Skip to main content

விடை 4094

இன்று காலை வெளியான வெடி:
தினம் தின்றால் இடை சிக்கிட பிடிவாதம் (5)
அதற்கான விடை: அன்றாடம் = அடம் + (தி) ன்றா (ல்)
தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு பெருத்து இடை சிக்கி உடம்ப்பைப் பிடிக்கும்படி வாதம் வரும்ம் என்பதால் இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது நல்லது!
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_தினம் தின்றால் இடை சிக்கிட பிடிவாதம் (5)_

_பிடிவாதம்_ = *அடம்*
_தின்றால் இடை_
= *[தி]ன்றா[ல்]*
= *ன்றா*
_சிக்கிட_ = indicator for putting
*ன்றா inside அடம்*
= *அன்றாடம்*
= _தினம்_
**************
*அன்றாடம் காய்ச்சி*

அன்னாடம் காட்சி/அன்னாடங்காய்ச்சி என்பது இதன் பேச்சு வழக்கு. தினம் வேலை செய்து அதில் சம்பாதிப்பதைக் கொண்டே உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து உண்ணும் நிலையில் உள்ள ஏழை என்று பொருள் படும். ஒரு நாளுக்கு மேல் தேவையான உணவினை வாங்கும் வசதியில்லாதவர் என்று பொருள். இங்கு “காய்ச்சி” என்ற பயன்பாடு கஞ்சி காய்ச்சுவதைக் குறிக்கிறது. ஏழைகளின் உணவு கஞ்சி
**************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 06-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************

முள்ளிலைத் தாவரத்திற்குப் படித்தா ஏழை இறுதியாக வந்தான்? (4)

**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய புதிர்!*( 06-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
*********************
முள்ளிலைத் தாவரத்திற்குப் படித்தா ஏழை இறுதியாக வந்தான்? (4)

படித்தா = கற்றா
ஏழை இறுதியாக வந்தான்?
= (ஏ)ழை

முள்ளிலைத் தாவரம்
= கற்றா+ழை
= கற்றாழை
**********************
கற்றாழைச் செடி வளர்க்க வந்தவர்கள்!
**********************

[7/6, 07:00] Ramarao திரைக்கதம்பம்: கற்றாழை

[7/6, 07:00] மீ.கண்ணண்.: கற்றாழை

[7/6, 07:01] ஆர். நாராயணன்.: கற்றாழை

[7/6, 07:01] Venkat UV: கற்றாழை 🙏🏽

[7/6, 07:01] Dr. Ramakrishna Easwaran: *கற்றாழை*
படித்தா= கற்றா
ஏழை இறுதியாக = ழை

[7/6, 07:02] Suba: Hello sir, கற்றாழை

[7/6, 07:02] V N Krishnan.: கத்தாழை

[7/6, 07:02] Meenakshi: விடை: கற்றாழை

[7/6, 07:04] Dhayanandan: கற்றாழை

[7/6, 07:06] கு.கனகசபாபதி, மும்பை: கற்றாழை

[7/6, 07:06] sankara subramaiam: கற்றாழை
முள்ளிலைத் தாவரத்திற்குப் படித்தா -
என்பதை விட -
முள்ளிலைத் தாவரம் படித்தா? - என்பது பொருந்துமோ?

[7/6, 07:07] Ramki Krishnan: KattRaazhai

[7/6, 07:08] chithanandam: கற்றாழை

[7/6, 07:10] பாலூ மீ.: விடை. கற்றாழை.

[7/6, 07:14] sathish: கற்றாழை

[7/6, 07:17] A D வேதாந்தம்: விடை= கத்தாழை/ வேதாந்தம்

[7/6, 07:22] nagarajan: *கற்றாழை*

[7/6, 07:24] balakrishnan: KATRAAZHAI
🙏🏻👌

[7/6, 07:33] prasath venugopal: கற்றாழை

[7/6, 07:42] stat senthil: கற்றாழை

[7/6, 08:10] akila sridharan: கற்றாழை

[7/6, 08:14] Viji - Kovai: 6.7.2020 விடை
கற்றாழை

[7/6, 08:48] siddhan submn: கற்றாழை

[7/6, 12:40] shanthi narayanan: கத்தாழை

[7/6, 14:58] balagopal: கற்றாழை.


[7/6, 18:13] chennai usha: கற்றாழை

**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 07-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************

பருகிய பானம் இலக்கியமில்லாமல் இல்வாழ்க்கை (6)

**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய புதிர்!*( 07-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*இல்வாழ்க்கை*
**********************
_அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை_

_பண்பும் பயனும் அது_
(குறள் எண்:45)
 
பொழிப்புரை
(மு வரதராசன்): 
_இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்._
*********
எல்லோரிடத்தும் அன்பு செய்தலையும் அறம் செய்தலையும் உடைய இல்வாழ்க்கை' என்று மணக்குடவரும் 'தன் இல்லாள் மேல் அன்பும் பகுத்துண்டல் அறம் உடைய இல்வாழ்க்கை' என்று பரிமேலழகரும் உரை கூறினர். 

அன்பாக இருக்கும் தன்மையும் அறவழியில் ஒழுகுதலும் உடைய இல்வாழ்க்கை பண்பானது, பயனுள்ளது. 
இல்வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை பற்றியது. குடும்பம் என்னும் சொல், இல்வாழ்வான், துணைவி, பெற்றோர், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்ட அமைப்பைக் குறிக்கும். இல்வாழ்க்கையில் அன்பு தழைக்க வேண்டும்; அறம் செழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது குடும்பவாழ்வின் தன்மையையும் பொருளையும் உணர்த்தும் என்கிறது இக்குறள். 

அன்பானது இல்லறத்துக்குக் குணம் சேர்க்கிறது. அறம் இல்வாழ்க்கையை பயனுள்ளதாக்குகிறது. அன்பும் அறமும் இணைந்த குடும்ப வாழ்க்கை பொலிவுடன் விளங்கும். அன்பு செலுத்துவது இல்வாழ்க்கைப் பண்பு, அறனுடைமை இல்வாழ்க்கைப் பயன்.
**********************
_பருகிய பானம் இலக்கியமில்லாமல் இல்வாழ்க்கை (6)_

_பருகிய_ = *குடித்த*

_பானம் இலக்கியமில்லாமல்_
= *பா* _இல்லாத_ *பானம்*
= *னம்*

_இல்வாழ்க்கை_
= *குடித்த + னம்*
= *குடித்தனம்*
*********************
Raghavan MK said…
List of solvers will be posted later
Raghavan MK said…
**********************
*இன்றைய புதிர்!*( 07-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
_பருகிய பானம் இலக்கியமில்லாமல் இல்வாழ்க்கை (6)_
**********************
*புதுக்குடித்தனம் பண்ண வந்தவர்களை வாழ்த்தி வரவேற்போம்!* 💐
**********************

[7/7, 07:01] Ramarao : குடித்தனம்

[7/7, 07:01] sathish: குடித்தனம்

[7/7, 07:03] prasath venugopal: குடித்தனம்

[7/7, 07:03] V N Krishnan.: குடித்தனம்

[7/7, 07:08] nagarajan: *குடித்தனம்*

[7/7, 07:09] sankara subramaiam: குடித்தனம்

[7/7, 07:13] மீ.கண்ணண்.: குடித்தனம்

[7/7, 07:14] N T Nathan: குடித்தனம்
.
[7/7, 07:15] பாலூ மீ.: குடித்த + (பா) னம் = குடித்தனம்

[7/7, 07:18] balakrishnan: 🙏🏻KUDITHTHANAM👌🙏🏻

[7/7, 07:21] Suba: Hello sir, குடித்தனம்

[7/7, 07:22] Dr. Ramakrishna Easwaran: *குடித்தனம்*
இலக்கியம்= பா
இல்லாமல்= deletion indicator
பருகிய = குடித்த
குடித்த + (பா)னம் = குடித்தனம் (இல்வாழ்க்கை)

[7/7, 07:33] Meenakshi: விடை: குடித்தனம்

[7/7, 07:38] sridharan: குடித்தனம்.


[7/7, 08:24] ஆர். நாராயணன்.: குடித்தனம்

[7/7, 08:24] akila sridharan: குடித்தனம்

[7/7, 08:26] Dhayanandan: குடித்தனம்
[7/7, 08:48] Ramki Krishnan: Kudiththanam
Kudiththa + paanam - paa

[7/7, 08:52] Viji - Kovai: 7.7.2020 விடை
குடித்தனம்
பருகிய=குடித்த
பானம்_பா=னம்

[7/7, 08:59] siddhan submn: குடித்தனம் (குடித்த +னம்)

[7/7, 09:00] கு.கனகசபாபதி, மும்பை: குடித்தனம்

[7/7, 09:31] A D வேதாந்தம்: விடை= குடித்தனம்/ வேதாந்தம்

[7/7, 13:58] shanthi narayanan: குடித்தனம்

[7/7, 18:11] உஷா, கோவை: குடித்தனம்

[7/7, 18:59] chithanandam: குடித்தனம்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 08-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
காற்று, வெள்ளம் நடுவே பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பர் (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
**********************
வாயுள்ள பிள்ளையை அழைத்து வந்தவர்களுக்கு பாராட்டுகள்! 💐
**********************
[7/8, 07:00] *Ramarao* வாயுள்ள

[7/8, 07:02] *Meenakshi:* விடை:வாயுள்ள

[[7/8, 07:06] *A D வேதாந்தம்* :
விடை= வாயுள்ள/

[7/8, 07:08] *sathish* : வாயுள்ள

[7/8, 07:11] *prasath venugopal:* வாயுள்ள

[7/8, 07:15] *Dhayanandan* : வாயுள்ள

[7/8, 07:22] *Suba* : Hello sir, வாயுள்ள

[7/8, 07:25] *Ramki Krishnan* : VaayuLLa

[7/8, 07:32] *nagarajan:* *வாயுள்ள*

[7/8, 07:38] *மீ.கண்ணண்.:* வாயுள்ள

[7/8, 07:47] *chithanandam* : வாயுள்ள

[7/8, 07:58] *ஆர். நாராயணன்* .: வாயுள்ள
[
[7/8, 08:05] *balakrishnan:* 🙏🏻VAAYULLA🤣

[7/8, 08:13] *sankara subramaiam* : வாயுள்ள

[7/8, 08:45] *Dr. Ramakrishna Easwaran* : *வாயுள்ள*
காற்று= வாயு
வெள்ளம் நடுவே= ள்ள
வாயு+ள்ள
_Clue type: charade with definition based on a proverb. Reminded of Tenali Rama story about_ _வாயுள்ள பிள்ளை பிழைக்கும்_

[7/8, 08:55] *siddhan submn* : வாயுள்ள

[7/8, 11:57] *Bharathi* : வாயுள்ள

[7/8, 12:33] *Viji - Kovai:* 8.6.2020 விடை
காற்று=வாயு
வெள்ளம் நடுவே=ள்ள
வாயுள்ள

[7/8, 12:36] *shanthi narayanan* : வாயுள்ள

[7/8, 13:01] *கு.கனகசபாபதி, மும்பை* : வாயுள்ள

[7/8, 15:06] *ஆர்.பத்மா:*
08 ஜூலை உதிரி வெடி விடை
வாயுள்ள
[7/8, 15:52] *balagopal:* காற்று(வாயு) வெ(ள்ள)ம்
வாயுள்ள.
*********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 09-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
வெள்ளத்திற்கும் பம்பாநதிக்கும் இடையே அப்படி ஒரு ராசி (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய புதிர்!*( 09-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*பம்பா நதி*

_கலியுகத்தின் கண்கண்ட ஒரு ராசிதெய்வமாக, கற்பக விருட்சமாக விளங்கும் ஐயப்பனின் திருத்தலம் சபரிமலை. இந்தப் புண்ணியத் தலத்துக்கு பெருமை சேர்ப்பது *பம்பா நதி* ._ கங்கைக்கு நிகரான பம்பா நதி பக்தர்களின் பாவத்தை நீக்கி வரும் ஒரு பாவநாசினி. தட்சிணகங்கை என்று போற்றப்படும் பம்பா நதிக்கரையில்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பூவுலகில் குழந்தையாகத் தோன்றினார்.
**********************
_வெள்ளத்திற்கும் பம்பாநதிக்கும் இடையே அப்படி ஒரு ராசி (4)_

_வெள்ளத்திற்கும் பம்பாநதிக்கும் இடையே_
= _இடையே மறைந்துள்ள சொல்_ *"கும்பம்"*
= _வெள்ளத்திற் *கும்பம்* பாநதிக்கும்_
= *கும்பம்*
= _ஒரு ராசி_
**********************
இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பின்னர் ஸ்ரீராமனும், இலட்சுமணனும் காடுகளில் சீதையைத் தேடி அலைந்து துக்கப்பட்டனர். அப்போது மதங்க முனிவரின் ஆசிரமம் கண்களில் தென்பட அங்கே சென்றனர். அப்போது முனிவர் தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். ஆசிரமத்தில் உள்ள குடிலில் *நீலி* என்ற பெண் மட்டும் இருந்தாள். அவள் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ராம, லட்சுமணர்களை வரவேற்றாள். முனிவருக்கு பணிவிடை செய்து வரும் அவள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற குற்ற உணர்வுடன் அவர்களுக்கு உணவளிக்கத் தயங்குவதை புரிந்து கொண்ட ராமபிரான், மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இதில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடு ஒன்றுமில்லை. நீ கவலைப்படாமல் எங்களுக்கு உணவளிப்பாயாக! என்று அன்புடன் கூறி உண்கிறார். மேலும் உன்னைத் தாழ்ந்த குலத்தவள் என்று கருதும் மக்கள் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை நான் உனக்கு அளிக்கிறேன்! என்று திருவாய்மலர்ந்தருளி, அவளது பூரண சம்மதத்துடன் அப்பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதமாக்கினார்.

*அப்பெண் நீலிதான் இன்று பம்பா நதி எனப் போற்றப்படுகிறது. கங்கையைப்போன்ற புண்ணிய நதி பம்பா.* தட்சிண கங்கையான இங்கு ராம, இலட்சுமணர்களும் மனம் குளிர நதியில் நீராடி தனது தந்தை தசரதனுக்கு "பிதுர் தர்ப்பணம் செய்ததாக கூறுவர்.🙏🏼
*************************
Raghavan MK said…
**********************
*நல்ல ராசியுடன் பம்பா நதியில்
நீராடி வந்தவர்கள்!*
*************************

[7/9, 07:01] Ramarao திரைக்கதம்பம்: கும்பம்

[7/9, 07:03] V N Krishnan.: கும்பம்

[7/9, 07:03] Meenakshi: விடை: கும்பம்.

[7/9, 07:04] மீ.கண்ணண்.: கும்பம்

[7/9, 07:05] sankara subramaiam: கும்பம்

[7/9, 07:05] akila sridharan: கும்பம்

[7/9, 07:09] balakrishnan: KUMBAM🙏🏻

[7/9, 07:12] Ramki Krishnan: *Kumbam (hidden word)*

[7/9, 07:15] sathish: கும்பம்

[7/9, 07:18] Dhayanandan: கும்பம்

[7/9, 07:20] பாலூ மீ.: கும்பம்.

[7/9, 07:24] Bharathi: கும்பம்

[7/9, 07:26] கு.கனகசபாபதி, மும்பை: கும்பம்

[7/9, 07:34] nagarajan: *கும்பம்*

[7/9, 07:46] Suba: Hello sir,கும்பம்

[7/9, 07:53] prasath venugopal: கும்பம்

[7/9, 08:08] Viji - Kovai: 9.6.2020 விடை
கும்பம்

[7/9, 08:11] chithanandam: கும்பம்

[7/9, 08:17] N T Nathan: கும்பம்

[7/9, 08:24] ஆர். நாராயணன்.: கும்பம்

7/9, 08:37] ஆர்.பத்மா: கும்பம் -

[7/9, 09:15] Dr. Ramakrishna Easwaran: *கும்பம்*
Clue type: Telescopic

தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டி பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இவ்விடங்கள் பிரயாகை, ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக்

[7/9, 09:24] siddhan submn: கும்பம்

[7/9, 09:53] stat senthil: கும்பம்

[7/9, 09:58] shanthi narayanan: கும்பம்

[7/9, 16:29] ஆர்.பத்மா: 09 ஜூலை உதிரி வெடி விடை
கும்பம் - ஆர்.பத்மா

[7/9, 17:02] balagopal: வெள்ளத்திற்(கும் பம்)பா நதிக்கும் அப்படி ஒரு ராசி. கும்பம்.

[7/9, 19:35] A D வேதாந்தம்: விடை= கும்பம் / வேதாந்தம்
**********************
Raghavan MK said…
********************
*இன்றைய புதிர்!*( 10-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************

மரணத்தையும் பெறுவதற்குக் கலங்கியவர் தலை சாயும் (5)

**********************
உங்கள் விடைகளை பதிவிட 
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய புதிர்!*( 10-07-20)
from 
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
_காற்று வந்தால் *தலை சாயும்* நாணல்…….._
_காதல் வந்தால் *தலை சாயும்* நாணம்…….._
_ஆற்றினிலே கரைபுரளும் வெள்ளம்……._
_ஆசையிலே கரை புரளும் உள்ளம்…….._

_ஆடை தொட்டு விளையாடும் தென்றல்……._
_ஆசை தொட்டு விளையாடும் கண்கள்……._
_ஒருவர் மட்டும் படிப்பதுதான் வேதம்……._
_இருவராக படிக்க சொல்லும் காதல்…….. (காற்று)_

*படம்: காத்திருந்த கண்கள்*
Viswanathan Ramamurthy
Kannadasan P.Suseela,P.B.Sreenivas
Year1962
**********************
மரணத்தில் பாடம் படிப்பது மடச்சமூகம், மரணத்திலும் கல்லாதது அடிமைச்சமூகம்...
ஏ மடமைச்சமூகமே..! வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில்,
மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே..!

*கவிஞர் வைரமுத்து*
**********************
_மரணத்தையும் பெறுவதற்குக் கலங்கியவர் தலை சாயும் (5)_

_கலங்கியவர்_
= _anagram indicator for *தலை சாயும்*_
= *சாதலையும்*

_பெறுவதற்கு_ = _indicator for answer in மரணத்தையும்_

_மரணத்தையும்_
= *சாதலையும்*
**********************
*புறநானூறு 192*

_யாதும் ஊரே யாவரும் கேளிர்_
_தீதும் நன்றும் பிறர்தர வாரா_
_நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன_
_*சாதலும்* புதுவது அன்றே, வாழ்தல்_
_இனிதென மகிழ்ந்தன்றும் இலமே_ 

*பொருள்*

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே 
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
*சாதல்* புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை.

( *கணியன் பூங்குன்றனார்*
சங்ககாலப் புலவர்)
**********************
_மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா..._
_மரணத்தின் தன்மை சொல்வேன்..._
_மானிடர் ஆன்மா மரணமெய்தாது..._
_மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்_ 
_மேனியைக் கொல்வாய்_
_வீரத்தில் அதுவும் ஒன்று_
_நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி_
_வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ..._

*Movie: Karnan*
Viswanathan Ramamoorthy
Year1964
Kannadasan
Seerkazhi Govindarajan
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
*************************
*விடையளித்த அன்பர்கள்* 💐👍🏼👏🏼
*************************
[7/10, 07:00] திரைக்கதம்பம் Ramarao : சாதலையும்
[
[7/10, 07:01] மீ.கண்ணண்.: சாதலையும்
[
[7/10, 07:09] Dhayanandan: சாதலையும்

[7/10, 07:10] chithanandam: சாதலையும்

[7/10, 07:12] prasath venugopal: சாதலையும்

[7/10, 07:14] Meenakshi: விடை:சாதலையும்
(மரணத்தையும்)

[7/10, 07:16] பாலூ மீ.: சா+தலையும்

[7/10, 07:20] sridharan: சாதலையும்

[7/10, 07:53] nagarajan: *சாதலையும்*

[7/10, 08:25] siddhan submn: சாதலையும் (தலை சாயும்) kalakkal

[7/10, 08:41] ஆர். நாராயணன்.: சாதலையும்

[7/10, 08:46] கு.கனகசபாபதி, மும்பை: சாதலையும்

[7/10, 08:58] Dr. Ramakrishna Easwaran: *சாதலையும்*
Anagram of தலை சாயும்
Anagram indicator: கலங்கியவர்
Definition: மரணத்தையும்
Connector: பெறுவதற்கு


[7/10, 20:06] balakrishnan: Saathalaiyum🙏🏻

*************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-07-20)

From *Vanchinathan's* archive-
(தென்றல்)
*********************

வழுக்கிச் செல்லும் இனிப்புக்கு இரவு அழைப்பு (3)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.

இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
*A peek into today's udhirivedi!*
**********************
இன்றைய உதிரிவெடி!( 11-07-20)
From *Vanchinathan's* archive- (தென்றல்)
*********************
*அல்வா* என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு இனிப்பு என்று அா்த்தம்.
இந்தியாவில் *திருநெல்வேலி அல்வா* புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம்.
*********************
_வழுக்கிச் செல்லும் இனிப்புக்கு இரவு அழைப்பு (3)_

_இரவு_ = *அல்*
_அழைப்பு_ = *வா*

_வழுக்கிச் செல்லும் இனிப்பு_
= *அல்+வா*
= *அல்வா*
**********************
எல்லாம் தெரிந்தவர்களிடம், ஒருவர் ஏமாற்ற முனைந்தால் அவரிடம்,

*_"திருப்பதிக்கே லட்டா, திருநெல்வேலிக்கே அல்வாவா?"_*
எனக் கேட்பார்கள்!
**********************
*இருட்டுக் கடை அல்வா*
நெல்லையில் நூறு வருடங்களுக்கு மேலாக இந்த அல்வாவிற்கு பெயர் பெற்ற ஒரே கடை திருநெல்வேலி இருட்டுக்கடை. இந்த கடையில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரே ஒரு விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர், இதனால் இந்த கடைக்கு இருட்டுகடை என்று பெயர் வந்தது. இன்றளவும் இவர்கள் வெறும் சாதாரண 40 வாட்ஸ் பல்பு ஒன்றை மட்டுமே பயன்படுத்தி விற்பனைசெய்கிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை மற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. மாலை 6 மணிக்கு விற்பனைதொடங்கும் முன் 4 மணி முதலே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். அதிகபட்சம் 8 அல்லது 9 மணி வரைமட்டுமே விற்பனை நடைபெறும். 
**********************
*திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தவர்கள்!* 👇🏽
**********************
[7/11, 07:01] Dhayanandan: அல்வா

[7/11, 07:01] Ramki Krishnan: Alvaa

[7/11, 07:02] venkateswaran: அல்வா

[7/11, 07:02] Ramarao திரைக்கதம்பம்: அல்வா

[7/11, 07:02] chennai usha: அல்வா

[7/11, 07:02] V N Krishnan.: அல்வா

[7/11, 07:05] chithanandam: அல்வா

[7/11, 07:05] மீ.கண்ணண்.: அல்வா

[7/11, 07:13] sankara subramaiam: அல்வா

[7/11, 07:15] A D வேதாந்தம்: விடை= அல்வா/ வேதாந்தம்

[7/11, 07:23] Venkat UV: அல்வா 😂

[7/11, 07:25] ஆர்.பத்மா: 11 ஜூலை
அல்வா- ஆர்.பத்மா

[7/11, 07:28] balakrishnan: ALWAA🤣

[7/11, 07:34] Viji - Kovai: 11.7.2020 விடை
அல்+வா
அல்வா

[7/11, 07:36] Meenakshi: விடை. அல்வா
அல்=இரவு

[7/11, 07:41] nagarajan: *அல்வா*

[7/11, 07:51] balagopal: இரவு. அல். அழைப்பு. வா
அல்வா.

[7/11, 07:55] prasath venugopal: அல்வா

[7/11, 08:05] கு.கனகசபாபதி, மும்பை: அல்வா

[7/11, 08:49] siddhan submn: ஆல்வா அல் = (இரவு) + வா)

[7/11, 09:19] ஆர். நாராயணன்.: அல்வா

[7/11, 09:33] Dr. Ramakrishna Easwaran: *அல்வா*
இரவு= அல்
அழைப்பு = வா
அல்+வா
பொருள்: வழுக்கிச் செல்லும் இனிப்பு

_என்ன, திருநெல்வேலிக்கே அல்வாவா? (என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சார்!)_ 😂

[7/11, 10.25 ] *( K.B. )கி.பா :----* *அல்வா*

[7/11, 12:02] shanthi narayanan: அல்வா

[7/11, 14:37] N T Nathan: அல்வா
*************************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்