Skip to main content

விடை 4222

நேற்று வெளிவந்த வெடி:
சூழ்ச்சியில் மாட்டிய மாபெரும் தலைவரைப் புதைத்த இடம் (3)
அதற்கான விடை: சமாதி = சதி + மா
சதி = சூழ்ச்சி
மா = மாபெரும் தலைவர்
சூழ்ச்சி என்பதற்கு சதி என்ற பொருளில் முன்பே புதிர் அமைத்துள்ளேன். ஆனால் சமாதியே ஏற்கனவே இதன் அடிப்படையில் வந்துள்ளதா என்று நினவில்லை. திரு வி என்கே கூறுவது இதைப் பற்றி என்று நினைக்கிறேன்.
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Partha said…
தென்றல் April 2005
சூழ்ச்சியில் புதையுண்ட மானிடத் தலைவர்க்கு நினைவுச் சின்னம் (3)
Vanchinathan said…
Thanks for exhuming it! :-)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...