ேற்று காலை வெளியான வெடி:
நான்கு, ஐந்து, ஆறாம் முடிச்சை வாங்கியவள் பாதி யானையோ? (5, 3)
இதற்கான விடை இரண்டாம் மனைவி
னை = பாதி யானை
னை = 'இரண்டாம்' ம,னை,வி
ஆங்கிலப் புதிர்களில் reverse anagram என்ற உத்தியைக் கையாள்கிறார்கள். அதில் விடையைக் கேள்வியாகப் படித்தால் விடையின் விளக்கம் புலனாகும். அதை இன்று கையாண்டுள்ளேேன். இந்தப் புதிர் அதனால் அதிகமாகக் குழப்பியிருக்கும். அதையும் மீறி விடையக் கண்டுபிடித்த மீ.பாலு, கேசவன் இருவர்க்கும் பாராட்டுகள்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
நான்கு, ஐந்து, ஆறாம் முடிச்சை வாங்கியவள் பாதி யானையோ? (5, 3)
இதற்கான விடை இரண்டாம் மனைவி
னை = பாதி யானை
னை = 'இரண்டாம்' ம,னை,வி
ஆங்கிலப் புதிர்களில் reverse anagram என்ற உத்தியைக் கையாள்கிறார்கள். அதில் விடையைக் கேள்வியாகப் படித்தால் விடையின் விளக்கம் புலனாகும். அதை இன்று கையாண்டுள்ளேேன். இந்தப் புதிர் அதனால் அதிகமாகக் குழப்பியிருக்கும். அதையும் மீறி விடையக் கண்டுபிடித்த மீ.பாலு, கேசவன் இருவர்க்கும் பாராட்டுகள்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[1/23, 06:32] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: இரண்டாம் மனைவி எனக் குறிப்பிட்டுள்ளார். இருவர் மட்டுமே விடை கண்டுள்ளனர். வாழ்த்துகள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்🙏🙏🙏
[1/23, 13:06] sankara subramaiam: மாங்கல்யத்தில் முதல் மூன்று முடிச்சு முதல் மனைவிக்கு. நான்கு, ஐந்து, ஆறாவது இரண்டாம் மனைவிக்காம்.
பாதி யானை = னை
னை என்ற விடைக்கு clue:
இரண்டாம் ம'னை'வி!
( of course, I could not solve it 🤣)
[1/23, 13:19] Meenakshi: பாதி யானை சரி.ம,வி எங்கிருந்து வந்ததாம்?
[1/23, 13:21] Meenakshi: நானும் இந்த விடை போடநினைத்து ம னை வி க்கு விளக்கம் புரியாததால் போடவில்லை😞
[1/23, 13:42] prasath venugopal: முடிச்சு போட்டு சொந்தமாவது மனைவி மட்டுமே... நான்காம், ஐந்தாம் ஆறாம் முடிச்சு என்பதன் மூலம் இரண்டாம் மனைவி எனக் கொள்ள வேண்டும்.
இரண்டாம் மனைவி என புதிராகக் கொடுத்தால், அதில் இரண்டாம் எழுத்தான னை என்பதை புதிருக்கான விடையாகக் கொள்வோம் இல்லையா...
பாதி யானை = னை = மனைவியில் இரண்டாம் எழுத்து.
ஆங்கிலத்தில் இப்புதிர் முறையை ரீபஸ் என்பதாக விடைக்கான விளக்கக் கருத்தில் கண்டேன்
[1/23, 17:56] G Venkataraman: எப்படி சொன்னாலும் அறிவிற்கு எட்ட வில்லை ! மிக கடினம்
[1/23, 18:17] prasath venugopal: நீயா பாதி என்ற இரண்டாம் மனைவி ஒரு களிறு(2)
என்பது புதிரானால்
நீயா என்பதில் பாதி யா
இரண்டான் மனைவியில் இரண்டாம் எழுத்து னை
களிறு = யானை
என பதில் தருவோம் இல்லையா ஐயா. அது போல
இரண்டாம் மனைவி = னை
பாதி யானை = னை
அதாவது இருபுறமும் புதிருக்கான குறிப்புகள் கொடுப்பதும் புதிரில் ரீபஸ் என்கிற அமைப்பு ஐயா...
[1/23, 18:18] prasath venugopal: இரண்டாம் மனைவி என்பதை நேரடியாகச் சொல்லாமல் நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாவது முடிச்சு பெற்றவர் என்பது போல புதிராக்கி இருக்கிறார்
[1/23, 18:19] stat senthil: இரண்டாம் மனைவி இல்லை அதனால விடை தரலை.....😀
[1/23, 18:21] prasath venugopal: இரண்டாவது என்றால் அது துணைவி எனச் சொல்லப் போக அரசியலாக்கப்படும் என்பதால் நான் மௌனித்துக் கடக்கிறேன்...😜
[1/23, 18:26] stat senthil: மனையில இருந்தால் மனைவி... வெளியில துணைக்குக் கூட்டிட்டுப் போனால் துணைவியா?
[1/23, 18:52] siddhan subramanian: I thought of marriage at 60 the same person receiving three more knots but couldn’t fit it though - not thought out of wedlock