Skip to main content

விடை 4185

ஏப்ரல் 23, 2017 இல் தொடங்கிய உதிரிவெடி மூன்றாண்டுகள் தினசரி வந்து இப்போது இரண்டாண்டுகளாக வாரமொருமுறையாக வந்துகொண்டிருக்கிறது.
ஐந்தாண்டுகளும் தவறாமல் தொடர்ந்து புதிரில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர்களுக்கும், நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு பின்னர் வந்து கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி.

இன்று காலை வெளியான வெடி:
ஏழை ஒன்று சேர அடி (3)
அதற்கான விடை: எட்டு = 7 +1
அடி = எட்டு
(வீட்டு வாசலிலிருந்து இரண்டு எட்டு எடுத்து வைத்தவுடன் கேஸ் சிலிண்டரை மூடினோமா என்ற சந்தேகம் வந்தது)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

R. Padma said…
வாழ்த்துக்கள் வாஞ்சி. இன்று நிறைய நேரம் யோசித்தும் விடை கண்டு பிடிக்க இயலவில்லை. இவ்வளவு வருடங்கள் ஆகியும் உதிரி வெடி சில வேளை புரிபடுவதே இல்லை. அதுவே என்னை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆவலுடன் எதிர் பார்க்க தூண்டுகிறது
Raghavan MK said…
Congrats on achieving the milestone of completing five years.Best wishes!
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி *4185* by வாஞ்சிநாதன்_ 
*************************
_*ஏழை, பாழை* என்று அலைகழிக்க வைத்த புதிர்.! *அடி, உதை,* தாக்குதலில் இருந்து தப்பிக்க *திருவடி, பாதம்* பணிய வைத்த புதிர்.!!_
_அருமையான திசை திருப்பல்!!!_

*_புதிராசிரியருக்கு பாராட்டுகள்!!!_*
*************************
*ஏழை பாழை:*

*ஏழை* என்றால் தெரியும். இல்லாதவர்கள். வறியவர்கள்.
*பாழை* என்றால் என்ன? பாழ் என்ற சொல்லோடு தொடர்புடையது பாழை. தமது வாழ்க்கையில் பாழ்பட்டுப் போனவர்கள். முன்பு அவர்கள் நல்ல வாழ்க்கையைக்கூட
வாழ்ந்திருக்கலாம். இன்று பாழ்பட்டவர்கள். அவர்களே பாழைகள். *ஏழைகள் எப்போதுமே இல்லாதவர்கள். பாழைகள் இடையில் கெட்டுப்போனவர்கள்.*
************************
_ஏழை ஒன்று சேர அடி (3)_ 

_ஏழை ஒன்று சேர_
= *7ஐ* *1சேர*
= *7+1*
= *8*
= *எட்டு*

_அடி_
= *எட்டு*
***********************
*எ.கா:*
" இங்கே பக்கத்திலேதான். *நாலு எட்டு* (அடி) எடுத்து வைத்தால் அவர் வீடு வந்துவிடும்."
*************************
*ஓ போடு... எட்டு போடு!*

`Walking is man’s best medicine’ என்பார்கள்.
*எட்டு* நடைப்பயிற்சி என்கிற ஒன்றை தீர்வாகச் சொல்கிறார்கள்.
இந்த *எட்டு நடை* கொரியா, தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது.

வீட்டிலேயே காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து 
ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக *எட்டு (8)* வடிவில் தரையில் வரைந்து கொள்ள வேண்டும்.
அந்த பாதையில் கூழாங்கற்களை பதித்தால் பலன் இன்னும் அதிகம். அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. 
எட்டு வடிவ நடைப்பயிற்சியில் கவனச் சிதறல்களும் இடையூறுகளும் இருக்காது.

ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடைப்பயிற்சியால் உண்டாகும் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது.

_நம்ம நாட்டிலும் *‘இரு, ஒரு எட்டு நடந்திட்டு வந்திடறேன்’* என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள்._ புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய் வந்திறேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தவறான புரிதல் என்றே தோன்றுகிறது!😂😂
**********************
💐🙏🏼💐
Joseph Amirtharaj A said…
CONGRATS ON ACHIEVING A MAJOR MILESTONE OF 5 YEARS COMPLETION!! THANKS A LOT FOR YOUR SELFLESS EFFORTS TO KEEP OUR GREY CELLS ACTIVE!!
balakrishnan said…
வாழ்த்துகள். பணி தொடரட்டும் தொய்வின்றி. எங்களின் நேரம் பயனுள்ளடகின்றது. வாழ்க வளமுடன்!
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

Vanchinathan said…
பாழைக்கு ஒரு பொருள் உள்ளது என்று தெரிந்து கொண்டேன், நன்றி, ராகவன்.

நன்றி, பத்மா: 1988 இல் விளையாட்டாகத் தொடங்கியது, பலருக்கு ஆர்வமூட்டும் என்பது நீங்கள் அப்போது உங்கள் சகோதரிகளிடம் பகிர்ந்தூ கொண்டதைச் சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன்.

நன்றி, ஜோசப்
நன்றி, வி ஆர் பாலகிருஷ்ணன்
Muthu said…
வாழ்த்துக்கள் வாஞ்சி சார்! தென்றல் இதழில் 2005-ல் தங்கள் புதிரை ஒவ்வொரு மாதமும் விடுவித்து மக்ழ்ந்தேன். நான் சொல்லி என் இளையவர்கள் நால்வர் இந்தப் புதிர்களில் மிக்க ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் பங்கேற்கின்றனர். அவர்கள் யாவரும் தமிழ்நாட்டில். நான் அட்லாண்டாவில். ஆகவே தினமும் எங்கள் வாட்ஸப் குழுவில் எங்களில் யார் முதலில் சரியான விடை அனுப்புகிறோம் என்ற குதூகலப் போட்டி!

இந்தப் புத்ருக்கு விடை எட்டு என்று தோன்றியது. எட்டு என்பதை அடியுடன் இணைக்க அடியோடு மறந்தேன்; எட்டி உதைப்பது நினைவுக்கு வந்தது.

இந்த, மிகவும் பயனுள்ள நற்பணி தொடர ஆண்டவன் உங்களுக்கு உடல் நலமும் மனச் சாந்தியும் நல்குவராக.

Vanchinathan said…
நன்றி, முத்து சுப்ரமணியம் மற்றும் இளையவர்களுக்கு

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்