடமாக இல்லை - திரவம்.

[6/15, 08:28] Dr. Ramakrishna Easwaran: *திரவம்*
அழகி=ரதி, <--- = *திர*
வம்பர் பாதி= *வம்*
திர+வம் = திடமில்லாத (பொருள்)

[6/15, 08:51] V N Krishnan.: திரவம். (திடம் இல்லை)

[6/15, 09:02] stat senthil: திரவம்

[6/15, 09:07] siddhan submn: திரவம் : ரதி + வம்

[6/15, 10:12] கு.கனகசபாபதி, மும்பை: திரவம்.
ரதி+வம்

[6/15, 11:16] shanthi narayanan: திரவம்

[6/15, 12:34] Bharathi: திரவம்

[6/15, 14:35] பாலூ மீ.: ரதி (திரும்) + வம் = திரவம்.
********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 16-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************

பழந்தமிழ்ப் பெண்கள் குணம் அங்கே மதப்பணியையே குறிக்கோளாகக் கொண்டவரை நாடச் செய்யும்! (3)

**********************

(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 16-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
*மடம், பயிர்ப்பு என்பது என்ன தெரியுமா?*


பெண்களுக்கு முக்கியமாக அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்கள் இருக்க வேண்டும் என்பார்கள்.

இவற்றில் அச்சம், நாணம் ஆகியவற்றைப் பற்றிப் பலருக்குச் சந்தேகம் எழுவதில்லை. ஆனால் மடம், பயிர்ப்பு என்பவை எதைக் குறிக்கின்றன?
மடம் என்பதற்குக் 'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை' என்று பொருள் கூறுவர். யாரேனும் ஒன்றைச் சொன்னால் அதைக் கேட்டுக்கொண்டு, அது தனக்குத் தெரிந்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருத்தல் அது. ஒருவகை அடக்கம் அது.

பயிர்ப்பு என்பது பிற ஆடவரைத் தொடும்படி நேர்ந்தால் உண்டாகும் அருவருப்பு உணர்ச்சி.

தினமணி கதிரில் வெளியானது
**********************
பழந்தமிழ்ப் பெண்கள் குணம் அங்கே மதப்பணியையே குறிக்கோளாகக் கொண்டவரை நாடச் செய்யும்! (3)

பழந்தமிழ்ப் பெண்கள் குணம்
= மடம்

மதப்பணியையே குறிக்கோளாகக் கொண்டவரை நாடச் செய்யும் அங்கே
= மடம்
**********************
மடம் நாடி வந்த நல்லோர்கள்!
**********************

[6/16, 07:01] chennai usha: மடம்
[
[6/16, 07:02] Ramarao : மடம்

[6/16, 07:02] sathish: மடம்

[6/16, 07:03] Ramki Krishnan: Madam

[6/16, 07:04] Suba: Hello sir, மடம்

6/16, 07:04] கு.கனகசபாபதி, மும்பை: மடம்

[6/16, 07:05] ஆர். நாராயணன்.: மடம் ??

[6/16, 07:06] Venkat UV: மடம் 🙏🏽

[6/16, 07:07] sankara subramaiam: மடம்

[6/16, 07:12] Dhayanandan: மடம்

[6/16, 07:23] nagarajan: *மடம்*

[6/16, 07:25] பாலூ மீ.: மடம்.
அச்சம் நாணம் மடம்.

[6/16, 07:46] Meenkshi: விடை:மடம்

[6/16, 08:13] A D வேதாந்தம்: விடை= மடம்/ வேதாந்தம்.

[6/16, 08:29] மீ.கண்ணண்.: மடம்?

[6/16, 08:36] siddhan submn: மடம்

[6/16, 08:46] chithanandam: மடம்?

[6/16, 08:51] Dr. Ramakrishna Easwaran: *மடம்* as in
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு and a religious institution- double definition

[6/16, 08:54] prasath venugopal: மடம்

[6/16, 12:46] Rajalakshmi Krishnan: Madam

[6/16, 14:55] balakrishnan: Madam 🙏🏻

**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 17-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
முற்றுப்பெறா வானம் அடங்க ஒரு மொழி உண்டானது (5)

**********************

(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 17-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
_ராகங்கள் பதினாறு *உருவான* வரலாறு நான் பாடும்போது அறிவாயம்மா_ 

_பலனூறு ராகங்கள் இருந்தாலென்ன  பதினாறு பாட சுகமானது_ 
 
_இலையோடு கொடிபோல நடமாடினாள்_ 
_இடையாட வலையாட சலங்கைகள ஆட _
_உலகாளும் உமையாளின்_ _ராகபாவங்கள்_ 
_ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா_ 

_ராகங்கள் பதினாறு உருவான வரலாறு_ 
_நான் பாடும்போது அறிவாயம்மா_

(தில்லு முல்லு)
**********************
_முற்றுப்பெறா வானம் அடங்க ஒரு மொழி உண்டானது (5)_

_முற்றுப்பெறா வானம்_
= *வான(ம்)*
= *வான*

_ஒரு மொழி_
= *உருது*

_அடங்க_ = indicator for anagram of *உருது+வான* ( வான உருது க்குள் அடங்க)
= *உருவானது*
= _உண்டானது_
**********************
_பல நூற்றாண்டுகள் ஆகுமாமே_
_ஒரு வைரம் *உருவாக* ._

_நீ மட்டும் எப்படி பத்தே மாதத்தில்_ *_உருவானாய்?_*

(கணேஷ்)
************************
விடையளித்தோர் பட்டியல்!
**********************
[6/17, 07:03] Ramarao : உருவானது

[6/17, 07:07] மீ.கண்ணண்.: உருவானது

[6/17, 07:10] V N Krishnan.: உருவானது! உருது +வான

[6/17, 07:13] பாலூ மீ.: உருது + வான = உருவானது

[6/17, 07:28] chithanandam: உருவானது

[6/17, 07:22] balakrishnan: Uruvaanadhu🙏🏻
Vaazhga valamudan!

[6/17, 07:36] nagarajan: *உருவானது*

[6/17, 07:43] Suba: Hello sir, உருவானது

[6/17, 07:48] Dhayanandan: உருவானது

[6/17, 08:09] Meenkshi: விடை:உருவானது.
மொழி=உருது

[6/17, 08:15] prasath venugopal: உருவானது

[6/17, 08:30] siddhan submn: உருவானதுகு (வான(ம்) + உருது
[
[6/17, 08:43] siddhan submn: உருவானது

[6/17, 11:02] ஆர். நாராயணன்.: உருவானது {உரு(வான)து}

[6/17, 13:02] உஷா, கோவை: உருவானது

[6/17, 14:14] sankara subramaiam: உருவானது

[6/17, 19:37] N T Nathan: உருவானது

************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 18-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
மரம் வெட்டி மரணம் அவ்விடம் நுழைய தெய்வம் தோன்றும் (4)

**********************

(இனி காலை 7.00 மணிக்கு புதிர் பதிவாகும்)

உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .

(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 18-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
*********************
*இலக்கியங்களில் அணங்கு:*

பொதுவாக இலக்கியங்களில் *“அணங்கு”* என்ற சொல் வருத்தும்-
தெய்வத்தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்கொள்ளப்படுவதைக்  காணமுடிகிறது. இங்கு எடுத்துக்காட்டுகளாகக் குறளில்  இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்தும் காணலாம்.

 (i) *குறள்* : *_அணங்கு_* என்ற சொல் குறளில் மூன்று இடங்களில் காட்டப்படுகின்றன.

_(1) ஆயும் அறிவினர் அல்லார்க் அணங்கென்ப_

_மாய மகளிர் முயக்கு._ (குறள் 918)

*பொருள்* : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு *அணங்கு* தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர். (மு. வரதராசனார் உரை)

(2)    _அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை_

_மாதர்கொல் மாலும்என் நெஞ்சு._ (குறள் 1081)

*பொருள்* : தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. (மு. வரதராசனார் உரை)

(3)    _நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு_

_தானைக்கொண் டன்ன துடைத்து_ . (குறள் 1082)

*பொருள்* : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. (மு. வரதராசனார் உரை)

மேற்காணும் குறள்களில் அணங்கு என்பது  வருத்துந் தெய்வம் என்ற பொருளையே காட்டி நிற்கிறது.
********************
_மரம் வெட்டி மரணம் அவ்விடம் நுழைய தெய்வம் தோன்றும் (4)_

_மரம் வெட்டி மரணம்_
= *மரணம் - மரம்*
= *ண*

_அவ்விடம்_ = *அங்கு*

_நுழைய_
= _indicator for placing ண inside அங்கு_
= *அணங்கு*

= _தெய்வம் [தோன்றும்]_
**********************.
Raghavan MK said…
*********************
அணங்கு கண்டு தொழுதவர்கள்!
**********************
[6/18, 07:00] Ramarao : அணங்கு

[6/18, 07:03] chithanandam: அணங்கு

[6/18, 07:04] V N Krishnan.: அங்கு+ண=அணங்கு

[6/18, 07:04] sankara subramaiam: அணங்கு

[6/18, 07:11] balakrishnan: Anangu🙏🏻🤣

[6/18, 07:18] Suba: Hello sir,அணங்கு

[6/18, 07:18] N T Nathan: அணங்கு

[6/18, 07:19] Dhayanandan: அணங்கு
,
[6/18, 07:23] Bharathi: அணங்கு

[6/18, 07:26] Ramki Krishnan: ANangu (Na in angu)

[6/18, 07:27] Dr. Ramakrishna Easwaran: *அணங்கு* *மரணம்-மரம்= ண
அவ்விடம்= அங்கு
(அங்கு+ண)*
*அணங்கு என்றால் பெண். தெய்வம் என்று பொருளும் உண்டு*

[6/18, 07:27] பாலூ மீ.: *மரணம் _மரம் = ண+அவ்விடம் அங்கு = விடை அணங்கு.*

[6/18, 07:42] Meenkshi: விடை:அணங்கு
*மரணம்--மரம்+அங்கு*

[6/18, 07:48] ஆர். நாராயணன்.: *அணங்கு , அணங்கு என்றால் தெய்வம் என்று ஒரு பொருள் உண்டென்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்*

[6/18, 08:20] prasath venugopal: அணங்கு

[6/18, 08:25] siddhan submn: அணங்கு *(அங்கு + மரணம் - மரம்*

[6/18, 08:28] akila sridharan: அணங்கு

[6/18, 09:43] nagarajan: *அணங்கு*

[6/18, 10:19] கு.கனகசபாபதி, மும்பை: அணங்கு; *அங்கு+மரணம்—மரம்*

[6/18, 11:32] உஷா, கோவை: அணங்கு

[6/18, 12:21] Viji - Kovai: 17.6.2020 புதிர் விடை
அணங்கு

[6/18, 20:19] Rajalakshmi Krishnan: aNangu
*************************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 19-06-20)
from 
*Vanchi's archive-2009*
(தென்றல்)
**********************
உயிரும் மெய்யும் நீக்கி அணைத்து மயங்கியிருக்க ஆதரவாய் ஒருவர் (2)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
 
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 19-06-20)
from
*Vanchi's archive-2009*
(தென்றல்)

********************
*துணை* 

கண்கள் கலங்கும் போது
இரு கை கொண்ட துணை வேண்டும்.                 
இதயம் கலங்கும்  போது
மனம் கொண்ட துணை வேண்டும்.

கால் தடு மாறும் போது
கை கொண்ட துணை வேண்டும்.

கண் பார்வை குறையும் போது
இரு கால்  கொண்ட துணை வேண்டும்.

இதயம் தடுமாறும் போது
புத்தி கொண்ட  துணை வேண்டும்.

என் வாழ்க்கை தெரிவின் போது
நீயே துணையாக வேண்டும்.
(by  mirasia )
*********************
_உயிரும் மெய்யும் நீக்கி அணைத்து மயங்கியிருக்க ஆதரவாய் ஒருவர் (2)_

_உயிரும் மெய்யும் நீக்கி அணைத்து_
= *அணைத்து* இதில் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் நீக்கிட வருவது
= [அ] *ணை* [த்] *து*
= *ணைது*

மயங்கியிருக்க
= _anagram indicator for_ *ணைது*
= *துணை*

= _ஆதரவாய் ஒருவர்_
**********************

*நீயே உனக்கு துணை* 

வெயிலில் உன்னை தொடர்ந்து 
வரும் நிழல்
வெளிச்சம் உள்ள வரை மட்டும் தான் ....

உறவுகளும் 
அப்படித்தான் உன் 
தேவை
இருக்கும் வரை உன்னோடே இருப்பார்கள்

பின்
இருட்டில் நிழல் 
மறைவதை போல
அவர்களின் உருவமும் உன்னிடமிருந்து
விலகி போகும் ...

மற்றவர்களை நம்பு  
ஆனால்
அதைவிட பன்மடங்கு
உன்னை நம்பு ...

*நீயே உனக்கு* 
*துணை* ..... !!!!

( _சைலஜா_)
**********************
துணை நின்று விடையை பகிர்ந்தளித்தவர்கள்!
**********************
[6/19, 07:03] Ramarao : துணை

[6/19, 07:04] V N Krishnan.: துணை

[6/19, 07:05] balakrishnan: Thunai 👌🙏🏻🤣

[6/19, 07:06] sankara subramaiam: துணை

[6/19, 07:06] மீ.கண்ணண்.: துணை

[6/19, 07:07] akila sridharan: துணை

[6/19, 07:18] stat senthil: துணை

[6/19, 07:19] prasath venugopal: துணை

[6/19, 07:20] பாலூ மீ.: துணை.

[6/19, 07:27] Meenkshi: விடை:துணை

[6/19, 07:28] Suba: Hello sir,துணை

[6/19, 07:28] N T Nathan: துணை

[6/19, 07:29] nagarajan: *துணை*

[6/19, 07:37] Viji - Kovai: 19.6.2020 விடை
துணை
அணைத்து_ அ, த்=துணை

[6/19, 07:37] உஷா, கோவை: துணை

[6/19, 07:45] chithanandam: , துணை

[6/19, 08:03] Dr. Ramakrishna Easwaran: *துணை*
அணைத்து என்ற சொல்லில் உயிரெழுத்து (அ), மெய்யெழுத்து (த்) இரண்டும் நீக்கி எஞ்சியதைப் புரட்டிப் போட்டு வருவது (மயங்கி என்பது anagram indicator)
பொருள்=ஆதரவானவர்

[6/19, 08:06] sathish: துணை

[6/19, 09:07] கு.கனகசபாபதி, மும்பை: துணை; அணைத்து—அ,த்

[6/19, 09:22] chennai usha: துணை

[6/19, 09:43] siddhan submn: (அ) ணைத (த்) து = துணை

[6/19, 15:37] balagopal: துணை.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 20-06-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
நெருங்கிவர அழகாய்த் தொடங்கும் கரும்பின் வளையம் எதிர்வரும் (3)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)

இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
***********
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய புதிர்!*( 20-06-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
********************
*'கணு'* என்பது அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு 
உறுப்புகள் சேரும் இடத்தைக் குறிப்பது.
எ.டு: _கரும்பின் கணுப் பகுதி,_ நம் உடம்பிலேயே அமைந்துள்ள கணுக்கால் பகுதி போன்றவை.
********************
_நெருங்கிவர அழகாய்த் தொடங்கும் கரும்பின் வளையம் எதிர்வரும் (3)_

_அழகாய்த் தொடங்கும்_
= *அழகாய்* _முதலெழுத்து_
= *அ*

_கரும்பின் வளையம்_
= *கணு*
_எதிர்வரும்_
= *கணு ---> ணுக*

_நெருங்கிவர_
= *அ+ ணுக*
= *அணுக*
********************
__விநாயகர் அகவல்_
_ஔவையார்__
********************
_எல்லை இல்லா ஆனந்தம் அளித்து,_
_அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்_

_சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி_

_அணுவிற்(கு) அணுவாய்_ _அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)_
_*கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி*_

_வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்_
_கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி_

_அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை_
_நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்_

_தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட_
_வித்தக விநாயக விரைகழல் சரணே!_

*பொருள்* :
எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்து 
துன்பங்கள் தவிர்த்து அருள் வழியைக் காட்டி.

நாதமாகிய புறவுலகிலும் சித்தமாகிய அகவுலகிலும் சிவனைக் காணும்படிச் செய்து.

சிறியவற்றிற்குச் சிறியதாகவும் பெரியவற்றுக்கு பெரியதாகவும் உள்ள ,
என் உள்ளேயே *கணு முற்றி நின்ற கரும்பாக* நேரில் அனுபவித்து உணரக் கூடிய ரசமாக இருப்பதைக் காட்டி.

சிவ வேடமும் திருநீறும் விளங்கும் ஸாருப்ய நிலையை எனக்கு நிலையாக அளித்து மெய்த் தொண்டர் குழாம் என்ற ஸ்லோகத்தை அளித்து.

ஐந்தெழுத்தின் மேலான நெஞ்சில் நிலையாக இருக்கும்படி அறிவித்து.

உண்மை நிலையை எனக்கு அருளி என்னை ஆட்கொண்ட ஞான வடிவாகிய விநாயகப் பெருமானே! நறுமணம் கமழும் உன் பாதங்கள் சரணம்!
💐🙏🏼💐
*************************
Raghavan MK said…
***************************
விடையளித்தோர் பட்டியல்
***************************

[6/20, 07:00] Ramarao திரைக்கதம்பம்: அணுக

[6/20, 07:01] sankara subramaiam: அணுக

[6/20, 07:02] balakrishnan: Aruga 🙏🏻

[6/20, 07:03] ஆர். நாராயணன்.: அணுக

[6/20, 07:10] Meenkshi: இன்றையவிடை:அணுக

[6/20, 07:12] பாலூ மீ.: கணு+அ = அணுக

[6/20, 07:14] மீ.கண்ணண்.: அணுக

[6/20, 07:20] Dhayanandan: Anuku

[6/20, 07:24] N T Nathan: அணுக

[6/20, 07:27] nagarajan: *அணுக*

[6/20, 07:42] A D வேதாந்தம்: விடை=அணுக/ வேதாந்தம்

[6/20, 07:48] chithanandam: அணுக

[6/20, 08:30] உஷா, கோவை: அணுக

[6/20, 08:32] Suba: Hello sir, அணுக

[6/20, 08:40] Viji - Kovai: 20.6.2020 விடை
அணுக

[6/20, 08:53] akila sridharan: அருக

[6/20, 08:59] கு.கனகசபாபதி, மும்பை: அருக

[6/20, 09:18] chennai usha: அணுக

[6/20, 09:36] prasath venugopal: அணுக

[6/20, 09:51] Dr. Ramakrishna Easwaran: *அணுக*
அழகாய்த் தொடங்க= அ
கரும்பின் வளையம்= கணு
எதிர்வரும் கணு = ணுக
அ+ணுக= நெருங்கிவர

[6/20, 10:49] Ramki Krishnan: ANuga
A + kaNu reverse

[6/20, 10:55] Bharathi: அணுகு

[6/20, 11:54] shanthi narayanan: அணுக
சாந்தி நாராயணன்

[6/20, 13:46] Rajalakshmi Krishnan: aNuga

[6/20, 15:40] balagopal: அணுக.
******************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்